என் மலர்
செங்கல்பட்டு
- சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது ஷாருக்கான் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடுக்கலூரை சேர்ந்தவர் ஷாருக்கான் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர்கள் வசந்தகுமார் (20) கோசலராமன் (22). இவர்கள் 3 பேரும் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கள் சொந்த ஊரான கடுக்கலூருக்கு சென்று விட்டு இரவு 1 மணி அளவில் தாம்பரத்திற்கு திரும்பினர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது ஷாருக்கான் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த நண்பர்கள் படுகாயம் அடைந்து மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், ஷாருக்கானின் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
- முனியாண்டி அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
- குற்றம் சுமத்தப்பட்ட முனியாண்டிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (32) இவர் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. அதன்பேரில் முனியாண்டி மீது படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது செங்கல்பட்டு போக்சோ கோட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முனியாண்டிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். அரசு தாப்பில் வக்கீல் புவனேஷ்வரி ஆஜரானார்.
- கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
- பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
வண்டலூர்:
பரனூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 2 ஏக்கர் 58 சென்ட் பரப்பளவில் ரூ.25 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 971 மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 116 அறைகள் வருகின்றன. இதில் எல்.ஐ.ஜி. 26 அறைகளும், எம்.ஐ.ஜி. 90 அறைகளும் கொண்ட 13 தளங்கள் ஒரு பிரிவாகவும், 15 தளங்கள் ஒரு பிரிவாகவும் கட்டப்படுகிறது.
புதிய கட்டிடப் பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த கட்டிடத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் அருகே உள்ள 13.73 ஏக்கர் பரப்பளவில் காலி மனைகளையும் 145 அறைகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும்.
ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி 121 குடியிருப்புகளில் 61 குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மறுசீரமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதற்கான பணியும் நடந்து வருகிறது.
ரெயில்வே துறையில் வாங்க வேண்டிய அனுமதியும் விரைவில் முறையாக பெற்று வருகிற மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். இதேபோல் கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சஞ்சீவனா, ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஆராமுதன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொறியாளர் சீனிவாச ராவ் உடன் இருந்தனர்.
- பூண்டி நீர் தேக்கத்துக்கு வருகை தரும் பறவைகளுக்கான பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய சுற்றுலா தளமாக மாற்றப்பட உள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
செங்கல்பட்டு:
பூண்டி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி, திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரி பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறி இருப்பதாவது:-
பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீர் விளையாட்டுகள், பல்வேறு வகையான படகுகள், வாட்டர் ஸ்கூட்டர்கள், விரைவுப் படகுகள் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளது.
பூண்டி நீர் தேக்கத்துக்கு வருகை தரும் பறவைகளுக்கான பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய சுற்றுலா தளமாக மாற்றப்பட உள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான கொளவாய் ஏரி அமைந்துள்ளது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை இங்கு ஏற்படுத்துவதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பாக அமையும். இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் ஏரியில் படகு சவாரி நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உள்ள சுற்றுலா பயணிகளை இது பெரிதும் கவரும் என்பதோடு, சுற்றுலாத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 4 வழி சாலையாக மாற உள்ளது.
- கட்டிடங்களை இடிக்க அதன் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கி.மீ., தூரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை ரூ. 700கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 4 வழி சாலையாக மாற உள்ளது.
இதில் 38சிறிய பாலங்கள் அமைய உள்ளது. இதற்காக 5,434 பேரின் பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்தநிலையில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிப்பதற்காக சாலையோர கடை, வீடு, கோவில், மண்டபம் என அனைத்து கட்டிடங்களையும் பொக்லைன் எந்திரம் மூலம்இடிக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் கட்டிட உரிமையாளர்கள் சிலருக்கு இன்னும் உரிய இழப்பீடு பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சில பகுதிகளில் கட்டிடங்களை இடிக்க அதன் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் கட்டிடங்களை இடிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
- வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது.
- வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் சினிமா பார்த்து விட்டு நள்ளிரவு குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது.
இதுபோல் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவில் வழக்குகளில் தலையிடுவதாகவும், வக்கீல்களை தரக்குறைவாக பேசுவதாகவும் வக்கீல்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்து தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகம் முன்பு இன்று காலை வக்கீல்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்க தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். சுமார் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு பணியை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் கோர்ட்டு வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அப்போது போலீசருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் கூட்டத்தின் உள்ளே சென்று உதவி கமிஷனரை பத்திரமாக அழைத்து வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
- குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளை நிலங்களில் பயிர்களை தின்பதும் என பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
- ஊராட்சி துணை தலைவர் கோவிந்தசாமி செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெரு, லிங்காபுரம், முத்துமாரியம்மன் கோவில் தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளை நிலங்களில் பயிர்களை தின்பதும் என பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இதுகுறித்து ஊராட்சி துணை தலைவர் கோவிந்தசாமி செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வனத்துறை அலுவலர் கமலாசனன், வனக்காப்பாளர் ஏழுமலை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு உள்ளூர் மக்கள் உதவியுடன், இரும்பு கூண்டுக்குள் நிலக்கடலை, வாழைப்பழம், தக்காளி போன்ற பொருட்களை வைத்து 8 குரங்குகளை பிடித்தனர்.
