என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பிசிஓடி பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பெல்விக் எக்ஸாமினேஷன், ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.
    சமீப காலங்களில் அதிகமாக பெண்களை அச்சுறுத்தும் பிரச்சனையாக இருப்பது பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையாகும்..பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பிரச்சனை வருவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை என்று தான் கூறவேண்டும்.

    * நீர்க்கட்டி ஏற்படுவது என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு.

    பிசிஓடி உள்ள பெண்களுக்கு கருமுட்டை தாமதமாக உருவாகும் அல்லது உருவாகாது. இதனால் வழக்கமான மாதவிடாய் சுழற்சியானது பாதிப்படையும். ஒழுங்கற்ற மாதவிடாயால் குழந்தைப் பேறும் தாமதமாகும். இதனால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். மேலும், உடல் எடை அதிகரிப்பு, தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது

    * சினைப்பை நீர்க்கட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் இதுதான் என்று சரியாக கூற முடியாவிட்டாலும் பொதுவான காரணம் என்று பார்த்தால், மரபணு காரணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை என சீராக இல்லாமல் தாமதமாக வருவது அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருவது, உடல் எடை மிகவும் குறைவது அல்லது உடல் எடை மிகவும் அதிகரிப்பது இவை அனைத்தும் நீர்க்கட்டி உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.

    * நீர்க்கட்டி ஏற்படுவதால் முகத்தில் அல்லது தேவையற்ற இடங்களில் முடி வளர்வது, தலை முடி கொட்டுவது, குரல் மாறுபாடு, முகத்தில் அதிக அளவில் முகப்பரு ஏற்படுவது, மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

    * பிசிஓடி பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பெல்விக் எக்ஸாமினேஷன், ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். நீர்க்கட்டி பிரச்சினை இருப்பது உறுதி செய்யப்பட்டால் ரத்த அழுத்தம், குளுக்கோஸ் டாலரன்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் டிரைகிளிசரைடு அளவுகளை அவ்வப்பொழுது சோதித்து சரிபார்க்க பரிந்துரைக்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சரியான வழிமுறைகள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    30 வயதிற்கு மேல் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமே வயிற்றுப்பகுதியில் கொழுப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

    'ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்' தொப்பையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    தொப்பையை கொண்ட பெண்களுக்கும், பக்கவாதம் அல்லது இதயப் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    சரியான உடல் எடை, அதாவது 18 முதல் 25க்கு உட்பட்ட உடல் நிறை குறியீட்டு எண் கொண்ட 18 வயதுக்கு அதிகமான 2,600 பெண்களின் உடல் நலன் இந்த ஆராய்ச்சிக்காக கண்காணிக்கப்பட்டது.

    1990களின் மத்திய பகுதியில், 'வுமன் ஹெல்த் இனிஷியேடிவ்' என்ற பெயரில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் கொழுப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டது.

    இந்த ஆராய்ச்சியின் முடிவில், இடுப்பு மற்றும் தொடையில் கொழுப்பு கொண்ட பெண்களைவிட, தொப்பை கொண்ட பெண்கள் அதிகளவில் இதயம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

    உள்ளுறுப்பு கொழுப்பு எனப்படும் வயிற்று பகுதியை சுற்றி சேகரமாகும் கொழுப்பு, இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற வளர்சிதை மாற்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகும்.

    கால் பகுதிகளில் சேகரமாகியுள்ள கொழுப்பு ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணம் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்றும், அதே சமயத்தில் இது உடலில் வேறு எங்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    30 வயதிற்கு மேல் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமே வயிற்றுப்பகுதியில் கொழுப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    கால் பகுதியில் உள்ள கொழுப்பைவிட, வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை குறைப்பதற்கு பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பேராசிரியர் சீ கூறுகிறார்.

    "வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்பை இடமாற்றம் செய்வதற்கு உதவும் குறிப்பிட்ட உணவுமுறை இருக்கிறதா என்பதில் இன்னும் தெளிவில்லை. இதற்கான பதிலை நாங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கும் வரை, பெண்கள் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதுடன் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
    அந்தரங்கப்பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசாமல் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை பெண்களிடம் அதிகமாக உள்ளது.
    அந்தரங்கப்பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசாமல் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை பெண்களிடம் அதிகமாக உள்ளது.

