என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    பொது மக்களை மிரட்டியதாக அவர் மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் திவ்யராஜ் வயது.22, இவர் திருக்கழுகுன்றம் அடுத்த அமிஞ்சகரை கோயில் திருவிழாவில் கையில் பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு பக்தர்களை மிரட்டியுள்ளார்.

    தகவலரிந்த திருக்கழுகுன்றம் போலீசார் திவ்யராஜை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது போலீசாரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது., பொது இடத்தில் பட்டாக்கத்தி வைத்து பொது மக்களை மிரட்டியதாக அவர் மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • திருக்கழுகுன்றம் அடுத்த அமிஞ்சகரை கோவில் திருவிழாவில் கையில் பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு வாலிபர் பக்தர்களை மிரட்டியுள்ளார்.
    • பொது இடத்தில் பட்டாக்கத்தி வைத்து பொது மக்களை மிரட்டியதாக அவர்மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் திவ்யராஜ் (வயது 22). இவர் திருக்கழுகுன்றம் அடுத்த அமிஞ்சகரை கோவில் திருவிழாவில் கையில் பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு பக்தர்களை மிரட்டியுள்ளார்.

    தகவலறிந்த திருக்கழுகுன்றம் போலீசார் திவ்யராஜை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது போலீசாரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. பொது இடத்தில் பட்டாக்கத்தி வைத்து பொது மக்களை மிரட்டியதாக அவர்மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிமெண்ட் சாலையில் ஒரு பகுதி அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.
    • கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல் படிப்படியாக முன்னோக்கி வந்துவிட்டது.

    மாமல்லபுரம்:

    நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில்; சிமெண்ட் சாலை அந்தரத்தில் தொங்குவதால், இதுகுறித்து அரசிடம் பல முறை வலியுறுத்தியும் தூண்டில் வளைவுகள் அமைக்காததால் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலைரயில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 200 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மீனவர்கள் தினமும் 50 படகில் சென்று தினமும் மீன்பிடித்து வருவது வழக்கம். இப்பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல் படிப்படியாக முன்னோக்கி வந்துவிட்டது. இந்நிலையில் நெம்மேலி குப்பத்தில் உச்சகட்டமாக கடல் அலைகள் 30 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து மணற்பரப்புகளை அரித்ததால் கரைப்பகுதியில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள சிமெண்ட் சாலைகளின் காங்கிரிட்கள் இடிந்து விழுந்துவிட்டன.

    சிமெண்ட் சாலையில் ஒரு பகுதி அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் சிமெண்ட் சாலையில் ஒரு பகுதி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மீனவர்கள் பரிதவித்து வருகின்றனர். அதனால் அங்கு வைக்கப்பட்டு இருந்த படகு, மீன்பிடி வலைகளை மாற்று இடத்தில் கொண்டு போய் வைத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது கடல் மேலும் 20 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து, சிமெண்ட் சாலையை சேதம் ஏற்படுத்தி விட்டதால் தங்கள் மீன்பிடி உபகரணங்களை வைக்க இடம் இல்லாமல் நெம்மெலி குப்பம் மீனவர்கள் பலர் தவித்து வருகின்றனர்.

    இதையடுத்து நெம்மேலி குப்பம் மீனவர்கள் அந்தரத்தில் தொங்கும் சிமெண்ட் சாலையின் ஒரு பகுதி கான்கிரிட் இடிந்து விழுந்ததால் கடலுக்கு சென்று விட்டு படகில் கரை திரும்பும்போது தாங்கள்; ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், பல வருடங்களாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும், மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு உடனே இப்பகுதியில் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதி மீனவர்கள் நேற்று அங்குள்ள கடற்கரையில் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அங்குள்ள கோயில் மண்டபத்தில் கூட்டமாக அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை காண முடிந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நெம்மேலி கடல் பகுதி படகு போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு துண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழக கடலோர பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர காவல்படை, போலீசார் என 150க்கும் மேற்பட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு கடலோரப் பகுதி மீனவர்களிடம் இன்று காலை கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் திடீரென விசாரித்து அவர்களிடம் துப்பாக்கி, வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்து, பயங்கரவாதிகள் போன்று எவரேனும் புதிய நபர்களை இன்று காலை. பார்த்தீர்களா என விசாரித்தனர். இதனால் அங்கு பரபரப்பானது. பின்னர் இது கடலோர காவல் படையின் "சாகர் ஹவாஸ்-2022" ஒத்திகை என தெரியவந்தது.

    தமிழக கடலோர பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது. மத்திய கடலோர காவல் படை வீரர்கள் சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து மீனவர்கள், பயணிகள் போன்ற மாறுவேடத்தில் டம்மி துப்பாக்கி, வெடிகுண்டு, வாக்கி டாக்கியுடன் பயங்கரவாதி போல் கடல்வழி மற்றும் தரைவழியாக ஊடுருவி உள்ளனர்.

    இவர்கள் அணுமின் நிலையம், அனல்மின் நிலையம் இருக்கும் கடலோர கூடுதல் பாதுகாப்புடைய பகுதிக்குள் நுழைவார்கள். இவர்களை எப்படி தமிழக கடலோர காவல் படையினரும், போலீசாரும் அடையாளம் கண்டு பிடிக்கிறார்கள் என்பதுதான் இந்த ஒத்திகை.

    இன்று காலை 6 மணிக்கு கோவளம், நெம்மேலி, தேவநேரி, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சட்ராஸ், கல்பாக்கம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கூவத்தூர், கடலூர் பகுதியில் துவங்கிய இந்த ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை, இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர காவல்படை, போலீசார் என 150க்கும் மேற்பட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    • பிரசாந்த் உள்பட 5 பேரும் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு கால்டாக்சியை பதிவு செய்து உள்ளனர்.
    • கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த வல்லம் அருகே மேலமையூர் கோவில் ஆர்ச் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலையுண்டது சென்னை, சோழிங்கநல்லூர், கழனி பகுதியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் அர்ஜூன் (வயது 30) என்பது தெரிந்தது.

    விசாரணையில் கோயம்பேட்டில் தங்கி தொழிலாளி களாக வேலைபார்த்து வந்த பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமூர்த்தி, கத்திமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் 2 பேர் சேர்ந்து கால்டாக்சி டிரைவர் அர்ஜூனை கொலைசெய்துவிட்டு காரை கடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து பிரசாந்த், திருமூர்த்தி, கத்திமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    கடந்த 25-ந்தேதி இரவு பிரசாந்த் உள்பட 5 பேரும் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு கால்டாக்சியை பதிவு செய்து உள்ளனர். காரில் சென்றபோது டிரைவர் அர்ஜூன் சந்தேகம் அடைந்ததால் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வல்லம் அருகே சாலை ஓரத்தில் வீசிவிட்டு காரை கடத்தி தப்பி சென்றுள்ளனர்.

    பின்னர் போலீசில் சிக்கி கொள்வோம் என்று பயந்து கொலையாளிகள் காரை மேல்மருவத்தூர்- அச்சரப்பாக்கம் இடையே விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையுண்ட அர்ஜூனுக்கு ஜோதிகா என்ற மனைவியும், 3 மாதத்தில் கைக்குழந்தையும் உள்ளனர்.

    இதற்கிடையே அர்ஜூன் கொலையை கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க கோரியும் இன்று மதியம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கால்டாக்சி டிரைவர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தண்டலம் ஊராட்சியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலை பள்ளியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு.

    செங்கல்பட்டு:

    தண்டலம் ஊராட்சியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலை பள்ளியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். ஆய்வின் போது திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் உடன் இருந்தனர்.

    • தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த முடிச்சூர், தெற்கு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் பாபு (வயது27). இவர் புது பெருங்களத்துாரில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர், வீட்டில் உள்ள மின்விசிறி பழுதடைந்ததால் காரில் பயன்படுத்தப்படும், சிறிய மின் விசிறியை பயன்படுத்த அதற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் பாபு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண் சிங்கம் கள்ளக்குறிச்சி சிறு பூங்காவில் இருந்து 18.6.2000 அன்று மீட்கப்பட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு.


    வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு மணி என்ற 32 வயதான ஆண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. இதற்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ஆண் சிங்கம் மணி பரிதாபமாக இறந்தது. வயது முதிர்வு காரணமாக சிங்கம் இறந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    32 வயதான மணி என்ற ஆண் சிங்கம் கள்ளக்குறிச்சி சிறு பூங்காவில் இருந்து 18.6.2000 அன்று மீட்கப்பட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.

    தற்போது வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று அதிகாலை 7 மணி அளவில் சிங்கம் இறந்துவிட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி.
    • மதுராந்தகம் ஏரியை தூர் வார வேண்டும் என்று மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. இதனால் ஏரியின் மொத்த உயரமான 23.3 அடியில் 10 அடிக்கு மேல் மண்ணால் தூர்ந்து இருந்தது.

    இதனால் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் மதுராந்தகம் ஏரி நிரம்பி முழு கொள்ளளளவை எட்டினாலும் அடியில் மண் சேர்ந்திருப்பதால் மழை நீரை கூடுதலாக சேமிக்க முடியாமல் ஏரி நிரம்பி வீணாக உபரி நீர் கடலில் சென்று கலந்து வந்தது.

    இதையடுத்து மதுராந்தகம் ஏரியை தூர் வார வேண்டும் என்று மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து ஏரியை தூர் வார தமிழக அரசு ரூ.120 கோடி ஒதுக்கியது.

    அதன்படி, கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி மதுராந்தகம் ஏரியை தூர்வாருவதற்கான பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. ரூ.120 கோடி செலவில் ஏரியை ஆழப்படுத்தி தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், மதகுகள் மற்றும் பாசன கால்வாயை சீரமைத்தல் பணி நடைபெற இருக்கிறது.

    தூர் வாரும் பணிக்காக மதுராந்தகம் ஏரியில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு பல்லவன் குளம் ஏரி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதன் பின்னர் ஏரியில் மீதமுள்ள நீரை வெளியேற்றுவதற்கு தானியங்கி ஷட்டர் அருகே ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஏரியின் கரை உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஏரியை உடைத்து அதன் மூலம் வெளியேறும் நீரும் பல்லவன் குளம் ஏரிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஏரியில் உள்ள அனைத்து நீரும் முழுமையாக வெளியேற்றப்பட்டு விடும். அதன் பின்னர், ஏரியில் நீர் சேகரமாகும் பகுதியினை நான்காகப் பிரித்து விரைந்து தூர்வாரி ஆழப்படுத்துவ தற்காக பணிகளை மேற்கொள்வதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக ஏரியை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை விரைந்து செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
    • சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் தீயிட்டு அழிக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த சாலையோரம் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்திய கழிவுகள் குவியலாக கொட்டப்படுவது அதிகரித்து உள்ளது.

    சாலையோரம் பல இடங்களில் மருத்துவ கழிவுகள் வீசப்பட்டு கிடக்கின்றன. நேற்று இரவு வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் ரத்தகறை படிந்த மருத்துவகழிவுகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை கொட்டி சென்று விட்டனர்.இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதற்கிடையே சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் தீயிட்டு அழிக்கிறது. திறந்த வெளியில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதால் அதன் மூலம் வெளியேறும் புகையால் அருகில் உள்ள அண்ணாநகர், சூழைமேடு குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சிறந்த சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டாத வகையில் கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கணபதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சரவணன்.
    • சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கணபதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சரவணன் (வயது 52), இவர் கடந்த 21-ஆம் தேதி வீட்டைப் பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் செங்கல்பட்டு அருகே உள்ள லத்தூர் கிராமத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகள் திருடுப் போனது தெரியவந்தது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் சரவணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
    • செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆய்வு செய்தார்.

    திருப்போரூர்:

    மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, வண்டலூர் சாலை, செங்கல்பட்டு சாலை பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தீவிர துப்புரவு பணி நடைபெற்று வருகிறது.

    இதனை செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆய்வு செய்தார். அவர் கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகளில் நடைபெற்ற பணியினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    அப்போது திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள் தேவி, லாவண்யா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    ×