என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • வாயுக்கசிவு விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் 2 சிறுவர்களும் அடங்குவர்.
    • வாயுக்கசிவு பகுதி அதிக மக்கள் வசிக்கும் இடம் என்பதால் அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேற்றினர்.

    லூதியானா:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தொழிற்சாலையில் இன்று காலை 7 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது. குளிரூட்டும் இயந்திரத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி கீழே விழுந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் முககவசம் அணிந்து தொழிற்சாலைக்குள் சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வாயுக்கசிவு விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் 2 சிறுவர்களும் அடங்குவர்.

    மேலும் 11 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்பகுதியை போலீசார் சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவு 300 மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறல், கண் எரிச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். சிலர் வீடுகளில் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையடுத்து அப்பகுதிக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினார்கள்.

    மேலும் வாயுக்கசிவு பகுதி அதிக மக்கள் வசிக்கும் இடம் என்பதால் அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேற்றினர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. வாயுக்கசிவுக்கான காரணம்? வாயு எந்த வகையை சேர்ந்தது? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து லூதியானா துணை கலெக்டர் சுவாதி திவானா கூறும்போது;

    இது நிச்சயமாக வாயுக்கசி வால் ஏற்பட்ட விபத்து. தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வாயுவின் தன்மை குறித்து இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பாக தேசிய பேரிடர் படை குழு விசாரித்தும் மக்கள் தொகை அதிகம் கொண்ட அப்பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றார்.

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் வாயுக்கசிவு சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. போலீசார் மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

    • லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 257 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை குவித்தது.
    • ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மொகாலி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்களும் விளாசினர். கைல் மேயர்ஸ் அரை சதமடித்து, 54 ரன்கள் சேர்த்தார். நிகோலஸ் பூரன், 19 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்களும், ஆயுஷ் பதோனி 43 ரன்களும் எடுத்தனர்.

    பஞ்சாப் சார்பில் ரபாடா 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன்னில் அவுட்டானார். பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ரசா 36 ரன்னும், லிவிங்ஸ்டோன் 23 ரன்னும், சாம் கர்ரன் 21 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதர்வா டெய்ட் அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 66 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    இறுதியில், பஞ்சாப் அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி 5வது வெற்றியைப் பதிவு செய்தது.

    லக்னோ சார்பில் யாஷ் தாக்குர் 4 விக்கெட்டும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் விளாசினர்.
    • ஹாட்ரிக் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய நிகோலஸ் பூரன் 45 ரன்கள் சேர்த்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி, ஆரம்பம் முதலே பஞ்சாப் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவித்தது.

    கேப்டன் கே.எல்.ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தபோதிலும், மற்ற வீரர்கள் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 20 பந்துகளில் மிக விரைவாக அரை சதம் அடித்த கைல் மேயர்ஸ் மொத்தம் 54 ரன்கள் குவித்தார். ஆயுஸ் பதோனி 24 பந்துகளில் 43 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்களும் விளாசினர்.

    ஹாட்ரிக் பவுண்டரியுடன் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய நிகோலஸ் பூரன், 19 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்கள் சேர்த்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தீபக் ஹூடா 11 ரன்களுடனும், குருணால் பாண்ட்யா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    பஞ்சாப் தரப்பில் ரபாடா 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    • குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.
    • பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர்.

    இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ஊடுருவும் டிரோன்களை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியான குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குர்தாஸ்பூரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

    • லக்னோ அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது.
    • பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்க லக்னோ முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொகாலியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    லக்னோ அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியும் அதே நிலையில்தான் உள்ளது.

    ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க லக்னோ முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.
    • இவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • அம்ரித்பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    • நாங்கள் எந்த அப்பாவி மனிதரையும் தொல்லைப்படுத்த மாட்டோம்.

    சண்டிகார் :

    பிந்தரன்வாலேவுக்கு பிறகு பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கையை முன்னெடுத்தவர் அம்ரித்பால் சிங். நேற்று அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இதன் மூலம் கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக நடந்து வந்த போலீசாரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

    இவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    35 நாட்களுக்கு பிறகு அம்ரித்பால் சிங் இன்று (நேற்று) கைது செய்யப்பட்டு விட்டார்.

    அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயற்சித்து, நாட்டின் சட்டத்தை மீறியவர், சட்டப்படியான நடவடிக்கையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

    நாங்கள் எந்த அப்பாவி மனிதரையும் தொல்லைப்படுத்த மாட்டோம். நாங்கள் பழிவாங்கும் அரசியல் செய்யவும் இல்லை.

    கடந்த 35 நாட்களாக மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைப்பிடித்து வந்ததற்காக பஞ்சாபின் 3½ கோடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்ரித்பால் சிங்கின் கடந்த காலம் பற்றிய முக்கிய தகவல்கள்:-

    அம்ரித்பால் சிங்கின் முழுப்பெயர் அம்ரித்பால் சிங் சந்து ஆகும். இவர் 1993-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி பிறந்தவர்.

    அமிர்தசரஸ் மாவட்டத்தில் வளர்ந்தவர். இவர், தனது பெற்றோருக்கு 3-வது மகன் ஆவார். அவரது குடும்பம், சீக்கிய மதத்தில் தீவிரமான பற்று கொண்டதாகும்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து, படிப்பை பாதியில் நிறுத்தியவர். 2012-ல் துபாய்க்கு சென்று தனது குடும்பத்தாரின் போக்குவரத்து தொழிலில் இணைந்தார்.

