என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • பலத்த தீ காயம் அடைந்த மூதாட்டியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சேலையூர் பராசக்தி நகர் சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பத்மநாதன். அவரது மனைவி சாந்தா (வயது 72). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இதனால் வீட்டில் கணவன்- மனைவி இருவர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

    நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மாலையில் வீட்டிலிருந்த பூஜை அறையில் விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புடவையில் தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. அவரது கதறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.

    பலத்த தீ காயம் அடைந்த மூதாட்டியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நீலகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் ஆகியோர் மது குடிக்க சென்றனர்.
    • ஆத்திரம் அடைந்த பூவரசன் நீலகண்டனின் தலையில் கல்லை போட்டு தாக்கி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த பரனூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 46). கட்டிட மேஸ்திரியான இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது பரனூர் சுடுகாடு செல்லும் வழியில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

    இதுகுறித்து தவகல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்ந்தபோது நீலகண்டன் இறந்தது தெரிய வந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நீலகண்டன் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நீலகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் (24) ஆகியோர் மது குடிக்க சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பூவரசன் நீலகண்டனின் தலையில் கல்லை போட்டு தாக்கி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து பூவரசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • வாலிபரிடம் கீழே இறங்கு மாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்து தொடர்ந்து மிரட்டல் விடுத்தார்.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலில் உள்ள வடக்கு கோபுரம் சுமார் 150 அடி உயரம் கொண்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு கோவிலுக்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென கோவில் கோபுரத்தில் விறு,விறுவென ஏறினார். அவர் கோபுரதத்தின் உச்சிக்கு சென்று தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்கழுக்குன்றம் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரவித்தனர்.

    அவர்கள் அந்த வாலிபரிடம் கீழே இறங்கு மாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்து தொடர்ந்து மிரட்டல் விடுத்தார். சுமார் 4 மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்னர் கோபுரத்தின் உச்சியில் ஏறிய வாலிபரை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.

    விசாரணையில் அவர் திருக்கழுக்குன்றம் வன்னியர் தெருவை சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பது தெரிந்தது. வெல்டிங் கடையில் வேலை செய்து வருவதும்அவருக்கு சரிவர சம்பளம் தராததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் மேலும் காதல் தோல்வியாலும் மன உளச்சலில் இருந்து வந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான உடை அணியும்படி அறிவுறுத்தப்பட்டது
    • அனைவருக்கும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் மாமல்லபுரம் மாதா கோயில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ-மாணவியர், ஆசிரியர் உள்ளிட்டோரிடம் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான உடை அணிவது, ராக்கெட் பட்டாசை தவிர்ப்பது, திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பது, பெரியவர்களை உதவிக்கு வைத்துக்கொள்வது, சாலையில் வெடிப்பதை தவிர்ப்து உள்ளிட்ட தீத்தடுப்பு முறைகள் குறித்து, தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர்.

    பின்னர் அனைவருக்கும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும், தீ விபத்து மீட்பு அவசர உதவிக்கு, 100, 101, 108, 112 ஆகிய எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    பள்ளியின் தலைமை ஆசியை சகாய பிருந்தா, தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் பாலமுருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • நடராஜன் பேக்கரியில் வேலை பார்த்தபோது அபிநயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்துடன் அபிநயா திடீரென மாயமானார்.

    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்தபோது அங்கு வேலை செய்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்துடன் அபிநயா திடீரென மாயமானார். அவரை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து நடராஜன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் நகை-பணத்துடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அபிநயாவின் குடும்ப பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டியின்போது குளங்களை சீரமைத்து அழகுபடுத்த சிறப்பு மேம்பாட்டு நிதியாக 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • "ஜல்ஜீவன்" திட்ட, நீராதார நீர்நிலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்விற்கு டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் இரண்டு குளங்களை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டியின்போது குளங்களை சீரமைத்து அழகுபடுத்த சிறப்பு மேம்பாட்டு நிதியாக 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோலைப்பொய்கை குளம் மற்றும் திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள வண்ணான்குட்டை என இரண்டு குளங்கள் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் "ஜல்ஜீவன்" திட்ட, நீராதார நீர்நிலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்விற்கு டெல்லியில் இருந்து வந்த மத்திய கலாச்சார இயக்குனர் பைத்தே, மத்திய கிடங்கு கழக உதவி இயக்குனர் விக்ரம் கார்க் ஆகியோர் மாமல்லபுரத்தில் சீரமைக்கப்பட்ட இரண்டு குளங்களையும் நேற்று மாலை ஆய்வு செய்தனர். குளங்களின் நீர் கொள்ளளவு, வழித்தடம், பயன்பாடு, வெளியேற்றம், கட்டுமான பணிகளின் உறுதி, இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் உள்ளிட்டவைகளை குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, பொறியாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மணமை, கடம்பாடி, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குளங்கள் மேம்பாட்டு பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    • நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 157 விற்பனையாளர்கள் 21 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம்.
    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி போன்ற விவரங்கள் மேற்கண்ட வலைதள இணைப்பிலும் மற்றும் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 157 விற்பனையாளர்கள் (சேல்ஸ்மேன்) மற்றும் 21 கட்டுநர்கள் (பேக்கர்) பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடமிருந்து http://www.drbcg.in என்ற இணையதளம் (ஆன்லைன்) மூலம் மட்டும் 14.11.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி போன்ற விவரங்கள் மேற்கண்ட வலைதள இணைப்பிலும் மற்றும் http://youtube/G5c502ELJD8 என்ற Youtube சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட வெளிநாட்டு, மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    • தாஜ்மகாலை விட மாமல்லபுரத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்திருப்பது பெருமை அடைய செய்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அடங்கிய "யுனஸ்கோ" நகரமாக விளங்குகிறது. இங்குள்ள வெண்ணெய் உருண்டை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் வரலாற்று சிறப்பு பெற்றவை.

