என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு பாதுகாப்பு"

    • பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான உடை அணியும்படி அறிவுறுத்தப்பட்டது
    • அனைவருக்கும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் மாமல்லபுரம் மாதா கோயில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ-மாணவியர், ஆசிரியர் உள்ளிட்டோரிடம் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான உடை அணிவது, ராக்கெட் பட்டாசை தவிர்ப்பது, திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பது, பெரியவர்களை உதவிக்கு வைத்துக்கொள்வது, சாலையில் வெடிப்பதை தவிர்ப்து உள்ளிட்ட தீத்தடுப்பு முறைகள் குறித்து, தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர்.

    பின்னர் அனைவருக்கும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும், தீ விபத்து மீட்பு அவசர உதவிக்கு, 100, 101, 108, 112 ஆகிய எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    பள்ளியின் தலைமை ஆசியை சகாய பிருந்தா, தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் பாலமுருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ×