என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,677 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4,605 பேர் வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 172 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வருவாய்த்துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சிலை முன்பிருந்து ஊர்வலத்தை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலமானது கடைவீதி வழியாக திருச்சி- சிதம்பரம் சாலை, 4 ரோடு, தா.பழூர் சாலை வழியாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியபடி, வாக்களிப்பதன் அசியம் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக வாக்காளர் தினத்தையொட்டி இந்திய வரைபடம், 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக வண்ணக்கோலங்களிட்டு, பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், தேர்தல் துணை தாசில்தார் உமா, உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப் -இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வா அலுவலக உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரமங்கலம் அருகே பிறந்த குழந்தை இறந்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தாம்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி அபிராமி(வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அபிராமியை பிரசவத்திற்காக நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் சாத்தாம்பாடி அருகே உள்ள குணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலை 5 மணி அளவில் அபிராமிக்கு பிரசவம் நடைபெற்றது. அப்போது பிறந்த ஆண் குழந்தை, பனிக்குடம் உடைந்து தண்ணீர் குடித்து விட்டதாக கூறி, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் மற்றும் அவரது உறவினர்கள் குணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 2 அல்லது 3 மருத்துவமனைக்கு ஒரு டாக்டரை நியமிப்பதால் இப்படி நடப்பதாகவும், இனி ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் டாக்டர் இருக்கும்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போதிய உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். இனியும் இதுபோன்று குழந்தைகள் சாகக்கூடாது என்று அவர்கள் கூறினர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம் அருகே மாமனார் வீட்டின் முன்பு மகன்களுடன் ஆசிரியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம்(வயது 54). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமலிங்கத்தின் மகள் சாந்தி(48) என்பவருக்கும் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடந்து அறிவுமதி(15), பாலாஜி(10) என 2 மகன்கள் உள்ளனர். இதில் அறிவுமதி மன வளர்ச்சி குன்றியவர் ஆவார். விநாயகம், சிதம்பரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சாந்தி மருந்தாளுனராக பணிபுரிந்தார்.
மேலும் அவர்கள், அறிவுமதி மனவளர்ச்சி குன்றியவராக இருப்பதால் வாடகை வீட்டில் இருக்க முடியாது என நினைத்து, கடன் வாங்கி வீடு கட்டியுள்ளனர். புது வீட்டில் குடிபுகுந்து 2 ஆண்டுகளில் சாந்தி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் விநாயகம், 2 மகன்களையும் கவனித்து, அவர்களை படிக்க வைத்து வருகிறார். தனக்கு கிடைக்கிற வருமானம் பிள்ளைகளை கவனிக்கவும், படிக்க வைக்கவும், வீடு கட்ட வாங்கிய கடனை கட்டவும் போதாத சூழல் உள்ளதால், ஊர் முக்கியஸ்தர் முன்னிலையில் அவர் தனது மாமனாரிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் உதவி செய்யாத நிலையில், நேற்று விநாயகம் தனது 2 மகன்களுடன் ராமலிங்கத்தின் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து ராமலிங்கத்திடம் கேட்டபோது, அவர் கூறுகையில், எனது மகளுக்கு 30 பவுன் நகை, சீர்வரிசை, ரொக்கம் உள்பட அனைத்தும் கொடுத்துள்ளேன். வீடு குடி போனதற்கும், வேலை வாங்கிக் கொடுப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை என பலமுறை கொடுத்துள்ளேன். எனது மகள் உயிரோடு இருந்தபோது நிறைய செய்துள்ளேன். இப்போது அவர் இறந்துவிட்டார். அவரே இல்லாதபட்சத்தில் நான் ஏன் செய்ய வேண்டும். உழைத்து சாப்பிட வேண்டியதுதானே?. மனைவியை இழந்த நான், தனிமையில் எனது வருமானத்தில் சமைத்து சாப்பிட்டு வருகிறேன், என்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாமனாரிடம் உதவி கேட்டு மருமகன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலுரில் சாலையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மாடுகள் தின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை வித்தது. அதன் பிறகு, மளிகை காய்கறி, உணவு விடுதிகள், மற்ற பிற நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் கொடுப்பது அதிக அளவில் குறைந்தது. பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் கடைகளில் அடிக்கடி சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து 70 சதவீத அளவிற்கு பயன்பாடு குறைந்து.
பொதுமக்களும் பொருட்கள் வாங்க துணி பைகள், பாத்திரங்கள் எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர் கொரோனா ெதாற்றால் வணிக நிறுவனங்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்தன. பின்பு கடைகள் திறக்கப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமானது அதிகாரிகள் நோய்தொற்றை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வந்ததால் பிளாஸ்டிக் விற்பனையை தடுக்கவில்லை. இதனால் அரியலூர் நகரில் தற்பொழுது எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள் தான் வலம் வருகின்றன.
மளிகை, காய்கறி, உணவு விடுதிகள், மாமிச கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படுகிறது அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. நகரின் முக்கிய வீதிகளில் மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்கள் அனைத்துமே பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கபட்டு பின்னர் சாலையில் கொட்டப்படுவதால் நகராட்சி தொழிலாளர்கள் எத்தனை முறை சுத்தம் செய்தாலும் உடனே அந்த இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்கொட்டப்படுவது வழக்கமாகிவிட்டது.
இந்த பிளாஸ்டிக் பைகளை சாலையோரங்களில் மேயும் மாடுகள் தின்று வருகிறது. இதனால் அந்த மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாடுகள் பல்வேறு ேநாயால் பாதிக்கப்பட்டு ரோட்டில் நடக்கமுடியாமல் பரிதாபமாக திரிகிறது. எனவே கால்நடைகளையும், நகரின் சுகாதாரத்தையும் காக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை மீண்டும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 4,672 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,672 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 4,600 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 330 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் 221 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் அகழ்வாராய்ச்சிக்கான பணி தொடங்கியது.
