என் மலர்
பஞ்சாப்
- பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது.
- கடந்த ஒரு வாரமாக, எம்.எல்.ஏ.க்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சண்டிகார்
பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருவதாக அம்மாநில நிதி மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்பால்சிங் சீமா நேற்று குற்றம் சாட்டினார்.அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்தவுடன் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பா.ஜனதா ஏற்பாடு செய்த சிலர், 7 முதல் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
கட்சி மாறி வந்தால், தலா ரூ.25 கோடி தருவதாகவும், பா.ஜனதா ஆட்சி அமைத்தால் மந்திரி பதவி அளிப்பதாகவும் பேரம் பேசினர். தங்களுடன் கூடுதலாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்தால், இன்னும் அதிக பணம் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.டெல்லியில், பெரிய தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக, எம்.எல்.ஏ.க்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேரம் வரும்போது இதற்கான ஆதாரத்தை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மிரட்டல் ஆதாரமாக மாணவனின் தந்தையின் மொபைல் போனில் இருந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக போலீசார் நள்ளிரவு சோதனைகள் மேற்கொண்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனியார் பள்ளிக்கு அங்கு படிக்கும் மாணவர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். செப்டம்பர் 16-ம் தேதி பள்ளியை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கணித தேர்வை ரத்து செய்வதற்காக மாணவர் மிரட்டல் விடுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மிரட்டல் ஆதாரமாக மாணவனின் தந்தையின் மொபைல் போனில் இருந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அமிர்தசரஸில் கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் அப்பகுதியில் பீதியையும் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது.
கடந்த 7-ம் தேதி நகரத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக புகாரளித்தது. பின்னர் அது மூன்று மாணவர்களின் செயல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக போலீசார் நள்ளிரவு சோதனைகள் மேற்கொண்டனர்.
- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே உள்ள ஹர்மந்திர் சாகிப் பகுதியில் சந்தை ஒன்று உள்ளது.
- போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே உள்ள ஹர்மந்திர் சாகிப் பகுதியில் சந்தை ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம் இந்த சந்தை அருகே ஒரு வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அந்த வாலிபரை வாளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றபோதிலும் யாரும் அந்த வாலிபரை காப்பாற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் அந்த இடத்திலேயே கிடந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
கொலை குறித்து நேற்று காலை தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த ஹர்மன்ஜீத் சிங் (வயது 22) என்பது தெரியவந்தது.
போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஹர்மன்ஜீத் சிங் படுகொலையை ஏராளமானோர் வேடிக்கை பார்த்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் ஹர்மன்ஜீத் சிங்கை தாக்கிய வாலிபர்களின் அடையாளங்களும் அதில் தெரிந்தது.
அதன் மூலம் விசாரணை நடத்திய போலீசார் இந்த கொலை தொடர்பாக ரமன்தீப் சிங் என்பவரை கைது செய்தனர். கொலையான ஹர்மன்ஜீத் சிங் மது அருந்தி விட்டு அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே நின்று புகையிலையை மென்று தின்று கொண்டிருந்ததாகவும், இது தொடர்பான தகராறில் ஹர்மன்ஜீத் சிங் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரமன்தீப் சிங்கிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், கொலை தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
- அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்குவது வழக்கம்.
- நிதி நெருக்கடி இருந்ததால் ஆம் ஆத்மி அரசு குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு கடந்த 6-ந்தேதி மாலை தான் சம்பளம் வழங்கியது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் 6 நாள் தாமதமாக வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்குவது வழக்கம். நிதி நெருக்கடி இருந்ததால் ஆம் ஆத்மி அரசு குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு கடந்த 6-ந்தேதி மாலை தான் சம்பளம் வழங்கியது. மற்றவர்களுக்கும் நேற்று தான் ஊதியம் அளிக்கப்பட்டது.
- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
- அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் பணத்தை மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி எம்.எல்.ஏ.வான அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது நண்பர்கள், வங்கியில் ரூ.40.92 கோடி கடன் வாங்கி, அதை வணிகத்துக்கு பயன்படுத்துவதாக கூறி, பணத்தை மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். மலேர்கோட்லாவில் உள்ள எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடந்தது. மேலும் அவரது கூட்டாளிகள் சிலரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
வங்கி மோசடி தொடர்பாக கடந்த மே மாதம் அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் மற்றும் சிலரின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வரும் டெல்லியில் கலால் வரி ஊழல் வழக்கு தொடர்பாக பஞ்சாபில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி இருந்தது.
- அச்சில் இருந்து வேகமாக கீழே வந்த ராட்டினம் தரையில் பயங்கரமாக மோதியது.
- தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என டிஎஸ்பி தெரிவித்தார்.
மொகாலி:
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கண்காட்சியின்போது, சுமார் 50 பேருடன் சுற்றிக்கொண்டிருந்த ராட்சத ராட்டினம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. சக்கரம் போன்ற ராட்டினம், செங்குத்தான அச்சில் சுழன்றுகொண்டு உயரத்திற்கு சென்றது. பின்னர் கீழே வரும்போது திடீரென ராட்டினம் உடைந்தது. அச்சில் இருந்து வேகமாக கீழே வந்த ராட்டினம் தரையில் பயங்கரமாக மோதியது.
இதனால் ராட்டினத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பதைபதைக்கும் இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என டிஎஸ்பி தெரிவித்தார்.
- சட்டவிரோத ஆயுதக் கடத்தலை பஞ்சாப் காவல்துறை முறியடித்துள்ளது.
- தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்.
