என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.
    • கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக "கைவினை சுற்றுலா கிராமம்" என்ற திட்டம் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய "சிற்பக்கலைத் தூண்" அமைக்கப்பட்டுள்ளது. கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம், ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு மாமல்லபுரத்திற்கு வருகைப் புரியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச சதுரங்கப் போட்டியில் பங்குபெறும் சதுரங்க வீரர்களையும், போட்டியினை காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இக்கற்சிற்பக் கலைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பக்கலைத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மெய்யநாதன், மதிவேந்தன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறுகிறது
    • அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூருடன் முதலமைச்சர் செஸ் விளையாடினார்.

    மாமல்லபுரம்:

    சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை தொடக்க விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைப்பார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், 187 நாட்டு செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கவிருப்பதால், அவர்களுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள? பார்வையாளர்களுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அத்துடன், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார். 

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் புது பொலிவு பெற்றுள்ளன.
    • வீரர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக 25 சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்காக கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அந்த ஓட்டல்கள் அனைத்தும் செஸ் வீரர்களைத் தவிர வெளி நபர்கள் யாரும் நுழையாத வண்ணம் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்குகடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் சுமார் 2 அடி உயரம் எழுப்பப்பட்டு அதில் பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

    பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்குக்கடற்கரை சாலை ஓரங்களில் உள்ள சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னங்கள் மற்றும் அதுகுறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் செஸ் தம்பி பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

    பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூர், முட்டுக்காடு, படூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இதற்கான பணிகள் கடந்த ஒரு சில நாட்களாக இரவு பகலாக முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் புது பொலிவு பெற்றுள்ளன.

    இதற்கிடையே வீரர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக 25 சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பஸ்களை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கம் வரை கொண்டு வந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சோதணை ஒட்டம் நடத்தி பார்த்தனர்.

    தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள், ஒலிபெருக்கிகள் பொறுத்தப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் நடத்தும் சர்வதேச கூட்டமைப்பினர் வழங்கிய அடையாள அட்டை இல்லாமலும் யாரும் இன்று முதல் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. போட்டி நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் ஹோட்டல் வளாகமே சென்னை விமான நிலையம் போன்று காட்சி அளிக்கிறது.

    செஸ் வீரர்கள் மாமல்லபுரம் நுழையும் போது போக்குவரத்து இடையூறு இல்லாமலும், உள்ளூர் நபர்களுக்கு சிரமம் இல்லாமல் போக்குவரத்து பணியில் ஈடுபட 200-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று முதல் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து புராதன சின்னங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நேற்று முதல் 24 மணி நேரமும் பகலிலும், இரவிலும் துள்ளியமாக படம் பிடிக்கும் நவீன 'ட்ரோன் கேமரா'க்கள் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை போர் பாய்ண்ட்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    • அச்சரப்பாக்கம் அருகே உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் அருகே உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மகன் சஞ்சய் (வயது21). இவர் டிஷ் ஆண்டனாக்களை வீடுகளில் பொருத்தும் வேலை செய்து வந்தார்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரது மகன் மற்றொரு சஞ்சய் (வயது19). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் நண்பர்களான இருவரும் தொழுப்பேடு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் கூட்ரோடு என்ற இடத்தில் அவர்கள் வந்தனர்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென முன்னால் சென்ற வேன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மணம்பாக்கம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பலியான 2 பேரின் நண்பரான தொழுப்பேடு பகுதியை சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டார். பின்னர் அவரை நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் அழைத்துசென்று வீட்டில் விட்டு வந்த போது விபத்தில் சிக்கி நண்பர்கள் இருவரும் பலியாகி விட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது
    • உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது சென்னை திகழ்கிறது.

    உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கிறார். அவர் தலைமையிலான நார்வே அணி 3-வது தரவரிசையில் இருக்கிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது. வியக்கத்தக்க வீரர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் இரண்டு அணிகளும் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது தமிழ்நாடு அல்லது சென்னை திகழ்கிறது. செஸ் ஒலிம்பியாட் மூலம் இதை சொல்லலாம். இதனால் தான் நானும் இங்கு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செஸ் விளையாட்டில் உள்ள ராஜா, சோல்ட்ஜரை வெட்டி விளையாடும் வகையில் மற்றொரு மெழுகு சிற்பமும் செய்து வருகின்றனர்.
    • மரச்சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் மரத்தில் செஸ் போர்டு காயின் சிற்பங்கள் வடித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகள் கலந்து கொள்வதை வித்தியாசமான கோணத்தில் உணர்த்தும் வகையில் உலோக சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு படிக்கும் 3 மாணவர்கள் தங்கள் செய்முறை கூட வகுப்பறையில் உலக உருண்டை வடிவில் செஸ் போர்டு மெழுகு சிற்பம் வடித்து அசத்தி உள்ளனர்.

    மெழுகில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வரும் இதில் உலக உருண்டை மீது செஸ் போர்டு மற்றும் காய்கள் உள்ளது போல் இந்த மெழுகு சிற்பத்தை மாணவர்கள் மெழுகினை உருக்கி செய்து வருகின்றனர்.

