என் மலர்
செங்கல்பட்டு
அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனுசித்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘வனம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்றவர், ஸ்ரீகண்டன் ஆனந்த். 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய இவர், முதல்முறையாக, ‘வனம்’ என்ற முழு நீள படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படங்களில் நடித்த வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சில மலையாள படங்களில் நடித்த அனுசித்தாரா, ‘தடம்’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களில் நடித்த ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இவர்களுடன் அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வனம் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், வனம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ‘மாயா’, ‘கேம் ஓவர்’, ‘ஒப்பம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ரான் ஏதன் யோஹான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மதுராந்தகம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா தலைமையில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் மோட்டார் சைக்கிள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அய்யனார் கோவில் பகுதியில் வந்தபோது அவர்களை மடக்கி சோதனை செய்ததில் அவர்கள் அரை கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மதுராந்தகம் அடுத்த செங்குந்தர் பேட்டையை சேர்ந்த 18 வயதானவர், வன்னியர் பேட்டையை சேர்ந்த ராஜேஷ்(19), சூரக்கோட்டையை சேர்ந்த மணி(19) ஆகியோரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 777- ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 777- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 327 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2506- ஆக உயர்ந்துள்ளது. 944 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 970- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1258 பேர் உயிரிழந்துள்ளனர். 326 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையை மீண்டும் ஒத்திவைத்தது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்தது. முன்னதாக இந்த விற்பனை இன்று (நவம்பர் 1) துவங்க இருந்தது.
ஏற்கனவே இந்த மாடல்களின் வினியோகம் அக்டோபர் மாதத்தில் துவங்க இருந்தது. எனினும், முந்தைய அறிவிப்பின் படி தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் டெஸ்ட் ரைடு துவங்குகிறது. வினியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என ஓலா எலெக்ட்ரிக் அறிவித்தது.

இந்தியாவில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி திருநாள் அன்று அதிக அளவில் பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. இதன் காரணமாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
அவ்வகையில் கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு கூறி உள்ளது.
காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன தரச்சான்று பெற அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு லட்சுமிகாந்தன் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடமும், அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 3 மணியளவில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்று இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 86 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 514 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,503 பேர் உயிரிழந்துள்ளனர். 969 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 873 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 276 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,257 பேர் உயிரிழந்துள்ளனர். 340 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர் பூங்காவில் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த 22 வயதான பெண் சிங்கம் கவிதா நேற்று முன்தினம் இறந்தது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 35 நெருப்புக்கோழிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
கடந்த திங்கட்கிழமை ஒரு நெருப்புக்கோழி திடீரென இறந்தது. இதைத்தொடர்ந்து மறுநாள் மேலும் ஒரு நெருப்புக்கோழி இறந்தது.
இதுதொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து நெருப்புக்கோழிகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அடுத்தடுத்து மேலும் 5 நெருப்புக்கோழிகள் பராமரிக்கப்படும் இடத்தில் இறந்து கிடந்தது.
நன்றாக மேய்ந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு கோழிகள் திடீரென உட்கார்ந்து சாய்ந்து விடுவதாகவும் அதன் வாயில் இருந்து ரத்தம் வந்து இறந்து விடுவதாகவும் நெருப்புக் கோழியை பராமரிக்கும் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து 7 நெருப்பு கோழிகளும் எவ்வாறு இறந்தது? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் நெருப்பு கோழிகளின் உடலை பரிசோதனை செய்து உள்ளனர்.
பறவைக்காய்ச்சல் காரணமாக நெருப்பு கோழிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இறந்த நெருப்பு கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே அவை எப்படி இறந்தது என்பது தெரியவரும் என்றனர்.
நெருப்புக்கோழி பராமரிக்கப்படும் இடத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து வருகிறார்கள். மேலும் மற்ற நெருப்பு கோழிகளுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளனர். நெருப்பு கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பரவ வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே வண்டலூர் பூங்காவில் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த 22 வயதான பெண் சிங்கம் கவிதா நேற்று முன்தினம் இறந்து போனது.
இந்த சிங்கம் ஏற்கனவே கொரோனோவால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வந்தது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக இந்த பெண் சிங்கம் இறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வண்டலூர் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இதில் 2 சிங்கங்கள் இறந்துள்ளன. 8 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. அவை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளன.
இந்த நிலையில் பூங்காவில் மேலும் ஒரு சிங்கமும், 7 நெருப்பு கோழிகளும் அடுத்தடுத்து இறந்துள்ளன.

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து ஆகஸ்டு 25-ந் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவர்களிடம் குறைகளை கேட்டார்.
செங்கல்பட்டு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.
காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்ற அவர் கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிக்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி வகுப்பு அறைகளுக்கு சென்று மாணவ-மாணவர்களிடம் குறைகளை கேட்டார். அவர்களுக்கு தயார் செய்யப்படும் மதிய உணவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆசிரியர்களிடம் விவரங்களை கேட்டறிந்த அவர் பள்ளி வளாகத்தையும் சுற்றி பார்த்தார்.

இதையும் படியுங்கள்...மரக்காணம் அருகே அரசு பள்ளியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
3 போக்சோ வழக்கில் இரண்டாவது வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். மேலும், போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாலியல் வழக்கில் கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 3 போக்சோ வழக்கில் இரண்டாவது வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு நிலுவையில் உள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 150-ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 150-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 621 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,501- ஆக உயர்ந்துள்ளது. 1,028 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 745- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,256 பேர் உயிரிழந்துள்ளனர். 362 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்பாக்கம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகள் கீர்த்தனா (வயது 22). இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா பச்சம்பாக்கம் அடுத்த பசுவநத்தம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவருக்கும் 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணிகண்டன் சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கீர்த்தனாவிடம் கணவரின் வீட்டை சேர்ந்தவர்கள் அடிக்கடி வரதட்சணை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்தார்.
மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராயப்பன் விசாரணை மேற்கொண்டு மணிகண்டன் மற்றும் அவரது தாயார் வசந்தா (50) ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.