என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    தமிழக பெண்களின் அன்றாட உணவுப்பழக்கம், உடை பழக்கம், நவீன தொழிநுட்பத்தை கையாளும் விதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றம் வந்துவிட்டது. இதை எப்படி எதிர்கொள்வது? மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
    பெண்களை அச்சுறுத்தும் நோய்களில் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோயும் மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப் படும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. உலக சுகாதார அமைப்புகள் இந்தியாவை எச்சரித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து இருப்பதை உலக சுகாதார நிறுவனங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
    தமிழ்நாட்டில் இளம்பெண்களிடையே ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றம்தான் இதற்கு மிக முக்கியமான காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    தமிழக பெண்களின் அன்றாட உணவுப்பழக்கம், உடை பழக்கம், நவீன தொழிநுட்பத்தை கையாளும் விதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றம் வந்துவிட்டது. இதை எப்படி எதிர்கொள்வது? மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மாலைமலர் மருத்துவர் கமலிஸ்ரீபால் எளிய விளக்கம் அளித்துள்ளார். அது நவநாகரீக பெண்கள் மட்டுமின்றி அனைத்துத்தரப்பு பெண்களும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களாகும்.

    புற்று நோய் என்ற வார்த்தையை கேட்டாலே அஞ்சாத மக்கள் இல்லை. இது உலகெங்கிலும் பரவி உள்ள ஒரு அச்சம் தான். பரவலாக மக்களுக்கு தெரிந்த புற்றுநோய்கள் சில பிரிவுகள் தான். ஆனால் இதில் 100&க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.

    உடலில் செல்கள் வளர்கின்றது, பிரிகின்றது. வயது கூடும் பொழுது இறக்கின்றது, புதிய செல்கள் அங்கு செயல்படுகின்றது. இந்த செயல்முறை மாறுபடும் பொழுது செல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவு வளர்கின்றது இந்த வளர்ச்சி ஒரு கட்டியாக உருவாகலாம். ஆனால் சில வகை புற்று நோய்கள் கட்டிகளை உருவாக்குவதில்லை. அவை வேறு விதமானது. இங்கு நாம் குறிப்பிடுவது தீங்கு விளைவிக்கும், பரவும் வீரியம் கொண்ட புற்று நோய் கட்டிகளைப் பற்றியதே.
    இது உடலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். பொதுவில் பெண்களுக்கு மார்பக புற்று நோயும் ஆண்களுக்கு றிவீஷீsக்ஷீணீறீமீ புற்று நோயும் பரவலாக, அதிகமாக காணப்படுகின்றது. மார்பக புற்று நோயைப் பற்றி நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

    மார்பக புற்று நோய் : மார்பகங்களில் உள்ள செல்கலில் உருவாகும் நோய். பெண்களைத் தாக்கும் புற்றுநோய் அரிதாக ஆண்களையும் தாக்கும். ஒரு கணக்கெடுப்புப்படி அதாவது புள்ளி விவரப்படி ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் மார்பக புற்றுநோய் இருப்பதாக சோதனை மூலம் அறியப்படுவதாகவும், ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கொரு முறை ஒரு பெண் மார்பகபுற்று நோயால் இறப்பதாகவும் இந்தியாவைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

    * இந்தியாவில் இது பெண்களிடம் அதிகம் காணப்படுகின்றது.

    * மார்பக புற்று நோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பெண்கள் தங்களை மருத்துவ பரி சோதனைக்கு உட்படுத்திக் கொள்வதில் காட்டும் கால தாமதமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

    * விழிப்புணர்வு உள்ள நகரங்களில் கூட வருடந்தோறும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு கூடிக் கொண்டு தான் வருகின்றது.

    * தமிழகம் மார்பக புற்று நோய் பாதிப்பில் இந்தியாவில் 5&வது மாநிலமாக இருக்கின்றது. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டோரிடையே கூடுதல் பாதிப்பு ஏற்படுகின்றது.

    * வலது மார்பகத்தினை விட இடது மார்பக புற்று நோய் தாக்குதல் கூடுதலாக இருக்கின்றது.

    * இந்த மார்பக புற்று நோய் மற்ற இடங்களுக்கு பரவுவதாலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்டுகின்றது.

    * மார்பக கட்டியினை ஒருவர் உணரும் பொழுது அவருக்கு 2&3 வருடங்களுக்கு முன்பாகவே தாக்குதல் நிகழ்ந்திருக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
    * ஆரம்ப காலத்தில் கண்டு பிடித்து விட்டால் நல்ல சிகிச்சையின் மூலம் மிக கூடுதல் முன்னேற்றத்தினை பெற முடியும். ஆனால் இது அதிகமான மக்களுக்கு தெரிவதில்லை. காரணம் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு சுய பரிசோதனை செய்து கொள்ளும் செய்தியும், செய்து கொள்ளும் முறையும் தெரிவதில்லை.

