என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • பெண்ணுடன் ஆபாசமாக இருப்பதுபோல் மார்பிங் வீடியோவை மனைவிக்கு அனுப்பியதால் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
    • ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், இப்ராகிம் பட்டணம் மண்டலம், சுராய பலேனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் இங்கிலாந்து பிரிட்ஜ் கோர்ஸ் நிறுவனத்தில் ஆலோசகராக வேலை செய்து வந்தார். ஆன்லைன் மூலம் இவர் லோன் ஆப்பில் கடன் வாங்கியுள்ளார்.

    வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி செலுத்தி உள்ளார். இருப்பினும் மேலும் ரூ 10 ஆயிரம் கட்ட வேண்டும் என லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் லோன் ஆப் நிறுவனத்தினர் போன் செய்தபோது போனை எடுக்காமல் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷ் வேறு ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போலவும் ஆபாசமான பெண்ணிடம் வீடியோ காலில் பேசுவது போலவும் போட்டோ, வீடியோவை மார்பிங் செய்து அவரது மனைவி ரத்தினகுமாரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர்.

    இதனை கண்ட ரத்தினகுமாரி, ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ராஜேஷ் லோன் ஆப் நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவர்கள் இதுபோன்று போட்டோ வீடியோவை மாப்பிங் செய்து அனுப்பியதாக மனைவியிடம் தெரிவித்தார்.

    லோன் ஆப் மூலம் வாங்கிய கடனை அந்த பெண்ணுக்கு தான் செலவு செய்தாயா? வேறு எதற்காக கடன் வாங்கினாய் என சண்டையிட்டார். மேலும் ரத்தினகுமாரி ராஜேஷிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ் நேற்று காலை நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மனைவிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கணவர் அனுப்பிய மெசேஜை பார்த்த ரத்தினகுமாரி அதிர்ச்சி அடைந்து அவருக்கு பலமுறை போன் செய்தார். ராஜேஷ் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதை கண்டு அவர் கதறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இப்ராகிம் பட்டிணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதி தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதியிடம் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் சுண்டுப் பள்ளி மண்டலம் குருவப் பள்ளியை சேர்ந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரது மனைவி அருணா. தம்பதிக்கு ஜோதி என்ற மகள் இருந்தார். இவர் நாராயண வனம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தன்னுடன் விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர். ஆனால் ஜோதி கல்லூரிக்கு செல்லாமல் அங்கேயே தங்கி இருந்தார்.

    கல்லூரிக்கு சென்ற மாணவிகள் கல்லூரி முடிந்து மாலை மீண்டும் அறைக்கு திரும்பினர். அப்போது அங்குள்ள அறையில் ஜோதி மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    இதுகுறித்து கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு மாணவிகள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் மாணவி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜோதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விடுதி நிர்வாகம் நாராயண வனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதி தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த அறையில் ஜோதி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர் உருக்கமான தகவல்களை எழுதியுள்ளார். கடிதத்தில் உள்ள விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதியிடம் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசி உள்ளார். அவர் ஜோதியை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஜோதி அழுது கொண்டே இருந்ததை பார்த்ததாக அவருடன் தங்கி உள்ள சக மாணவிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
    • புதிய மொபைல் செயலியை திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி அறிமுகப்படுத்தினார்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக ttd devasthanam mobile app எனும் மொபைல் செயலியை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது.

    இந்த மொபைல் செயலி மூலம் உலகம் முழுவதிலும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் தங்களது செல்போன் செயலி மூலமாகவே தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை உள்ளிட்ட சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். திருப்பதி தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது.

    புதிய மொபைல் செயலியை திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி அறிமுகப்படுத்தினார்.

    இந்த செயலியை பக்தர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதன் மூலம் அனைத்து முன்பதிவு தரிசனம், தங்குமிடம் முன்பதிவு, குலுக்கல் முறை தரிசனம், தற்போதைய திருமலை நிலவரம், பண்டிகை, விசேஷ நாட்கள் குறித்த விவரங்கள், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பு என அனைத்து வசதிகளும் செல்போன் செயலியில் உள்ளதால் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர்.

