என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    நீங்கள் வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்ய நினைத்தால், அதற்கு சில விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
    நீங்கள் வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்ய நினைத்தால், அதற்கு சில விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவை பின் வருமாறு;

    * கர்ப்ப பரிசோதனை அதிக அளவு உறுதி செய்து வெற்றி பெற, காலை எழுந்தவுடன் உங்களுக்கு வரும் முதல் சிறுநீரில் பரிசோதனை செய்ய வேண்டும். இது உங்களுக்குத் துல்லியமான தகவல்களைத் தரும்.

    * சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு உடனடி தீர்வு!

    * ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் கர்ப்ப பரிசோதனை கருவி பழுதடைந்து இருந்தாலோ அல்லது சேதம் அடைந்திருந்தாலோ, சரியான தகவலைத் தராது.

    * ஒரு முறைக்கு இரண்டு அல்லது மூன்று முறை, அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட நீங்கள் இந்த பரிசோதனையைச் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளலாம். சில சமயங்களில், இதில் மாற்றமும் ஏற்படலாம். அதனால் அவசரப்படாமல் நிதானமாக முடிவுக்கு வர முடியும்.

    * மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுச் சரியான ஒரு வீட்டுப் பரிசோதனை முறையை நீங்கள் தேர்வு செய்யலாம். அப்படிச் செய்யும் போது உங்களுக்கு பெரும்பாலும் சரியான தகவலே கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    * மேலும் நீங்கள் பயன்படுத்தும் கருவியை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி அறிய அதில் இருக்கும் குறிப்பைப் படித்துத் தெரிந்து கொண்டு பின் பயன் படுத்துவது நல்லது

    * உங்களது முதல் பரிசோதனை நெகடிவாக வந்து விட்டால், பின் ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்.

    * சோதனைப் பட்டை (டெஸ்ட் ஸ்ட்ரிப்) என்பது பிரபலமான வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள உதவும் கருவியாகும். இது எளிதாக அருகில் இருக்கும் மருந்து கடைகளில் கிடைக்கும்.
    கர்ப்ப பரிசோதனை ஒரு பெண் கருதரித்திரிகின்றாளா என்பதை உடனடியாக உறுதி செய்ய உதவும். இதற்குப் பழமையான முறைகள் முதல் நவீன முறைகள் வரை பல உள்ளன.
    திருமணமான பல பெண்கள் தாங்கள் கருவுற்றிருக்கிறோமா என்று சரியாகத் தெரியாமல் அவ்வப்போது குழப்பத்திலேயே இருப்பார்கள். ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் வரும் வரை, அவர்களுக்கு இந்த குழப்பம் இருக்கும். இதனை உறுதிப்படுத்த பல வகையில் வீட்டில் கர்ப்ப பரிசோதனைகள் (Karpa parisothanai) செய்து பார்க்கலாம்.

    கர்ப்ப பரிசோதனை ஒரு பெண் கருதரித்திரிகின்றாளா என்பதை உடனடியாக உறுதி செய்ய உதவும். இதற்குப் பழமையான முறைகள் முதல் நவீன முறைகள் வரை பல உள்ளன. மேலும் பெரும்பாலான பரிசோதனைகள் எளிதானதாகவும் இருக்கும். வீட்டிலிருந்த படியே பரிசோதனை செய்து கொள்ளும் போது, தேவையற்ற செலவுகள் மற்றும் நேர விரயங்களைத் தவிர்க்கலாம். மேலும், உங்களது கர்ப்பம் உறுதியானால் மட்டுமே நீங்கள் மருத்துவரை அணுகலாம், மேலும் உங்கள் கர்ப்பத்தைப் பற்றி பிறரிடமும் பகிரலாம். அதனால், எப்போதும் நீங்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

    வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனை முற்றிலும் நம்பகத்தன்மை உடையதா? என்பது எதார்த்தமாக அனைவருக்கும் ஏற்படும் ஒரு கேள்வியாகும். பல பெண்களுக்கு இந்த சந்தேகம் ஏற்படுகின்றது. இதை நிரூபிக்க எந்த சான்றும் இல்லை என்றாலும், நமது தாய் மற்றும் பாட்டி என்று முன்னோர்கள் தாங்கள் கர்ப்பம் அடைந்த காலத்தில் வீட்டில் சில பரிசோதனைகளைச் செய்தும், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அறிகுறிகளை வைத்தும், தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டனர் என்பது உண்மை.

    எனினும், இன்றைய காலகட்டத்தில் அத்தகைய பழமையான பரிசோதனை முறைகள் பல நடைமுறையில் இல்லை என்றாலும், சில எளிதான வீட்டிலேயே செய்யக் கூடிய நவீன மருத்துவ பரிசோதனை முறைகள் வந்து விட்டன. மேலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள ஏற்படும் செலவு மிகவும் சிறியதே ஆகும். அதனால் இன்றுபெரும்பாலான பெண்கள் இந்தப் பரிசோதனை முறையைத் தேர்வு செய்து வீட்டிலிருந்தே பரிசோதனைகளைச் செய்து உறுதிப்படுத்திய பின் மருத்துவரை அணுகுகின்றனர்.