மீன்சுருட்டி:
கட்டிட கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டாகவும், புகழ்பெற்ற வழிபாட்டு தலமாகவும் விளங்குவது, கங்கை கொண்ட சோழபுரம். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
கீழடியை போன்று வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சிக்கான பணி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு தொல்லியல் துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட 18 கிலோ மீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறுகையில், தமிழகம் முழுவதும் 12 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 7 இடங்களில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில் ஏற்கனவே கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கி விட்டது. தற்போது கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெறுவதற்கான இடங்களை தேர்வு செய்வதற்காக இன்று (அதாவது நேற்று) முதற்கட்ட ஆய்வுப்பணி தொடங்கியுள்ளது. இதில் கங்கை கொண்ட சோழபுரம், மாளிகைமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு முப்பரிமாண படங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திருவாரூர் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களை கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அதன் பின்னர் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அப்போது தொல்லியல் அலுவலர்கள் பாக்கியலட்சுமி, பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பஸ் மோதி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் ஜெமின் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லப்பன் (வயது 56). இவர் மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கீழப்பழுவூர் புதிய பஸ்நிலையம் அருகே அவரது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நல்லப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை அருகே மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (வயது 88). இவர், வீட்டில் இருந்து தெருவில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி அணிந்திருந்த சங்கிலி உள்பட 6 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், தளவாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூரில் அரசு கட்டிடத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள அறைகளில் நாய்கள் குடியேறியுள்ளன. அந்த கட்டிடத்தில் அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரியலூர்:
அரியலூரில் கடந்த 2004-ம் ஆண்டு 25 அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட மூன்று அடுக்கு கொண்ட கட்டிடம் ஜெயங்கொண்டம் சாலையில் கட்டப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் உருவானபோது இந்த இடத்தில்தான் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டது. பின்னர் கட்டிடத்தின் முதல் தளத்தில் மாவட்ட காவல்துறை அலுவலகம் தொடங்கப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவல்துறை அலுவலகம், சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டபோது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மேஜை, நாற்காலிகள், பீரோக்கள் மற்றும் தளவாட பொருட்களை எடுத்துச் சென்றனர்.
ஆனால் தேவையில்லாத காகிதங்கள் மற்றும் குப்பைகள் அங்கேயே விடப்பட்டுள்ளது. 6 மாதங்களாக முதல் தளம் காலியாக உள்ளது. பயன்பாடின்றி உள்ள சில அறைகளில் கதவுகள் திறந்தே கிடக்கின்றன. ஒரு பாழடைந்த கட்டிடம் போல் அந்த இடம் காட்சியளிக்கிறது. திறந்து கிடக்கும் அறைகளில் நாய்கள் குடியேறியுள்ளன.
இந்த கட்டிடம் பொதுப்பணித்துறை (கட்டிடப் பிரிவு) கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டிடத்தின் தரை தளத்தில் தான் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. அரியலூர் நகரில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், தொழிலாளர் நலத்துறை, நகர கட்டமைப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த கட்டிடங்களுக்கு மாத வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற அலுவலகங்களை காலியாக உள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடத்திற்கு மாற்றினால், அரசுக்கு ஒரு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் மாத வாடகை செலவு குறையும். கட்டிடமும் சேதமடையாமல் அழகாக இருக்கும். எனவே அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்பது ெபாதுமக்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் ஆகும்.
இந்த வளாகத்தில் மாவட்ட பத்திரப்பதிவு துறை, தோட்டக்கலைத் துறை, உணவுத்துறை அலுவலகங்கள் தனித்தனியாக உள்ளன. அந்தப் பகுதி முழுவதுமே கருவ மரங்கள் முளைத்து அடர்ந்த காடுபோல் காட்சி அளிக்கிறது. இரவில் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஒரு மின் விளக்கு கூட எரிவதில்லை. மாவட்ட போலீஸ் அலுவலகம், அந்த கட்டிடத்தில் செயல்பட்ட வரையில் மற்ற அலுவலகங்களுக்கும் பாதுகாப்பாக இருந்தன. தற்போது கட்டிடத்தில் இயங்கும் அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி மின் விளக்குகளை எரிய செய்ய வேண்டும் என்பது, அங்கு வரும் பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.
அரியலூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட மக்கள் சேவை இயக்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், மிளகாய் பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே ஆடு திருட முயன்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 38). சரக்கு ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு வீராரெட்டி தெருவில் உள்ள தனது அக்காள் கமலி வீட்டில் இவரும், இவரது தாய் செந்தாமரையும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டு அவர்கள் எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் ஆடுகளை திருடிக் கொண்டு இருந்தனர். இவர்களை பார்த்ததும் ஆடு திருடும் கும்பல் 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சித்தபோது, அவர்களில் ஒருவர் கத்தியை காட்டி வீரபாண்டியனை மிரட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து வீரபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து, ஆட்டை திருட முயன்ற ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் (வயது 21), தெற்கு புதுக்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்கிற படையப்பா (23), தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (22), வாரியங்காவலை சேர்ந்த விஜய் (22), இலையூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (20) ஆகிய 5 வாலிபர்களை கைது செய்தார். அவர்களில் பக்ருதீன் என்பவர், ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் என்பதும், மாவீரன் மஞ்சள் படையின் ஜெயங்கொண்டம் இளைஞரணி தலைவர் என்பதும் தெரியவந்தது.