என் மலர்
நீங்கள் தேடியது "IMMEDIATE SETTLEMENT"
- கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ஜமாபந்தியில் 345 பெறப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களில் ஜமாபந்தி துவங்கியது. அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது,
இந்த மாவட்டத்தில் பொட்டவெளி, இலுப்பையூர், ராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், அமினாபாத், கோவிந்தபுரம், அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரிய நாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி ஆகிய 18 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
இந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட 345 மனுக்களில் 25 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் அரியலூர் கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலட்சுமி, தாசில்தார் குமரய்யா, தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாமிதுரை, சர்வே பிரிவு அன்புச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரிகள் உமா சங்கர், நந்தகுமார், முருகேசன், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