    இந்த வீட்டுப் பரிசோதனை உறுதியான பிறகு, அடுத்த கட்டமாக தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள, பரிசோதனை கூடத்திற்குச் செல்கின்றனர். அங்கே இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, கருதரித்திருப்பதை உறுதி செய்து கொள்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு நல்ல உறுதியான மற்றும் தெளிவான செய்தியைத் தருவதோடு, அவர்களின் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகி விடுகின்றது.
    பின்வரும் முறைகள் எளிதாக மாதவிடாயை கண்காணித்து, அதன்படி கருவுறும் வாய்ப்பைத் தள்ளிப் போட உதவும்.
    பின்வரும் முறைகள் எளிதாக மாதவிடாயை கண்காணித்து, அதன்படி கருவுறும் வாய்ப்பைத் தள்ளிப் போட உதவும்.

    8 முதல் 12 மாதங்களுக்கு, எந்த நாளில் மாதவிடாய் ஏற்படுகிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த மாதவிடாய் மொத்தம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகின்றது, அதாவது அதன் சுழற்சி நாட்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் நாளே உங்கள் மாதவிடாயின் முதல் நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதன் பின் குறுகிய மற்றும் நீண்ட நாட்கள் அந்த மாதத்தில் எத்தனை ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். மாதவிடாய்க்குப் பின் வளமான சாளரத்தை குறித்துக் கொண்டு அதில் இருந்து 18 நாட்களை குறுகிய சுழற்சி காலத்தில் இருந்து கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு 27 நாட்கள் குறுகிய சுழற்சி காலம் என்றால், 27ல் இருந்து 18 நாட்களை கழிக்க வேண்டும். அதன் பின் கிடைப்பது 9 நாட்கள்.

    அதன் பின் சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வளமான சாளரத்தை உங்கள் நீண்ட கால மாத விடாய் சுழற்சி காலத்தில் இருந்து 11 நாட்களை கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 3௦ நாட்களில் இருந்து 11 கழித்தால், 19 நாட்கள் கிடைக்கும். இந்த குறுகிய மற்றும் நீண்ட கால சுழற்சிக்கு இடையில் உங்களுக்கு கிடைக்கும் நேரம் தான் வளமான சாளரம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தின் படி நீங்கள் கருவுறும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிடலாம்.

    உங்கள் வேலையை எளிதாக்க இப்போது பல மொபைல் அப்பிளிகேஷன்கள் உள்ளன, இவற்றை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து இலவசமாகவும் டவுன்லோடு செய்யலாம். இதில் நீங்கள் எளிதாக உங்கள் மாதவிடாய் காலங்களை குறித்து வைத்து கணக்கிட முடியும். இதில் பல மாத தகவல்களை சேகரித்து வைக்கலாம்.

    உங்கள் மாதவிடாயை நீங்கள் இத்தகைய பயன்பாடு கருவிகளை கொண்டும், உங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொண்டு கணக்கிட்டாலும். மேலும் வேறு பல விஷயங்கள் உங்கள் கணிப்பை/கணக்கை தவறாக்கக்கூடும். குறிப்பாக, உங்கள் வேலை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், இது உங்கள் உடலைக் காலப்போக்கில் பாதிப்பதால், உங்கள் மாத விடாயும் பாதிக்கக் கூடும்.

    இது மட்டுமல்லாது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவு பழக்கங்களும் உங்கள் மாதவிடாய் மற்றும் கருவுறும் தன்மையை பாதிக்கக்கூடும். இதனோடு சேர்த்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி போன்ற சில விஷயங்களும் ஓவுலேசன் நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

    உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.
    ஒரு சில பிரசவ முறைகள் சில தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தப்பட்டாலும், சுகப்பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை உறுதி செய்கின்றது.
    இன்று பல பிரசவ முறைகள் இருந்தாலும், சுகப்பிரசவம் போல சிறந்த பிரசவ முறை எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். இதனை யாராலும் மறுக்கவும் முடியாது. ஒரு சில பிரசவ முறைகள் சில தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தப்பட்டாலும், சுகப்பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை உறுதி செய்கின்றது. கர்ப்பிணி பெண்கள் சுக பிரசவத்தின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதற்கு முயற்சி செய்ய தொடங்க வேண்டும்.

    எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிருங்கள். முடிந்த வரை பெரியோர்களின் ஆலோசனைப் படி, கர்ப்ப காலத்தில் ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் வீட்டு வைத்தியத்தைச் செய்ய முயற்சி செய்து சரி செய்யுங்கள். அது நிச்சயம் உங்களுக்குப் பலன் தரும். ஆனால் அதை தவிர்த்து நீங்கள் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று தேவை இல்லாமல் அதிகம் மாத்திரைகள் சாப்பிட்டால் அது உங்கள் உடலை மட்டுமல்லாது உங்கள் குழந்தையின் உடல் நலத்தையும் பாதிக்கும். மேலும் இது சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பையும் குறைத்து விடும்.