    * 40 வயதினைக் கடந்தவர்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். என்றாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருபவர்கள் மிகக் குறைந்த சதவிகிதமே உள்ளனர்.

    மார்பக புற்று நோய் காட்டும் அறிகுறிகள் :

    * மார்பகத்தில் ஏதோ ஒரு அசவுகரிய உணர்வு
    * மார்பகத்திலோ, கை உள் மடிப்பிலோ ஒரு கட்டி போன்ற உருவாக்கம்
    * மார்பகம், தடித்தோ, வீங்கியோ இருப்பது.
    * உள்வாங்கிய மார்பக சருமம்.
    * மார்பக சரும எரிச்சல்
    * உள் வாங்கிய மார்பக காம்பு
    * மார்பக காம்பில் வலி
    * காம்பின் மூலன் கசிவு, ரத்தக்கசிவு
    * மார்பக தோற்றத்தில் மாற்றம்
    * மார்பக வலி
    * சிவந்து வீங்கிய நிணநீர் சுரப்பிகள்.

    வேறு சில மாற்றங்களும் இருக்கலாம்.

    புதுகட்டி போன்ற கடின உருவாக்கம் வலியில்லாமல் கூட இருக்கலாம். அதனைத் தொடும் பொழுது முறையற்ற முரடான ஓரங்கள் கொண்டதாக இருக்கலாம்.
    மார்பக கட்டி என்றாலே புற்றுநோய் என்ற பயத்திலேயே பலர் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதில்லை. அனைத்து கட்டிகளும் புற்றுநோய் பிரிவினைச் சார்ந்ததாக இருப்பதில்லை. சாதாரண கட்டிகளாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    அதேபோன்று ஒருவரது மார்பகம் போல் மற்றொருவருடையது இருக்காது. மாதவிடாய் காலங்களில் மார்பக தோற்றம், உணர்வு இவற்றில் மாற்றம் இருக்கலாம். பிள்ளைபேறு காலத்திலும், எடை கூடும் பொழுதும், எடை குறையும் பொழுதும், சில மருந்துகளின் காரணமாகவும் மார்பகத்தில் மாற்றங்கள் இருக்கக்கூடும். வயது கூடுவதும் மார்பக தோற்றத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    பெண்ணாக இருப்பதும், பெண்ணின் முதுமை கூடுவதும் இக்கடும் நோய் பாதிப்பிற்கு அடிப்படை காரணம். அடர்ந்த மார்பகம் உடையவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு சற்று கூடுதலாக உள்ளது. பரம்பரையும் பாதிப்பிற்கு 5, 10 சதவீதம் வரை காரணம் ஆகின்றது. அம்மா, சித்தி, சகோதரி, அத்தை போன்ற உறவுகளில் பாதிப்பு இருப்பின் கவனம் தேவை.

    பொதுவில் 12 வயதிற்கு முன்பே பருவம் எய்துபவர்களுக்கும், 55 வயதிற்கு பின்னரே மாதவிடாய் நிற்பவர்களுக்கும் பாதிப்பின் வாய்ப்பு சற்று கூடுதலாக இருக்கலாம். காரணம் இவர்களுக்கு நீண்ட கால மாதவிடாய், ஹார்மோன் ஆகியவை ஆகும். மிக இளம் வயதினருக்கு இப்பாதிப்பு அரிது தான். 45-50 வயதிற்கு மேல் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளது. எனவே இவர்கள் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
    குழந்தை இல்லா தம்பதிகளுக்கு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள கோபாலபிள்ளை மருத்துவ மனையில் செயல்பட்டுவரும் டாக்டர் சுரேந்திரன் செயற்கை கருத்தரிப்பு பிரிவில் செயற்கை முறை கரு ஊட்டல் (டெஸ்ட் டியூப் பேபி) மூலம் நவீன சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    குழந்தை இல்லா தம்பதிகளுக்கு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள கோபாலபிள்ளை மருத்துவ மனையில் செயல்பட்டுவரும் டாக்டர் சுரேந்திரன் செயற்கை கருத்தரிப்பு பிரிவில் செயற்கை முறை கரு ஊட்டல் (டெஸ்ட் டியூப் பேபி) மூலம் நவீன சிகிச்சை அளித்து வருகிறார்கள். 31 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இம்மருத்துவ மனையில் மகப்பேறு நிபுணர் டாக்டர் மினிகோபால் கூறியதாவது:-

    * குழந்தையின்மைக்கு 45 சதவீத காரணம் உயிரணு, கருமுட்டை உற்பத்தி தொடர்பான பிரச்சினை கள்தான் இவை எளிதில் சரி செய்யக் கூடியவை ஆகும்.

