என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, பெல்ட் போடுவார்கள். குழந்தை பிறந்ததும் பெல்ட் போடுவது தவறானது.
    கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை… உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

    கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவடையும். குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலைக்கு வர நாளாகும்.

    இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற்றைப் பார்த்தால் இன்னொரு பாப்பா உள்ளே இருக்கும் போலிருக்கே…’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு.

    இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போட வேண்டும் என்று பல வீடுகளில் இன்னும்கூட சொல்கிறார்கள். பெல்ட் போட்டால் இந்நிலை உடனே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?

    குழந்தை பிறந்தவுடன் அதுவரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடுவதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற்படாது. தளர்ந்து போன வயிற்றுத் தசைகள் மேலும் தளர்ந்து போகாமல் இருக்க, சரியான அளவிலான பேண்டீஸ் (Panties) அணிந்தாலே போதும்.

    அதனால், வயிற்றை அதன் இயல்புப்படியே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.
    கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் தீர என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.

    நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை. 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.

    கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.



    தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.

    சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்சனைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
    பெண்களின் ஹார்மோன் பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது சதாவரி எனப்படும் தண்ணீர் விட்டான் செடி. இதனை உட்கொண்டால் பெண்களின் கருப்பை பலமாகும்.
    ஹார்மோன் பிரச்சினைகளினால் பெண்களுக்கு உடல்பருமன், மாதவிலக்கில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கிறது சதாவரி எனப்படும் தண்ணீர் விட்டான் செடி. இதனை உட்கொண்டால் பெண்களின் கருப்பை பலமாகும்.

    கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்கின்றது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். தண்ணீர் விட்டான் எனப்படும் மூலிகை செடியானது சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி, சதாவேரி, சதாமூலம், சதமுலை, நீர்வாளி, நாராயணி, சீக்குவை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இயற்கையான சூழ்நிலையில் காடுகளில் கொடிகளாக வளரும் இது அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வேர்கள் கிழங்குகள் போன்று சதைப்பற்றும் நீர்த்தன்மையும் கொண்டு இருக்கும்.

    உலர்ந்த நிலையில் தண்ணீர்விட்டான் வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. குளிர்ச்சித் தன்மையும் இனிப்புச் சுவையும்கொண்ட தண்ணீர்விட்டான் வேர்கள், உடலைப் பலமாக்கவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யவும் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றவும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. தண்ணீர் விட்டான் வேரின் சாறு நான்கு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்து உட்கொள்ள வேண்டும்.

    இதனை நாள் ஒன்றுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் ஐந்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான ரத்தப்போக்குக் கட்டுப்படும். தாய்மையடைவதில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அது கட்டுப்படுத்தப்படும். மெனோபாஸ் பருவத்தில் ஈஸ்டோரோஜன் குறைவாக சுரப்பதால் அதிக அளவில் மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படும். இதனை தவிர்க்க தண்ணீர் விட்டான் வேரை சாறு எடுத்து 5 நாட்களுக்கு மூன்று வேளை உட்கொண்டால் ஈஸ்ட்ரோஜன் அளவு சரியாக சுரக்கும்.
    நீண்ட நேர வேலை, உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் மன அழுத்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது.
    மன அழுத்தத்தில் இருந்து விடுபட சாப்பிடும் உணவுக்கும் பங்கு இருக்கிறது. நீண்ட நேர வேலை, உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் மன அழுத்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக கார்டிசால் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகமாகி பாதிப்பை அதிகப்படுத்தி விடும்.

    அதிலிருந்து விடுபட சாப்பிடும் உணவுக்கும் பங்கு இருக்கிறது. வைட்டமின் சி, கார்டிசால் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆதலால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தத்தை போக்கலாம்.

    * புளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி பழ வகைகள் வைட்டமின் சி அதிகம் நிரம்பப்பெற்றவை. அவற்றுக்கு மன நிலையை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் கார்டிசால் ஹார்மோனுக்கு எதிராக போராடி இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். அவற்றை சாலட்டுகளிலோ, இனிப்பு பலகாரங்களிலோ சேர்த்து சாப்பிடலாம்.



    * தக்காளி பழங்களில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் அதிகம் இருக்கின்றன. அவை மன அழுத்தம் மட்டுமின்றி புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படும் தன்மை கொண்டவை. அவற்றை சாண்ட்விச்களிலோ, சாலட்டுகளிலோ, புதினாவுடன் சேர்த்து தக்காளி ஜூஸாகவோ பருகலாம்.

    * தக்காளி, பெர்ரி பழங்களை விட சிவப்பு முள்ளங்கியில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளடங்கி இருக்கிறது. அதனை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    * முலாம் பழமும் அதிக அளவில் வைட்டமின் சி சத்து கொண்டது. ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் சி சத்தில் 90 சதவீதத்தை இதன் மூலமே பெற்றுவிடமுடியும். 
    அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் மிக மிகக் குறைவு. ஆனால் அந்தக் குறைந்த சதவீதத்தினரிலும் பெண்களே மதுப் பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

    மேற்கத்திய நாடுகளிலும், மது அருந்துபவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் அதிகம். ஆனால் அங்கு பெண்கள் மது அருந்தும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    அதிலும், 1991 முதல் 2000 ஆண்டு வரை பிறந்த பெண்கள் ஆண்களுக்கு நிகராக மது அருந்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் மேலை நாடுகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் மது அருந்துபவர்களாகக் கூட மாறிவிடுவார்களாம்.

    பொதுவாக மது அருந்துவதால் பெண்களே அதிக பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். அமெரிக்காவில் 2000-2015-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 45 முதல் 64 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் விகிதம் 57 சதவீதமாக இருந்தது.

    இது ஆண்களில் 21 சதவீதமாக மட்டுமே இருந்தது. 25 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பெண்களில் சிரோசிஸ் இறப்பு விகிதம் 21 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில், ஆண்களில் இது 10 சதவீதமாகக் குறைந்திருந்தது.

    மது அதிகம் அருந்தி மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அளவுக்கு அதிகமாக, ஆபத்தான அளவுக்கு மது அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக இந்தப் போக்கு பெண்களிடையே அதிகம் உள்ளது. ஆனால் அதிகளவில் பெண்கள் மது அருந்துவது மட்டுமே இங்கு பிரச்சினை அல்ல. மதுவானது ஆண்களின் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை ஒப்பிடும்போது பெண்கள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு வேறுவிதமாக உள்ளது.

    மது அருந்தும் பெண்களின் உடலில் குறைந்த அளவில் ஏடிஎச் என்ற நொதிப்பொருள் உற்பத்தி ஆகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் இத்திரவம், மதுவின் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. உடலிலுள்ள கொழுப்புச்சத்து, மதுவை தக்கவைத்துக் கொள்கையில் நீர் அதைக் கரைக்க முற்படுகிறது.



    பெண்கள் உடலில் கொழுப்பின் அளவு இயற்கையாகவே அதிகமாகவும் நீரின் அளவு குறைவாகவும் இருப்பதால் இயல்பாகவே அவர்களின் உடலில் மதுவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

    இந்த அம்சம்தான் ஆண்களைவிட பெண்களுக்கு மதுவால் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார், டான் ஷுகர்மேன். இவர் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் உடலியக்கத் துறை பேராசிரியராக உள்ளார்.

    அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இந்த நிகழ்வு டெலஸ்கோப்பிங் எனப்படுகிறது.

    ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு மதுப்பழக்கம் தாமதமாகவே ஏற்படுகிறது. அதேநேரம், ஆண்களை விட பெண்கள் விரைவாகவே மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அவர்களுக்கு கல்லீரல் தொடர்பான கோளாறுகள் சீக்கிரமே ஏற்பட்டுவிடுகின்றன. இதயங்களும் நரம்புகளும் விரைந்து பழுதடைகின்றன.

    ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் மது ஏற்படுத்தும் பல பாதிப்புகள் கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அறியப்படவில்லை.

    அதிலும், மது தொடர்பான மருத்துவ ரீதியான சோதனைகள் அனைத்தும் 1990கள் வரை ஆண்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. மது என்பது ஆண்கள் தொடர்பான பிரச்சினை என நம்பப்பட்டதுதான் அதற்குக் காரணம்.

    மருத்துவ சோதனைகள் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆரோக்கியத்துக்கான அமெரிக்க தேசிய நிறுவனம் உத்தரவிட்டது. இதன் பின்பே நிலைமை மாறத் தொடங்கியது.

    அதன் விளைவாகத்தான் தற்போதைய உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. 
    மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதை வைத்தும், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மாதவிடாய் என்பது மாதம்தோறும் வயதுக்கு வந்த பெண்கள் மத்தியில் உண்டாகும் சுழற்சி முறையிலான செயற்பாடு. இது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை குறிக்கும் செயல் என்றும் கூறலாம். மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதை வைத்தும், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும். இதில், பெண்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாத ஆறு மாதவிடாய் கோளாறுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தீவிர பிடிப்பு காரணமாக தாங்கமுடியாத வலி உண்டாகும். இதற்கு “endometriosis” எனப்படும் இடமகல் கருப்பை அகப்படலம் பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம். Endometriosis என்பது கருப்பையில் வளரும் செல்கள், கருப்பை வெளிப்புற சுவரில் வளர துவங்குவது ஆகும். இதனால் அதிக வலி உண்டாகும். மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான வலி உண்டாவது இதற்கான அறிகுறியாக இருக்கிறது.
     
    மாதவிடாய் காலத்தில் முதல் இரண்டு நாட்கள் அதிக இரத்த போக்கு உண்டாகும். கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் போதிலும் கூட அதிக இரத்த போக்கு உண்டாகலாம். ஆனால், நீங்கள் இதுகுறித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையால் அல்லது புற்றுநோய் செல் வளர்ச்சியின் ஆரம்பம் கூட அதிக இரத்தப்போக்கு ஏற்பட காரணியாக இருக்கலாம்.

    மாதவிடாய் நாட்கள் பத்து நாட்கள் வரை நீடிப்பதும், அல்லது அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவது கருப்பை நீர்க்கட்டி, கருப்பையில் பூச்சி / நச்சு அதிகரித்து வளர்தல் போன்ற மருத்துவ நிலையின் காரணமாக இருக்கலாம். இதனால் இரத்த சோகை ஏற்படும். எனவே, இது போன்ற நிலையில் நீங்கள் உடனே பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம்.
     
    சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் முன்னரே மனோநிலை சமநிலையின்மை உண்டாகும். அசாதாரணமான பசி, அதிகளவில் பதட்டம், மூட் ஸ்விங்ஸ், மன அழுத்தம், மனநிலை கட்டுப்பாடு இழத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன. இது ஓரிரு வாரங்களுக்கு கூட நீடிக்கலாம். இதனால் நீங்கள் அசௌகர்யத்திற்கு ஆளாவீர்கள்.
     
    சில மருத்துவ நிலைகள் மாதவிடாயை பாதிக்கும். ஆஸ்துமா இருந்தால் மாதவிடாய் ஏற்படும் ஒரு வாரத்திற்கு முன்னரே நீங்கள் மோசமாக உணர்வீர்கள். நீரிழிவும், மன அழுத்தம், கீழ் வாதம், மூட்டு வீக்கம் போன்ற பல மருத்துவ நிலைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். இதற்கு நீங்கள் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
     
    கருத்தரிக்காமல் மாதவிடாய் தள்ளிப்போக தைராயிடு, ஹார்மோன் சமநிலையின்மை, டயட்டில் கோளாறு, அதிகளவிலான உடற்பயிற்சி போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
     
    மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
    எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

    இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.