    நீங்கள் சுக பிரசவம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டால் அதில் உறுதியான மனதோடு இருங்கள். இந்த தீர்மானமே, உங்களுக்கான சரியான வழியை வகுத்துக் கொடுத்து விடும். மேலும் அப்படி மனதளவில் நீங்கள் உறுதியாக இருக்கும் போது, உங்கள் உடலும், ஆன்மாவும் அதனையும் நாளடைவில் விரும்பத் தொடங்கும். இறுதியில், நீங்கள் எதிர்பார்த்த சுக பிரசவமும் நடக்கும்.

    இன்றைய நவீன மருத்துவ வளர்ச்சியில் சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பு முழுமையாக இருந்தாலும், ஒரு சில அறியாமையாலும்,சில காரணத்தினாலும், அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவர்களின் உரிய ஆலோசனைகள் சுக பிரசவம் நடக்க மிக அவசியம். பல இளம் பெண்கள், சரியான புரிதல் இல்லாததாலும், பிரசவ நேரத்தில் வலி ஏற்படும் என்கின்ற பயத்தாலும் அறுவை சிகிச்சை பிரசவத்தைத் தேர்வு செய்கின்றனர்.

    சுக பிரசவம் ஏற்பட நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால், இரும்புச் சத்து, கால்சியம், புரதம், நார்ச்சத்து, மக்னீசியம், மங்கனீஸ், ஜின்க் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வைட்டமின் ஏ, சி, பி, பி12 போன்ற சத்துக்களும் உங்கள் உணவில் நிறைவான அளவு இருக்க வேண்டும்.

    இவற்றை நீங்கள் சத்து மாத்திரை சாப்பிட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. இயற்கையாக விளையும் காய், பழம் மற்றும் கீரை வகைகளைச் சரியான முறையில் சமைத்து, அதிலிருந்து சத்துக்களைப் பெற்று கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே, சுகப்பிரசவத்திற்கு ஏற்ற உணவாக அவை இருக்கும்.

    நிறைய கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தைப் பற்றிய தேவையில்லா பயமே அறுவை சிகிச்சை பிரசவத்திற்கான காரணியாக அமைந்து விடுகிறது. ஆகப் பிரசவத்தைக் குறித்த பயத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவசியம். நல்ல இசையைக் கேட்டு உங்கள் மனதை எப்போதும் புத்துணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.

    சுகப்பிரசவம் ஏற்படாமல் போவதற்கு உடல் உழைப்பு இன்மையும் ஒரு முக்கிய காரணமாகும். நீங்கள் எவ்வளவு உடலுக்கு வேலை கொடுக்கின்றீர்களோ அவ்வளவு உங்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால், முடிந்த வரை போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், உங்களால் உடற்பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்க முடியவில்லை என்றாலும், உங்கள் வீட்டு வேலைகளை முடிந்த வரை நீங்களே செய்து விட முயற்சி செய்ய வேண்டும். இதனால் சுகப்பிரசவம் ஏற்படச் சாத்தியங்கள் அதிகரிக்கும்.

    மேலும் தினமும், ஒன்று முதல் இரண்டு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், உங்கள் உடல் சுகப்பிரசவத்திற்கு தயாராகி விடும். மேலும் பிரசவ நேரத்தில் வலியும் குறைவாக இருக்கும். நடைப்பயிற்சியை ஒழுங்காகக் கடைப்பிடித்த பல கர்ப்பிணி பெண்களுக்குச் சுகப்பிரசவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சில குறிப்பிட்ட ஆசனங்களை மேற்கொள்ளுவதால் கர்ப்பிணி பெண்களின் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் வலுவடையும். நாளடைவில் எலும்புகள் நன்கு நெகிழத் தொடங்கும். இதனால் சுகப்பிரசவம் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.

    கர்ப்பிணி பெண்கள் இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதோடு மட்டும் நில்லாமல், முடிந்த வரை உங்களிடம் எதிர்மறையாகப் பேசுபவர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். அவர்களின் பேச்சு உங்கள் நம்பிக்கையை உடைத்து விடக் கூடும். 
    பிரசவத்திற்கு எபிடியூரல் மயக்க மருந்து கொடுப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு என்ன நன்மைகள் மற்றும் உபாதைகள் ஏற்படக் கூடும் என்பதை இங்கே பார்ப்போம்.
    இன்றைய காலகட்டத்தில் சுகப் பிரசவம் குறைந்து கொண்டே போகின்றது. இதற்கு முக்கிய காரணம், பெண்களால் பிரசவ காலத்தில் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது தான். பிரசவ காலத்தில், குறிப்பாகப் பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, எபிடியூரல் அதாவது வால் பகுதி தண்டுவடத்தில் மயக்க மருந்து போடப் படுகின்றது. இதனால், பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் வலி குறைவதோடு, பிரசவமும் எளிதாகின்றது.

    கடந்த 50 ஆண்டுகளாகப் பிரசவத்திற்காக எபிடியூரல் கொடுக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இது குறிப்பாகப் பிரசவ நேரத்தில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படாமல் இருப்பதற்காகக் கொடுக்கப்பட்டாலும், அந்த நேரத்தில் பெண்களுக்கு வேறு சில பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும், தாய் மற்றும் சேய் இருவரும் சுகமாக இருக்கவும் இது உதவுகின்றது.

