என் மலர்tooltip icon

    குஜராத்

    • இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.
    • 20 ஓவர் தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ராஜ்கோட்:

    இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் 4-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கெய்க்வாட் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 27 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடன் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்ட் 17 ரன்கள் எடுத்தார்.

    ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானார். இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.

    • நாளை மறுநாள் மோடியின் தாயார் ஹிராபா, 100வது வயதை எட்டுகிறார்.
    • குஜராத் வருகை தரும் பிரதமர், தமது தாயாரை சந்திப்பார் என தகவல்

    காந்திநகர்:

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபா மோடி வரும் 18ஆம் தேதி தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அன்றைய தினம் மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் உள்ள கட்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் ஹிராபா மோடியின் நீண்ட ஆயுளுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஜூன் 18-ந் தேதி குஜராத்திற்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பவாகத் கோயிலுக்குச் சென்று பின்னர் வதோதராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த பயணத்தின் போது தமது தாயாரை அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், காந்தி நகரில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு பிரதமர் மோடியின் தாயார் ஹிராபாவின் பெயரை சூட்டப்படும் என்று அந்நகர மேயர் ஹிதேஷ் மக்வானா தெரிவித்துள்ளார். மாநில தலைநகரில் உள்ள மக்களின் கோரிக்கை மற்றும் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    • நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உறுதியாக நம்புகிறேன்
    • வகுப்பறையில் கடைசி வரிசையில் உள்ள ஒருவர் கூட நாட்டிற்கு சிறந்ததை செய்ய முடியும்

    ஆனந்த்:

    குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஊரக மேலாண்மை நிறுவனத்தின் 41வது வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டார். நான் அதை உறுதியாக நம்புகிறேன். பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் காந்திஜியின் கனவுகளை நனவாக்கப் பாடுபடவேண்டும்.

    ஊரக வளர்ச்சியை உருவாக்காமல், கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரையும் வளம் மிக்கவர்களாக மாற்றாமல் இந்தியா ஒரு போதும் வளர்ச்சியடைந்த நாடாக மாறாது. மாணவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நாட்டின் ஊரக வளர்ச்சிக்காக பாடுபடுவதை நினைவில் கொள்ளவேண்டும்.

    ஊரக வளர்ச்சி என்பது வெறுமனே கொள்கை சார்ந்தது அல்ல, கிராமங்களுக்குப் பணியாற்ற உறுதியுடன் தம்மை அர்ப்பணிக்கும்போது மட்டுமே அது நடைபெறும்.

    பல கோடி ரூபாய் சம்பாதித்த பிறகும் நீங்கள் திருப்தி அடைய முடியாது. உங்கள் வாழ்க்கையில் ஒரு நபரை சுய தேவை பூர்த்தி அடைந்தவராக மாற்றினால் நீங்கள் சுய திருப்தி அடைய முடியும். திருப்தி என்பது மற்றவர்களுக்கு பணியாற்றுவதில் இருந்து வருகிறது.

    வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை நீங்கள் பெறும்போது அதிலிருந்து திருப்பித் தருவது உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். இந்தியா பலம் வாய்ந்த நாடாக மாற வேண்டுமென்றால் கிராமங்கள் வசதியாகவும் தற்சார்புடையதாகவும் இருக்கவேண்டும்.

    இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற நோக்கத்திற்கு அனைத்து இந்திய கிராமங்களின் வளர்ச்சி அவசியம். மோடி பிரதமரான பிறகு ஊரக வளர்ச்சி பற்றிய புதிய தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார்.

    வகுப்பறையில் கடைசி வரிசையில் உள்ள ஒருவர் கூட நாட்டிற்கு சிறந்ததை செய்ய முடியும். எனவே யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எந்த ஒருவரும் பிறப்பால் பெரியவராதில்லை. சிறந்த சிந்தனையால் மட்டுமே பெரியவர் ஆகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குஜராத்தின் பெருமை என பிரதமர் மோடி பேசினார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    நவ்சாரியில் நடைபெற்ற 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் சுமார் ₹ 3,050 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 8 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சி குஜராத்தின் பெருமை. ஏழைகளின் நலன் மற்றும் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதில் எங்கள் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியின பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

    அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு அரசாங்கம் செயல்பட்டுள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான முழுமையான அணுகுமுறையை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். சிகிச்சை வசதிகளை நவீனப்படுத்த முயற்சித்துள்ளோம், மேலும் சிறந்த ஊட்டச்சத்து, சுத்தமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளோம்.

    மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி அணுக முடியாத இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்கின்றன என தெரிவித்தார்.

    • ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
    • ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் (2) என்கிற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் அப்போது கூலி வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது நேற்று இரவு 8 மணியளவில் சிறுவன் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து 20- 25 அடி ஆழத்தில் சிக்கினான். இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் அகமதாப்பாத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 கி.மீ தொலைவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவிற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, இரவு 10.45 மணியளவில் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர்.

    பின்னர் சிறுவன் திரங்காத்ரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் வலிமை மிக்க பொறியாளர்களின் முயற்சியால் புல்லட் ரெயில் என்ற கனவு நனவாகும்
    • புல்லட் ரெயில் திட்டமிட்ட நேரத்தில் முழு வேகத்தில் இயக்கப்படும்

    சூரத்:

    அகமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்காக குஜராத் மாநிலத்தில் 98 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தும் பணியும், தாதர் நகர் ஹவேலியில் 100 சதவீதமும், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 508 கி.மீ தூரத்திற்கு புல்லட் ரயில் பாதைக்கு 71 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடிவடைந்துள்ளது.

    இதில், குஜராத்தின் 8 மாவட்டங்கள் வழியாக செல்லும் 352 கி.மீ., நடைபாதையில் உள்ள ஸ்டேஷன்களுக்கு பல்வேறு பகுதிகளில் பைல்ஸ், அஸ்திவாரம், தூண்கள், பையர் கேப்கள், கர்டர்கள் வார்ப்பு மற்றும் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

    இந்த திட்டத்தி; புல்லட் ரெயில், மெட்ரோ, பிஆர்டி மற்றும் சபர்மதியில் உள்ள இரண்டு இந்திய ரெயில் நிலையங்களை ஒருங்கிணைக்கும் பயணிகள் முனையம் ஆகியவை ஆகஸ்ட் 2022 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்-நவ்சாரி இடையே நடைபெறும் புல்லட் ரெயில் திட்டப் பணிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    புல்லட் ரெயில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 60 கி.மீ தூரம் தூண் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஒரே நேரத்தில் 150 கி.மீ.க்கு பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து பாலங்கள் மற்றும் ரெயில் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பிரிவு 2026 ஆம் ஆண்டு என்ற இலக்குடன் சூரத்தில் இருந்து பிலிமோரா வரை பணிகள் மிக வேகமாக நடைபெறுகின்றன. புல்லட் ரெயில் திட்டமிட்ட நேரத்தில் முழு வேகத்தில் இயக்கப்படும்

    அகமதாபாத்-மும்பை புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் பிரதமரின் கருத்துப்படி, எந்தவொரு பெரிய வேலையையும் செய்ய அனைவரின் முயற்சியும் தேவை. உங்களின் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிராக அரசை கேட்டுக் கொள்கிறேன். அகமதாபாத்தைப் போல மும்பைக்கும் புல்லட் ரெயில் தேவை. இந்தத் திட்டத்தில் அரசியல் இருக்கக் கூடாது.

    இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அனைத்து வகையான வேலைகளையும் செய்யும் நபர்களும் இதில் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×