    ஆண் சம்பந்தப்பட்ட கருவூட்டும் திறனின்மையை (மலட்டுத் தன்மை) சரி செய்ய உதவும் இனவிருத்தி செய்யும் தொழில் நுட்பம் “இன்ட்ரோ சைட்டோ ப்ளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜக்சன்” (Intro cytoplasmic Sperm Injection) ஆகும். பிரத்தியேகமாக உருவாக்கப் பட்ட நுண்ணோ க்கியின் உதவியுடன் உயிரணுவை முதிர்ச்சியடைந்த முட்டை யினுள் செலுத்தி உடலுக்கு வெளியே கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்த ICSI சிகிச்சை முறை பயன் படுகிறது. சோதனைக்குழாயில் சினை யுற்ற முட்டை பின்னர் பெண்ணின் கர்ப்பப்பையினுள் வைக்கப்படுகிறது.

    உயர்திறன் கொண்ட உருப்பெருக்கி (ICSI Microscope) உதவி யுடன் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பிப்பெட்டில் இருந்து IVF சோதனைக்கூடத் தில் ஒரு உயிரணு ஒரு அண்டத்தினுள் செலுத்தப்படுகிறது. சிறந்த மருந்துகளால் முன்பாக சோதனைக் கூடத்தில் மேம் படுத்தப்பட்ட கருமுட்டை களில் கருத்தரித்த லுக்கான அறிகுறிகள் உள்ளதா என சோதிக்கப்படுகிறது. வெற்றிகரமாக கருவுற்ற இரண்டு அல்லது மூன்று முட்டைகள் (Zygotes) தேர்வு செய்யப்பட்டு, நோயாளியின் கர்ப்பப்பை க்குள் Ultra Sound வழிகாட்டு தலுடன் வைக்கப்படுகிறது. எஞ்சியுள்ள கருமுட்டைகள் (embryos) பிற்கால பயன் பாட்டிற்காக பாதுகாக்கப்படுகிறது (cryo Preserved).

    கரு இடமாற்ற சிகிச்சைக்குப் பிறகு 24 மணி நேரம் மட்டுமே நோயாளி மருத்துவமனையில் இருக்க வேண்டி வரும். இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமான கருமுட்டைகளை இடமாற்றம் செய்து வைப்பதால் கருவுறும் வாய்ப்பு, இயற்கையாக கருவுறும் வாய்ப்பைவிட, பல மடங்காகிறது.

    இவ்வாறு டாக்டர் மினி கோபால் கூறினார்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு, மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும். இந்த வகையில், அதிக அளவு உடலில் இரும்புச் சத்து குறைந்து அல்லது உயிர்ச்சத்து அளவு குறைந்தால், இரத்த சோகை அதிக அளவு ஏற்படக் கூடும்.

    கர்ப்ப காலத்தில் பொதுவாக ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் 50% இரத்தத்தின் உற்பத்தி அளவு குழந்தையின் வளர்ச்சிக்காக அதிகரிக்கின்றது. இதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகம் தேவைப்படுகின்றது. ஆனால் அந்த உற்பத்திக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலையில் ஹீமோகுளோபின் அளவு குறையத் தொடங்கி விடுகின்றது.

    இந்த நிலையைக் கவனிக்காமல் விட்டு விட்டால், நாளடைவில் பல விளைவுகளைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கும், குழந்தைக்கும் ஏற்படுத்தி விடக் கூடும். அதிலும் ஹீமோகுளோபின் 6g/dl அளவிற்கும் கீழ் குறைந்து விட்டால், அந்த பெண்ணுக்கு ‘ஆன்ஜினா’ ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகும். இதனால் அந்த பெண்ணுக்கு மார்பில் அதிக வலி ஏற்படும். இது மெதுவாக கைகள், தோள்கள் மற்றும் கழுத்து பகுதிக்குப் பரவி போதுமான இரத்த ஓட்டம் இருதயத்திற்குக் கிடைக்காமல் செய்து விடும்.

    உடலில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே:

    கர்ப்பத்திற்கு முன் ஏற்பட்ட கடைசி மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவு குறையும்.

    உணவுக் கட்டுப்பாட்டிலிருந்தால், போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் ஹீமோகுளோபின் அளவு குறையும்.

    கர்ப்பம் அடையும் முன் இரத்தம் தானம் செய்திருந்தால் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.

    உடலில் இரும்புச் சத்து சரியாகக் கிடைக்கப் பெறாமல் போனால் இது நேரலாம்.

    முதல் குழந்தை பிறந்த உடனேயே போதிய இடைவெளி இன்றி, அடுத்த குழந்தையைக் கருவுறும் சமயத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.
    பெரும்பாலான பெண்களுக்கு ஓவுலேஷன், பீரியட்ஸ் ஏற்பட்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே ஏற்படுகின்றது. அதனால் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற தாம்பத்தியம் அவர்கள் கருவுறும் வாய்ப்பை அதிகமாக்கி விடக்கூடும்.
    ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.

    எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரணமாக உள்ளது.

    இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.

    செக்ஸுக்குப் பின், ஆணின் விந்தணு குறைந்தது ஐந்து நாட்களுக்கு பெண்ணின் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பெண்களுக்கு ஓவுலேஷன் ஏற்பட்டாலும், விந்தணு கர்ப்பப்பையில் இருப்பதால் கருவுறும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.