    தற்போது சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லும் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி, வெளிநாட்டவர் அதிகளவில் வரும் நகரமாக மாமல்லபுரம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளது.

    இந்த நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட், காற்றாடி திருவிழா போன்ற சர்வதேச விளையாட்டு, கேளிக்கை நிகழ்ச்சிகள் இங்கு நடந்ததால் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் சுற்றுலா திட்டத்தில் மாமல்லபுரம் தான் முதல் பார்வை இடமாக திகழ்கி றது. இதனால் வெளி மாநி லத்தவர்களின் வருகையும் தற்போது அதிகரித்து உள்ளது. இதனால் பல மொழி பேசும் சுற்றுலா வழி காட்டிகளுக்கு மாமல்ல புரத்தில் மவுசு அதிகரித்து உள்ளது.

    உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மாமல்லபுரத்தில் வழிகாட்டி யார்? அவருக்கு பல மொழிகள் பேச தெரியுமா? அரசு பதிவு பெற்றவரா? என்பதை உறுதி செய்து முன் கூட்டியே பதிவு செய்து வருகின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் பல மொழிகள் தெரிந்த சுற்றுலா வழிகாட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியை சேர்ந்த பல மொழி பேசும் வழிகாட்டி வரதன் என்பவரிடம் இதை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட வெளிநாட்டு, மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மாமல்லபுரத்தை ஒரு ஆன்மீகம் மற்றும் வரலாற்று தளமாக பார்க்கிறார்கள். சிற்பங்களை தொட்டு கும்பிடுகிறார்கள். இதை பார்க்கும்போது நம் மாமல்லபுரம் இவ்வளவு புனித பூமியா? என புல்லரிக்கிறது.

    தாஜ்மகாலை விட மாமல்லபுரத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்திருப்பது பெருமை அடைய செய்து உள்ளது. புராதன சின்னங்களின் வளாகங்களில் மழை, வெயிலுக்கு பயணிகள் ஒதுங்கும் வகையில் நிழல் குடைகள் அமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உத்திரமேரூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த விச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு இவரது மகன் செல்வமுத்து என்கிற பெருமாள் (வயது 26). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டிற்கு அருகிலுள்ள இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்சார வயர் இவர் மீது பட்டதால் உடலில் மின்சாரம் பாய்ந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாடு முழுவதும் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையம் 600 இடங்களில் தொடங்கப்பட்டது.
    • விழாவில் செங்கல்பட்டு மாவட்டத்தின் வேளாண் இடுபொருள் வியாபாரிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

    திருக்கழுக்குன்றம்:

    நாடு முழுவதும் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையம் 600 இடங்களில் தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் சட்ராஸ் ரோடு பகுதியில் உள்ள மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட் சார்பில் பிரதம மந்திரி விவசாயிகள் சேவை மையம் ஸ்ரீபிருந்தா அக்ரோ சர்வீஸ் மையத்தில் நேற்று தொடங்கப்பட்டது. இவ்விழாவில் மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாக இயக்குனர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினர். விழாவில், அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் ஹார்ஸ்மல்ஹோத்ரா மற்றும் துணை பொதுமேலாளார் அனில்குமார், முதன்மை மேலாளர்| ராமகிருஷ்ணராஜூ, மண்டல மேலாளர் சிவகுமார் மற்றும் துணை மேலாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் இவ்விழாவில் தரக்கட்டுப்பாடு வேளாண் துறை சார்பாக திருமுருக பூங்குழலி, வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரவணன், விதை ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை மேலாளர் பாஸ்கரன், ஸ்ரீபிருந்தா அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் டாக்டர் சுரேஷ் ஆகியோர் நன்றி உரை ஆற்றினர். விழாவில் செங்கல்பட்டு மாவட்டத்தின் வேளாண் இடுபொருள் வியாபாரிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

    • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஐ.டி. என்ஜினீயர் மதுமொழி அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்போரூர்:

    சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர் போரூர் சி.எல்.எப். பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த மதுமொழி (33) என்ற பெண்ணை 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வெங்கடேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்த மதுமொழி செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அவரது தங்கை வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று தங்கை குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஐ.டி. என்ஜினீயர் மதுமொழி அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தவெள்ளத்தில் இறந்து கிடைந்த மதுமொழி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் ஐ.டி. பெண் என்ஜினீயர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கைதானவர்களிடம் இருந்து 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு திருட்டுத்தனமாக மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த ஊரப்பாக்கம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் என்கிற சுரேஷ் (வயது 34), என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல மறைமலைநகர் அண்ணா சாலை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் நொச்சிக்குளம் பகுதி சேர்ந்த மைக்கேல்ராஜ் (26), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×