    எபிடியூரல் மயக்க மருந்தைச் சிறிது அளவு கொடுத்தாலும் பெரும் அளவு வலி தெரியாமல் இருக்க உதவுகின்றது. இது முதுகுத் தண்டில் இருக்கும் நரம்பில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றது. குறைந்த அளவு இந்த மருந்து கொடுக்கப் படும்போது, கால்களை அந்தப் பெண்ணால் அசைக்க முடியும். மேலும் அவளால் சிறிது எழுந்து நடக்கவும் முடியும். இந்த எபிடியூரல் மயக்க மருந்து ஒரு நல்ல வலி நிவாரணியாகச் செயல் படுகின்றது. இது பிரசவத்திற்குப் பின் பெண்கள் சௌகரியமாகவும், நலமாகவும் இருக்க உதவுகின்றது.

    நன்மைகள் :

    இந்த எபிடியூரல் மயக்க மருந்து ஒரு பெரிய வலி நிவாரணியாகப் பிரசவ நேரத்தில் இருக்கின்றது. பிரசவ வலி அதிகரிக்கும் போது பெண்களுக்கு மூச்சு வாங்குதல் அதிகமாக இருக்கும். மேலும் அவர்களது உடலில் அதிக அளவு சுரப்பிகள் சுரக்கத் தொடங்கும். இதனால் சில பெண்கள் மரணிக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் குழந்தையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்தகைய ஆபத்தைத் தடுக்க இந்த மயக்க மருந்து பெரிதும் உதவுகின்றது.

    இந்த மயக்க மருந்து சிறு அளவு கொடுக்கப்பட்டாலே பிரசவ காலம் முழுவதும் அந்த பெண்ணுக்கு வலி தெரியாமல் வைத்துக் கொள்ள உதவுகின்றது. எந்த வகையிலும் இந்த மயக்க மருந்து குழந்தை பிறப்பதில் தாமதத்தையோ அல்லது பிற பிரச்சனைகளையோ ஏற்படுத்தாது.

    சரியாகவும், முறையாகவும் மருத்துவர்கள் இந்த மருந்து கொடுக்கப்படும் போது பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் தேவையான உணர்வு இருக்கின்றது. இதனால் பெண்களால், குழந்தையை வெளியே தள்ள முடிகிறது.

    இந்த மருந்து எந்த வகையிலும், பிரசவத்திற்குப் பின் தாய் குழந்தைக்குப் பால் கொடுப்பதிலோ அல்லது தாய் சேய் உறவிலோ பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. இந்த மருந்து எந்த வகையிலும் நஞ்சுக்கொடிக்குள் செல்ல வாய்ப்பு இல்லாததால், குழந்தை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. மாறாக வாய் வழியாகத் தாய் ஏதாவது மருந்தை உட்கொண்டால் அது குழந்தையைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    எபிடியூரல் மயக்க மருந்து கொடுக்கப்படும் போது பொது மயக்க மருந்து தவிர்க்கப்படுகின்றது. இதனால் பிரசவ நேரத்தில் பெண்கள் சுய நினைவோடு இருக்க முடிகின்றது. மேலும், பொது மயக்க மருந்தால் ஏற்படும் உபாதைகளையும் இது தடுக்க உதவுகின்றது

    கர்ப்பிணிப் பெண்களால் பிரசவ காலத்தில் ஏற்படும் வலியைப் பொறுத்துக் கொள்ளும் வரையில் இந்த மருந்தின் தேவை இருக்காது. எனினும், அவர்களுக்கு தங்கள் சக்தியை மீறி வலி ஏற்படும் போது, இது போன்ற சில உதவிகள் தேவைப்படுகின்றது. இது அவர்கள் நினைவிழக்காமல் வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவுகின்றது. குறிப்பாக இந்த மருந்து கர்ப்பிணிப் பெண்கள் ஒரு சமன்பட்ட மன நிலையில் இருக்க ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது. பிரசவ நேரத்தில் இது மிக முக்கியமான ஒன்று.

    தீமைகள்

    எந்த மருந்தாக இருந்தாலும், அதில் சில உபாதைகள் இருக்கத்தான் செய்யும். எனினும் அவை பெரிதாக உடல் நலத்தைப் பாதிப்பதில்லை. நாளடைவில் உடல் நல்ல நிலைக்கு வந்து விடும். இந்த வகையில், இந்த எபிடியூரல் மயக்க மருந்து கொடுப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு என்ன உபாதைகள் ஏற்படக் கூடும் என்பதை இங்கே பார்ப்போம்,

    குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மருந்து நரம்பில் செலுத்தப்படுவதால், இயல்பான இரத்த அழுத்தத்தைச் சற்று பாதிக்கக் கூடும். எனினும், பிற மருந்துகள் கொடுக்கப்பட்டு, இந்த குறைந்த இரத்த அழுத்தம் சீரான அளவிற்கு விரைவில் கொண்டு வரப்படும்.