    35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.

    எலும்புகள் கல் போன்று உறுதி கொண்டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.



    மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச்சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.

    மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.

    நோயைத் தடுக்கும் முறைகள் :

    நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

    சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.

    மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

    ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும் பண்களுக்கு எலும்பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

    மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.

    ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா? என்ற சந்தேகம் திருமணமான பெண்களுக்கு வழக்கமாக எழும். இதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
    ஒரு தடவை உடலுறவுகொண்டாலும் கருத்தரிக்குமா? எந்தச் சமயங்களில் உறவுகொண்டால் கருத்தரிக்கும்? இந்த மாதிரி கேள்விகள் திருமணமான பெண்களுக்கு வழக்கமாக எழும்.

    ஆணுடைய விதையில் இருந்து விந்து வெளியாதல் அல்லது பெண்ணின் கருப்பையில் கருமுட்டை வெளியாதல் என்பதைப் பொறுத்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரிப்புக் காலம் என்பது கருத்தரித்த நேரம் தொடங்கி, பிரசவ நேரம் வரை. இது, கரு உருவான அந்த மாதத்தின் மாதவிடாய் நாளில் தொடங்கி 280 நாட்களைக் குறிக்கும்.

    ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்குப் பின் பெண்ணின் கருப்பையில் முட்டை உருவாகி, ஃபாலிக்கலில் தகுதி நிலையை அடைகிறது. மாதவிடாய் சுழற்சியின் நடுவில் ஃபாலிக்கல் உடைந்து, முட்டை விடுவிக்கப்படுகிறது. இதை, ‘ஓவலேஷன்’ என்கிறோம். மாதவிடாய் சுழற்சியின் 14-ம் நாளில் (மாதவிடாய் ரத்தப்போக்கு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 14-வது நாள்) கருப்பையின் உட்புற லைனிங் ஆன எண்டோமெட்ரியம் தடித்து, கருமுட்டையைச் சுமந்து, வளர்ப்பதற்குத் தயாராகி நிற்கிறது.

    இந்த நிலையில் முட்டையானது பெண்ணின் பெரிடோனியல் குழியில் இருந்து, ஃபெலோப்பியன் குழாய் மூலமாக, கர்ப்பப்பையை அடைகிறது. இந்தத் தருணத்தில் உடலுறவு நிகழ்ந்தால், முட்டையானது கருத்தரிப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இருக்கும். உச்சநிலையின்போது, ஆணுறுப்பில் இருந்து 3 மி.லி அளவு வரை விந்து பீய்ச்சப்படுகிறது.



    ஒவ்வொரு மி.லி விந்துவும் 15 மில்லியனுக்கு மேல் விந்தணுக்களைக் கொண்டிருக்கும். 1 முதல் 5 மணி நேரம் வரை இந்த விந்தணுக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் பயணிக்கின்றன. யோனியில் தொடங்கி ஃபெலோப்பியன் குழாய் வரையான இந்தப் பயணத்தின்போது, ஏராளமான விந்தணுக்கள் ஆற்றல் இழந்துபோகின்றன. இறுதியில் 3,000 விந்தணுக்கள் மட்டுமே முட்டை இருக்கும் ஃபெலோப்பியன் குழாயை அடைகின்றன. அதில், சில நூறு விந்தணுக்கள்தான் முட்டையை அடைகின்றன. அதில், ஒரு விந்தணு மட்டுமே முட்டையைத் துளைத்து கருத்தரிக்கக் காரணமாகிறது.

    உடலுறவின்போது கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் என்னென்ன என்பதற்காக இதைச் சொன்னேன்.