அமிர்தசரஸ்:
சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை பஞ்சாப் மாநில போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த போரெலால் என்ற மனிஷ் மற்றும் புர்ஹான் மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் மால் சிங் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பஞ்சாப் டிஜபி கவுரவ் யாதவ் தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து 55 கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வல்லா மண்டி ரயில்வே கேட் பகுதியில் நான்கு கைத்துப்பாக்கிகளுடன் இரண்டு பேரை அமிர்தசரஸ் பிரிவு காவல்துறை கைது செய்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அந்த ஆயுதங்களின் உற்பத்தியாளர் மற்றும் விநியோகிஸ்தர் மத்திய பிரதே மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததாக கவுரவ் குறிப்பிட்டார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் இந்தர்தீப் சிங் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றதாகவும் அம்மாநில புலனாய்வு காவல்துறை உதவியுடன் நடத்திய தேடுதல் பேட்டையில் இந்த இரண்டு ஆயுத விநியோகிஸ்தர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆயுத விநியோகஸ்தர்கள் கைது மூலம், பஞ்சாப், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த சட்டவிரோத ஆயுதக் கடத்தலை பஞ்சாப் காவல்துறை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொள்ளையர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்திருக்கிறார்கள்
- ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஹோஷியாபூர்:
பஞ்சாப் மாநிலம் ஹேசியாபூர் மாவட்டம், பிஹம் கிராமத்தில் இருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூபாய் 17 லட்சம் பணத்தை திருடி இருக்கிறார்கள். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.40 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பாக சப்பேவால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்திருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வங்கியின் துணை மேலாளரான ஜஸ்வீர் சிங் கூறுகையில், சிசிடிவி காட்சியின்படி திருடர்கள் அதிகாலை 2.40 மணியளவில் காரில் வந்து எடிஎம்-ஐ உடைத்து ரூ.17 லட்சத்தை திருடி இருக்கிறார்கள், என்றார்.
ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், அதனை சுற்றி உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருவதாக டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.
- விரைவுச் சாலை அமையும் பகுதியில் விவசாயி சுக்விந்தர் சிங்கின் புதிய வீடு இருந்தது.
- சாலையில் இருந்து 500 அடி தூரத்திற்கு வீட்டை நகர்த்தும் பணி நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகி, தனது சொந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 அடுக்குமாடி வீடு கட்டி இருந்தார். இந்நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை இணைக்கும் வகையில் விரைவுச் சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இதில் டெல்லி- பஞ்சாப் மாநிலம் வழியாக அமைக்கப்படும் விரைவுச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் விவசாயி சுக்விந்தர் சிங் கட்டியிருந்த வீடு சிக்கியது. இதையடுத்து அவரது வீட்டை அகற்றுமாறு பஞ்சாப் அரசு உத்தரவிட்டதுடன் இதற்காக இழப்பீடும் வழங்கியது.
ஆனால் தனது கனவு வீட்டை இடிக்காமல் அதை அங்கிருந்து நகர்த்த முடிவு செய்த விவசாயி சுக்விந்தர் சிங், தனியார் நிறுவனத்தை அணுகினார். இதையடுத்து அவரது வீட்டின் அஸ்திவார பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் இருந்து 500 அடி தூரத்திற்கு நகர்த்திச் செல்லும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
#WATCH | A farmer in Punjab's Sangrur is moving his 2-storey house 500 feet away from its existing place pic.twitter.com/nrQoQhM0vO
— ANI (@ANI) August 20, 2022
இது குறித்து சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளதாவது: டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் வழியில் வருவதால் நான் வீட்டை மாற்றுகிறேன். எனக்கு இழப்பீடு வழங்கப்பட்டது, ஆனால் வேறு வீடு கட்ட விரும்பவில்லை. இந்த வீட்டை கட்ட சுமார் 1.5 கோடி ரூபாய் செலவழித்துள்ளேன். தற்போது 250 அடி வரை வீடு நகரத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பலாத்காரம் செய்ய வந்தவர்களுடன் போராடிய வீராங்கனை அங்கிருந்து தப்பி வர முயற்சித்துள்ளார்.
- எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு, 18 வயது நிரம்பிய வீராங்கனை ஒருவர் கடந்த 12ம் தேதி பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று இளைஞர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களுடன் போராடிய வீராங்கனை அங்கிருந்து தப்பி வர முயற்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், இளம்பெண்ணை மைதானத்தின் மாடியில் இருந்து தள்ளிவிட்டனர். அதில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. இரண்டு கால்களிலும் தாடையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செயது குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- அட்டாரி வாகா எல்லை இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
- இங்கு இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக் கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும்.
இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தன்று இந்திய வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீறுநடை போட்டுச்சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர். ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
- கவுன்சிலர் முகமது அக்பர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பகுதிக்கு சென்றார்.
- உடற்பயிற்சி மைய நிர்வாகி போலீசில் புகார் செய்தார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள மலேர்கோட்லா மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் முகமது அக்பர். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார்.
அங்கு பயிற்சியாளருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஜிம்முக்கு மர்ம நபர் ஒருவர் வந்தார்.
அந்த நபர் கவுன்சிலர் முகமது அக்பர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பகுதிக்கு சென்றார். அவரது அருகில் சென்றதும் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முகமது அக்பரை சுட்டார்.
வெகு அருகில் இருந்து சட்டதால் கவுன்சிலர் முகமது அக்பர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
கவுன்சிலர் முகமது அக்பரின் அலறல் சத்தமும், துப்பாக்கி சத்தமும் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் முகமது அக்பரை சுட்ட நபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி உடற்பயிற்சி மைய நிர்வாகி போலீசில் புகார் செய்தார். போலீசார் கவுன்சிலர் முகமது அக்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி முகமது அக்பரை சுட்ட நபர் யார்? எதற்காக சுடப்பட்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






