என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் சிறுவளூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
- பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
- பேரணியில் தரமான இலவசக் கல்வி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர இலவச சிற்றுண்டி, கல்விச் சுற்றுலா, அனைத்துக் குழந்தைகளுக்கும் கணினி வழிக் கல்வி, பெண் குழந்தைகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
அரியலூர்:
அரியலூர் அடுத்த சிறுவளூரில், அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியானது பள்ளியில் தொடங்கி, சிறுவளூர், பள்ள கிருஷ்ணாபுரம், சுப்பராயபுரம், நெருஞ்சிக்கோரை, புதுப்பாளையம் ஆகிய கிராமங்களுக்குச் சென்று, திரும்பி பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் ஆகியோர் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தங்களது குழந்தைகளை சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
அங்கு தரமான இலவசக் கல்வி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர இலவச சிற்றுண்டி, கல்விச் சுற்றுலா, அனைத்துக் குழந்தைகளுக்கும் கணினி வழிக் கல்வி, பெண் குழந்தைகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் மேற்கொண்டனர்.






