என் மலர்

  தமிழ்நாடு

  நகைக்கடை கொள்ளை: 4 மாதமாக கடையை நோட்டமிட்டு கொள்ளையடித்த சிறுவர்கள்
  X

  நகைக்கடை கொள்ளை: 4 மாதமாக கடையை நோட்டமிட்டு கொள்ளையடித்த சிறுவர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • கைதான சிறுவர்கள் 3 பேரும் நகை கடைக்கு அருகில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

  சேலையூரில் நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 1½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  கைதான சிறுவர்கள் 3 பேரும் நகை கடைக்கு அருகில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. 3 பேரும் கடந்த 4 மாதமாக இங்கு வேலை செய்து கொண்டே கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் தீட்டி உள்ளனர்.

  கடைக்குள் எந்த வழியாக நுழையலாம் என்று திட்டம் போட்டு கடையை பல முறை நோட்டமிட்டுள்ளனர்.

  அப்போது பைப் வழியாக மாடிக்கு சென்று கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன்படி 3 பேரும் பைப் வழியாக மாடிக்கு ஏறிச் சென்று பின்னர் லிப்ட் அருகில் உள்ள துளை வழியாக கயிறு கட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் இது தெரியவந்தது. சிறுவர்கள் 3 பேரும் 18 வயதுக்குட்ப்பட்டவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

  Next Story
  ×