என் மலர்
பீகார்
- பீகார் மாநிலம் ரெக்சலில் இருந்து நர்காட்டி காகஞ்ச் என்ற இடத்துக்கு இன்று காலை பயணிகள் ரெயில் சென்றது.
- சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
பாட்னா:
பீகார் மாநிலம் ரெக்சலில் இருந்து நர்காட்டி காகஞ்ச் என்ற இடத்துக்கு இன்று காலை பயணிகள் ரெயில் சென்றது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர் பெல்லா ரெயில் நிலையத்தில் நின்று விட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது.
சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அதற்குள் என்ஜின் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது பற்றி உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தில் என்ஜின் சேதம் அடைந்தது.
என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதும் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பயணம் செய்த அனைவரும் அவசரஅவசரமாக கீழே இறங்கி உயிர் தப்பினார்கள். தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- பீகார் மாநிலம் காசிகர் மாவட்டம் கேலாபரி கிராமத்தை சேர்ந்தவர் மேக்நாத் யாதவ்.
- இன்று காலை இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் இருந்த கோவிலுக்கு சென்றார்.
பாட்னா:
பீகார் மாநிலம் காசிகர் மாவட்டம் கேலாபரி கிராமத்தை சேர்ந்தவர் மேக்நாத் யாதவ். தொழில் அதிபர் .
இன்று காலை இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் இருந்த கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது மர்ம மனிதர்கள் மேக்நாத் யாதவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மனைவி உடலில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- மோசமான வானிலை காலங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்
- கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் சம்பரான், ஆராரியா, போஜ்பூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதில் 16 பேர் இறந்து விட்டனர்.
இதில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.
மேலும் மோசமான வானிலை காலங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பீகார் மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. அங்கு மின்னல் தாக்கி 17 பேர் பலியாகினர்.
- மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.
பாட்னா:
பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும், பாங்கா, ககாரியா மாவட்டத்தில் தலா 2 பேர், முங்கர், கதிஹார், மாதேபுரா மற்றும் சஹஸ்ராவில் தலா ஒருவர் என மொத்தம் 17 பேர் பலியாகினர் என தெரிவித்தது.
மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்களது குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
- பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்தது.
- ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் மாற்று விமானம் ஏற்பாடு.
பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிரக்கப்பட்டது.
இதுகுறித்து பாட்னா விமான நிலைய இயக்குனர் கூறியதாவது:-
பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமான மீது பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்தது. இதனால், விமானம் மீண்டும் பாட்னாவுக்கு தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த சுமார் 185 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர். தொழில்நுட்ப கோளாறு பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விசாரணைக்கு உரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வட மாநிலங்களில் வன்முறை வரலாறு காணாத வகையில் இருக்கிறது.
- குறிப்பாக பீகார், உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
பாட்னா:
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது.
பீகார், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கான உள்ளிட்ட 9 மாநிலங்களில் போராட்டம் பரவி உள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் ரெயில்களை தீ வைத்து கொளுத்தினர். ரெயில் நிலையங்களை சூறையாடினர். பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
வட மாநிலங்களில் வன்முறை வரலாறு காணாத வகையில் இருக்கிறது. குறிப்பாக பீகார், உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
4 நாட்கள் நடந்த வன்முறையில் ரெயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. பீகாரில் ரெயில்வேயில் 60 பெட்டிகள் தீ வைக்கப்பட்டன. 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டன. 15 மாவட்டங்களில் ரெயில் நிலையம் சூறையாடப்பட்டன.
ரெயில்வேக்கு சொந்தமான ரூ.700 கோடி சொத்துக்கள் வன்முறையின் போது சேதம் அடைந்ததாக கிழக்கு மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பாளர் விஜேந்திர குமார் தெரிவித்தார்.
பீகாரில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 138 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமிரா மூலம் அடையாளம் காணப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைதானார்கள்.
- வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.
- அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாட்னா:
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது.
குறிப்பாக பீகார் மாநிலத்தில்தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதை அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராணுவத்தில் குறுகியகால ஆள் சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.
லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சூரக் பஸ்வான் கூறும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இன்று கவர்னரை சந்தித்து அன்கினிபத் திட்டத்தை திரும்ப பெற கோரி மனு கொடுக்க உள்ளோம். அக்னிபத் திட்டம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்றார்.
- பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முைறயில் ஈடுபட்டுள்ளனர்.
- நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டது.
பாட்னா:
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது.
குறிப்பாக பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முைறயில் ஈடுபட்டுள்ளனர்.
