என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட்: கிழக்கு கடற்கரை சாலையில் திரிந்த கால்நடைகள், குரங்குகள் பிடிபட்டன
    X

    கோப்பு படம்

    செஸ் ஒலிம்பியாட்: கிழக்கு கடற்கரை சாலையில் திரிந்த கால்நடைகள், குரங்குகள் பிடிபட்டன

    • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.
    • கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து சாலைகளில் சுற்றித்திரிந்தன.

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.

    போட்டி தொடங்க இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் மாமல்லபுரத்துக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் அழகுபடுத்தப் பட்டு வருகின்றன.

    வீரர்கள் மற்றும் விளையாட்டு போட்டியை காண ஏராளமானோர் வருவதால் கிழக்கு கடற்கரை சாலை அழகாக காட்சி அளிக்கின்றன. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாலிங்கபுரம் சாலையில் கால்நடைகளும், நாய்கள், குரங்குகளும் சுற்றித்திரிவது வழக்கம்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி இந்த சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள், நாய்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விலங்குகளை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் பிடித்துள்ளது.

    இவை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து சாலைகளில் சுற்றித்திரிந்தன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி இருக்கும் நிலையில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் திரிந்த விலங்குகளை பிடித்து வேறு இடத்துக்கு மாற்றி வருகிறோம். மாமல்லபுரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து இது வரை 10 கால்நடைகளை கால்நடை காப்பகத்துக்கு மாற்றி உள்ளோம்.

    கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கால்நடைக்கு தினமும் ஒரு நாளைக்கு ரூ.250 தீவன கட்டணமும் விதிக்கப்படும். மாமல்லபுரத்தில் கோவில்களுக்கு நேர்ந்துவிடப்பட்ட காளைகளும் பிடிபட்டன.

    ஆகஸ்டு 10-ந்தேதிக்கு பிறகு அவை மாமல்லபுரம் டவுன் பஞ்சாயத்தில் ஒப்படைக்கப்படும். உரிமம் பெறாத கால்நடைகள் கொளத்தூரில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட பசுகாப்பகத்துக்கு மாற்றப்படும்.

    கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் பிடிபட்ட குரங்குகள் வடலூர் மற்றும் நன்மங்கலம் வனப்பகுதியில் விடப்படும். கால்நடை காப் பகத்தில் கால்நடை மருத்து வர்களின் மேற்பார்வையில் பணியாளர்கள் கால்நடைகளுக்கு உணவளிக்கிறார்கள்.

    பிடிபட்ட பல தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கால்நடைகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு உணவளிக்கப்படுகின்றன. கோவில் காளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

    Next Story
    ×