    10 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு திரும்பியவர் தன்னை மத பிரசாரகராக அறிவித்துக்கொண்டு, பிரசாரம் செய்தார்.

    பிந்தரன்வாலேயின் ஆதரவாளராக தன்னை பிரகடனம் செய்ததோடு மட்டுமின்றி, இரண்டாம் பிந்தரன்வாலே என்று சொல்லக்கூடிய வகையில் விசுவரூபம் எடுத்து காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கையை கையில் எடுத்தார்.

    அதன் விளைவுதான் இப்போது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிற அளவுக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

    • மோகா மாவட்டத்தில் உள்ள ரோடே கிராமத்தில் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
    • அம்ரித்பால் சிங் கைதை தொடர்ந்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.

    சமீப காலமாக இந்த காலிஸ்தான் கோரிக்கையை 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவர் அம்ரித் பால்சிங் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். வெளிநாட்டில் உள்ள சில சீக்கியர்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

    கடந்த மாதம் ரூப்கர் மாவட்டம் சாம்கவூர் சாகிப் என்ற பகுதியை சேர்ந்த பரீந்தர்சிங் என்பவரை கடத்தி சென்று தாக்கியதாக அம்ரித்பால் சிங் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரில் ஒருவரான லவ்பிரீத் சிங்கை போலீசார் கைது செய்து காவலில் வைத்து இருந்தனர். இவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி ஆவான்.

    அவரை மீட்க அம்ரித்பால் சிங்கும், அவரது ஆதரவாளர்களும் அஜ்னாலா போலீஸ் நிலையத்துக்குள் பயங்கர ஆயுதங்கள், நவீனரக துப்பாக்கிகளுடன் தடையை மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.

    இந்த சம்பவத்தில் அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து லவ்பிரீத் சிங் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

    போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துதல், கொலை முயற்சி, போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல், அரசு ஊழியர்களின் கடமையை நிறைவேற்றுவதில் இடையூறு ஏற்படுத்துதல் போன்ற பல கிரிமினல் வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.

    கடந்த மாதம் 18-ந்தேதி அம்ரித்பால் சிங் கையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய பஞ்சாப் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கையாக இணையதள சேவை முடக்கப்பட்டது.

    இந்த தேடுதல் வேட்டையின் போது அம்ரித்பால் சிங் தப்பி ஓடினார். அவர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது தெரிய வந்தது.

    போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையின் காரணமாக அம்ரித்பால் சிங் மாறுவேடங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றும் அவரை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து மாறுவேடங்களில் தலைமறைவாக சுற்றித்திரிந்தார். அவர் மாறுவேடத்தில் செல்லும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன.

    அவரது மனைவி கிரண் சிங் கவுர் லண்டன் தப்பி செல்ல முயன்றபோது கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

    இந்த நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று கைது செய்யப்பட்டார். 37 நாட்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்ரித் பால் சிங் பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் ரோடே கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அங்கிருந்து அவரால் தப்பி ஓட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்தனர். காலை 6.45 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

    அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்கள் 8 பேர் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அம்ரித்பால் சிங் மீதும் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி இருந்தது. கைது செய்யப்பட்டுள்ள அவர் திப்ருகார் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

    இதுதொடர்பாக பஞ்சாப் மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

    மோகா மாவட்டத்தில் உள்ள ரோடே கிராமத்தில் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அசாம் மாநிலம் திப்ருகார் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

    பஞ்சாப் மாநில மக்கள் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை காக்க வேண்டும். போலியான செய்திகளை பகிர வேண்டாம். எப்போதுமே சரிபார்த்து பகிரவும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அம்ரித்பால் சிங் கைதை தொடர்ந்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய பெங்களூரு 174 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பஞ்சாப் 150 ரன்களை எடுத்து தோற்றது.

    மொகாலி:

    மொகாலியில் இன்று மதியம் நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 59 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 56 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடினார். அவர் 46 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி போராடி 41 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், பஞ்சாப் அணி 150 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூரு அணியின் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 174 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, டூ பிளசிஸ் ஆகியோர் அரை சதமடித்தனர்.

    மொகாலி:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    மொகாலியில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 59 ரன்னில் அவுட்டானார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் டக் அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 56 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

    • பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி இன்று செயல்படுகிறார்.
    • டூ பிளசிஸ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க உள்ளார்.

    மொகாலி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது இன்று மொகாலியில் நடைபெறுகிறது.

    விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி பஞ்சாப் அணிக்கெதிரான இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    டூ பிளசிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்க உள்ளார். பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி மீண்டும் செயல்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நடந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்வதை பார்த்த காவலர் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார்.
    • அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல என ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோவிலுக்கு சென்ற ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தனது முகத்தில் இந்திய தேசியக் கொடி போன்று மூவர்ணத்தை வரைந்து சென்றதால் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பொற்கோவில் பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்லக்கூடாது என்று சொல்கிறார். அந்த பெண், இது இந்தியா இல்லையா? என் கேட்கிறார். அதற்கு பதிலளித்த காவலர் 'இது பஞ்சாப்' என கூறுகிறார். இது இந்தியா இல்லையா என்று காவலரிடம் திரும்பத் திரும்பக் கேட்டதற்கும், அவர் இல்லை என்றே தலையசைக்கிறார். நடந்த சம்பவத்தை அந்தப் பெண் தனது செல்போனில் பதிவு செய்வதை பார்த்த காவலர் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.

    அந்த அதிகாரியின் செயலுக்கு பொற்கோயிலை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த பெண்ணின் முகத்தில் வரைந்திருந்த சின்னத்தில் அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல, அரசியல் கொடியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    ×