பீகார், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் போராட்டம் பரவி உள்ளது.
நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தெலுங்கானாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். போராட்டம் காரணமாக 340-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை பாதிக்கப்பட் டது. 234 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக வட மாநிலங்களில் நீடித்தது.
இந்த நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த முழு அடைப்பின் போது பீகாரில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இன்று காலை போராட்டக்காரர்கள் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தீவைத்து எரித்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதே போல போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பீகாரில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
ஜெகனாபாத்தில் போலீஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அங்கு போலீசார் மீதும் கல்வீச்சும் நடந்தது. இந்த முழு அடைப்பு காரணமாக கயா, புக்சர், ஜெகனாபாத் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 12 மாவட்டங்களில் இணைய தள சேவை முடக்கப்பட்டு இருந்தது. முன்கர் பகுதியில் மாணவர்கள் டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதை அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராணுவத்தில் குறுகியகால ஆள் சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.
லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராஜ் பஸ்வான் கூறும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இன்று கவர்னரை சந்தித்து அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி மனு கொடுக்க உள்ளோம். அக்னிபாத் திட்டம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்றார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்றைய போராட்டத்தின் போது ரெயில் நிலையம் சூறையாடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இதே போல அரியானாவில் 15 பேர் கைதாகி உள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஜவுன்பூரில் போராட் டக்காரர்கள் பஸ்கள் மற்றும் போலீஸ் வேன்களை தாக்கி தீ வைத்து எரித்தனர்.
பஞ்சாப் மாநிலத்திலும் இன்று வன்முறை பரவியது. லுதியானாவில் ரெயில் நிலையத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினார்கள். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
- ரெயில்கள் தாக்கப்பட்டதால் பல ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஒருவர் காயம் அடைந்தார்.
- பீகாரில் உள்ள ஜகான பாத், பக்சர், கதிகார், போஜ்பூர், கைமூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாட்னா:
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் "அக்னிபாத்" திட்டத்தை பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் வீரர்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடையாது.
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பீகாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் நேற்று முன்தினத்தில் இருந்து போராட்டத்தில குதித்தனர்.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. நேற்று பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
பீகாரில் இளைஞர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. அவர்கள் ரெயில்களுக்கு தீ வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. டயர்களை தீ வைத்து கொளுத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது.
ரெயில்கள் தாக்கப்பட்டதால் பல ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஒருவர் காயம் அடைந்தார்.
பீகாரில் உள்ள ஜகான பாத், பக்சர், கதிகார், போஜ்பூர், கைமூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் பொதுமக்கள் காயம் அடைந்தனர். உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, ஜம்மு உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்தது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. இன்றும் பல இடங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இன்று மேலும் 4 ரெயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
பீகார் மாநிலம் லக்கிசராய் ரெயில் நிலையத்தில் இளைஞர்கள் ஜம்முதாவி-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைத்தனர். அந்த ரெயிலின் 2 பெட்டிக்கு கும்பல் தீ வைத்தது. இதில் தீ மளமளவென்று பரவியது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதே போல் சமாஸ்டிபூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சம்பர்க்கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை தீ வைத்தனர்.
இதேபோல ஆரா பகுதியில் உள்ள குகாதியா ரெயில் நிலையத்திலும் ஒரு ரெயிலுக்கு தீவைக்கப்பட்டது. பீகாரில் 3 ரெயில்களில் 20 பெட்டிகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது.
வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் தென் மாநிலங்களுக்கும் பரவியது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவில் இன்று ரெயிலுக்கு தீவைக்கப்பட்டது.
செகந்திராபாத் ரெயில் நிலையத்துக்குள் மிகப்பெரிய கும்பல் நுழைந்தது. அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரெயில் நிலையத்தை அடித்து உடைத்து சூறையாடினார்கள்.
ரெயில் நிலையத்தில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கினார்கள். பின்னர் அங்கு நின்ற பயணிகள் ரெயிலின் பார்சல் பெட்டிக்கு தீவைத்தனர்.
பீகாரில் உள்ள பிகியா ரெயில் நிலையத்தில் ஏராளமானவர்கள் திரண்டு வந்து ரெயில்களை மறித்தனர். இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 2 ரெயில்வே ஊழியர்கள் காயம் அடைந்தனர். இதே போல் பீகாரின் பல நகரங்களிலும் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்தினுள் நுழைந்தனர்.
