என் மலர்
ஆந்திர பிரதேசம்
- தெலுங்கு கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
- பக்தர்கள் கோவிலின் மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக நடக்கக்கூடாது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 25-ந்தேதி சூரிய கிரகணத்தின்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கிடையே இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது, திட்டமிட்டு செய்யப்பட்டதாகக் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. பக்தர்களின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. பக்தர்கள் கோவிலின் மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக நடக்கக்கூடாது.
தற்போதுள்ள அறங்காவலர் குழு எந்தவித சுயநலமுமின்றி கோவிலின் வளர்ச்சிக்காகவும், கோவிலின் புகழை இழிவுப்படுத்தும் விதமாக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. இதேபோல் கோவிலில் மூலவர் சன்னதியில் சம்பிரதாய உடை அணிந்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது தெலுங்கு கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. இதை, பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
- வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்குமேல் அனைத்துத் தரிசனங்களும் நிறுத்தப்பட்டு ஏகாந்தசேவை நடக்கிறது.
- அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் தரிசனம் தொடங்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலும், காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் நடக்கிறது. வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்குமேல் அனைத்துத் தரிசனங்களும் நிறுத்தப்பட்டு ஏகாந்தசேவை நடக்கிறது.
பின்னர் மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் தரிசனம் தொடங்கும். வாராந்திர ஆர்ஜித சேவைகளுக்குப் பிறகு தோமால சேவை, அர்ச்சனை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தொடங்கும். இதையெல்லாம் முடிப்பதற்குள் காலை 10 மணி ஆகிறது. இதனால் நள்ளிரவுக்குமேல் வரிசையில் செல்லும் பக்தர்கள் காலை வரை இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்க வேண்டி உள்ளது.
அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. அதாவது, ஆர்ஜித சேவைகளின் நேரத்தை மாற்ற முடியாத சூழ்நிலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை காலை 10 மணிக்கு மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் காலை 6 மணியில் இருந்து பொதுப் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவதால் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க முடியும் என்பது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கருத்து.
ஆனால், அதில் சில பிரச்சினைகள் எழுகின்றன. கோவிலில் கல்யாண உற்சவத்துக்கான டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்களும் காலை 10 மணிக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த நேரத்தில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை அமல்படுத்துவதால், பிரச்சினை வருமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரை இலவச தரிசனம் நடக்கும்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதினால் பிரச்சினை இருக்காது. இரவு வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தொடங்கும் வரை வரிசைகள் காலியாகவே இருக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இவை அனைத்தையும் ஆய்வு செய்யும் வகையில் நவம்பர் மாதம் 7, 8, 9-ந்தேதிகளில் காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை 3 நாட்களுக்கு சோதனை ஓட்டம் அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. அதில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு டிசம்பர் மாதம் முதல் புதிய முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும், எனத் தெரிகிறது.
டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடும் ஆன்லைனில் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் காலை 10 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அமல்படுத்தப்பட்டால், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்கள் அறைகள் கேட்கும் பிரச்சினை குறையும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது.
வி.ஐ.பி. பக்தர்கள் திருப்பதியில் தங்கி திருமலைக்கு காலை 9 மணிக்கு சென்றால், காலை 10 மணிக்கு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து முடிந்ததும், மதியத்துக்கு மேல் திருமலையில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்று விடலாம். இதனால், பொதுப் பக்தர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது, என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நாளை முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.
- அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கணபதி ஹோமத்துடன் ஹோம மஹோற்சவம் தொடங்கியது.
அதையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் திருமஞ்சனம் நடந்தது. மாலை கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், வாஸ்துபூஜை, பர்யாக்னிகரணம், மிருதசங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை, கணபதி ஹோமம், லகு பூர்ணாஹூதி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) கணபதி ஹோமம் நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், நவம்பர் மாதம் 1-ந்தேதி கால பைரவர் ஹோமம், 2-ந்தேதி நவக்கிரஹ ஹோமம், 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டியாகம்), 12-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர யாகம்) நடக்கிறது. 22-ந்தேதி சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது. 23-ந்தேதி சண்டிகேஸ்வரர் ஹோமம், திரிசூல ஸ்நானம், பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடக்கிறது.
அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக புனித கபில தீர்த்தத்தில் நீராடி கபிலேஸ்வரர் சன்னதியில் நடக்கும் ஹோமத்தில் பங்கேற்று வழிபட்டால் பாவம் விலகி புண்ணிய பலன் கிடைக்கும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
- பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
- இன்று மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடுத்த மாதம் (நவம்பர்) திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.
எனவே பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திலீப் முக கவசத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.94 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்பை கைது செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி அடுத்த சந்திரகிரியை சேர்ந்தவர் திலீப். இவர் அங்குள்ள வங்கி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.
வங்கியில் வேலை செய்யும் 50 ஊழியர்கள் 1 ஷிப்ட்டுக்கு 25 பேர் வீதம் 2 ஷிப்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திலீப் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்தார். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது தனது முக கவசத்தில் ரூ.94 ஆயிரத்தை மறைத்து வைத்து எடுத்துச் சென்றார். திலீப் மீது சந்தேகம் அடைந்த தேவஸ்தான அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.
அப்போது திலீப் முக கவசத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.94 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 47 ரூ.2000 நோட்டுகளை மறைத்து வைத்து எடுத்து சென்றார்.
இதையடுத்து திலீப்பை பிடித்து திருமலை 1 டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்பை கைது செய்தனர்.
திலீப் ஏற்கனவே லட்டு கவுண்டரில் வேலை செய்யும் போது டோக்கன்களை திருடி பக்தர்களுக்கு விற்பனை செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சித்தூர் அடுத்த கெங்காதர நல்லூரை சேர்ந்தவர் பல்ராம்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த கெங்காதர நல்லூரை சேர்ந்தவர் பல்ராம். இவர் கெங்காதர நல்லூர் பஸ் நிலையம் அருகே நகைக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் நகை வாங்க வருவார்கள் என்பதற்காக அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கடையில் வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். இவரது கடைக்கு அருகே விஜய் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மளிகை கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு கடை உரிமையாளருக்கு போன் செய்தனர்.
விஜய் வந்து கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவரது கடை சுவற்றில் இருந்து நகைக்கடை சுவற்றில் துளையிட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து விஜய் நகைக்கடை உரிமையாளர் பலராமுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த வெள்ளி தட்டு, டம்ளர், சாமி சிலைகள்,கால் கொலுசுகள் என 80 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ரூ.12 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.திருட்டு சம்பவம் குறித்து கெங்காதர நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இன்ஸ்பெக்டர் மத்தையாச்சாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, நகைக்கடையின் சுவர்கள் காங்கிரிட்டால் கட்டப்பட்டுள்ளதால் வெளிப்புறத்தில் துளையிட முடியவில்லை.
இதனால் மளிகை கடையின் சுவற்றில் துளையிட்டு பின்னர் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் தங்க நகைகள் கொள்ளை போகாமல் தப்பியது.
கொள்ளைபோன வெள்ளி பொருட்கள் மதிப்பு ரூ.40 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குரங்குகள் கொல்லப்பட்டது குறித்து வனத்துறை வழக்கு பதிவு.
- குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என வனத்துறை அதிகாரி தகவல்
ஸ்ரீகாகுளம்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகில் வனப்பகுதியில் குவியலாக குரங்குகள் இறந்து கிடந்தன. துர்நாற்றம் வீசியதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் அங்கேயே இறந்த குரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது.

குட்டிகள் உள்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சிலகம் கிராமத்தில் குரங்குகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம் வேறு இடத்தில் விஷமிகள் சிலர் விஷம் வைத்து அந்த குரங்குகளை கொன்றிருக்கலாம் என்றும் பின்னர் டிராக்டர் மூலம் அந்த குரங்குகளின் உடல்களை வீசிச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஸ்ரீகாகுளம் வனத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணன், தெரிவித்தார். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வி.ஐ.பி பிரேக் தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.
- சூரிய கிரகணத்தன்று சமையல் செய்யக்கூடாது என்பதால் அன்னதான கூடமும் இன்று காலை முதல் மூடப்பட்டது.
திருப்பதி:
சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்பட்டது.
இன்று மாலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி காலை 8.11 மணி முதல் இரவு 7.30 வரை 12 மணி நேரம் ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று காலை 8.11 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது.
வி.ஐ.பி பிரேக் தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.