    அழகு என்பது வெளிப்புற தோற்றம் சார்ந்தது மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியமும், சுகாதாரமும் கூட அழகின் அடிப்படை விஷயங்களே... அந்த வகையில் பெண்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய பிறப்புறுப்பு சுகாதாரத்தின் மீதுதான். இதை பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இப்பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசாமல் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை பெண்களிடம் அதிகமாக உள்ளது. இது பிற்காலத்தில் பெரிய பிரச்சனையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்தரங்க உறுப்பை சுகாதாரமாக பராமரிப்பதற்கு சில டிப்ஸ்...

    உள்ளாடைகள் உபயோகித்தல்

    நாள் முழுவதும் அணியும் உள்ளாடைகள், ஈரப்பதத்துடன் இல்லாமல் உலர்வானதாக இருக்க வேண்டும். இறுக்கமாக அணியாமல் சற்று தளர்வாக அணிய வேண்டும். உயர்தர பருத்தியால் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை தேர்வு செய்வது அவசியம். சிறுநீர் கழித்த பிறகு தண்ணீரால் கழுவி விட்டு பிறப்புறுப்பை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இதன் மூலம் நோய்க்கிருமியால் ஏற்படும பாதிப்பை தவிர்க்கலாம். பிறப்புறுப்பு பகுதியில் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடர், கிரீம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

    சானிட்டரி நாப்கினை மாற்றுதல்

    மாதவிடாய் ஏற்படும் நாட்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் என்பதால் சானிட்டரி நாப்கினை 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கினை மாற்றுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது. ஒரே நாப்கினை தொடர்ந்து பல மணி நேரம் உபயோகிப்பதால் அரிப்பு சரும பிரச்சனை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

    சோப்பு பயன்படுத்துவதை தவிர்த்தல்

    பிறப்புறுப்பு மிகவும் மிருதுவான பகுதி என்பதால் கடினத்தன்மை கொண்ட சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் பாதிப்பு ஏற்படுத்தும் பூஞ்சை தொற்று ஏற்பட கூடும். பின்பு பிறப்புறுப்பு பகுதியை இளம் சூடான நீரால் தூய்மைப்படுத்தலாம்.

    பிரச்சனைகளை உடனே சரிசெய்தல்

    பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்வது, கத்திரிப்பது போன்ற செயல்களால் காயம் ஏற்படலாம். பாதுகாப்பான முறையில் மட்டுமே அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். பெண்ணுறுப்பில் ஏதேனும் சிறு மாற்றமோ, பிரச்சனையோ ஏற்பட்டால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகாமல் சுயமாக மருந்து எடுத்து கொள்வது பிரச்சனைகளை அதிகமாக்கும். மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
    பிரசவம் சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ தொடங்க இருப்பதை நம்முடைய உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிபடுத்தும்.
    கவலையேபடாதீர்கள் உங்களுக்கு தெரியாமல் பிரசவமானது நடக்கவே முடியாது. பிரசவம் சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ தொடங்க இருப்பதை நம்முடைய உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிபடுத்தும். அந்த அறிகுறிகள் என்ன என்பதை கீழ்காணும் அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை பின் வருமாறு

    அடிவயிறு லேசாகும் : குழந்தையானது அடிவயிற்றில் மிகவும் இறங்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் குழந்தையானது பிறப்புறுப்பு பாதையில் பிரசவம் நடப்பதற்கு ஏதுவாக சரியாக பொருந்தியதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது சில மணி நேரத்திற்கு முன்போ நடக்கும்.

    ரத்தக்கசிவு ஏற்படும் : பிறப்புறுப்பு வழியே ரத்தகசிவு ஏற்படும், இந்த ரத்தமானது தெளிவான பிங்க் நிறத்தில் இருக்கும். கருப்பையின் வாயில் சேர்ந்திருந்த திரவகட்டியானது பிறப்புறுப்பின் வழியே வெளியே தள்ளுவதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது பிரசவம் தொடங்க உள்ள சில மணி நேரம் முன்போ ஏற்படும்.