பீகார் மாநில துணை முதல்-மந்திரி ரேணு தேவியின் வீடு பெட்டியா நகரில் உள்ளது. அவரது வீடு மீது தாக்குதல் நடந்தது. ஏராளமான இளைஞர்கள் திரண்டு அவரது வீட்டை அடித்து நொறுக்கினார்கள்.
இதுதொடர்பாக துணை முதல்-மந்திரி ரேணுதேவி மகன் கூறும்போது, 'எங்களது வீடு பெட்டியாவில் உள்ளது. இந்த வீடு கடுமையாக சேதம் அடைந்தது. அவர் (ரேணு தேவி) தற்போது பாட்னாவில் உள்ளார்' என்றார்.
இதேபோல பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளும் தாக்கப்பட்டன.
இதே போல பா.ஜனதா ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று போராட்டம் நீடித்தது.
உத்தரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அந்த கும்பல் ரெயில் நிலையத்தை அடித்து உடைத்து சூறையாடியது. அங்கு நின்ற ரெயிலையும் அவர் தாக்கினார்கள்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் ரெயில் நிலையத்தை சூறையாடி விட்டு சென்றது.
ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாலையில் இருந்தே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஸ்களை கல்வீசி தாக்கினார்கள். இதில் பஸ்கள் சேதம் அடைந்தன.
அரியானா மாநிலம் பில்வால் மாவட்டத்தில் ஏற்பட்ட போராட்டம் வன்முறையானது. அதிக அளவில் கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வன்முறை காரணமாக உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் சில இடங்களில் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது.
- வட மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டத்தால் 35 ரெயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
- இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
பீகார் மாநிலம் தன்பூர் ரயில் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்து பொருட்களை சேதப்படுத்தினர். ரெயில்களுக்கு தீ வைப்பு சம்பங்களும் அரங்கேறின. இது தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை சிசிடிவி கேமிரா பதிவின் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டம் காரணமாக இதனால், சுமார் 35 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 குறுகிய கால இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்பட வேண்டும் என்றும், அதற்கு பதில் நிரந்தர வேலை வாய்ப்பு வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக டெல்லி கேட் மற்றும் மஜ்ஜித் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன
இந்நிலையில் அக்னிபாத் போராட்டத்தில் ஈடுபடுவோர் வன்முறையை தவிர்க்குமாறும், ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- ரெயில் நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியது.
- பீகார் மாநிலம் சாப்ராவில் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் போராட்டம் தொடருகிறது.
புதிய ராணுவ ஆள்சேர்ப்பு கொள்கையான அக்னிபத் திட்டம் மீதான போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இன்று காலை ஒரு கும்பல் ரயில்களுக்கு தீ வைத்தது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் பாஜக ஆளும் அரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் போராட்டம் பரவியுள்ளது.
பீகார் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் ரெயிலை தீவைத்து எரித்துள்ளனர். லக்கிசராய் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் போராட்டம் தொடருகிறது.
இதேபோல், உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் இன்று காலை ஒரு கும்பல் ரெயிலுக்கு தீ வைத்தது. மேலும், ரெயில் நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியது.
கிழக்கு உ.பி. மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்திற்கு வெளியே தெருக்களில் தடிகளை ஏந்திய மற்றொரு போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ரயில் நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பெஞ்சுகளை இளைஞர்கள் லத்திகளைக் கொண்டு உடைக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
- அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர்.
- ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாட்னா:
மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை 'அக்னிபாத்' என்ற ராணுவத்தில் ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர். 17 வயது முடிந்து 6 மாதம் ஆனவர்கள் முதல் 21 வயதுக்குட்பட்ட வர்கள் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு சேர்க்கப்படுவார்கள்.
அதன் பின்னர் பெரும்பாலானவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது.
முந்தைய திட்டத்தின்படி குறைந்தபட்சம் 15 ஆண்டு காலம் பணிபுரியலாம் என்ற நிலையில் புதிய ஆள் சேர்ப்பு நடைமுறையில் 4 ஆண்டுகால பணி காலம் குறைக்கப்பட்டது இளைஞர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் 'அக்னிபாத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக நாட்டின் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடந்தது. இன்றும் 2-வது நாளாக அங்கு போராட்டம் நீடித்தது.
பாட்னா, முசாபர்பூர், பக்கர், ஜெகனாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், ரெயில் நிலையங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி வன்முறையில் ஈடுபட்டனர்.
பாபுவா ரோடு ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசினார்கள். அதோடு ரெயிலின் ஒரு பெட்டியிலும் தீ வைத்தார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பல இடங்களில் போலீசார் மீது இளைஞர்கள் கற்களை வீசினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். இந்த வன்முறை காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






