என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • உயிரிந்தவர்களில் 3 இளைஞர்கள், 6 பெண்கள் ஆவர்.
    • கிரேன் மூலம் ஆற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த 10 பேர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். இவர்கள், இன்று காலை 5.45 மணியளவில் ராம்நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கிவிட்டு, தேலா ஆற்றின் வழியே காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து அடித்துச் செல்லப்பட்டது.

    இதில், காரில் இருந்த 10 பேரில் 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்து ராம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் உள்ளனர். கிரேன் மூலம் ஆற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது.

    உயிரிந்தவர்களில் 3 இளைஞர்கள், 6 பெண்கள் ஆவர். விபத்து குறித்து வழக்கப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் வந்த ஒரு கும்பல் லிப்ட் தருவதாகக் கூறி அந்த பெண் மற்றும் அவரது மகளை காரில் ஏற்றிச்சென்றுள்ளனர்.
    • மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

    ரூர்கீ (உத்தரகாண்ட்):

    உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி நகரில், பெண் மற்றும் அவரது 6 வயது மகளை ஒரு கும்பல் காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று இரவு அந்தப் பெண் பிரன் காளியர் பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் லிப்ட் தருவதாகக் கூறி அந்த பெண் மற்றும் அவரது மகளை காரில் ஏற்றிச்சென்றுள்ளனர்.

    பின்னர் ஓடும் காருக்குள் வைத்தே தாய் மற்றும் மகளை அந்த கும்பல் பலாத்காரம் செய்துவிட்டு, ஒரு ஏரியின் அருகே விட்டுச் சென்றுவிட்டது. பின்னர் அந்தப் பெண் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். சோனு மற்றும் அவரது நண்பர்கள் காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறி உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட இருவரும் ரூர்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆதி கைலாஷ் யாத்ரீகர்களின் 11-வது குழுவுடனான பயணத்தை முடித்துக் கொண்டபோது சோகம்.
    • மருத்துவ உதவி அவரை அடையும் முன்பே பெண் இறந்துவிட்டார்.

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் யாத்ரீகர் ஆதி கைலாஷ் யாத்திரையின் 11வது குழுவுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் கஞ்சி முகாமிற்கு வந்தபோது பெண்ணிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து பித்தோராகர் கண்காணிப்பாளர் லோகேஷ்வர் சிங் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் ரமேஷ் தத்தாத்ரேயா கடம் என்பவரின் மனைவி ஷீத்தல் ரமேஷ் கடம் (57). இவர் நேற்று இரவு தனது கணவருடன் கஞ்சி முகாமுக்குத் திரும்பிய பிறகு படபடப்பாக உணர்ந்துள்ளார். மருத்துவ உதவி அவரை அடையும் முன்பே பெண் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

    ஆதி கைலாஷ் யாத்ரீகர்களின் 11-வது குழுவுடனான பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த நாள் ஓம் பர்வத்தை பார்வையிட குழு தயாராக இருந்தது. இந்நிலையில், பெண் யாத்ரீகர் உயிரிழந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைதி உடன்படிக்கை கால கட்டத்தில் கூட, பல முனைகளில் போர் தொடர்கிறது.
    • போர் மற்றும் அமைதி என்பது இனியும் இரண்டு தனித்தனி அம்சமாக இருக்க முடியாது.

    முசோரி:

    உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் கழகத்தில் நடைபெற்ற 28 வது சிவில் - ராணுவ கூட்டுப்பயிற்சி திட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    தேச பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், வருங்கால சவால்களை எதிர்கொள்ளவும் நிர்வாகம், ராணுவம் மேலும் இணைந்து செயல்படுவது அவசியம்.

    ராணுவ தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து கொள்வதில், ராணுவம் அல்லாத பல பரிணாமங்கள் இடம் பெற்றுள்ளதால், தேசபாதுகாப்பு என்பது பரந்து விரிந்ததாக மாறியுள்ளது.

    ரஷ்யா - உக்ரைன் நிலவரம் மற்றும் அதேபோன்ற பிற மோதல்கள், வழக்கமான போர் முறைகளிலிருந்து மாறுபட்டு இருப்பதை உலகம் கண்கூடாக காண்கிறது. போர் மற்றும் அமைதி என்பது இனியும் இரண்டு தனித்தனி அம்சமாக இருக்க முடியாது. அமைதி உடன்படிக்கை காலகட்டத்தில் கூட, பல முனைகளில் போர் தொடர்கிறது.

    கடந்த சில தசாப்தங்களாக முழு அளவிலான போர் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக மறைமுக மற்றும் தாக்குதல்கள் இல்லா யுத்தங்கள் நடத்தப்படுகின்றன.

    தொழில்நுட்பம், வினியோக சங்கிலி, தகவல், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் நிதி நடைமுறைகள் போன்றவை ஆயுதமாக்கப் படுகின்றன.

    இத்தகைய ஆயுதம் வரும் காலங்களில் நமக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடும். எனவே, இதுபோன்ற பரந்து விரியும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பிய போது தாயின் மடியில் இருந்து குழந்தை கீழே தவறி விழுந்தது.
    • குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவலரை பலர் பாராட்டி வருகின்றனர்

    காசிப்பூர்:

    உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில்,  வாகன போக்குவரத்தை, ரோந்து பிரிவு காவலர் சுந்தர் சர்மா, சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பிய போது தாயின் மடியில் இருந்து குழந்தை கீழே தவறி விழுந்தது. இதைக் கண்ட போக்குவரத்து காவலர் சுந்தர், விரைந்து சென்று எதிரே வந்த பேருந்தை நிறுத்தினார். பின்னர் அந்த குழந்தையை அவர் மீட்டார். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    இது தொடர்பான வீடியோக் காட்சி சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நிலையில், பலர் அந்த காவலரை பாராட்டி வருகின்றனர்.

    • பேருந்து விபத்தில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல்
    • உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் சிவராஜ் சிங் சவுகான்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கிய நிலையில் டம்டாவில் இருந்து யமுனோத்ரி நோக்கி 28 பக்தர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மாநில காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இது குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக உத்தரகாண்ட் விபத்து குறித்து வருத்த தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உத்தர காண்ட் விபத்தில் உயிரிழந்த பக்தர்களுக்கு, மத்திய பிரதேச அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உத்தரகாண்ட் அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உடல்களை மத்திய பிரதேசத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார்.
    • கங்கோத்ரி, யமுனோத்ரியில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சார்தாம் தலங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், முன்னெப்போதும் இல்லாத அளவு யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

    இந்நிலையில் யமுனோத்ரி நோக்கி பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் பயணித்த 22 பக்தர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார். மேலும் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    6 மாத கால இடைவெளிக்குப் பிறகு கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது. அதன்பின்னர் கேதார்நாத்தில் மே 6 ஆம் தேதியும், பத்ரிநாத்தில் மே 8 ஆம் தேதியும் நடை திறக்கப்பட்டது.

    ×