என் மலர்

  செய்திகள்

  தமிழகத்தை போராட்ட களமாக்க தி.மு.க. விரும்புகிறது- தமிழிசை
  X

  தமிழகத்தை போராட்ட களமாக்க தி.மு.க. விரும்புகிறது- தமிழிசை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தை ஒரு போராட்ட களமாக வைத்திருக்க தி.மு.க. விரும்புகிறது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #TamilisaiSoundararajan #DMK
  பூந்தமல்லி:

  தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பூந்தமல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தமிழகத்தில் நேர்மையான அரசியல் நடத்தப்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் அவர்கள் தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை கிடைக்கப் பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கட்டாயத்தை மக்கள் மீது திணிப்பதற்காக சட்ட ரீதியான நகர்வுகள் இருக்கும் போதும், தெருவிலேயே எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  குட்கா விவகாரத்தில் தமிழகம் போதையில்லா தமிழகமாக இருக்கவேண்டும். குழந்தைகள் பாதிக்க கூடாது என கூறியிருக்கிறோம். தி.மு.க.வின் போராட்டங்களை மக்கள் வெறுக்க தொடங்கி விட்டனர்.


  வெளிமாநிலத்தில் இருந்து நேர்மையான துணைவேந்தர் வந்தால் எதிர்க்கிறார்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு மட்டும் வெளிமாநில அதிகாரிகள் வர வேண்டும் என கேட்கிறார்கள். தமிழகத்தில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என தி.மு.க.வினர் அரசியல் செய்கிறார்கள்.

  தமிழக மக்களுக்கு காவிரி நீர் விரைவில் கிடைக்கும். பல நலத்திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. தமிழகத்தை ஒரு போராட்ட களமாக வைத்திருக்க தி.மு.க. நினைக்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK #tamilnews
  Next Story
  ×