    சருமத்தில் அரிப்பு ஏற்படக்கூடும். சில பெண்களுக்கு, இந்த மருந்து செலுத்தப்படுவதால், உடலில் அரிப்பு அல்லது ஒவ்வாமை போன்ற உணர்வு ஏற்படக் கூடும். எனினும் இது 1% பெண்களுக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அதிக அளவு இந்த மருந்து செலுத்தப்படும் போது, கருவில் இருக்கும் சிசுவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம், அல்லது வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். தாயின் உடலில் இருக்கும் வெப்பத்தைச் சற்று அதிகரிக்கக் கூடும். இருப்பினும், இது அந்த மருந்து கொடுக்கப்படும் அளவை பொறுத்தே உள்ளது.

    தாய்க்குப் பிரசவத்திற்குப் பின் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதுகுத் தண்டு, இடுப்பு மற்றும் முட்டிக்கால்கள் போன்ற பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரசவம் தாமதமாகலாம். இந்த மருந்து கொடுக்கப்படும் போது அறுவைசிகிச்சைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. இருதயத் துடிப்பு அதிகரிக்கக் கூடும் மற்றும் குழந்தையின் நிலையில் மாற்றம் ஏற்படக் கூடும்.

     எபிடியூரல் கொடுக்கப்படுவதால் நன்மை, தீமை இரண்டும் உள்ளன. கர்ப்பிணிப் பெண்களால் முடிந்த வரை வலியைப் பொறுத்துக் கொள்ள முடியுமென்றால், இந்த மருந்தின் தேவை இல்லாமல், சுகப் பிரசவ முறையையே மேற்கொள்ளலாம். எனினும், இது அனைவருக்கும் சாத்தியம் இல்லை என்பதால், தேர்ச்சி பெற்ற மருத்துவரின் உதவியால், இந்த எபிடியூரல் மயக்க மருந்தைச் சரியான அளவு பயன்படுத்த முயற்சி செய்வதே நல்ல தீர்வாக இருக்கும்.
    இன்று ஏற்பட்டுள்ள அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால், பல மருத்துவச் சிகிச்சைகளும், பிரசவ முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான பெண்களுக்குச் சுகப் பிரசவமே, அதாவது இயற்கையாகக் குழந்தை பிறக்கும் முறையே அதிகம் நடந்தது. ஒரு சில பெண்களுக்கு, மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால், அறுவைசிகிச்சை பிரசவம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால், பல மருத்துவச் சிகிச்சைகளும், பிரசவ முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.

    இவை ஒரு கர்ப்பிணிப் பெண் எந்த உடல் நிலையில் இருக்கின்றாள் மற்றும் அவள் குழந்தை எந்த நிலையில் இருக்கின்றது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப் படுகின்றது. எனினும், எத்தனை பிரசவ முறைகள் இருந்தாலும், அவற்றின் முக்கிய குறிக்கோள், தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்றுவதே ஆகும்.

    பல வகை பிரசவ முறைகள்

    வீட்டில் நடக்கும் இயற்கை பிரசவம்

    இந்த முறை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது. இந்த முறை நிதானமாக, ஒரு சிலரின் உதவியோடு, எந்த குறுக்கீடுகள் மற்றும் கண்காணிப்பும் இல்லாமல் நடக்கும். இந்த முறையைத் தேர்ந்தெடுக்கும் கர்ப்பிணிப் பெண், மூத்தவர்களிடம் அல்லது மருத்துவரிடம் இதைப் பற்றிப் பல விசயங்களைத் தெரிந்து கொண்டு, எப்படி பிரசவ நேரத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று தயாராக இருப்பாள்.

    இந்த முறையில், கர்ப்பிணிப் பெண் எப்படி மூச்சுப் பயிற்சி செய்வது, எப்படி தன் மனம் மற்றும் உடலை அமைதியாக வைத்துக் கொள்வது, பல வகை பிரசவ நிலைகளைத் தானாகவே எப்படி சமாளிப்பது, எப்படி தன்னம்பிக்கையோடு இருப்பது என்று பல விசயங்களை அறிந்து வைத்திருப்பாள். இன்றும் இந்த பிரசவ முறை பல வளர்ந்த நாடுகளில் அதிகம் வழக்கத்தில் உள்ளது.

    இதனால் சுகப் பிரசவம் ஏற்படுவதோடு, தாய் சேய், ஆகிய இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். மேலும் இந்த முறையில் எந்த மருந்துகளும் தேவை இல்லை. இது இந்த முறை பிரசவத்தின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இருப்பினும் இந்த முறை பிரசவம் சிறிது பாதுகாப்பு அற்றதுதான். காரணம் ஏதாவது எதிர்பாராத சிக்கல் ஏற்படும் போது மருத்துவர் அருகில் இருக்க மாட்டார்.ஆக மருத்துவர்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதே சிறந்தது என்று எச்சரிக்கின்றனர்.

    சுகப் பிரசவம்

    சுகப் பிரசவ முறைத் தாய் சேய் இருவரும் எந்த மருந்துகளின் உதவி இன்றி நலமுடன் இருக்க உதவும். இந்த பிரசவத்தால் குழந்தை விரைவாக இயல்பான நிலைக்குப் பிரசவத்திற்குப் பின் வந்து விடுகின்றது. சில நிமிடங்கள் என்றும் கூறலாம். இந்த முறை பிரசவத்தால் தாயும் விரைவாகக் குணமடைந்து இயல்பான நிலைக்கு ஒரு சில நாட்களிலேயே வந்து விடுகின்றாள். இதனால் தேவை இல்லாமல் வயிற்றில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய சூழல் தவிர்க்கப்படுகின்றது. இந்த சுகப் பிரசவத்தால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பும் பெரிய அளவு குறைக்கப்படுகின்றது.