    பெரும்பாலான பெண்களுக்கு ஓவுலேஷன், பீரியட்ஸ் ஏற்பட்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே ஏற்படுகின்றது. அதனால் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற செக்ஸ் அவர்கள் கருவுறும் வாய்ப்பை அதிகமாக்கி விடக்கூடும்.

    சில பெண்களுக்கு குறைந்த கால இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. அதாவது 28 முதல் 3௦ நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. இதன்னாலேயே, புணர்ச்சி நேரத்தில் அந்தப் பெண் கருவுற வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, மாதவிடாய் முடிவடையும் காலத்தில் புணர்ச்சி செய்தால், அதன்பின் ஓவுலேஷன் விரைவாக ஏற்படுமென்றால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகின்றது என்று அர்த்தம். இதற்காகவே, மாத்திரைகள், ஆணுறை மற்றும் வேறு சில வழிகளை தம்பதியினர் பின்பற்றுகின்றனர்.

    தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே கிடைக்கின்றன.
    தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே கிடைக்கின்றன.

    கருப்பை சுருக்கம் : தாய்ப்பால் கொடுப்பதால், தாயின் கருப்பை வேகமாகச் சுருங்கும். குழந்தை பேருக்கு முன்பிருந்தது போன்றபடி மாற அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

    உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் : தாய்ப்பால் கொடுத்தல், உடல் எடை பிரசவத்திற்கு பிறகு மளமளவென ஏறாமல் தடுக்கச்செய்யும்.

    இயற்கையான கருத்தடைமுறை : தாய்ப்பால் கொடுப்பது ஒரு கருத்தடை முறையாகவே பார்க்கப்படுகிறது.

    உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பு : அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர் ரத்தஅழுத்த நோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர்ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை.

    இதய நோய் பாதிப்பைத் தவிர்க்கும் : அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால், இதயம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிகின்றன.

    புற்று நோய்யில் இருந்து பாதுகாப்பு : தாய்ப்பால் கொடுப்பது கர்பப்பை புற்று நோயிலிருந்தும் மார்பகப் புற்றுநோயிலிருந்தும் காக்கிறது.
    தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
    ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    தாய்மைக்குத் தயாராகும் முன்… (Planning for Pregnancy)

    1. மாதவிலக்கின் போது,

    கருப்பு உளுந்து
    கருங்குருவை அரிசி
    நல்லெண்ணெய்
    முட்டை ஆகியவற்றை உணவாகச் சாப்பிடுங்கள்.

    மாதவிலக்கு காலத்தில் வயிறு, கருப்பைச் சதைகளுக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கும் பொருட்டு 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.

    மாதவிலக்கின் போது, குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும்.

    2. பெண்கள் வீட்டிலே அடைந்து கிடக்காமால் கொஞ்சம் வெளியே சென்று புத்துணர்வு பெற்றுக் கொள்ளுங்கள். சுத்தமான காற்று, ரம்மியமான சூழலில் இருக்கப் பழகலாம்.

    3. கட்டாயமாக புகை, மது போன்ற இவ்வித பழக்கங்களை தம்பதியர் இருவரும் தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.

    4. ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க உடற்பயிற்சி அவசியம். ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ள உடற்பயிற்சி செய்வது சிறந்த வழி. உடற்பயிற்சியால் உடல் இயக்கங்கள் சீராகும். கருத்தரிக்க உதவும்.

    5. மாதவிலக்கு தொடங்கிய நாள் 1-ம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12-ம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    உதாரணத்துக்கு, மே 1-ம் தேதி உங்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய முதல் நாள் எனில், நீங்கள் மே 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    6. சில ஆய்வுகளில் அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாகிறதாக சொல்லப்படுகிறது. டீ குடிப்பதையும் தவிர்க்கலாம். பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில் தயாரித்துக் குடிக்கலாம்.

    7. வீட்டை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம், டிடர்ஜென்ட், பூச்சிக் கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கலாம்.

    8. உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.

    9. ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

    10. ஆரோக்கியமான குழந்தை உருவாக உதவும் உணவுகள்

    பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.
    முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    புரோக்கோலியும் நல்ல உணவு.
    உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
    மீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்.
    மாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள்.

    வாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்.
    அதுவும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
    பூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது.
    ஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்.
    பூண்டு, இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்.
    கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் 48 நாட்களுக்குத் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் குடித்து வர கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஆரோக்கியமானக் குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.
    மருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
    வயது கூடக்கூட தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்து விடும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இந்த கருத்து உண்மையா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள். அமொரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ரிசர்ச் சொசைடியைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்ச் நடுவயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் செக்ஸ் ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை.

    இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும்விட இந்த வயதில்தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள். இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதையும்விட இந்த வயதில்தான் தாம்பத்திய சுகத்தை பூரணமாக உணர்கிறோம் என்கிறார்கள் இவர்கள்.