    பிறப்புறுப்பு சவ்வு கீறப்படும் : பிறப்புறுப்பிலிருந்து நீர் வெளியேறுதல். இந்த நீரானது குழந்தையை சுற்றியுள்ள பனிக்குடம் உடைவதால் வெளியாகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு பல மணி நேரங்கள் முன்பு தொடங்கி பிரசவத்தின் போதும் நிகழும்.
    தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். மற்ற எந்த பொருளும் குழந்தைக்கு வழங்க முடியாத சக்தி இது.
    பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அதன் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகைகளில் நன்மைகள் பயக்கும்.

    குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் குறையும். ஒவ்வாமை பிரச்சனையும் எட்டிப்பார்க்காது

    உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. டைப்-1, டைப்-2, நீரிழிவு நோயும் குழந்தையை நெருங்காது.

    காதுகாளில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். இரைப்பை குடல் அழற்சி பாதிப்பும் ஏற்படாது.

    மூளையின் வளர்ச்சி சீராக நடைபெறுவதற்கான சூழல் உண்டாகும்.

    போலியோ, டெட்டனஸ் டிப்தீரியா மற்றும் ஹீமோபிலஸ் இன்ப்ளூபய்ஸா போன்ற தடுப்பூசியின் செயல் பாட்டுக்கு தாய்ப்பால் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது.

    தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.

    தாய்ப்பால் தவறாமல் கொடுப்பது அவசியமானது. அது அறிவாற்றல் வளர்ச்சி செயல்திறனுடன் தொடர்புடையது.

    நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியால் குழந்தை அவதிப்படும் வாய்ப்பு குறைவு. சுவாச பாதையில் நோய்த்தொற்று பரவுவதற்கான சூழலும் தவிர்க்கப்படும்.

    தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். மற்ற எந்த பொருளும் குழந்தைக்கு வழங்க முடியாத சக்தி இது.

    சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள தாய்ப்பால் குழந்தைக்கு அவசியமானதாக இருக்கிறது. வைரஸ் சார்ந்த நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
    யோகா ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.
    அக்குபிரசர் - உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

    மாதுளை - இது மாதவிடாயின் போது ஏற்படும் தாங்கமுடியாத தசைப்பிடிப்பை தடுக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைபாட்டையும் தடுக்கக்கூடியது

    யோகா - இது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.

    அன்னாசி பழம் - மாதவிடாய் சுழற்சி சீராக்கவும், தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

    இஞ்சி டீ - இது மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்கும். மாதவிடாய் தாமதத்தையும் தடுக்கும்.

    கற்றாழை - இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை இயல்பாக்கக்கூடியது. ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

    பெருஞ்சீரகம் - ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் கொண்ட இது மாதவிடாய் வலியை குறைக்கக்கூடியது.

    லவங்கப்பட்டை - இது பெண்கள் உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குப்படுத்தக்கூடியது. புரோஜெஸ்ட்டிரோன் பற்றாக்குறையையும் போக்கக்கூடியது.

    வெந்தயம் - இது உடலில் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடக்கூடியது.

    பேரீச்சை - இதில் நார்ச்சத்து துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க கனிமங்கள் காணப்படுகின்றன.

    விளக்கெண்ணெய் - இந்த எண்ணெயில் காணப்படும் சேர்மங்கள், இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவும்.

    பின்பற்ற வேண்டியவை

    * தினசரி உணவில் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் இடம் பெறுவதை உறுதி செய்யுங்கள்.

    * தினமும் உடற்பயிற்சி செயவதை வழக்கமாக்குங்கள்

    * காய்கறிகள், பழங்களை ஜூஸாகவும் தொடர்ந்து பருகுங்கள்

    * வைட்டமின் சி சத்து கொண்ட உணவுகளை அதிகமாகவே உட்கொள்ளுங்கள்

    * அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை தவிருங்கள்.
    ஹிஸ்ட்ராஸ்கோப்பி மூலம் பரிசோதனைகளும், நுண்துளை அறுவைச்சிகிச்சை மூலம் பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும். இதனால், தம்பதியருக்கு இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
    இந்திய மக்கள் தொகையில் 10-14 சதவீதம் தம்பதியருக்கு குழந்தையின்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு 6 தம்பதியரில் ஒருவருக்கு என அதிகமாகி கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் அதிநவீன மருத்துவ உபகரணங்களும், சிகிச்சைகளும் குழந்தையின்மை சிகிச்சை செய்வதில் பெரிதும் உதவுகிறது.