    ஒருமுறை உடலுறவுகொண்டாலும் கருத்தரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. முட்டை தயார் நிலையில் இருந்து, விந்து சரியான தருணத்தில் செலுத்தப்பட்டால், கருத்தரிக்க 100 சதவிகித வாய்ப்பு உள்ளது. கருத்தரிப்பதற்கு பலமுறை உடலுறவுகொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

    எந்தெந்த நாட்களில் உறவுகொண்டால் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம் என்பது அது மாதவிடாய் சுழற்சியின் தொடர்ச்சியைப் பொறுத்தது. ஒரு பெண் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சிக்கு ஆட்படுகிறார் என வைத்துக்கொள்வோம். மாதவிடாய் ஆன நாளை, முதல் நாள் எனக் கணக்கிட வேண்டும். 9-ம் நாள் முதல் 18-ம் நாள் வரை கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நாட்கள் ஆகும். இதைச் சரியாகக் கணக்கிடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பெண்களுக்கு 28 நாட்கள் என்ற சுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவது இல்லை. 18-ம் நாள் கருத்தரிப்பு ஏற்பட்டால், அதை குறைந்தபட்ச சுழற்சி எனவும் 10-ம் நாள் கருத்தரித்தால், அதை அதிகபட்ச சுழற்சி எனவும் சொல்வோம்.
    இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

    கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்சனை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்சனை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாதது… அவசியமானதும்கூட!

    சிலருக்கு பிரசவ தேதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்சனை அல்ல. சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது. இன்று அது அதிகரித்திருக்கிறது. இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    இக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கிறது.

    இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகிறது. பொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருப்போம். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்வோம்.’’

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    வருகிற 2030-ம் ஆண்டில் உலகெங்கும் அல்சைமருடன் வாழ்பவர்கள் எண்ணிக்கை ஏழரைக் கோடியாக உயரும் என்றும், 2050-ல் அது 13 கோடியே 15 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அல்சைமரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில் அல்சைமர் தொடர்பான பிரச்சினைகளால் இறப்பவர்களில் மூன்றில் இருவர் பெண்கள்.

    அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.

    60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.

    இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.

    இவர் சுவிட்சர்லாந்தில் அல்சைமர் சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு நிபுணராகவும் உள்ளார். பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் இதில் விரிவான ஆய்வு அவசியம் என்கிறார் இவர். அல்சைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது ஏற ஏற அல்சைமர் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

    பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்சைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.

    65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே அல்சைமர் வருவது குறைந்தது இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இதய நோய்கள், புகைப்பிடித்தல் பற்றி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களே இதற்குக் காரணம். மேற்கண்ட இரண்டும்தான், அல்சைமரை ஏற்படுத்துவதற்கான முக்கியக் காரணிகளாகும். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.



    பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

    பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார். அமெரிக்காவில் இது போன்று இருப்பவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    இதுபோன்ற தகவல்கள் பாலின அடிப்படையில் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவும் என்கிறார் மரியா தெரசா பெரட்டி. ஜூரிச் பல்கலைக்கழகத்தில் அல்சைமர் குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் இவர். இந்த யோசனை வேகமாக செயல்வடிவம் பெற்றுவருகிறது.

    பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.

    மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.

    ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.
    புகை பழக்கம் பெண்களிடமும் அதிவேகமாக பரவிவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வுகள் தருவது மிகவும் நல்லது.
    இன்றைய காலகட்டத்தில் பெண்கள் புகைபிடித்தல் என்பது நாகரிகம் என்றும், கவலையில் இருந்து ரிலாக்ஸ் ஆக இருப்பதாக எண்ணமும் பெண்கள் மத்தில் பரவி வருகிறது. இது கவலையளிக்கூடிய சம்பவம் ஆகும். தன்னையும் அழித்துக்கொண்டு பிறரையும் அழிப்பதுதான் இன்றைய வாழ்க்கையா?

    புகை பழக்கம் பெண்களிடமும் அதிவேகமாக பரவிவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வுகள் தருவது மிகவும் நல்லது.

    ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும். புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம்.

    கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடலில் ஊனமும் ஏற்படலாம்.

    சிகரெட் புகையால் ஏற்படும் பாதிப்புகள்:

    * வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது.

