search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிமடத்தில் குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்
    X

    ஆண்டிமடத்தில் குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்

    • இந்த பகுதிக்கு கடந்த 2019-20ம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே குடி வினியோகம் செய்யப்பட்டது.
    • தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீருக்கு மிகவும் அவதிக்குள்ளாகி பள்ளி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.


    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது அழகாபுரம் ரோட்டுத்தெரு. இப்பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு கடந்த 2019-20ம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே குடி வினியோகம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு மோட்டார் பழுதடைந்து மோட்டார் பழுது நீக்க எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுநாள் வரை திரும்ப அப்பகுதிக்கு மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.

    தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீருக்கு மிகவும் அவதிக்குள்ளாகி பள்ளி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள்நேற்று திடீரென காலி குடங்களுடன் சிலம்பூர்-ஆண்டிமடம் மெயின் ரோட்டில் அழகாபுரம் ரோட்டு தெரு குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதவாறு கயிறு கட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து ெபாது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


    Next Story
    ×