    அப்படிப்பட்ட அதிநவீன சிகிச்சை முறையே ‘ஹிஸ்ட்ராஸ்கோப்பி’ எனப்படும் ‘கர்ப்பப்பை உள்நோக்கும் நுண்துளை சிகிச்சை’ முறையாகும். இந்த சிகிச்சையில் தகுந்த மயக்கம் கொடுத்து, மிகவும் சிறிய அளவு டெலஸ்கோப், கர்ப்பப்பை வாயின் வழியாக உள்செலுத்தப்படுகிறது. நீர் உட்செலுத்தி கர்ப்பப்பையை விரிவுபடுத்தி உட்பக்கம் துல்லியமாக நோக்கப்படுகிறது.

    இந்த பரிசோதனையின் மூலம் கர்ப்பப்பை தொற்று, சதை வளர்ச்சி, கட்டிகள் (பைப்ராய்டு) ஆகியவற்றை கண்டறியலாம். இந்த ஹிஸ்ட்ராஸ்கோப்பி மூலம் பரிசோதனைகளும், நுண்துளை அறுவைச்சிகிச்சை மூலம் பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும். இதனால், தம்பதியருக்கு இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இந்த உயர்தர ஹிஸ்ட்ராஸ்கோப்பி சிகிச்சை முறை சாய் ஜீவன் கருத்தரித்தல் மையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய எச்.டி. கேமரா மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏராளமான தம்பதியருக்கு இந்த சிகிச்சை வெற்றியளித்து, குழந்தை பேறு கிடைத்துள்ளது.மேலும், ஆலோசனைகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஸ்ரீநிவாசா மருத்துவமனை, தேரேகால்புதூர், நாகர்கோவில், செல்: 8903000505, 8903000105-ல் தொடர்பு கொள்ளலாம்.

    - டாக்டர் ஜி.சுதாவாசன், சிறப்பு சிகிச்சை நிபுணர்
    கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதால் அதற்கான வாய்ப்புகள் குறைந்து, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வெளியே செல்வதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    பெண்களின் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமான கர்ப்ப காலத்தை, மகிழ்வுடன் கொண்டாட வேண்டாமா? என்ற கேள்வி மனதுக்குள் எழுந்ததன் விளைவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கென பயிற்சி மையத்தைத் தொடங்கினார் திருப்பூரைச் சேர்ந்த அனுபமா. இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்குப் பயிற்சி அளித்துள்ள அவருடன் உரையாடிய போது...

    கர்ப்பிணிப் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனத் தோன்றியது ஏன்?
    கர்ப்ப காலம் பெண்களது வாழ்வில் முக்கியமானது; என்றும் நினைவில் நிற்பது. இன்றையச் சூழலில் பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதில்லை. மாறாக, எப்படி நடக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? உடற்பயிற்சி செய்யலாமா? என எல்லாவற்றையும் சிந்தித்து, பயத்துடனே கழிக்கின்றனர். என்னுடைய முதல் பிரசவத்தின் அனுபவமும் அவ்வாறே இருந்தது.

    கருவுற்ற காலத்தில் மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறுவிதமாக அறிவுரை கூறுவார்கள். கர்ப்பிணிகளுக்கு எது சரி? எது தவறு? என்ற யோசனையில் பயமும், குழப்பமும்தான் அதிகமாகும்.

    பெரும்பாலான பெண்களின் பிரசவகால அனுபவமும் இதுதான். நமக்குள் உருவாகியுள்ள கருவினை நல்லபடியாக உலகிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற பொறுப்புணர்வே, பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மகிழ்ச்சியான மகப்பேறுவை பெண்கள் அனுபவிப்பதற்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பினேன்.

    அது தொடர்பான முறையான கல்வி கற்ற பின்னரே பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். 2013-ம் ஆண்டில் குழந்தை நல ஆலோசகர், தாய்ப்பால் ஆலோசகர், கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி ஆலோசகர், பிறந்த குழந்தை நல ஆலோசகர், குழந்தைகளுக்கான உணவு ஆலோசகர் போன்ற படிப்புகளைப் படித்து முடித்தேன். முறையான ஆலோசகராக கர்ப்பிணிகளுக்கான பயிற்சி மையத்தை 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன்.