சூரிய கிரகணத்தன்று சமையல் செய்யக்கூடாது என்பதால் அன்னதான கூடமும் இன்று காலை முதல் மூடப்பட்டதால் பக்தர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்பட்டு வந்த அன்னதானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு சாமிக்கு பரிகார பூஜைகள் முடிந்தவுடன் இரவு 7.30 மணிக்கு மீண்டும் கோவில் திறக்கப்படுகிறது.
இதையடுத்து பக்தர்கள் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நவம்பர் 8-ந் தேதி மதியம் 2.39 முதல் 6.19 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அன்றும் காலை 8.40 முதல் இரவு 7.20 வரை கோவில் நடை மூடப்படுகிறது.
- மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
- உள்ளுர் மக்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சுங்கச்சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. நேற்று தேர்வு முடிந்து தமிழகம் திரும்பிய மாணவர்களில் ஒருவரின் வாகனத்திற்கு, எஸ்.வி.புரம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தும்போது, அந்த வாகனத்திற்கான பாஸ்டேக் வேலை செய்யவில்லை. இதனால் பணம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த வாகனத்தை மட்டும் ஓரங்கட்டிவிட்டு, மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கும்படி ஊழியர்கள் கூறி உள்ளனர். அப்போது மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் வந்து மாணவர்களை கலைந்துசெல்லும்படி அறிவுறுத்தினர். மேலும், மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் கூறினர்.
ஆனால் மாணவர்களோ ஆந்திர பதிவெண் கொண்ட வாகனங்களை செல்ல விடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது.
இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்திவருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் தீயை அணைக்க முடியவில்லை.
- பட்டாசு கடையில் வேலை செய்த பிரம்மா (வயது 37) காசி (32) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வட மாலாபேட்டை அருகே உள்ள நாராயணதாஸ் சோட்டா என்ற இடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 3 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
2 கடைகளிலும் கோடிக்கணக்கான மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடைகளில் பட்டாசு வாங்கிக் கொண்டு இருந்தனர்.
நேற்று இரவு கடையில் பட்டாசு வாங்கிய சிறுவன் ஒருவன் கடைக்கு முன்பாக பெரிய சரவெடியை கொளுத்தினார். சரவெடி வெடித்து சிதறி பட்டாசு கடைக்குள் விழுந்தது.
அப்போது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசில் தீ பற்றி வெடித்ததால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்கு தீ பரவியது. இதனை கண்ட கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் பக்கத்து கிடைக்கும் தீ பரவியது. 2 கடைகளிலும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பட்டாசுகள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஒருவன் விளையாட்டாக கொளுத்திய பட்டாசு சிதறி ஒரு கோடி மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயவாடா, காந்தி நகரில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக 18 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
கடைகளில் ஏராளமான பொதுமக்கள் வந்து பட்டாசுகளை வாங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள பட்டாசு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் 3 கடைகளுக்கு தீ பரவியது கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் பட்டாசு கடையில் வேலை செய்த பிரம்மா (வயது 37) காசி (32) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 4 வாகனங்களில் சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
- சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.
சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.
இதன்பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. எனினும், நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது.
நிலவின் இருண்ட பக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வந்தது.
இதில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தனர். எனினும், கொரோனா பெருந்தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
இதனை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சந்திரயான்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.
எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அதனால், அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் ஜூனை (2023-ம் ஆண்டு) தேர்வு செய்து அதனை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.
விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்றுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
- இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டாக எல்.வி.எம். 3 ராக்கெட் கருதப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2வது ஏவுதளத்தின் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் எல்.வி.எம். 3- எம் 2 ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45 வது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. அதை அங்கிருந்த மைதானத்தில் திரண்டிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

வணிக பயன்பாட்டுக்காக இஸ்ரோவின் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் 'ஒன்வெப்' நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. இந்தியாவின் மிகப்பெரிய பிரம்மாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட் கருதப்படுகிறது.
திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட் முதல் முறையாக சுமார் 6 டன் எடையுள்ள 36 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
உலகின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலை தொடர்பு சேவைக்காக இந்த செயற்கை கோள்களை அனுப்பி இருக்கிறது. இந்தியாவின் ஏர்டெல் தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஒன்வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.






