என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்- மெழுகில் சிற்பம் வடித்த அரசு கல்லூரி மாணவர்கள்
- செஸ் விளையாட்டில் உள்ள ராஜா, சோல்ட்ஜரை வெட்டி விளையாடும் வகையில் மற்றொரு மெழுகு சிற்பமும் செய்து வருகின்றனர்.
- மரச்சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் மரத்தில் செஸ் போர்டு காயின் சிற்பங்கள் வடித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகள் கலந்து கொள்வதை வித்தியாசமான கோணத்தில் உணர்த்தும் வகையில் உலோக சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு படிக்கும் 3 மாணவர்கள் தங்கள் செய்முறை கூட வகுப்பறையில் உலக உருண்டை வடிவில் செஸ் போர்டு மெழுகு சிற்பம் வடித்து அசத்தி உள்ளனர்.
மெழுகில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வரும் இதில் உலக உருண்டை மீது செஸ் போர்டு மற்றும் காய்கள் உள்ளது போல் இந்த மெழுகு சிற்பத்தை மாணவர்கள் மெழுகினை உருக்கி செய்து வருகின்றனர்.
அதேபோல் செஸ் விளையாட்டில் உள்ள ராஜா, சோல்ட்ஜரை வெட்டி விளையாடும் வகையில் மற்றொரு மெழுகு சிற்பமும் செய்து வருகின்றனர். மரச்சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் மரத்தில் செஸ் போர்டு காயின் சிற்பங்கள் வடித்து வருகின்றனர்.
மாமல்லபுரம் பகுதியில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வகையில் இந்த செஸ் விழிப்புணர்வு மெழுகு சிற்பம் மற்றும் மரச்சிற்பத்தினை வடிவமைத்து வருவதாக இந்த கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.