பின்னர் அவைகளை பாதுகாப்பாக, சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் காட்டுக்குள் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளைநிலங்களில் நாசப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.
- இரும்பு கூண்டுக்குள் நிலக்கடலை, வாழைப்பழம், தக்காளி போன்ற பொருட்களை வைத்து 8 குரங்குகளை பிடித்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெரு, லிங்காபுரம், முத்து மாரியம்மன் கோவில் தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது.
குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளைநிலங்களில் நாசப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.
இதுகுறித்து ஊராட்சி துணை தலைவர் கோவிந்த சாமி செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வனத்துறை அலுவலர் கமலாசனன், வனக்காப்பாளர் ஏழுமலை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு உள்ளுர் மக்கள் உதவியுடன் இரும்பு கூண்டுக்குள் நிலக்கடலை, வாழைப்பழம், தக்காளி போன்ற பொருட்களை வைத்து 8 குரங்குகளை பிடித்தனர்.
பின்னர் அவைகளை பாதுகாப்பாக, சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் காட்டுக்குள் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- கைதான சிறுவர்கள் 3 பேரும் நகை கடைக்கு அருகில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
சேலையூரில் நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 1½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான சிறுவர்கள் 3 பேரும் நகை கடைக்கு அருகில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. 3 பேரும் கடந்த 4 மாதமாக இங்கு வேலை செய்து கொண்டே கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் தீட்டி உள்ளனர்.
கடைக்குள் எந்த வழியாக நுழையலாம் என்று திட்டம் போட்டு கடையை பல முறை நோட்டமிட்டுள்ளனர்.
அப்போது பைப் வழியாக மாடிக்கு சென்று கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன்படி 3 பேரும் பைப் வழியாக மாடிக்கு ஏறிச் சென்று பின்னர் லிப்ட் அருகில் உள்ள துளை வழியாக கயிறு கட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் இது தெரியவந்தது. சிறுவர்கள் 3 பேரும் 18 வயதுக்குட்ப்பட்டவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
- மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து இங்கு வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- கடந்த ஒரு மாதத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடுவாஞ்சேரி:
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே ஏரிக்கரை உள்ளது. அப்பகுயில் உள்ள முட்புதரில் மனித எலும்பு கூடு ஒன்று துண்டு, துண்டாக கிடந்தன.
அந்த எலும்புக்கூட்டில் தலை, கை எலும்புகள் துண்டாக கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற ஒருவர் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எலும்பு கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
எலும்புக்கூடுடன் அந்த நபர் அணிந்து இருந்த கால்சட்டடை, கருப்பு நிற டி-சர்ட் அப்படியே இருந்தது. அருகில் ஷுவும் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். டி-சர்ட்டில் "சேலஞ்ச் 87 கிரியேட்டிவ் டன் இஸ்பெட்டர்" என்று எழுதப்பட்டு இருந்தது.
இறந்த நபர் யார்? ஆணா?பெண்ணா? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் இறந்து பல நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.
மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து இங்கு வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடுகளை போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலை 3 மாணவர்களையும் கடலுக்குள் இழுத்து சென்றது.
- குதிரை சவாரியில் ஈடுபடும் தேசிங்கு என்பவர் உடனே கடலில் நீந்தி சென்று தத்தளித்து கொண்டிருந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சக மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மாமல்லபுரம் கடற்ரைக்கு சென்றனர். கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் அவர்களில் 4 பேர் கடலில் இறங்கி குளித்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலை 3 மாணவர்களையும் கடலுக்குள் இழுத்து சென்றது. 100 மீட்டர் தூரத்திற்கு கடலில் இழுத்து செல்லப்பட்ட அவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். இதை பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர்.
அங்கு குதிரை சவாரியில் ஈடுபடும் தேசிங்கு (32) என்பவர் உடனே கடலில் நீந்தி சென்று தத்தளித்து கொண்டிருந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்த அவரது நண்பர்களான கடற்கரை பகுதி புகைப்பட கலைஞர்கள் தினேஷ், மோகன் ஆகியோர் கடலில் நீந்தி சென்று தேசிங்குக்கு உதவியாக 3 மாணவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மயங்கிய நிலையில் இருந்த அவர்கள் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பினர். பின்னர் கடற்கரைக்கு வந்த மாமல்லபுரம் தீயணைப்பு துறை அலுவலர் சண்முகம், மூத்த தீயணைப்பு வீரர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு துறையினர் கடலில் சிக்கி உயிருக்கு போராடிய மணவர்களை காப்பாற்றிய தேசிங்கு மற்றும் அவரது நண்பர்களின் மனித நேயத்தை பாராட்டினர். மீட்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த வசந்த் (22), செங்கல்பட்டு மாவட்டம், வையாவூரை சேர்ந்த அஜய் (24), சாலவாக்கத்தை சேர்ந்த ராகுல் (26) ஆகியோரை தீயணைப்பு துறையினரும், போலீசாரும் எச்சரித்து அனுப்பினர்.
- கொள்ளையன் அதே பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
- கைது செய்த கொள்ளையனை சேலையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு தாம்பரம் அருகே சேலையூர்- வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் என்கிற பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
நேற்று நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டனர்.
இதில், கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டுள்ளன. லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்தனர்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கொள்ளையன் அதே பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கைது செய்த கொள்ளையனை சேலையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






