என் மலர்
அரியலூர்
- தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
- மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 57). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 28.9.2021 அன்று 4 வயது மற்றும் 8 வயதுடைய 2 சிறுமிகளிடம், கடைக்கு சென்று வெற்றிலை, பாக்கு மற்றும் மிட்டாய் வாங்கி வருமாறு கூறி பணம் கொடுத்துள்ளார்.
பின்னர் அவற்றை வாங்கி வந்த சிறுமிகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து மிட்டாய் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாய், இது பற்றி அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அண்ணாதுரையை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த அண்ணாதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அண்ணாதுரையை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்."
- புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மாப்பிள்ளை அழைப்பு நடந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் சுள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட செங்கராண்டி காலனியை சேர்ந்த ராமரின் மகன் திருநாவுக்கரசு(வயது 35). இவருக்கு திருமணம் செய்வதற்காக ஒரு பெண்ணை பார்த்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயம் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதையடுத்து கடந்த 29-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பு நடந்துள்ளது. மேலும் மறுநாள் நடைபெற இருந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் இரவில் தூங்கச்சென்ற திருநாவுக்கரசு வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வள்ளலார் முப்பெரும் விழா போட்டிகள் நடந்தது
- 6-ந் தேதி பரிசளிப்பு விழா
அரியலூர்:
வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோயிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் 26 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வரும் 6 ஆம் தேதி ரிதன்யா திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் உதவி ஆணையர் என்.நாகராஜ், கோயில் செயல் அலுவலர் எஸ்.சரவணன் மற்றும் வடலூர் வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- அரியலூரில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது
- அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பங்கேற்பு
அரியலூர்
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராசன், துணை அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகர், லதா பாலு, கணேசன், ஒன்றிய செயலாளர் அரியலூர் அன்பழகன், அறிவழகன்,
திருமானூர் கென்னடி, அசோக சக்கரவர்த்தி, செந்துறை செல்வராஜ், எழில்மாறன், ஜெயங்கொண்டம் தனசேகரன், மணிமாறன், ஆண்டிமடம் முருகன், கலியபெருமாள், தா.பழுர் கண்ணன், சௌந்தர்ராஜ், நகரச் செயலாளர் அரியலூர் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி, உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ். எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது :
ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பல லட்சம் கோடி கடன் சுமை விட்டு சென்றது. இப்படி இக்காட்டான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறமையாக ஆட்சி புரிந்து வருகிறார். மக்களின் பிரச்னைகளை கேட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளியையொட்டி மனநிறைவான போனஸ் கொடுக்கப்பட்டது. அதனால், போக்குவரத்துத்துறையில் பணி செய்யும் அனைவரும் மனமகிழ்ச்சி அடைந்தனர்.
இதன்மூலம் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர பேருந்து வசதிகள் சிறப்பாக அமைந்தது. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத ஒரு திட்டமான புதுமைப் பெண் திட்டத்தால் இனிவரும் காலங்களில் 90 சதவீத பெண் குழந்தைகள் உயர்கல்வியினை பெறுவர்.