    பெண்களுக்கு 50 வயதை நெருங்கும்போது மாதவிடாய் முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப் போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும் மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால் இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ பயன்படுத்தலாம்.

    ஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும். இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30-லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக் குறையும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக்கல்லூரி ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.

    இறுதிமாதவிடாயின்(மெனோபாஸ்) போதும் அதன் பிறகும் தனி கவனிப்பு முக்கியம், எனவே உங்கள் உடலும் மனதும் இந்த இயற்கையான வளர்ச்சியினால் வரும் மாற்றங்களை தாங்கிக்கொள்ள இயலும்.
    ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின், மாதவிடாயின் செயல்முறை தரும் பெண்மை உணர்வு தொலைந்துவிடுகிறது. ஒவ்வொரு மாதமும் கர்ப்பப்பையில் நடக்கும், கருப்பத்திற்குத் தேவையான மாற்றங்கள், நீக்கப்பட்டுவிடும். சுமார் ஒரு வருடத்திற்கு மாதவிடாய் இல்லையெனில், அதை இறுதி மாதவிடாய்(மெனோபாஸ்) என்று மருத்துவர்கள் குறிக்கிறார்கள்.

    இறுதி மாதவிடாய்(மெனோபாஸ்)க்குப்பின், பெண்களின் உடலில் பல்வேறு உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களினால், உறக்கம், களைப்பு, காலந்தாழ்த்துதல், வெவ்வேறு உறுப்புகளில் வலி, உடல் பருமன், போன்றவை மிகுந்த வலிகொடுக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகள் தோற்றுவிக்கிறது. மேலும் சரியான கவனிப்பு இல்லையெனில், பெண்கள் உண்மையில் விரைவில் முதுமை அடையத் துவங்கிவிடுவர் மற்றும் உடல் தளர்வாகிவிடும். அதனால் இறுதிமாதவிடாய்(மெனோபாஸ்)ன் போதும் அதன் பிறகும் தனி கவனிப்பு முக்கியம், எனவே உங்கள் உடலும் மனதும் இந்த இயற்கையான வளர்ச்சியினால் வரும் மாற்றங்களை தாங்கிக்கொள்ள இயலும்.

    இறுதிமாதவிடாய்(மெனோபாஸ்)க்குப்பின் உங்கள் உணவு முறையில் தனி அக்கறை கொள்வது மிகவும் முக்கியம் ஏனெனில் உடலின் ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டினால் சில மாற்றங்கள் ஏற்படும் மேலும் உங்கள் உணவு முறையில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அதிகம் இருப்பது முக்கியம். இறுதிமாதவிடாய்(மெனோபாஸ்)க்குப்பின்  அடிக்கடி எலும்புப்புரை ஏற்படுவது ஒரு பெரும் பிரச்சனை. தினசரி உணவு முறையில் பால் சம்பந்தமான பொருட்களுடன், ப்ரோக்கோலி, பீன்ஸ் மற்றும் மீன் போன்ற பிறவற்றையும் சேர்க்கவேண்டும். அதுபோல இரும்புச்சத்திற்கு கலந்த பச்சைகள், உலர்பழங்கள் மற்றும் முட்டைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். பல வகையான புதிய பழங்கள் ஊட்டச்சத்திற்கு ஒரு நல்ல ஆதாரமாகவும் இருக்கும். மிக அதிக கொழுப்புகளை உண்ணாதீர்கள் ஏனெனில் அது இருதய நோய்க்கும் மேலும் பலவிதமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

    இறுதி மாதவிடாய்(மெனோபாஸ்)ன் போது நடக்கும் புலங்களின் மாற்றங்களினால் உங்கள் சருமத்திலும் முடியிலும் பல்வேறு பக்க விளைவுகளை உண்டாக்கும்.

    ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டினாலும் குறைந்த கொலாஜென் அளவினாலும், பெண்களுக்கு அடிக்கடி மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் தொங்கும் சருமம் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு சருமத்தை நன்றாகக் கவனிக்க வேண்டும், உங்கள் சருமத்தை நீர்சேர்ந்ததாகவும் நல்ல ஈரப்பதமாகவும் வைக்க, உங்கள் சருமத்திற்கேற்ப ஒரு நல்ல முக கிரீம் பயன்படுத்துங்கள்.

    மேலும், எப்பொழுது வெளியே சென்றாலும் ஒரு நல்ல சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சுடு தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிருங்கள் மற்றும் சரும விசையைப் பராமரிக்க ஏராளமான ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உட்கொள்ளவும். ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டினால் ஏற்படும் பக்க விளைவுகளை ஓரளவிற்குக் கையாள சோயா ஒரு நல்ல இயற்கை ஆதாரமாக டோபு வடிவில் நுகரலாம். உடல் தேவைக்கேற்ப ஒழுங்காக உறங்குவது நல்ல சருமத்திற்கு ஒரு பெரிய முக்கியமான காரணமாக அமைகிறது.

