என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நியாயவிலை கடை பணியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
- நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 157 விற்பனையாளர்கள் 21 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி போன்ற விவரங்கள் மேற்கண்ட வலைதள இணைப்பிலும் மற்றும் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 157 விற்பனையாளர்கள் (சேல்ஸ்மேன்) மற்றும் 21 கட்டுநர்கள் (பேக்கர்) பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடமிருந்து http://www.drbcg.in என்ற இணையதளம் (ஆன்லைன்) மூலம் மட்டும் 14.11.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி போன்ற விவரங்கள் மேற்கண்ட வலைதள இணைப்பிலும் மற்றும் http://youtube/G5c502ELJD8 என்ற Youtube சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Next Story