    இதனால் செயலி வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பக்தர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான ஐடி நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த செயலி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 80,094 பேர் தரிசனம் செய்தனர். 32,219 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • இன்று மதியம் புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
    • இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரம்மோற்சவ விழா இன்று காலை தொடங்கியது.

    இன்று ஒரேநாளில் ஏழுமலையான் தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ரதசப்தமி விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிய தொடங்கினர். இதனால் 4 மாட வீதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன சேவையும், 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன சேவையும் நடந்தது. மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை அங்குள்ள புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடுவார்கள்.

    மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலாவும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா நடக்கிறது.

    ரதசப்தமியொட்டி கோவிலில் இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதியில் நேற்று 59,695 பேர் தரிசனம் செய்தனர். 30,286 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • செயலி ஏழுமலையான் பக்தர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • செயலி மூலம் பக்தர்கள் அனைத்து தரிசனம் முன்பதிவு தங்குமிடம் முன்பதிவு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பதி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக TTDevas thanams எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த மொபைல் செயலி மூலம் உலகம் முழுவதிலும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் தங்களது மொபைல் செயலி மூலமாகவே தரிசனம், தங்குஅறைகள் ஆர்ஜித சேவை தரிசனம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து TTDevas thanams என்கிற புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது .

    இதனை நேற்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுபாபா ரெட்டி அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:-

    இந்த செயலி ஏழுமலையான் பக்தர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பக்தர்கள் அனைத்து தரிசனம் முன்பதிவு தங்குமிடம் முன்பதிவு செய்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் குலுக்கல் முறை தரிசனம், முன்பதிவு தற்போதைய திருமலை நிலவரம் பண்டிகை விசேஷ நாட்கள் குறித்த விவரங்கள், இ உண்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பு என இது ஒரு வழி காட்டிக் போல் செயல்படும். மொத்தத்தில் அனைத்து தகவல்களும் கூடிய ஒரு ஆன்மீக மொபைல் செயலி வெளிவருவது இதுதான் முதல் முறை.

    இவ்வாறு அவர் கூறினார்

    • விசாகப்பட்டினம் கடற்கரை சாலை ஓரம் இருந்த மரங்களும் வெட்டப்பட்டன.
    • விஜயவாடா மற்றும் கண்ணாபுரம் பகுதியிலும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டி உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விழா நடைபெறுவதாக இருந்தது.

    இதற்காக விசாகப்பட்டினத்தில் சீனமுசிடி வாடா, கவுடாவில் இருந்து சாரதா பீடம் செல்லும் சாலையில் நடுவில் இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டும் பணி நடந்தது.

    இதேபோல் விசாகப்பட்டினம் கடற்கரை சாலை ஓரம் இருந்த மரங்களும் வெட்டப்பட்டன.

    பச்சை பசேலென காட்சியளித்த சாலைகள் எல்லாம் தற்போது மரக்கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாக காட்சியளிக்கின்றன.

    இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டும் பணிக்கு அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்தனர்.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்திற்கு முதலமைச்சர் வருகை ரத்து செய்யப்பட்டது.

    ஏற்கனவே விஜயவாடா மற்றும் கண்ணாபுரம் பகுதியிலும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டி உள்ளனர். அதே பாணியில் விசாகப்பட்டினத்திலும் பணிகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையம் தங்க கோபுரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தகடுகள் பதிக்கப்பட்டது.
    • கோபுரத்தில் தங்க முலாம் புதுப்பிக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையம் தங்க கோபுரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தகடுகள் பதிக்கப்பட்டது.

    பொலிவிழந்து காணக்கூடிய இத்தங்க தகடுகளை புதிதாக மாற்ற தேவஸ்தான அறங்காவலர் குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் பணிகள் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில்:-

    திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜ சாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோபுரங்களில் தங்க தகடுகள் பதிப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவு பெறவில்லை.

    மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவிந்தராஜ சாமி கோவிலில் குறைந்த அளவு பக்தர்கள் வருவார்கள். எனவே 2 ஆண்டுகள் ஆனாலும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆனால் ஏழுமலையான் கோவிலில் அவ்வாறு இல்லை. ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தினந்தோறும் தரிசனம் செய்யக்கூடிய நிலையில் காலதாமதமாவது சரியாக இருக்காது.

