என் மலர்tooltip icon

    அரியலூர்

    • வெற்றியூர் கிராமப்பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரியலூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமானூர் ஏலாக்குறிச்சி, கீழப்பலூர் ஆகிய பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைந்துள்ளது. இருப்பினும் கல்லூர் , வெற்றியூர், சாத்தமங்கலம், விரகாலூர், திருப்பெயர், கீழகொளத்தூர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏ.டி.எம். எந்திரம் இல்லை. எனவே வெற்றியூர் ஊராட்சிவெ.விரகாலூர் பகுதிகள் ஏடிஎம் எந்திரம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேற்கண்ட கிராமங்களிலிருந்து ஏ.டி.எம்மில் பணம் எடுக்க கிராமங்களிலிருந்து மக்கள் திருமானூர் அல்லது கீழப்பழுர் ஏடிஎம்மை நாடுவதால், நேரம் அதிகமாவதுடன் சில நேரங்கில் அம் மையங்களில் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. அல்லது திருவையாறு,

    அரியலூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வெற்றியூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை கல்லூர் பாலத்தில் ஏ.டி.எம். மையம் அமைந்தால் கிராம பொதுமக்கள் பணம் எடுக்க சிரமம் இல்லாமல் இருக்கும் எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் சிரமங்களை மனதில் கொண்டு உடனடியாக கல்லூர் பாலம் அருகே ஏடிஎம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வாலர்களும் தெரிவித்துள்ளார்.

    • ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. திருமானூர் ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் பேசும் போது,

    கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் தடைபடாமல் வழங்கவேண்டும், கொள்ளிடம் ஆற்றில் கதவணை கூடிய தடுப்பணை போர்க்கால அடிப்படையில் அமைக்கவேண்டும், சிறப்பு மண்டலம் நான்கு வழி சாலைக்காக கையகபடுத்தப்பட்ட விவசாய நிலங்களை திருப்பித் தரவேண்டும்,

    நீர்நிலைப் பகுதிகளில் ஏழை எளிய மக்கள் குடிசைகளை அகற்றும் பொழுது அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து வீடுகள் கட்டித்தர வேண்டும், தமிழக அரசு அறிவித்த மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார் மாவட்ட குழு உறுப்பினர் சாமிதுரை நன்றி நன்றியுரை வழங்கினார்.

    • கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • ஜமாபந்தியில் 345 பெறப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களில் ஜமாபந்தி துவங்கியது. அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது,

    இந்த மாவட்டத்தில் பொட்டவெளி, இலுப்பையூர், ராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், அமினாபாத், கோவிந்தபுரம், அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரிய நாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி ஆகிய 18 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.

    இந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட 345 மனுக்களில் 25 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது,

    இந்நிகழ்ச்சியில் அரியலூர் கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலட்சுமி, தாசில்தார் குமரய்யா, தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாமிதுரை, சர்வே பிரிவு அன்புச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரிகள் உமா சங்கர், நந்தகுமார், முருகேசன், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமண உதவி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • பெண்களுக்கான தனி கழிவறை வசதி அமைக்க வேண்டும்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், தா.பழூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு நடைபெற்றது இதில், நிறுத்தப்பட்டுள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம் உள்பட அனைத்து நிதியுதவி திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

    தா.பழூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். விரிவுபடுத்தப்பட்ட பஸ் நிலையம் அமைக்க வேண்டும். பெண்களுக்கான தனி கழிவறை வசதி அமைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக உயர்த்தி ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து பொருள்களும் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்துக்கு ,அச்சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வாசுகி தலைமை வகித்தார். நிர்வாகிகள் செபஸ்தியம்மாள், அழகுரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் வாலண்டினா, மாநில துணை செயலாளர் கீதா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    மாநாட்டில் மாவட்டச் செயலர் பத்மாவதி, துணைச் செயலாளர் மீனா, பொருளாளர் அம்பிகா, ஒன்றியச் செயலர் மாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் சில பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது
    • பணி முடிக்கப்பட்டால் உடனடியாக மின்சாரம் விநியோகம் வழங்கப்படும்

    அரியலூர்:

    அரியலூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அதிலிருந்து மின்வினியோகம் பெறும் கயர்லாபாத், இராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஸ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஸ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி,

    தேளுர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர்; விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை

    நடுவலூர் துணைமின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி முழுவதும்

    மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை (18-ந்தேதி) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பணி முடிக்கப்பட்டால் உடனடியாக மின்சாரம் விநியோகம் வழங்கப்படும் என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தனர்
    • பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் சென்றனர்

    அரியலூர் :

    அரியலூர் அடுத்த காட்டுப்பிரிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில், ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன், வெங்கடேஷ், லதா, அரசு மணி, இளநிலை உதவியாளர் இலக்கியா ஆகியோர் கொண்ட குழுவினர், சின்னநாகலூர், பெரியநாகலூர், அஸ்தினாபுரம் கிராமங்களுக்குச் சென்று, அங்கு பொதுமக்களைச் சந்தித்து, அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி, மாணவர்களை சேர்க்க வலியுறுத்தினர்.

    முன்னதாக பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் சரோஜாகேவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோதண்டபாணி, நாட்டார் சின்னதம்பி, வார்டு உறுப்பினர்கள் பழனியாண்டி,செல்லமுத்து ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    • பி.சி., எம்.பி.சி., இனத்தவர்கள் பொருளாதார மேம்பாட்டு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள அலுவலகத்தை அணுகலாம்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் டாப்செட்கோ, டாம்கோ சார்பில் நடைபெறும் லோன் மேளாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படத்தப்பட்டு வருகிறது.

    தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புவர்கள் மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புவர்கள் அடுத்த மாதம் 6-ந் தேதி அன்று திருமானூர்

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 13 -ந் தேதி அன்று செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 20-ந் தேதி அன்று உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 27-ந் தேதி அன்று தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடைபெறவுள்ள லோன்மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
    • பேரணியில் தரமான இலவசக் கல்வி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர இலவச சிற்றுண்டி, கல்விச் சுற்றுலா, அனைத்துக் குழந்தைகளுக்கும் கணினி வழிக் கல்வி, பெண் குழந்தைகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூரில், அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பேரணியானது பள்ளியில் தொடங்கி, சிறுவளூர், பள்ள கிருஷ்ணாபுரம், சுப்பராயபுரம், நெருஞ்சிக்கோரை, புதுப்பாளையம் ஆகிய கிராமங்களுக்குச் சென்று, திரும்பி பள்ளியில் நிறைவடைந்தது.

    பேரணியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் ஆகியோர் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தங்களது குழந்தைகளை சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

    அங்கு தரமான இலவசக் கல்வி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர இலவச சிற்றுண்டி, கல்விச் சுற்றுலா, அனைத்துக் குழந்தைகளுக்கும் கணினி வழிக் கல்வி, பெண் குழந்தைகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் மேற்கொண்டனர்.


    • சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
    • ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ெஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    ெஜயங்கொண்டம் மேலகுடியிருப்பைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பாண்டியன்(வயது55). கூலி தொழிலாளியான இவர் கடந்த 24.12.2019 அன்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ெஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து பாண்டியனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி பாண்டியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.




    • தொண்டையில் ஏதோ நெருடியதை கண்டு அதனை கஷ்டப்பட்டு எடுத்து பார்த்த போது, இரும்பு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி, உணவகத்திலுள்ள சமையல் அறை, பார்சல் செய்யும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, குழிப்பனியார மாவை கீழே ஊற்றும்படி உத்தரவிட்டார்,

    அரியலூர்:

    அரியலூர் ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் ராஜலிங்கம். எருத்துக்காரன் பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினரான இவர், திருச்சி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் குழிப்பனியாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது தொண்டையில் ஏதோ நெருடியதை கண்டு அதனை கஷ்டப்பட்டு எடுத்து பார்த்த போது, இரும்பு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து அவர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி, உணவகத்திலுள்ள சமையல் அறை, பார்சல் செய்யும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, குழிப்பனியார மாவை கீழே ஊற்றும்படி உத்தரவிட்டு, உணவகம் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • இந்த பகுதிக்கு கடந்த 2019-20ம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே குடி வினியோகம் செய்யப்பட்டது.
    • தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீருக்கு மிகவும் அவதிக்குள்ளாகி பள்ளி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.


    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது அழகாபுரம் ரோட்டுத்தெரு. இப்பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு கடந்த 2019-20ம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து  நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே குடி வினியோகம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு மோட்டார் பழுதடைந்து மோட்டார் பழுது நீக்க எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுநாள் வரை திரும்ப அப்பகுதிக்கு மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.

    தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீருக்கு மிகவும் அவதிக்குள்ளாகி பள்ளி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள்நேற்று திடீரென காலி குடங்களுடன் சிலம்பூர்-ஆண்டிமடம் மெயின் ரோட்டில் அழகாபுரம் ரோட்டு தெரு குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதவாறு கயிறு கட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து ெபாது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


    • அரியலூர் மாவட்ட அமைப்பு சார்பில் குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது.
    • இதில் குழந்தை தொழிலாளர்கள் சந்திக்கும் உடல்,உளவியல் மற்றும் சமூக பிரச்சினை–கள் குறித்தும்,குழந்தை தொழிலாளர் முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான செயல் உத்திகள் குறித்தும் வளரிளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட அமைப்பு சார்பில் குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    பரப்ரம்மம் பவுன்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசாரம் அமைப்பின் அரியலூர் மாவட்ட அமைப்பாளர் ஜான் கே திருநாவுக்கரசு கருத்தரங்கின் நோக்கவுரையாற்றி, விழிப்புணர்வுசுவரொட்டியை வெளியிட்டு குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப்பணியாளர்ராஜேஸ்வரி கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இன்றைய குழந்தை தொழிலாளர் நிலை குறித்தும், மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து விரிவாக பேசினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தொடர்பு பணியாளர் ஜெயகாந்தி குழந்தை தொழிலாளர்கள் சந்திக்கும் உடல்,உளவியல் மற்றும் சமூக பிரச்சினை–கள் குறித்தும்,குழந்தை தொழிலாளர் முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான செயல் உத்திகள் குறித்தும் வளரிளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார்.

    மேலும் குழந்தைகள் உதவி மைய(சைல்ட் லைன்) ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் குழந்தை தொழிலாளர் சட்டம், குழந்தைகளுக்கான தேசிய,மாநில கொள்கைகள்,பள்ளிமேலன்மைகுழு,

    கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு, குழந்தை தொழிலாளர் தொடர்பான புகாரளித்தல் நடைமுறை,மீட்பு,மறுவாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசி–னார். முன்னதாகரோஸ் அறக்கட்டளை கள அலுவலர் தர்மராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் கல்லுரி முதல்வர் (பொறுப்பு) சூர்யகலா நன்றி கூறினார்.




    ×