    அதேபோல் செஸ் விளையாட்டில் உள்ள ராஜா, சோல்ட்ஜரை வெட்டி விளையாடும் வகையில் மற்றொரு மெழுகு சிற்பமும் செய்து வருகின்றனர். மரச்சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் மரத்தில் செஸ் போர்டு காயின் சிற்பங்கள் வடித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம் பகுதியில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வகையில் இந்த செஸ் விழிப்புணர்வு மெழுகு சிற்பம் மற்றும் மரச்சிற்பத்தினை வடிவமைத்து வருவதாக இந்த கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஆடிப்பூரம் திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.
    • உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 13-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாரம்பரிய நெல் ரகங்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
    • பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2021-22-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவித்தபடி பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் தமிழகத்தில் உள்ள 33 மாநில அரசு விதை பண்ணைகளில் உற்பத்தி செய்திட திட்டமிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் சாகுபடி செய்திட தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, அறுபதாம் குறுவை, கொல்லன் சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, சிவப்பு கவுணி, கீரை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் 5 மெட்ரிக் டன் அளவு மாநிலத்தில் பல்வேறு மாநில அரசு விதை பண்ணைகளில் இருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இந்த விதைகளானது 2022-23 ம் நிதியாண்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் இந்த மாவட்டத்திலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    மொத்த விதையளவில் 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும் 20 சதவீதம் பட்டியல் இன, பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

    பாரம்பரிய நெல் ரகங்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலுக்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே செங்கல்பட்டு மாவட்ட பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயனடையுங்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிராஜன்.
    • மாரிராஜன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிராஜன் (வயது 30). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் காட்டாங்கொளத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து மாரிராஜன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் வந்த 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஜே.சி.கே. நகர் முல்லை தெருவில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.6 லட்சம்
    • பச்சையம்மன் கோவில் தெரு பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்விசை பம்பு டேங்க் அமைக்க ரூ.3 லட்சத்து 75 ஆயிரம்

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2011-2022-ம் நிதியாண்டில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பாரதியார் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம், ஜே.சி.கே. நகர் முல்லை தெருவில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.6 லட்சம், சின்னம்மன்கோயில் தெரு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம், சையத் யாகூப் தெருவிற்கு சிமெண்ட் சாலைக்கு ரூ.5 லட்சம், நத்தம், நடுத்தெரு மற்றும் கைலாசநாதர் கோயில் தெருவில் சிறு மின்விசை பம்பு மற்றும் குடிநீர் டேங்க் அமைக்க ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பச்சையம்மன் கோவில் தெரு பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்விசை பம்பு டேங்க் அமைக்க ரூ.3 லட்சத்து 75 ஆயிரம், சுடுகாட்டு தெருவிற்கு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம், தட்டான்மலை தெரு முகப்பில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 லட்சம், கே.கே.தெரு, 3-வது குறுக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.6 லட்சம், சுந்தர விநாயகர் கோவில் தெரு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.49.75 லட்சத்தை செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கோனாதி கிராம மக்கள் பசுவை கோவில் மாடாக பராமரித்து வந்தனர்.
    • பொதுமக்கள் கோவில் மாடு இறப்பிற்கு பிறகு செய்ய வேண்டிய சம்பிரதாய சடங்குகளை புரோகிதர் மூலம் செய்து கோவில் அருகே பள்ளம் தோண்டி புதைத்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கோனாதி கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த சாந்தநாயகி உடனுறை காளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பசு மாட்டை வழங்கினார்.

    இதனையடுத்து கோனாதி கிராம மக்கள் அந்த பசுவை கோவில் மாடாக பராமரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மேச்சலுக்குச் சென்ற கோவில் பசுமாடு பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

    இந்த தகவலை அறிந்த கிராம பொதுமக்கள் கோவில் மாடு என்பதால் அதன் இறப்பிற்கு பிறகு செய்ய வேண்டிய சம்பிரதாய சடங்குகளை புரோகிதர் மூலம் செய்து கோவில் அருகே பள்ளம் தோண்டி புதைத்தனர்.

    சாந்த நாயகி உடனுறை காளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பசு மாடு இறந்த சம்பவம் கோனாதி கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.
    • கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து சாலைகளில் சுற்றித்திரிந்தன.

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.

    போட்டி தொடங்க இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் மாமல்லபுரத்துக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் அழகுபடுத்தப் பட்டு வருகின்றன.

    வீரர்கள் மற்றும் விளையாட்டு போட்டியை காண ஏராளமானோர் வருவதால் கிழக்கு கடற்கரை சாலை அழகாக காட்சி அளிக்கின்றன. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாலிங்கபுரம் சாலையில் கால்நடைகளும், நாய்கள், குரங்குகளும் சுற்றித்திரிவது வழக்கம்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி இந்த சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள், நாய்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விலங்குகளை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் பிடித்துள்ளது.

    இவை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து சாலைகளில் சுற்றித்திரிந்தன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி இருக்கும் நிலையில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் திரிந்த விலங்குகளை பிடித்து வேறு இடத்துக்கு மாற்றி வருகிறோம். மாமல்லபுரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து இது வரை 10 கால்நடைகளை கால்நடை காப்பகத்துக்கு மாற்றி உள்ளோம்.

    கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கால்நடைக்கு தினமும் ஒரு நாளைக்கு ரூ.250 தீவன கட்டணமும் விதிக்கப்படும். மாமல்லபுரத்தில் கோவில்களுக்கு நேர்ந்துவிடப்பட்ட காளைகளும் பிடிபட்டன.

    ஆகஸ்டு 10-ந்தேதிக்கு பிறகு அவை மாமல்லபுரம் டவுன் பஞ்சாயத்தில் ஒப்படைக்கப்படும். உரிமம் பெறாத கால்நடைகள் கொளத்தூரில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட பசுகாப்பகத்துக்கு மாற்றப்படும்.

    கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் பிடிபட்ட குரங்குகள் வடலூர் மற்றும் நன்மங்கலம் வனப்பகுதியில் விடப்படும். கால்நடை காப் பகத்தில் கால்நடை மருத்து வர்களின் மேற்பார்வையில் பணியாளர்கள் கால்நடைகளுக்கு உணவளிக்கிறார்கள்.

    பிடிபட்ட பல தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கால்நடைகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு உணவளிக்கப்படுகின்றன. கோவில் காளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

    ×