    எனவே சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கோபுரத்தில் தங்க முலாம் புதுப்பிக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 5 முதல் 6 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டு புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுப்ர பாதம், ஏகாந்த சேவை டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
    • சமீப காலமாக ரூ.10-க்கு லட்டு விற்பனை செய்யப்பட்டது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்ட குங்குமார்ச்சனை சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. குங்குமார்ச்சனை சேவை டிக்கெட்டின் விலை ரூ.200-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே வழங்கப்பட்ட குங்குமார்ச்சனை சேவை டிக்கெட்டில் 2 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது ஒரு பக்தர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    அபிஷேக சேவை டிக்கெட்டின் விலை ரூ.400 ஆக இருந்தது. தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்தில் வியாழக்கிழமை தோறும் நடக்கும் திருப்பாவாடை சேவை டிக்கெட் ரூ.600-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் திருமலையைப் போல் சுபதம் டிக்கெட் முறையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. சுபதம் டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சுப்ர பாதம், ஏகாந்த சேவை டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அபிஷேக அனந்தர தரிசனத்துக்கான டிக்கெட் ரூ.20 ஆக இருந்தது. தற்போது அந்த டிக்கெட் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பத்மாவதி தாயார் கோவிலில் பல ஆண்டுகளாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் உயர்த்தப்படவில்லை. தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை ஒரே அடியாக உயர்த்தி இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சமீப காலமாக ரூ.10-க்கு லட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஒரு லட்டு பிரசாதத்தின் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு விலையை உயர்த்துவதற்கு முன்பாக பக்தர்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா தொற்று பரவலின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அதிக லட்டு பிரசாதங்களை தயாரித்து, அதை விற்பனை செய்ய முடியாமல் ரூ.50-க்கு விற்பனை செய்த லட்டுவை ரூ.25-க்கு மானிய விலையில் விற்பனை செய்தது. அந்த லட்டு பிரசாதத்தின் எடை 175 கிராம் முதல் 180 கிராம் வரை இருந்தது. ஒரு லட்டுவை தயாரிக்க ஆகும் செலவு தொகை ரூ.40 ஆக இருந்தது. ஆனால், லட்டுவின் விலையை தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    எனினும், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தருக்கு இலவசமாக ஒரு லட்டு பிரசாதம் வழங்கி வருவது நடந்து வருகிறது. இருப்பினும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உயா்த்தப்பட்ட லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க தேவஸ்தானம் பரிசீலனை செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வங்கி கிளை மேலாளர் ராம்பாபு நாயக் உதவி மேலாளர் ரவிக்குமார் தங்க மதிப்பீட்டாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பள்ளநாடு மாவட்டம் சட்டெனப்பள்ளி மண்டலம் ரெண்ட பள்ளியில் வங்கி இயங்கி வருகிறது இந்த வங்கியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் செய்வதற்காக தங்களது நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றனர்.