    இதன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டனரா?
    இன்றைய பெண்களிடத்தில் கர்ப்ப கால விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. ஆனால், 8 ஆண்டுகளுக்கு முன் இதற்கு நேரெதிரான சூழலே நிலவியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எதற்குப் பயிற்சி? நாங்களெல்லாம் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகா குழந்தை பெற்றுக் கொண்டோம்? என்பதே முதல் கேள்வியாக இருந்தது.

    கர்ப்ப காலப் பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைத்தோம். என் கணவரும், மாமியாரும் எனது முயற்சிக்கு ஆதரவு அளித்து ஊக்கம் கொடுத்தனர். முதன் முதலில் 3 பெண்கள் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களுக்கு கிடைத்த இன்பமான அனுபவத்தை, மகப்பேறுவை எதிர்நோக்கிக் காத்திருந்த மற்ற பெண்களிடம் கூற, பயிற்சிக்கு இணைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இன்று, மகப்பேறு என்றால் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவேண்டும் என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.  

    ‘ஹனிமூன்’ பற்றி அனைவருக்கும் தெரியும். ‘பேபிமூன்’ பற்றி கூறுங்கள்? கர்ப்பம் தரித்தவுடன், கணவன்-மனைவி இருவராக சேர்ந்து, புதுப்புது இடங்களுக்கு சுற்றுலா செல்வது, கரு உருவான மகிழ்ச்சியை கொண்டாடுவதுதான் ‘பேபிமூன்’. புதுமண தம்பதிகளின் ‘ஹனிமூன்’ போல, உலக நாடுகளில் மிகவும் பிரபலமான கொண்டாட்டம் இது. ஆனால் நம்மை சுற்றிதான் பல தவறான புரிதல்கள், நம்பிக்கைகள், கட்டுக்கதைகள் இருக்கின்றன. கர்ப்பம் தரித்த பின்பு, பயணம் செய்யவே கூடாது என்று சொல்வார்கள்.

    இந்தப் பயத்திலே, என்னுடைய முதல் பிரசவத்தின்போது 5 மாதங்கள் நான் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. ஆனால், நான் 2-வது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்த மறுநாள், திருப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தேன். 250 கி.மீ சாலைவழி பயணம் மேற்கொண்டேன். கர்ப்பம் தரித்த முதல் நாளில் இருந்து தினமும் பயிற்சிக்கு வரும் பெண்களோடு சேர்ந்து நடனம் ஆடினேன். கருவிலுள்ள சிசுவிற்கு நல்லதொரு கருவியல் அனுபவத்தை அளிக்க வேண்டும். என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் அனைத்து பெண்களையும் கணவருடன் ‘பேபிமூன்’ செல்ல அறிவுறுத்துகிறேன்.

    தற்போது  கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதால் அதற்கான வாய்ப்புகள் குறைந்து, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வெளியே செல்வதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் ஆரோக்கிய குறைவு இருந்தால், அவர்களை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே பயணம் மேற்கொள்ள அறிவுறுத்துகிறேன்.

    உடற்பயிற்சி,  நடனமும் கூட உடல் ஆரோக்கியத்தில் எவ்வித சிக்கலும் இல்லாதவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறேன்.

    கர்ப்பிணிகளுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்?
    கர்ப்ப காலத்தை எப்படி மகிழ்வுடன் கழிப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதே எங்களது நோக்கம். அதற்காக, கர்ப்பத்தைப் பற்றிய பயத்தைப் போக்கும் வகையிலும், அது பற்றிய மூட நம்பிக்கைகளைப் போக்கும் வகையிலும் ஆலோசனைகள் சொல்வோம். பிரசவத்தின்போது மேற்கொள்ள வேண்டிய மூச்சுப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறோம். சுகப்பிரசவத்திற்கான இடுப்பு எலும்புகளை வலுவாக்கும் பயிற்சிகளும் சொல்லித் தருகிறோம். கர்ப்பிணிப் பெண்களுடன் அவர்களது தாய், மாமியார், கணவன் என அனைவருக்கும் ஒரு நாள் குடும்ப ஆலோசனை வகுப்பு எடுக்கிறோம்.

    பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் புகட்டும் பெண்களின் மனநிலை எவ்வாறாக  இருக்கும்? அவர்களுக்கு குடும்பத்தில் இருந்து எத்தகைய ஆதரவு தேவைப்படும்?
    பிரசவத்துக்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது? போன்றவற்றை அந்த ஒரு நாள் வகுப்பில் கற்றுத் தருகிறோம். கர்ப்ப காலம் தொடங்கி பிரசவத்துக்குபின் தாய்ப்பால் அளிக்கும் முறை வரை, முழு மகப்பேறுக்கான பயிற்சியினை அளிக்கிறோம். உரையாடல் முறையில்தான் பயிற்சிகள் நடைபெறும். உடற்பயிற்சிகளோடு யோகா, கோலாட்டம், நடனம் போன்ற வகுப்புகளையும் எடுக்கிறோம். பயிற்சி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு வீட்டுப்பாடமும் உண்டு.

    கொரோனா காலத்து வகுப்புகள் குறித்து?
    தொடக்கத்திலிருந்தே ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளை எடுத்து வருகிறேன். பொது முடக்கத்தால் ஆன்லைனில் பயிற்சி எடுத்து கொள்வோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது.

    உண்மையில், இந்த லாக்டவுன் கணவன்-மனைவிக்கு இடையே நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்காக முயற்சித்து வந்தவர்கள் பலரும், இந்த லாக்டவுன் காலத்தில் கர்ப்பம் தரித்துள்ளனர்.

    லாக்டவுனில் பலர் இணையவழியில் பயிற்சி எடுத்துகொண்டனர். தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன். தாய்ப்பால்தான முகாமும் நடத்தி வருகிறேன்.
    திருமணமாகாமல் தனியாக வசிப்பவர்களை விட சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் தம்பதிகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
    நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒருசில பழக்கங்களை கட்டாயம் தொடர்ந்து பின்பற்றியாக வேண்டும். ஆண்களை பொறுத்தவரையில் புகைப்பழக்கம்தான் ஆயுளை குறைக்கும் எமனாக விளங்குகிறது. புகைப்பழக்கம் நுரையீரலின் ஆயுளை குறைத்து நாள்பட்ட நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். தம்பதியரை பொறுத்தவரையில் ஆனந்தமான வாழ்க்கையே ஆரோக்கியம் காக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். திருமணமாகாமல் தனியாக வசிப்பவர்களை விட சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் தம்பதிகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    இது தொடர்பான ஆய்வுக்காக திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் இருவரின் ரத்த அழுத்தத்தை பரிசோதித்திருக்கிறார்கள். இதில் திருமணமாகாதவர்களை விட திருமணமான தம்பதியரின் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்தது. அதேவேளையில் நிம்மதியாக வாழும் தம்பதிகளின் ரத்த அழுத்தம் இரவில் தூங்கும்போது சீராக இருப்பதும், சண்டையும், சச்சரவுமாக இருக்கும் தம்பதிகளின் ரத்த அழுத்தம் இரவிலும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதுவே இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துவிடுகிறது.

    டீன் ஏஜ் பெண்களை பொறுத்தவரை காலையில் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் ‘ஸ்லிம்’ ஆகிவிடலாம் என்ற கருத்து நிலவுகிறது. அப்படி காலை உணவை தவிர்க்கும் பெண்கள், மற்றவர்களை விட உடல் பருமனாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. குழந்தைகளை பொறுத்தவரை காலை உணவை சாப்பிடும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதும், காலையில் ஒழுங்காக சாப்பிடாத குழந்தைகள் சோர்வாக இருப்பதும், காலையில் சாப்பிடும் குழந்தைகளை விட சுமார் 2 கிலோ அதிகமாக இருப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டி.வி, கணினி, லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவழிப்பதை தடுப்பது குண்டாவதை தடுக்கும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
    பெண்கள் வாழ்நாள் முழுவதும், ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகள், வீக்கம், சோர்வு போன்றவை தூக்கத்தையும் பாதிக்கின்றன.
    ஒவ்வொரு நபருக்கும் வயதுக்கு ஏற்ப தூங்கும் நேரம் மாறுபடுகிறது. இருப்பினும் பெரியவர்களுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இதற்கும் பாலினத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

    அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆப் மெடிசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆண்களை விட பெண்கள் 11 நிமிடம் கூடுதலாக தூங்குகிறார்கள். அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன? தூக்கமின்மை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

    அந்த ஆய்வின் படி ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம். மேலும் பெண்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். கர்ப்ப காலத்தில், கால் வீக்கம் சார்ந்த பிரச் சினையை அனுபவிக்கிறார்கள். இதுவும் சில நிமிடங்கள் கூடுதலாக தூங்குவதற்கு வழிவகுக்கிறது.