    உடலின் உள்ளே ஏற்படும் ஏற்றஇறக்கங்கள் உங்கள் உடலின் வெளிப்புற வடிவத்தைச் சிதைக்கும். இறுதிமாதவிடாய்(மெனோபாஸ்)ன்போது ஏற்படும் புலங்களின் மாற்றங்கள், தூக்கமின்மை, குறைந்த உடல் உழைப்பு மற்றும் பெண்களின் மன அழுத்தம், பின்னர் குறிப்பாக தொடையையும் இடுப்பையும் சுற்றி கொழுப்பு சேருதல், போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வழக்கமான உடற்பயிற்சிதான் உங்கள் மனநிலை, எடை மற்றும் தசைகள் எலும்புகள் ஆரோக்கியத்தை சீராக வைக்கத்துக்கொள்ளும் ஒரே வழி. அதனால் இறுதிமாதவிடாய்(மெனோபாஸ்)க்குப்பின் ஒரு வழக்கமான உடல் உழைப்பு அட்டவணைப் பராமரிப்பு மிகவும் முக்கியம்.

    எந்த வயதிலும் சக்கரை உங்களுக்கு நல்லதல்ல, மேலும் நீங்கள் இனிப்பு விரும்பியாக இருந்தால் நீங்கள் அதை உட்கொள்வதைக்  குறைப்பது எல்லாவற்றிலும் மிக முக்கியமானது, குறிப்பாக இறுதிமாதவிடாய்(மெனோபாஸ்)க்குப் பிறகு. சுத்திகரிக்கப்பட்ட சக்கரைக்குப் பதிலாக, நீங்கள் புதிய பழங்கள் அல்லது திராட்சை போன்ற உளர் பழங்கள் போன்ற ஏதாவது இயற்கை இனிப்பிற்கு மாறலாம்.

    இறுதிமாதவிடாய்(மெனோபாஸ்)க்குப்பின் உள்ள கட்டத்தில், சாப்பிடும் பழக்கத்தை நீங்கள் பின்தொடர உண்ணும் உணவு திட்டத்தை நீங்கள் உருவாக்குதல் மிக முக்கியமானது.

    நீங்கள் ஒவ்வொரு நாளும் என்ன சாப்பிடப்போகிறீர்கள் என்று ஒரு திட்டமிடுதலால், உடலுக்குத் தேவையான அளவு நீங்கள் சாப்பிடுவீர்கள், மேலும் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் வழக்கமாகக் கிடைக்கும். ஒரு சரியான உணவு முறை திட்டத்தைக் கடைபிடித்த இறுதிமாதவிடாய்(மெனோபாஸ்) ஏற்பட்ட பெண்கள் கடைபிடிக்காதவர்களைவிட மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது என்று ஆராய்ச்சி சொல்கிறது.
    பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பாலே கருதப்படுகிறது. அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    பசு, எருமை மாடுகளின் பாலை காட்டிலும் ஆட்டுப் பால் கூடுதல் மருத்துவ குணங்கள் கொண்டது. மாடுகளின் பாலை அருந்துவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். ஆனால் ஆட்டுப்பால் தாய்ப்பாலை ஒத்திருப்பதால் அது போன்ற ஒவ்வாமை ஏற்படுவதில்லை. ஆல்பா எஸ்-1 கேசின் எனும் புரதத்தின் அளவு மாட்டுப் பாலில் அதிகமாக இருப்பதாலேயே இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது.

    ஆனால், ஆட்டுப்பாலில் தாய்ப்பாலைப் போலவே ஆல்பா எஸ்-2 கேசின் வகைப் புரதம் உள்ளதால், ஆட்டுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. மாட்டுப் பால் அருந்துவதால் ஏற்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 93 விழுக்காடு குழந்தைகளில், ஆட்டுப்பால் அப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.

    பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரையை செரிப்பதற்கு லாக்டேஸ் எனும் நொதி மிகவும் இன்றியமையாதது. இந்த லாக்டேஸ் அளவு மிக குறைவாகவோ அல்லது முற்றிலுமாக இல்லாமலோ இருப்பவர்கள் பாலைச் செரிக்க முடியாமல் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமையால் அவதிப்படுகின்றனர். ஆட்டுப்பாலில் லாக்டோஸ் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமை ஏற்படுவதில்லை.