அரியலூருக்கு தமிழக முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதாக இருந்தது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ஓய்வு எடுத்து வருகிறார் அதனால் 5ம் தேதி நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது பின்னர் தேதி அறிவிக்கப்படும் எப்போது வருகை தந்தாலும் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு நடந்தது
- அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்
அரியலூர்
அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜ் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சங்கர், முன்னாள் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் மா.மு.சிவகுமார், பொதுக் குழு உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேகர், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து செலுத்தினர். இதே போல், புங்கங்குழி ஆதனூரிலுள்ள இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- 8 பேருக்கு ரூ.14 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
- கூடுதல் வட்டி வழங்க மறுத்த வங்கி
அரியலூர்
சேவை குறைபாடு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 8 பேருக்கு வட்டி மற்றும் இழப்பீடாக ரூ.14 லட்சம் வழங்க வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
ரூ.4 கோடிடெபாசிட்
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் டி.விஜயலலிதா குமாரி. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பணியாளர். இவரிடம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் வங்கியின் கிளை மேலாளர், தங்கள் வங்கியில் டெபாசிட் செய்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி தொகையை விட முன்னாள் ஊழியர் என்ற அடிப்படையில் ஒரு சதவீத வட்டி கூடுதலாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய விஜயலலிதா குமாரி தனது குடும்ப உறுப்பினர்களுடன் தன்னையும் சேர்ந்து 8 பேரின் வங்கி கணக்கில் ரூ.4 கோடியை டெபாசிட் செய்துள்ளார். இதற்கு வங்கியிலிருந்து கூடுதல் வட்டி தருவதாக தெரிவித்து டெபாசிட் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சதவீத வட்டி வழங்க முடியாது
ஆனால், கடந்த 2016 செப்டம்பர் மாதம் முதல், டெபாசிட் தொகைகளுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஒரு சதவீத வட்டியை வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளர். இதனால் அதிர்ச்சியடைந்த 8 பேரும், வங்கி ஒப்புக்கொண்ட வட்டி விகிதத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனித்தனியே வழக்கு தாக்கல் செய்தனர்.இந்த 8 வழக்குகளும் கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.
4 வார காலத்துக்குள் வழங்க வேண்டும்
இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட வந்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு, கூடுதலாக வட்டி தருவதாக வங்கி அளித்த வாக்குறுதியின் காரணமாக டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒப்புக்கொண்ட வட்டி விகிதத்தை தன்னிச்சையாக குறைத்தது சேவை குறைபாடு.
இதனால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 நபர்களுக்கும் வங்கி ஒப்புக்கொண்டு டெபாசிட் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி கூடுதல் வட்டி தொகை ரூ.11.50 லட்சமும், சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2.50 லட்சமும் 4 வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
- சாலைகளை சீர்ப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- அரியலூர் நகர் மன்ற கூட்டம்
அரியலூர்,
அரியலூர் நகராட்சி 18-வது வார்டில் கட்டி முடிக்கப்பட்டு கிடப்பில் உள்ள சாண எரிவாயு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அரியலூர் நகராட்சி அலுவலலக கூட்டரங்கில், நகர் மன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, ஆணையர் சித்ராசோனியா, பொறியாளர் தமயந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் வார்டு உறுப்பினர்கள் செல்வராணி, புகழேந்தி, கண்ணன், வெங்கடாசலபதி உள்ளிட்டோர் பேசுகையில், வ.உசி நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும். 1 -வது வார்டில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். நகராட்சி பெண் வார்டு உறுப்பினர்களுக்கென தனி கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். 18-வது வார்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட சாண எரிவாயு திட்டம் கிடப்பில் உள்ளது. இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதைசாக்கடைக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடி சாலைகளை சீர்ப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கொள்ளிடம் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.தொடர்ந்து கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார்.
நகராட்சி ஆணையர் மூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியில் ஒவ்வொரு வார்டு களையும் நான்கு பகுதியாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சபை குழுவினர், மற்றும் நான்கு வார்டுகளுக்கும் ஒரு செயலாளர் அமைக்க வேண்டுமென்று ஜெயங்கொண்டம் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் செல்வராஜ், அம்பிகாபதி, ரெங்கநாதன், ஜோதிலட்சுமி, மனோன்மணி, பூபதி, சுப்ரமணியன், சேகர், கிருபாநிதி, வெற்றி வேல், பாண்டியன், துர்கா, ஆனந்த், சமந்தா, பாய், மீனாட்சி, நடராஜன் மற்றும் நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர் ரங்கநாதன் பேசும் போது, பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் தூய்மைப்படுத்த வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளில் உள்ள வார்டுகளில் சாலைகள் மிக மோசமாக உள்ளது அதை உடனடியாக செப்பனிட வேண்டும் எனக் கூறினார்.
