என் மலர்tooltip icon

    அரியலூர்

    • வீர வணக்க நிகழ்ச்சி நடந்தது
    • விசிக தெற்கு ஒன்றிய சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசிக தெற்கு ஒன்றிய சார்பாக மாவீரர் தினத்தை முன்னிட்டு வீர வணக்க நிகழ்ச்சி மற்றும் ஒன்றிய கலந்தாய் கூட்டம் வானதிரையின் பட்டினம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட அமைப்பாளர் செ.க. குமார் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்திற்கு முன்னிலையாளர்களாக மஞ்சுளா இளங்கோவன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் பூமா கொளஞ்சியப்பன், ஒன்றிய துணை செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் சி. பி. ராஜா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் தலைமையில் சட்ட நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

    • மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
    • 10 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

    அரியலூர்

    அரியலூர் கொல்லாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கினை பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 10 நாள்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கினை அடுத்த 10 நாள்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிடலாம். இக்கண்காட்சி அரங்கில் மாளிகைமேடு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். மேலும் பழைய அரண்மனை சுவர்கள் மாதிரிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் அனைவரும் பார்வையிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கப்பட்டுள்ளது
    • வட்டார கல்வி அலுவலர் பங்கேற்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி கலந்து கொண்டு தொடங்கப்பட்ட வானவில் மன்றம் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனையோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் கணிதத்தில் சாதனை புரிய வெகுவாக பயன்படும் என்றார். கணித பட்டதாரி ஆசிரியர் கு.செல்லதுரை, கணித நுட்பங்கள் பற்றியும், கணித புதிர்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் எளிய உபகரணங்களுடன் அறிவியல் சோதனைகள் செய்து காண்பித்து மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆசிரியைகள் ஜெயப்பிரியா, வே.கவிதா விழாவை ஒருங்கிணைந்தனர்.முன்னதாக ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஜா.ஹேமலதா வரவேற்றார். முடிவில் ஆசிரியை வே.பவானி நன்றி தெரிவித்தார்.

    • சாலை விபத்தில் 2 வடமாநில தொழிலாளர்கள் பலியானார்கள்
    • கீழே விழுந்த இவர்கள் மீது லாரி ஏறியது

    அரியலூர்:

    அரியலூர் அருகே லாரி மோதி பைக்கில் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மகேஷ்வர் மகன் ராஜூ (வயது 45), ராஜஸ்தான் மாநிலம் சூப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நரேஷ் மகன் திப்பு (15). டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்த இவர்கள், அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு அரியலூரில் இருந்து வி.கைகாட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். காட்டுப்பிரிங்கியம், சுண்ணாம்பு கல் சுரங்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தவறி கீழே விழுந்த 2 பேர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராஜூம், திப்பும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • துணை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமார் தலைமை தாங்கி, ெபாதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.

    இதில் பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் அளித்த மனுவில், எனது நிலத்தில் 6 பனை மரங்கள் இருந்தன. இந்நிலையில் சிலர் அந்த மரங்களை வெட்டியுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பனை மரங்களை வெட்டக்கூடாது என்று அரசு வலியுறுத்துகிறது. ஆனால் அதை மீறி பனை மரங்களை வெட்டியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    • உதவித்தொகை வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது
    • மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

    அரியலூர்

    கீழகுளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்ணகி ஒரு மனு அளித்தார். அதில், எனது மகள் பரமேஸ்வரிக்கு கடந்த 25.8.2018-ந் ேததியன்று திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து திருமண உதவித்தொகை வேண்டி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தேன். ஆனால் இதுவரை, திருமண உதவித்தொகை கிடைக்கவில்லை. இது குறித்து கடந்த 2018-ம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறேன். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. ஆனால் என்னுடன் மனு அளித்தவர்களுக்கு திருமண உதவித்தொகை கிடைத்து விட்டது. எனவே எனது மகளுக்கான திருமண உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். மேலும் சிலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர்-பழங்குடியினர்


    அரியலூர்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்திட மின் வாகனம் (இ-வெகிக்கில்ஸ்), உறைவிப்பான் (பிரீசர்), குளிர்விப்பான் (கூலர்) போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினர்களுக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியமும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பதாரர் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும், வயது 18 முதல் 65 வரையிலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது. ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்தபட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சொந்த அல்லது குத்தகை அல்லது வாடகைக் கட்டிடம் இருக்கலாம். அதற்கான ஆராரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாதரர்களின் சாதி சான்று, வருமானம் சான்று, குடும்ப அட்டை. இருப்பிட சான்று, ஆதார் அடையாள அட்டை, கல்விச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஜி.எஸ்.டி.ஐ.என். உடன் கூடிய விலைப்புள்ளி மற்றும் இத்திட்டத்திற்கு கூடுதலாக தேவைப்படும் ஆவணங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 225, இரண்டாவது தளம், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து கூடுதல் விவரம் பெற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்."