    லமேஸ் முறை (Lamaze Method)

    இந்த முறையின் பெரிய குறிக்கோளே கர்ப்பிணிப் பெண்களுக்கு போதிய தன்னம்பிக்கையை வழங்குதல் மற்றும் வலி தாங்கும் பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொடுப்பதே. இந்த முறை பிரசவ நேரத்தில் கர்ப்பிணிப் பெண் அதிக சௌகரியத்தோடு இருக்க உதவுகின்றது. கர்ப்பிணி பெண்கள் பிரசவ நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வதால் அதிகம் அமைதியான மன நிலைக்கு வருகின்றனர். இதனால் பிரசவ வலி பெரிதும் குறைகின்றது. மேலும் இந்த முறையில் மருந்துகள் ஊக்கவிக்கப்படுவதில்லை. எனினும் பெண்களுக்கு இதனைப் பற்றின தகவல்கள் மற்றும் பிரசவ நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி முறைகளும், மருத்துவரால் முன்பே கற்றுக் கொடுக்கப் படுகின்றது. இதன் மூலமாகப் பிரசவ சூழலுக்கு ஏற்றவாறு ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்கு தயார்ப்படுத்தப்படுகின்றாள்.

    தண்ணீர் பிரசவம்

    பிராட்லி முறை (Bradley Method)

    இந்த முறை ஒரு கர்ப்பிணிப் பெண்ணை எப்படி பிரசவத்திற்குத் தயார்ப்படுத்துவது என்பதைப் பற்றிக் கூறும். எந்த மருந்தும் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல் அந்த பெண் தனக்குத் தானே பிரசவம் செய்து கொள்ள சுமார் 12 வாரங்களுக்கு முன்பே கற்பிக்கப்படுகின்றாள். மேலும் இந்த முறையில் அவள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் போதிய அறிவைப் பெறுகின்றாள்.

    தண்ணீர் பிரசவம் (Water Birth)

    இந்த முறையில் சில அல்லது அனைத்து பிரசவ நிலைகளையும், பிரசவ நேரத்தின் போது கர்ப்பிணிப் பெண் ஒரு அகலமான சுடு தண்ணீர் இருக்கும் டப்பில் அமர வைக்கப்பட்டு எதிர்கொள்ள உட்படுத்தப்படுகிறாள். குழந்தை தண்ணீரில் பிறக்கும். பல பெண்கள் இந்த முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கிய இது அதிக அமைதியான மனநிலையை ஏற்படுத்துவதாலும், மிகக் குறைவான வலியை தருவதாலும் தான். இந்த முறையை வீட்டிலிருந்தும் பலர் செய்கின்றனர். மேலும் பல மருத்துவமனைகளும் இந்த பிரசவ முறையை பரிந்துரைக்கின்றன.

    அறுவைசிகிச்சை பிரசவம் (C-section Delivery)

    பல வளர்ந்த நாடுகளில் இதனைப் பெரிதும் பரிந்துரைப்பதில்லை என்றாலும், தாய் மற்றும் சேய்க்கு ஏதாவது ஆபத்தான சூழல் இருக்கும் தருணத்தில் மட்டும் இதனைச் செய்கின்றனர். எனினும், இந்தியாவில் இன்று பெரும்பாலான பெண்கள், தங்களுக்குச் சுகப் பிரசவம் ஏற்பட அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை அறிந்தாலும், இந்த முறையை தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் இதில் அவர்களுக்குப் பிரசவ நேரத்தில் வலி தெரிவதில்லை என்பது தான். எனினும், தாய் சேய், இதில் யாராவது ஒருவர் ஆபத்தான சூழலில் இருக்கும் போது, இந்த முறையே சிறந்ததாக இருக்கின்றது. இல்லை என்றால், சுகப்பிரசவம் அல்லது பிற பிரசவ முறையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. ஏனென்றால் இந்த பிரசவத்திற்குப் பின் தாய் இயல்பான நிலைக்கு வர பல மாதங்கள் ஆகலாம். மேலும் அதிக ஓய்வும் தேவைப்படும். இதனால் குழந்தையோடு அதிகம் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பை இழக்க நேரிடலாம். மேலும் குழந்தைக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    வெற்றிட பிரித்தெடுத்தல் பிரசவ முறை (Vacuum Extraction Delivery)

    இந்த முறையில் பிறப்பு உறுப்பில் குழந்தை இருக்கும் போது, குழந்தையின் தலையில் ஒரு மென்மையான கப் வைக்கப் படுகின்றது. அதன் பின் ஒரு கையால் பம்ப் செய்யப்பட்டு வெற்றிடத்தை உருவாக்கி குழந்தையை மெதுவாக வெளியே எடுக்க முயற்சி செய்வார்கள். இந்த முறையால் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய தேவை தவிர்க்கப்படுகின்றது, மேலும் அறுவைசிகிச்சையின் போது குழந்தை அதிக நேரம் அந்த அழுத்தம் நிறைந்த சூழலில் இருப்பதும் தவிர்க்கப்படுகின்றது.

