search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GSLV Mark III"

    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
    • இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டாக எல்.வி.எம். 3 ராக்கெட் கருதப்படுகிறது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2வது ஏவுதளத்தின் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் எல்.வி.எம். 3- எம் 2 ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45 வது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. அதை அங்கிருந்த மைதானத்தில் திரண்டிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


    வணிக பயன்பாட்டுக்காக இஸ்ரோவின் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் 'ஒன்வெப்' நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. இந்தியாவின் மிகப்பெரிய பிரம்மாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட் கருதப்படுகிறது.

    திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட் முதல் முறையாக சுமார் 6 டன் எடையுள்ள 36 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    உலகின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலை தொடர்பு சேவைக்காக இந்த செயற்கை கோள்களை அனுப்பி இருக்கிறது. இந்தியாவின் ஏர்டெல் தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஒன்வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்த எல்.வி.எம். 3 கருதப்படுகிறது.

    ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோ ஜெனிக் வகை எந்திரங்களில் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 கனரக ராக்கெட்டை இன்று நள்ளிரவு விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது.

    பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

    வணிக பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டமானது இஸ்ரோவின் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் 'ஒன்வெப்' நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

    உலகின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலை தொடர்பு சேவைக்காக இந்த செயற்கை கோள்களை அனுப்ப இருக்கிறது.

    இந்தியாவின் ஏர்டெல் தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஒன்வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×