    பெண்கள் வாழ்நாள் முழுவதும், ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகள், வீக்கம், சோர்வு போன்றவை தூக்கத்தையும் பாதிக்கின்றன.

    கர்ப்ப காலத்தில், ஹார்மோன் மாற்றங்கள் கடுமையாக நிகழும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வீக்கம், வலிகள் ஆகியவை பொதுவானவை. இவையும் தூக்கத்தை பாதிக்கும். இதேபோல் மாதவிடாய் காலத்தில் பகலில் உடல் சூடு, இரவில் வியர்வை வழிதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதுவும் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பது அவரது வயதைப் பொறுத்தது. புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக தூங்கும். ஆனால் வயது அதிகரிக்கும்போது தூங்கும் கால அளவு படிப்படியாக குறையும். பொதுவாக குழந்தைகள் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குகிறார்கள்.
    கணவன், மனைவி இருவருமே தங்கள் பாலியல் தேவைகளை தங்களுக்குள் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும்.
    இனிமை நிறைந்தது, இல்லறம். அந்த இனிமையை அனுபவிக்காமல் முட்டி மோதிக்கொண்டிருக்கும் ஜோடிகள் மிக அதிகம். இல்லறத்தின் இனிமை அனுபவிக்க கணவன்- மனைவி இருவரும் பரஸ்பரம் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கையின் பாதிவெற்றி விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது. மீதி வெற்றி கணவனிடமிருந்து மனைவியும், மனைவியிடமிருந்து கணவனும் இன்பத்தை கேட்டுப் பெறுவதில் உள்ளது. இதில் முழுவெற்றியை பெறவேண்டுமானால் கணவன்- மனைவி இருவரும் எல்லாவற்றையும் மனம்விட்டுப் பேசவேண்டும். அதுவும் இருவரும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகள் அனைத்தும் தானே ஒதுங்கிப்போய்விடும்.

    நிறைய ஆண்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகளை மனைவியிடம் கூறுவதில்லை. ஆனால் கூறுவதில் தப்பில்லை. தனது உடல் -மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ஒருவர் மீது இன்னொருவருக்கு நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.

    தம்பதிகளுக்கு இடையே பிரச்சினைகள் எப்படியாவது முளைத்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் ஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் நல்ல தீர்வு கிடைத்துவிடும். ஒருவர் மவுனத்தை இன்னொருவர் புரிந்துகொண்டு தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரையும் சிந்திக்கத்தூண்டும். அதுவே தவறு யார் பக்கம் என்பதை புரிய வைத்துவிடும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.

    கர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும். ‘தவறு செய்தது அவர்தான் அவரே இறங்கிவரட்டும்’ என்று மனைவி வீராப்புடன் இருப்பதும், ‘நான் ஆண், அவள்தான் இறங்கி வர வேண்டும்’ என்று கணவன் தலைக்கனத்துடன் இருப்பதும் பிரச்சினையின் வீரியத்தை அதிகரித்துவிடும். இருவருக்குமே தன்மான உணர்வுஉண்டு என்பதால் விட்டுக்கொடுப்பதில் இருவரும் போட்டிபோட்டு பிரச்சினைகளை தீர்க்கமுன்வரவேண்டும்.

    துணைவரிடம் மரியாதை காட்டுங்கள். ஒருவர் மற்றவரை ஏளனமாக எண்ணக்கூடாது. பிறரின் முன்பும் தன் துணைவரைப் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது. தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் அவர்களுக்குள் பேசி தீர்வு காணவேண்டும். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி விட்டு பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது.

    மனம்விட்டு பேசுவதாக எண்ணிக் கொண்டு உடன்பிறந்தவர்கள், உறவுகளைப் பற்றிய ரகசியங்கள், அந்தரங்க பிரச்சினைகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்கா விட்டால் அது தம்பதியருக்குள் மட்டுமல்லாமல், உறவுகளுக்கு மத்தியிலும் கடைசி வரை பிரிவை வளர்த்துவிடும். மேலும் திருமணத்திற்கு முந்தைய காதல் பற்றியோ, ஆண் - பெண் நண்பர்கள் பற்றியோ பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளின்போது அதை தோண்டி எடுத்து பேசுவதை இருவருமே தவிர்க்கவேண்டும்.