    * புகை பிடிப்பவர்களுக்கு மூளை மங்கி விடுதல்.

    * புகை பிடிப்பவர்களுக்கு புற்றுநோய், வாய் கேன்சர் அதிகம் ஏற்படுகிறது.



    * புகை பிடிப்பதனால் மூச்சி வங்கும், மயக்கம் வரும், இருமல் போன்ற நிலைகள் ஏற்படும்.

    * புகை பிடிப்பதனால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    * புகை பிடிப்பதனால் நுரையீரல் பாதிப்படைகிறது.

    * புகை பிடிப்பதனால் இதயச் செயலிழப்பு நிலையடைகிறது.

    * உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.

    * கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுகிறது.

    * புகை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும்.

    * முடிந்தவரை புகை பழக்கத்தை குறைத்து கொள்வது நல்லது.

    * புகை பிடிப்பவரின் அருகில் இருந்து தள்ளி இருப்பது நன்மை தரும்.

    * முக்கியமாக இளம் பெண் சமுதாயத்தை புகை பழக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியது

    * பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி தன்னை அழிப்பது இன்றி குழந்தைகளையும் அழிக்கின்றனர்.

    * கருவறை குழந்தைக்கு ஆபத்து புகைபிடிக்கும் பெண்கள் பிரசவத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    * அதுமட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் வளர்ச்சி குறைந்து விடுகிறார்கள்.

    * பெண்களுக்கு குறைபிரசவம் எடை குறைந்த ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களை பலியாக்கும் புகையிலை பழக்கத்தை கைவிடுவோம் என்று உலக புகையிலை ஒழிப்பு தினமான இன்று சபதம் ஏற்போம்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், குழந்தைகளுக்கு பாலூட்டும் போது குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உண்மை.
    குழந்தைகளுக்கு பாலூட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள் நிச்சயமாக புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுதல் வேண்டும் என ஒரு ஆய்வு தெரவிக்கின்றது.

    பிறந்த குழந்தைகளுக்கு பால் ஊட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள், புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் கொண்டிருக்கும் பட்சத்தில் அது அவர்களது குழந்தைகளை தான் பாதிக்கும் என ஆய்வின் முடிவு ஒன்று கூறுகிறது.

    அமெரிக்கன் அகெடமி ஆம் பீடியாட்ரிக்ஸ் நடத்திய இந்த ஆய்வில் பாலூட்டும் தாய்மார்கள் புகைப்பிடித்தால் அது அவர்களின் குழந்தைகளின் அறிவாற்றல் திறமைகளை பாதிக்கும் என தெரிவித்துள்ளது. பொதுவாக பெண்கள் தாய்மை அடைந்த பிறகு புகைப்பழக்கத்திற்கு அடிமையாகுவதில்லை., எனினும் புகைபிடிக்கும் பெண்கள் தாய்மை அடைவர் என்பது யதார்த்தம் தானே!..

    பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் அவர்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் என்பது அவர்களின் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், தாய்மை பருவத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் கொடுக்கும் பால் குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உண்மை.

    புகைப்பிடிக்கும் தாய்மார்கள் ஊட்டும் தாய்பாலின் பாதிப்பு குழந்தைகளிடம் ஆரம்பகட்டத்தில் காண்பிப்பதில்லை என்ற போதிலும் குழந்தைகளின் 6 முல் 7 வயதுகளில் அவர்களின் அறிவாற்றல் திறமைகளை குறிவைத்து தாக்குகிறது.

    கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் தால் ஊட்டச்சத்து என்பது பல அறிஞர்களின் கூற்று என்னும் போது அந்த தாய்பாலையே விஷமாக மாற்றும் திறமை அந்த தாய்மார்களிடமே உள்ளது. அதனை மாற்றாமல் இருக்க வேண்டும் எனில் பெண்கள் புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்களை கைவிடுதல் அவசியமாகிறது.
    ×