    இந்த நிலையில் விவசாயிகள் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக கடந்த 2022 ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அசலுடன் வட்டியை செலுத்தி நகைகளை கேட்டனர். அப்போது வங்கி அதிகாரிகள் விவசாயிகளிடம் நகைகளை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வங்கிக்குச் சென்று நகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டனர். வங்கி அதிகாரிகள் நீங்கள் அடகு வைத்த நகைகள் திடீரென காணாமல் போய்விட்டதாகவும் 2 நாட்களில் நகைகளை ஒப்படைப்பதாகவும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சமாதானம் செய்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் வங்கியில் இருந்த நகைகள் காணாமல் போன விவகாரம் வெளியில் தெரிய வந்தது. வங்கி மண்டல அலுவலக அதிகாரிகள் நேற்று முன்தினம் வங்கிக்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது விவசாயிகள் அடகு வைத்த ரூ.1.70 கோடி மதிப்பிலான நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    இதையடுத்து வங்கி கிளை மேலாளர் ராம்பாபு நாயக் உதவி மேலாளர் ரவிக்குமார் தங்க மதிப்பீட்டாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தங்க நகை மதிப்பீட்டாளர் சம்பத்குமார் 3 நாட்களில் நகைகளை வங்கியில் ஒப்படைக்க வேண்டும். மேலும் பழைய வங்கி மேலாளர் புதிய மேலாளர் உள்ளிட்டோர் விசாரணைக்காக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் வங்கி அதிகாரிகள் அனைவரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டபோது அனைவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் வங்கி உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தேடி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்த அனுராதா மீண்டும் கணவர் மற்றும் மகளுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அனுராதாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டம், பெண்டிலி மரி மண்டலம், எம்.கோட்ட பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பராயடு. இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    தம்பதிக்கு சிவசங்கர் என்ற மகனும், சீலம்ஷெட்டி சிவலட்சுமி (வயது 11) என்ற மகளும் இருந்தனர். சிவசங்கர் கடப்பாவில் உள்ள தனியார் பள்ளியிலும், சிவலட்சுமி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    அனுராதாவுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதால் சில ஆண்டுகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அனுராதா கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஒண்டி மிட்டா, புதிய மாதவரம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று அவர்களுடன் தங்கி இருந்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்த அனுராதா மீண்டும் கணவர் மற்றும் மகளுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை கணவர் சமாதானம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிவலட்சுமி கதவு உள் பக்கம் தாழிடப்பட்டு இருந்ததால் பலமுறை கதவு தட்டியம் திறக்கவில்லை.தனது தாயின் செல்போனை தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை. இதனால் வேகமாக கதவை தட்டினார்.

    பின்னர் அனுராதா கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.

    அப்போது சிவலட்சுமி ஆத்திரமடைந்து நீ எங்களுடன் இல்லாத போது மகிழ்ச்சியாக இருந்தோம். நீ வந்து அடிக்கடி தகராறு ஈடுபடுவதால் நிம்மதியை இழந்து விட்டதாக தாயிடம் தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அனுராதா வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து பெற்ற மகள் என்றும் பாராமல் சிவலட்சுமியின் கழுத்து, கை, கால் என சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த சிவலட்சுமி வலியால் அலறியபடி துடித்துடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    சிவலட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவலட்சுமி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுராதாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். வியாபாரி.
    • தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து வழங்க முடிவு செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். வியாபாரி. இவரது இளைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இவர் தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து வழங்க முடிவு செய்தார். அதன்படி 2000 ரூபாய் நோட்டை போன்று அதே அளவில் மணமகள்- மணமகன் ஆகியோர் பெயர்களை முன்புறத்தில் அச்சடித்தார். பின்புறத்தில் திருமண விவரங்கள் இருந்தன.

    திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கிய போது 2000 ரூபாய் நோட்டை வாங்கியது போன்ற உணர்வு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வெங்கடேஷ் ஏற்கனவே தனது மூத்த மகள் திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண அழைப்பிதழை வித்தியாசமாக வழங்கிய வெங்கடேஷை பலரும் பாராட்டினர்.

    • பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வாலிபர் உயிரிழந்தது குறித்து கந்துகோல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (வயது 28). இவர் கந்தகுரு பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது பஸ் நிலையம் அருகே பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்தார். இதனைக் கண்ட மணிகண்டா ரெட்டிக்கு பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசை வந்தது.

    பாம்பாட்டியிடம் சென்ற மணிகண்டா ரெட்டி பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பாம்பாட்டி மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் பாம்பாட்டியை வற்புறுத்தி பணம் தருவதாக கூறி தன்னுடைய கழுத்தில் பாம்பை சுற்றி விட வேண்டும் என கேட்டதால், அவரும் பணம் வருவதால் சம்மதம் தெரிவித்து பாம்பை மணிகண்டா ரெடியின் கழுத்தில் சுற்றிவிட்டார்.

    அப்போது மணிகண்டா ரெட்டி பாம்புடன் செல்பி எடுத்து கொஞ்சினார். பின்னர் தனது கழுத்தில் இருந்து பாம்பை எடுத்தபோது பாம்பு திடீரென மணிகண்டாவை கடித்து விட்டது. இதையடுத்து பாம்பை கழுத்தில் இருந்து வீசி எறிந்து விட்டு வலியால் அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மணிகண்டா ரெட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கந்துகோல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×