    மனைவி, கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம் சமூகத்திலும் உள்ளது. அது தவறு. தாம்பத்யம் தம்பதியரின் அடிப்படை உரிமை. தாம்பத்யம் ஆரோக்கியமாக இருந்தால், ஜோடிகளுக்குள் ஏற்படும் பெரிய பிரச்சினைகள்கூட தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்யத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே தங்கள் பாலியல் தேவைகளை தங்களுக்குள் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும். பேசித்தான் பாருங்களேன்.
    பெண்கள் கண்ணைக் கவரும் அழகுடன் இருக்கும் கைப்பையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
    பெண்கள் எங்கு சென்றாலும், கைப்பையை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. பல வகைகளில் கைப்பைகள் தயாரிக்கப்படுகின்றன. கண்ணைக் கவரும் அழகுடன் இருக்கும் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    முதுகுத்தண்டு பாதிப்பு:

    பெண்கள் தற்போது, பெரிய அளவிலான கைப்பைகளைப் பயன்படுத்துகின்றனர். இதில், பல பொருட்களை வைத்துக்கொண்டு தோளில் சுமந்து செல்கின்றனர். இதனால், தோள்பட்டை பகுதிக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும், தோள்பட்டையில், கைப்பை மாட்டும் இடத்தில், அதிகம் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக, நரம்புகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சினை தோள், கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு என பரவலாம்.

    உருவத்தில் மாற்றம்:

    தோள்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தரும் வகையிலான ‘ஹேண்ட் பேக்’ மாட்டும் போது, அதற்கேற்ப தோளின் ஒரு பக்கம் தாழ்வாகவும், மற்றொரு பக்கம் உயர்த்தி இருக்கும் வகையிலும் இயல்பாக மாறும் நிலை ஏற்படும். இதனால், நாளடைவில் இரு தோள்களும் சமமாக இல்லாமல், ஒருபுறம் கீழாகவும், மறுபுறம் மேலாகவும் இருப்பது போல் தோற்றமளிக்கும். அதேபோல், முதுகில் அதிக எடையை சுமந்து செல்லும்போது, முதுகுத் தண்டுவடம் வளைந்து கூன் விழவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு சில மாற்று வழிகளை பின்பற்றலாம். அவை:

    சுமைகளை எளிதாக்குதல்:

    பையில், எந்த பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை முன்னரே தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்ப, அவசியமான பொருட்களை மட்டும் ஹேண்ட் பேக்குகளில் எடுத்துச் செல்லலாம். செல்லும் இடத்தில், தேவையான பொருட்கள் மட்டும் வாங்க வேண்டும். இதனால், சுமைகளை எளிதாக்க முடியும்.

    அடிக்கடி மாற்றுதல்:

    அதேபோல், ஹேண்ட் பேக்குகளில் அதிக எடை இருப்பதாக உணரும்போது, அதை நீண்ட நேரம் ஒரே தோளில் சுமந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, பையை ஒவ்வொரு தோளிலும் மாற்றலாம். இதன் மூலம் தோளில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், சிறிது நேரம் ஹேண்ட் பேக்கை கழற்றிக் கைகளில் பிடித்துக் கொள்வதால், தோள் பகுதிக்கு ஓய்வு கொடுக்க முடியும்.

    மைக்ரோ பைபருக்கு மாறுங்கள்:

    பெண்கள் பலரும் தோல் ரக ஹேண்ட் பேக்குகளைத்தான் அதிகம் விரும்புகின்றனர். இது ஆரோக்கியமானது என்றாலும், இந்த வகையான பைகளின் எடை, சற்று அதிகமாக இருக்கும். அதனுடன், நாம் கூடுதலாகப் பொருட்கள் வைக்கும்போது, எடை மேலும் அதிகரிக்கும். இதற்குப் பதிலாக, ‘மைக்ரோ பைபர்’ ரகப் பைகளைப் பயன்படுத்தும்போது, எடை குறைவாக இருக்கும்.
    ×