    மேலே குறிப்பிடப்பட்ட இந்த முறைகள் மட்டுமல்லாது, இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் மேலும் பல முறைகள் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கப்படுகிறது. எனினும் ஒரு கர்ப்பிணிப் பெண் தன் வீட்டில் இருக்கும் அனுபவம் நிறைந்த பெரியவர்களின் ஆலோசனைப்படியும், நல்ல மருத்துவரின் ஆலோசனையின் படியும் சரியான பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த முறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் தாய் மற்றும் சேய் இருவரும் நல்ல நலத்தோடு இருப்பது முக்கியம். இன்று நன்கு படித்த மற்றும் விவரம் தெரிந்த இளம் பெண்கள் சுகப் பிரசவம் போன்ற இயற்கை சார்ந்த பிரசவ முறைகளைப் பெரிதும் விரும்புகின்றனர்.
    முடிந்த வரை மருந்துகளைத் தவிர்த்து, இயற்கையாக இரும்புச் சத்து நிறைந்த உணவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க எடுத்துக் கொள்வதால், தாய் மற்றும் சேய் இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன்  சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது. கர்ப்ப காலத்தில் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகம் இரத்தம் உற்பத்தி ஆகும். இப்படி இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் போதுமான இரும்புச் சத்து நிறைந்த உணவை உண்ணாமல் இருந்தால், உடலுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியும் குறையத் தொடங்கலாம்.

    ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும். இந்த வகையில், அதிக அளவு உடலில் இரும்புச் சத்து குறைந்து அல்லது உயிர்ச்சத்து அளவு குறைந்தால், இரத்த சோகை அதிக அளவு ஏற்படக் கூடும்.

    கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், போதுமான சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதோடு, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். உங்கள் உணவில் அனைத்து சத்துக்களும் உள்ளதா என்று பார்க்க வேண்டும். நீங்கள் எப்படி ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சில தகவல்கள்;

    நீங்கள் உண்ணும் உணவில் போதுமான இரும்பு, உயிர்ச்சத்து பி 12 மற்றும்  சி சத்துக்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்

    பச்சைக் காய் மற்றும் கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெந்தயக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

    உலர்ந்த பழங்கள், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகள் என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

    அதிக இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், குறிப்பாகக் கொய்யா, பேரீச்சம் பழம், அத்திப் பழம் போன்றவற்றைத் தினமும் உட்கொள்ள வேண்டும்

    உயிர்ச்சத்து சி இரும்புச் சத்தை உடலில் தக்க வைக்க உதவும். அதனால் கமலாப் பழம், எலுமிச்சை பழம், நாவல் பழம் போன்ற பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பிராக்கோலி, தக்காளி, மிளகு போன்ற பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    உயிர்ச்சத்து பி சத்து நிறைந்த வெண்டைக்காய், முளைக்கட்டிய பயிர்கள், பூசணிக்காய் போன்ற காய்களை அதிகம் உண்ண வேண்டும்.

    அதிக கால்சியம் அளவு, இரத்தத்தில் இரும்புச் சத்தை சேர விடாமல் செய்யக் கூடும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில், முடிந்த வரை தேநீர், காபி, மது, கோதுமை உணவுப் பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அதிகமான வகையில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

    நாட்டுக் கோழி முட்டை, பருப்பு வகைகள், ஆட்டு இறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

    கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றிலும் இரும்புச் சத்து நிரம்பி உள்ளது.

    இது மட்டுமல்லாது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். முடிந்த வரை குதிரைவாலி, சாமை, திணை, கை குத்தல் அரிசி போன்ற அரிசி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது அனைத்து சத்துக்களையும் எளிதாகப் பெற உதவும். முடிந்த வரை மருந்துகளைத் தவிர்த்து, இயற்கையாக இரும்புச் சத்து நிறைந்த உணவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க எடுத்துக் கொள்வதால், தாய் மற்றும் சேய் இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.

    தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.
    பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.

    இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே… இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள். காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும். எண்ணற்ற பழங்கள் இருக்கின்றன. பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

    கொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம். மாதவிடாய் தொல்லை இருப்பவர்கள் கொள்ளு சாப்பி மருத்துவர் அனுமதியுடன் சாப்பிடலாம்.

    எலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து பருகவும். கொழுப்பு, அடைப்பு போன்றவை நீங்கிவிடும். கழிவுகள் வெளியேறும். ரத்தம் சுத்தமாகும், தொப்பைக் குறையும்.

    தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, சிறுதானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசியைத் தொட்டு சாப்பிடுங்கள். காய்கறிகள்தான் பிரதான உணவு. அரிசி போன்ற தானியங்கள் குறைவான அளவாக இருக்க வேண்டும்.

