என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் செழுமை மையம்"
- நாடு முழுவதும் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையம் 600 இடங்களில் தொடங்கப்பட்டது.
- விழாவில் செங்கல்பட்டு மாவட்டத்தின் வேளாண் இடுபொருள் வியாபாரிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
திருக்கழுக்குன்றம்:
நாடு முழுவதும் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையம் 600 இடங்களில் தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் சட்ராஸ் ரோடு பகுதியில் உள்ள மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட் சார்பில் பிரதம மந்திரி விவசாயிகள் சேவை மையம் ஸ்ரீபிருந்தா அக்ரோ சர்வீஸ் மையத்தில் நேற்று தொடங்கப்பட்டது. இவ்விழாவில் மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாக இயக்குனர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினர். விழாவில், அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் ஹார்ஸ்மல்ஹோத்ரா மற்றும் துணை பொதுமேலாளார் அனில்குமார், முதன்மை மேலாளர்| ராமகிருஷ்ணராஜூ, மண்டல மேலாளர் சிவகுமார் மற்றும் துணை மேலாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இவ்விழாவில் தரக்கட்டுப்பாடு வேளாண் துறை சார்பாக திருமுருக பூங்குழலி, வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரவணன், விதை ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை மேலாளர் பாஸ்கரன், ஸ்ரீபிருந்தா அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் டாக்டர் சுரேஷ் ஆகியோர் நன்றி உரை ஆற்றினர். விழாவில் செங்கல்பட்டு மாவட்டத்தின் வேளாண் இடுபொருள் வியாபாரிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.






