என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம்
- அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தனர்
- பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் சென்றனர்
அரியலூர் :
அரியலூர் அடுத்த காட்டுப்பிரிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில், ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன், வெங்கடேஷ், லதா, அரசு மணி, இளநிலை உதவியாளர் இலக்கியா ஆகியோர் கொண்ட குழுவினர், சின்னநாகலூர், பெரியநாகலூர், அஸ்தினாபுரம் கிராமங்களுக்குச் சென்று, அங்கு பொதுமக்களைச் சந்தித்து, அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி, மாணவர்களை சேர்க்க வலியுறுத்தினர்.
முன்னதாக பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் சரோஜாகேவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோதண்டபாணி, நாட்டார் சின்னதம்பி, வார்டு உறுப்பினர்கள் பழனியாண்டி,செல்லமுத்து ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.






