search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
    X
    தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

    ஜெயங்கொண்டத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வருவாய்த்துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சிலை முன்பிருந்து ஊர்வலத்தை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    ஊர்வலமானது கடைவீதி வழியாக திருச்சி- சிதம்பரம் சாலை, 4 ரோடு, தா.பழூர் சாலை வழியாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியபடி, வாக்களிப்பதன் அசியம் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக வாக்காளர் தினத்தையொட்டி இந்திய வரைபடம், 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக வண்ணக்கோலங்களிட்டு, பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

    இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், தேர்தல் துணை தாசில்தார் உமா, உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப் -இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வா அலுவலக உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×