    • பத்து ஆண்டுகள் பாழ்படுத்தப்பட்ட தமிழகத்தை உடனே மீட்பது என்பது எனக்கு மலைப்பாக இருந்தது.
    • இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

    அரியலூர்:

    பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கொல்லாபுரத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்தை கடந்த 2007-ம் ஆண்டு தலைவர் கலைஞர் உருவாக்கினார். தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிக்கு என இந்த அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறோம். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொன்மையான பாரம்பரியம் மற்றும் தமிழ் மண்ணின் விழுமியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.

    நேற்றைய தினம் கங்கைகொண்டசோழபுரத்தில் தெற்காசிய நாடுகளை வென்று சீனா போன்ற நாடுகளுடன் வாணிபம் செய்த முதலாம் ராஜேந்திரன் சோழனின் வரலாற்று தடயங்களை அறிந்து பெருமை அடைந்தேன். ஆகவே கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிதாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதை நான் இந்த விழாவில் அறிவிக்கிறேன்.

    இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியே 26 லட்சம் மதிப்பிலான 51 முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு அரசு துறைகள் சார்பில் 26,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளேன்.

    பெரம்பலூர் மாவட்டத்திலும் ரூ.221.80 கோடி மதிப்பீட்டில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்தும், ரூ.31.38 கோடி செலவில் 54 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    பத்து ஆண்டுகள் பாழ்படுத்தப்பட்ட தமிழகத்தை உடனே மீட்பது என்பது எனக்கு மலைப்பாக இருந்தது. ஆனால் இன்று பல்வேறு வகைகளில் மீட்டு கொண்டு வந்திருக்கிறோம்.

    தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. வேளாண் உற்பத்தி எல்லையும், பாசன பரப்பும் அதிகரித்து இருக்கிறது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் விருதுகளை பெற்றிருக்கிறோம்.

    அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தினால் பெண்களுக்கு நிரந்தர வருமானம், மாநில திட்டக்குழு துணைத்தலைவரின் ஆய்வறிக்கையில் கட்டணமில்லா பேருந்து பயணத்தால் பெண்கள் மாதந்தோறும் ரூ.900 சேமிக்க முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சேமிப்பு தொகையை குடும்ப வளர்ச்சிக்கு அவர்களால் செலவு செய்ய முடிகிறது. கடந்த 15 மாத ஆட்சி காலத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்து இருக்கிறோம். கொரோனாவை வென்று காட்டி இருக்கிறோம். மழை, வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்து இருக்கிறோம்.

    இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. பரப்பளவில் பெரிய மாநிலங்கள் கூட நமக்கு கீழே இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய மாவட்டங்களே தமிழகத்தில் இருக்கக்கூடாது என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

    ஒரு முதல்வர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சாட்சியாக கடந்த ஆட்சி இருந்தது. அதிகாரம் இருக்கும்போது தனது கையை கட்டிக்கொண்டு இப்போது புகார் கொடுக்கிறார்கள், பேட்டி கொடுக்கிறார்கள், விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இதை மக்கள் பார்த்து உங்கள் யோக்கியதை தான் எங்களுக்கு தெரியுமே என்று கைகொட்டி சிரிக்கிறார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள்.

    ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம்.

    "புலிக்கு பயந்தவன், என் மேல வந்து படுத்துக்கோ" என்று சொல்வார்களே, அதுபோல சிலர் "ஆபத்து ஆபத்து" என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள்.

    இப்படிச் சொல்லும் சிலருக்கு, 'இருக்கும் பதவி நிலைக்குமா' என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள்.

    மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது, கவலைப்படாதீர்கள்.

    விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை அவர்களுக்கு இருக்க வேண்டும்.

    தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப் போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.

    தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடைய செய்வதுதான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளோடு நான் பணியாற்றுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் ஆ.ராசா, தொல்.திருமாவளவன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.

    • அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    அரியலூர்:

    திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திருச்சி வருகை தந்தார்.

    திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் 13,210 பள்ளிகளில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து பெரம்பலூர் சென்ற அவர் எறையூரில் மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழில் பூங்கா மற்றும் 243 ஏக்கரில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் வழிகாட்டு நிறுவனத்தோடு, பிரபல 10 நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. ரூ.741 கோடி முதலீட்டை ஈர்த்துள்ள இந்த ஒப்பந்தம் மூலம் 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாலை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அப்போது தொல்லியல் துறையின்கீழ் தோண்டப்பட்டு கிடைக்கப் பெற்றுள்ள அரண்மனை அடித்தட்டு பகுதிகள், சோழர்கால கட்டிடங்கள், தங்கக்காப்பு துண்டுகள், சீன நாட்டின் கண்ணாடி துண்டுகள், இரும்பால் ஆன ஆணி, பழங்கால மண் பானைகள் ஆகியவற்றை பார்த்து வியந்து அது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார்.

    இரவு அரியலூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கழமை) காலை 9.15 மணிக்கு விருந்தினர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்துக்கு சென்றார்.

    அங்கு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.3 கோடி மதிப்பீட்டில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு ரூ.52 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் செலவில் முடிவுற்ற 23 திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    அதன் பின்னர் அரியலூரில் இருந்து காரில் திருச்சி விமான நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் 12.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.

    • பெங்களூருரில் அமைந்துள்ள சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக், இந்திய ஆக்கி அணிக்குத் தேர்வானார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஆக்கி அணி வீரர் கார்த்திக் குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

    அரியலூர்:

    அரியலூர் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கார்த்திக். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை செல்வம் வங்கியில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் வீட்டு வேலை செய்கிறார். ஏழ்மையான நிலையிலும் கார்த்திக்கிற்கு விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொண்டு அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

    பெங்களூருரில் அமைந்துள்ள சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக், இந்திய ஆக்கி அணிக்குத் தேர்வானார். இருப்பினும், பயிற்சி பெறுவதில் அவருக்கு போதிய பண வசதி இல்லாமல் தவித்து வந்தார்.

    இதுபற்றிய தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முதலமைச்சர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்போதே அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கார்த்திக்கின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தார்.

    இதற்கிடையே 2 நாட்கள் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஆக்கி அணி வீரர் கார்த்திக் குடும்பத்தினரை ஓடுகள் வேயப்பட்ட அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது ஆக்கி வீரரின் பெற்றோரிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர் அவர்கள் வசிப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம் குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார். சிறிது நேரம் இருந்த அவர் வெளியே வந்தபோது அப்பகுதியை சேர்ந்த திரளான சிறுவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக காத்திருந்தனர். அவர்களிடம் உற்சாகமாக பேசிய மு.க.ஸ்டாலின் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    முன்னதாக கடந்த 24-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழாவில் இந்திய அணியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஆக்கி வீரர் கார்த்திக்குக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • 36,691 பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • ரூ.25.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை அரியலூர கொல்லாபுரத்தில் நடக்கும் விழாவில் தொடங்கி வைத்தார்.

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    மேலும், ரூ.25.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை அரியலூர கொல்லாபுரத்தில் நடக்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

    விழாவில், 36,691 பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • ஆசிய கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் கார்த்திக் இடம் பெற்றிருந்தார்.
    • அவருக்கு, ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையை முதலமைச்சர் வழங்கி இருந்தார்.

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆக்கி வீரர் எஸ்.கார்த்திக், இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

    இதனையடுத்து ஆக்கி வீரர் கார்த்திக்கிற்கு 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையை கடந்த 24.11.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார்.

    இந்நிலையில் அரியலூர், ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த கார்த்திக் குடும்பத்தினர், தங்களது சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தங்களின் மகன் விளையாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்கு உதவிகள் வேண்டி முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், கார்த்திக் வீட்டிற்கு நேரில் சென்று, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை, வழங்கினார்.

    அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் மற்றும் ஆர்.ராசா எம்.பி.உள்ளிட்டோர் உடன் இருந்ததாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×