    ஆட்டுப்பாலில் கொழுப்பு மூலக்கூறுகள் மிதமாக இருப்பதால் எளிதில் ஜீரணமாக ஏதுவாகிறது. ஆட்டுப்பால் அருந்துவதால் இரும்புச் சத்து எளிதில் கிடைக்கிறது. தொடர்ந்து ஆட்டுப்பால் அருந்தி வந்தால் பசி, ஜீரணிக்கும் திறன் அதிகரிக்கிறது. நாள்பட்ட வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கு ஆட்டுப்பால் உதவி புரிகிறது. தொடர்ந்து ஆட்டுப்பால் அருந்தும் குழந்தைகள் நன்றாக தூங்குவதுடன், ஆரோக்கியமாக இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

    பச்சிளம் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மலச்சிக்கல் போன்ற உபாதைகளை ஆட்டுப்பால் கொடுப்பதால் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தும் உயிர் வினைப்பொருட்கள் தாய்ப்பாலில் உள்ளது போலவே, ஆட்டுப்பாலிலும் அதிகம் காணப்படுவதால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

    மாட்டுப்பால் அருந்துவதைவிட ஆட்டுப்பால் அருந்துவதால், குறைந்த அளவே சளி உருவாகிறது. எனவே, ஒவ்வாமை, சுவாச நோய்களால் அவதிப்படுவர்கள் ஆட்டுப்பால் அருந்துவது நல்லது. ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பு போன்றே இருக்கிறது. ஆட்டுப்பாலில் உள்ள ஒலிகோசேக்ரைடு எனும் சர்க்கரையின் அமைப்பும் தாய்ப்பாலில் உள்ளது போன்றே காணப்படுகிறது. மேலும் தாய்ப்பால், ஆட்டுப்பாலில் மாட்டுப்பாலைவிட அதிக அளவு செலினியம் காணப்படுகிறது. மேற்கூறிய காரணங்களால் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பாலே கருதப்படுகிறது.
    தற்போது உள்ள பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளது. இதற்கு அவர்கள் அணியும் உடையும் ஒரு காரணமாக உள்ளது.
    தற்போது உள்ள பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை மாதவிலக்கு வரும் முன்னும், வந்த பிறகும் வெளிப்படுத்தல் வரும் இது இயல்புதான். சிலருக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும்.

    வெள்ளைப்படுதல் அதிகமாகவோ அல்லது நிறம் மாறி இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். இந்த பிரச்சனை உள்ள பெண்கள் வீட்டு வைத்திய முறையில் இதை சரி செய்யலாம் மேலும் இதற்காக பெண்கள் சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

    பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை :

    பெண்கள் மிக இறுக்கமான உடைகள் அணிவது கட்டாயம் நிறுத்திக் கொள்ளவும்.

    அதிலும் குறிப்பாக லெக்கிங்ஸ் போன்ற உடையை அணிவதை தவிர்க்கவும்.

    தளர்வான காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை அணிய வேண்டும்.

    சக்கரை கலந்த உணவு பிள்ளைக்கு அதிகம் சாப்பிடக்கூடாது.

    வாசம் மிகுந்த சோப், சானிடரி நாப்கின் பயன்படுத்தக்கூடாது மூன்று மாதத்துக்கு ஒரு முறை சானிடரி நாப்கின் மாற்ற வேண்டும்.
    இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி அவற்றை எளிதில் தடுத்து ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும்.
    சமீபத்திய ஆய்வு ஒன்று ஒருவருடைய வேலை கூட இதய நோய் அல்லது பிற இதய நோய்பிரச்சனைகளை உருவாக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது. பொதுவாக புகைபிடித்தல், உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறைகளால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக இதய நோய் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் நோய் என்று கூறுவதுண்டு.

    ஆனால் பெண்களுக்கு அவர்களின் வேலை காரணமாக அதிகமாக இதய நோய் ஏற்படுத்துவதாக கூறுகிறது. ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், தொழில்துறையை பொறுத்தமட்டில் நிர்வாக பதவிகளில் வகிக்கும் நபர்கள் தான் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

    சில வேலைகள் மற்றவர்களை விட பெண்களின் இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாகத் தாக்குகின்றன. அவை எந்தெந்த வேலைகள் என்று ஆய்வு கூறுகிறது

    பிலடெல்பியாவில் உள்ள ட்ரெக்செல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, சில வகையான தொழில்களால் பெண்களுக்கு இதய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

    இதுதொடர்பான பட்டியல் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த பட்டியலில் முதல் இடத்தில் பெண் சமூக செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். பெண் சமூக செயல்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் பணியினால் 36% அவர்களுக்கு இதய நோய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    இவர்களுக்கு அடுத்தபடியாக சில்லறை வணிகம் செய்யும் பெண்களுக்கு 33% இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சுகாதார உதவியாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களுக்கு 16% இதய நோய் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறதாகவும் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, 14% இதய பாதிப்புடன் செவிலியர்கள் நான்காவது இடத்தில் இருக்கின்றனர்.

    இந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதயநோய் வரும்

    வியர்வை, தலைச்சுற்றல், கால் மற்றும் அடிவயிறு வீக்கம், உறங்குவதில் சிரமம், மூச்சுத்திணறல், படபடப்பு, தோலின் நிறம் மாறுதல், பசியின்மை, உடல் சோர்வு, சளி மற்றும் இருமல், உடல் எடை வேகமாக அதிகரித்தல், இதய வலி, சீரற்ற இதயத்துடிப்பு, அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள், உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன், மனஅழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல் ஆகியவை இதய நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.

