என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் 2 வடமாநில தொழிலாளர்கள் பலி
- சாலை விபத்தில் 2 வடமாநில தொழிலாளர்கள் பலியானார்கள்
- கீழே விழுந்த இவர்கள் மீது லாரி ஏறியது
அரியலூர்:
அரியலூர் அருகே லாரி மோதி பைக்கில் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மகேஷ்வர் மகன் ராஜூ (வயது 45), ராஜஸ்தான் மாநிலம் சூப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நரேஷ் மகன் திப்பு (15). டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்த இவர்கள், அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு அரியலூரில் இருந்து வி.கைகாட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். காட்டுப்பிரிங்கியம், சுண்ணாம்பு கல் சுரங்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தவறி கீழே விழுந்த 2 பேர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராஜூம், திப்பும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






