என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை பார்வையிட அனுமதி
- மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- 10 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் கொல்லாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கினை பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 10 நாள்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கினை அடுத்த 10 நாள்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிடலாம். இக்கண்காட்சி அரங்கில் மாளிகைமேடு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். மேலும் பழைய அரண்மனை சுவர்கள் மாதிரிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் அனைவரும் பார்வையிடலாம் என்று தெரிவித்துள்ளார்.