    மேலும் பணிச்சுமை, கவலை, பதற்றம், மன உளைச்சல், அதீத கோபம், வீட்டுச்சூழல், வெளிப்புறச்சூழல் உள்ளிட்ட காரணங்கள் இதயத்துக்கு எதிரான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், புகைபிடிக்கும் பெண்களுக்கும், கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது.

    இவர்களுக்கு மாரடைப்பு, மூளை வாதம் ஆகிய இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கு ஏற்படுவதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த பாதிப்பு 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    விருப்பமில்லா வேலையைச் செய்யும் போது ஒருவித வெறுப்பு மனநிலை ஏற்பட்டு வேலையில் மன அழுத்தம் ஏற்படும். மேலும் வேலையில் மன அழுத்தம், அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது போன்ற காரணங்கள் இதய நோய் பிரச்சனைகளுக்கு வித்திடுகின்றன.

    இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி அவற்றை எளிதில் தடுத்து ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும்.

    நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் இதயப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதை அறிவது மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி செய்வது, போதுமான நேரம் தூக்கம் என்பதும் முக்கியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

    மேலும் மன அழுத்தத்தைக் கையாளுவதை தெரிந்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை தினமும் செய்வதால் பதற்றம், கவலை மற்றும் மன அழுத்தம் இல்லாமல் வாழலாம்.
    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    சென்னை:

    மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தென்மாநிலங்களை பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மார்பக புற்றுநோய் அதிகமாக இருக்கிறது.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவில் மார்பக புற்றுநோயாளிகள் இருக்கிறார்கள். அங்கு 24 ஆயிரத்து 181 பேருக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது. இதில் 2-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 16 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    3-வது இடத்தில் உள்ள மேற்கு வங்காளத்தில் 12 ஆயிரத்து 234 பேரும், 4-வது இடத்தில் உள்ள பீகாரில் 11 ஆயிரத்து 378 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வரிசையில் 5-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இங்கு 10 ஆயிரத்து 269 பேர் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். நோய் தாக்குதல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இங்கு 2016-ம் ஆண்டு 9 ஆயிரத்து 486 பேரை நோய் தாக்கி இருந்தது. 2017-ல் அது 9 ஆயிரத்து 870 ஆக உயர்ந்தது. இப்போது அதைவிட அதிகரித்து இருக்கிறது.

    தென் மாநிலங்களில் கர்நாடகாவை பொறுத்தவரை தமிழ்நாட்டை விட 10 சதவீதம் நோய் தாக்குதல் குறைவாக இருக்கிறது. ஆந்திரா, கேரளாவில் தமிழ்நாட்டை விட 40 சதவீதம் குறைவாக உள்ளது.

    சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிபுணர் டாக்டர் சாமிநாதன் இதுபற்றி கூறும்போது, சென்னை நகரிலும் மார்பக புற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஒரு லட்சம் பெண்களை கணக்கில் எடுத்து கொண்டால் 2 சதவீதம் வரை அதிகரிப்பு விகிதம் இருக்கிறது என்று கூறினார்.

    மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என தெளிவாக குறிப்பிட முடியாது. ஆனால் உணவு பழக்க வழக்கம் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    பாக்கெட் உணவுகள்

    பொதுவாக பாக்கெட் உணவுகள், நொறுக்கு தீனி, பாஸ்ட்புட் உணவுகள் போன்றவற்றை இப்போது சாப்பிடுவது அதிகரித்து இருப்பதால் அது உடலில் உள்ள ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    அது மார்பக புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பதாக கருதுகிறோம். மேலும், உடல் பருமனும் இதற்கு காரணமாக அமைகிறது. நம்முடைய பழக்க வழக்கங்களால் உடலில் உள்ள மரபணுக்களில் பாதிப்பு ஏற்பட்டு அதுவும் புற்றுநோய்க்கு காரணமாக உள்ளது.

    மேலும் பரம்பரை பரம்பரையாக புற்றுநோய் அணுக்கள் வாரிசுகளுக்கு பரவி அதன் அடிப்படையிலும் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    மேற்கத்திய நாடுகளில் 50-லிருந்து 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கே மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை 40-லிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த தாக்குதல் அதிகமாக இருக்கிறது.

    இந்தியாவில் பல பெண்கள் 20-லிருந்து 30 வயதுக்குள்ளேயே கூட மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இது கவலை அளிக்கக்கூடிய வி‌ஷயம் என்று மற்றொரு நிபுணர் கூறினார்.

    இந்தியாவில் முன்கூட்டியே நோய்களை கண்ட றிந்து தடுப்பது குறைவாக இருக்கிறது. எனவே அடிக்கடி இதன் பரிசோதனைகளை செய்து முன்கூட்டியே கண்டுபிடித்தால் பாதிப்புகளை குறைக்கலாம்.

    மார்பகத்தில் சிறு மாற்றங்கள் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் கூறினார்கள்.
    ×