மற்ற உறுப்பினர்களும் அவரவர் வார்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.
கூட்டத்தின் இறுதியில் நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி நன்றி கூறினார்.
- ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5000 மாணவர் விண்ணப்பித்த நிலையில் 75 மாணவர்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர்.
- தனது அக்கா மோனிஷா முயற்சியால் இதில் கலந்துகொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் வேலா. இவர் கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 மாணவர்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ நரேந்திர மோடி உரையாற்றினார். இதற்கு 26 மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவர்கள் தேர்வு செய்து அவர்கள் மூலம் அகஸ்தியர் சுற்றுச்சூழல் செயற்கைகோள் ஒன்றினை விண்ணில் ஏவ உள்ளனர்.
இதில் ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5000 மாணவர் விண்ணப்பித்த நிலையில் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டார். இதில் பத்மபூஷன் டாக்டர் சிவதாணு பிள்ளை மாணவர்களுக்கு செயற்கைக்கோள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் இணைய வழி மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டது. இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சஞ்சய் வேலா பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மற்றும் டி ஆர்டிஓ நிலையங்களில் மாணவர்களும் ஆசிரியர்களிடம் சேர்ந்து பயிற்சியில் பங்கேற்க நாளை (2ஆம் தேதி) செல்ல உள்ளார்.
தற்பொழுது ஆண்டிமடம் பகுதியில் உள்ள பலரும் அரசு பள்ளி மாணவரை பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு பள்ளி மாணவன் சஞ்சய் வேலா கூறுகையில், தனது அக்கா மோனிஷா முயற்சியால் இதில் கலந்துகொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன். மேலும் இஸ்ரோவிலும் நான் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும். மேலும் இஸ்ரோ விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பது தனது லட்சியமாக கூறினார். போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தனக்கு யாரேனும் உதவிகள் செய்தால் நிச்சயமாக நான் அதை செய்து காண்பிப்பேன் என்று கூறினார்.
இதுகுறித்து செய்தி அறிந்த அழகாபுரம் தலைவர் கலியபெருமாள், ரீடு தொண்டு நிறுவனர் ரீடுசெல்வம் மற்றும் விளந்தை தலைவர் வக்கீல் நடராஜன், ஓசை சண்முகம், சக்தி உள்ளிட்டோர் மாணவனை அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தியதுடன் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டி நிதி உதவியும் வழங்கினர்.
- கஞ்சா விற்றவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சித்துடையார் கிராமத்தில் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் குவாகம் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 49) என்பவர் ஒருவருக்கு கஞ்சா விற்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் பால்ராஜிடம் இருந்து 23 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- அரசு பள்ளியில் படித்து மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள்
அரியலூர்
தமிழக முதல்-அமைச்சரால் கடந்த செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டது.
இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 866 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
இத்திட்டதின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக) மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809; 91500 56805; 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
- கந்தசஷ்டி விழாவையொட்டி நடந்தது
அரியலூர்
அரியலூர் நகரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, ஆடு, யானை, குதிரை, ரிஷப, வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. சூரசம்ஹார விழாவையொட்டி தங்க கவசத்தில் பாலசுப்பிரமணியசுவமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, சக்தி சன்னதிக்கு சென்று வேலை பெற்ற முருகர் சூரனை வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாணமும், நாளை விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது.
உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் பால முருகன் கோவில் உள்ளது. கந்தசஷ்டி மகா லட்ச்சார்ச்சனை விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி காப்புக்கட்டி அனுக்ஞை, விக்னேஸ்வரர்பூஜை, புண்ணியாவாஜனம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று ஆட்டுக்கிடா வாகனம், மூலவர் சிவ சுப்பிரமணியர் அலங்காரத்திலும், இரவு 7 மணியளவில் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. 1-ந் தேதி தீர்த்த வாரி உற்சவம் வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் நடைபெறுகிறது.