    பாலை விட அதிக கால்சியம் தரும் உணவுகள் நிறையவே உள்ளன. கேழ்வரகு, எள்ளு, ஆரஞ்சு, புரோக்கோலி, வெண்டைக்காய், அத்தி, காராமணி, பாதாம் இன்னும் பல… பால் இல்லாத டீ, காபி சாத்தியம் என்றால் அதைக் குடியுங்கள். ஆசைக்கு வேண்டுமென்றால் ஒரு டம்ளர் நீர்த்த மோர் குடிக்கலாம்.

    காய்கறி, கீரைகள், பழங்களிலிருந்து உங்களுக்கு நார்ச்சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்குத் தேவையான 25 கிராம் நார்ச்சத்து கிடைக்காததால் கொழுப்பு சேர்கிறது. எனவே காய்கறிகளும் பழங்களும் பிரதான உணவாக்கிக் கொள்ளுங்கள். தினசரி கீரை அல்லது வாரம் 5 முறை கீரை சாப்பிடுங்கள்.

    பாயில் அல்லது யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும். 2-3 இன்ச் அளவுக்கு இரு கால்களையும் முட்டி மடங்காமல் தூக்கவும். உயரத்தில் காலைத் தூக்கத் தேவையில்லை. வயிறு நடுங்குவதை உங்களால் உணர முடியும். முடியாத போது காலை கீழே இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுங்கள். பிறகு மீண்டும் பயிற்சியை செய்யுங்கள். இதுபோல 5 முறை செய்யவும். வெறும் வயிற்றில், காலை மற்றும் மாலை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் தொப்பைக் குறையும்.

    அருகில் உள்ள யோகா மையத்துக்கு செல்லுங்கள். மூச்சு பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாள்தோறும் மூச்சு பயிற்சி செய்யுங்கள். தொப்பை இருக்கவே இருக்காது. மீண்டும் கொழுப்பு உடலிலும் சேராது.
    மகப்பேறுக்கு பாரம்பரிய மருந்துகள் உட்கொள்வதை பெண்கள் தவிர்க்கக் கூடாது; அத்தகைய மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
    தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி வந்தனர். இப்போது பிரசவம் நவீன மருத்துவமனைகளில் நிகழ்வதால் பாரம்பரிய மருந்துகளைக் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். அது தவறானதாகும். மகப்பேறுக்கு பின்பு பாரம்பரிய மருந்துகளை உட்கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதை நமது வருங்காலச் சந்ததிக்கு எடுத்துரைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    மகப்பேறுக்கு பின்பு முதல்நாளில் சிறிதளவு கஸ்தூரியை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட வேண்டும். இது கருப்பையில் தடைபட்ட அழுக்கை நீக்கவும், உடல் தளர்ச்சியைப் போக்கவும் உதவும். பின்பு 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்கும்போது கருப்பையின் புண்கள் விரைவாக ஆறிவிடும்.

    2-ம் நாளில் மஞ்சள், மிளகு, நறுக்குமூலம், சுக்கு, அக்கரகாரம், ஓமம் ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து பிரசவ சூரணம் செய்து சாப்பிட வேண்டும்.

    3-ம் நாளில் 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்க வேண்டும்.

    5-ம் நாளில் சிறிய துண்டுப் பெருங்காயத்தை எடுத்து நன்றாகப் பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து கொடுக்க வேண்டும். இம் மருந்து சூதக வாயுவை நீக்கும்.

    9-ம் நாளில் 5 கிராம் கடுகை நன்கு பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து சாப்பிட வேண்டும்.

    11-ம் நாளில் 25 கிராம் சுக்கு, சிறிய துண்டு சாரணைவேர் ஆகியவற்றை நன்கு சூரணம் செய்து 50 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி அதில் சூரணத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி நன்கு களி பதம் வரும் வரை கிண்டிக் கொடுக்க வேண்டும்.

    13-ம் நாளில் 50 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு 100 கிராம் பனை வெல்லத்தைப் பாகாக்கி அரைத்த பூண்டு விழுதை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டி கொடுக்கவேண்டும். இந்த மருந்து தாய்ப்பாலை அதிகரிக்கும்.

    15-ம் நாளில் 50 கிராம் ஓமத்தை நன்கு காயவைத்து மேல்தோல் நீக்கி சூரணம் செய்து 100 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி, அதில் ஓமத்தைக் கலந்து நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டிக் கொடுக்க வேண்டும்.
    உண்மையான பிரசவ வலி வலிக்கும் பொய்யான பிரசவ வலிக்கும் உள்ள வேற்றுமையைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி சற்று விரிவாகக் காணலாம்.
    சுகமான வழியில் குழந்தை பிறப்பதற்கான முக்கிய அறிகுறி பிரசவ வலி ஏற்படுவது ஆகும். கர்ப்பப்பை சுருங்கி விரியத் தொடங்கியவுடன் பிரசவம் வலி பெண்ணுக்கு ஏற்படத் தொடங்கும். ஆரம்பக்கால பிரசவ வலி சற்று குறைவாகவும் உச்சக்கட்ட பிரசவ வலி சற்று அதிகமாகவும் இருக்கும். உண்மையான பிரசவ வலி வலிக்கும் பொய்யான பிரசவ வலிக்கும் உள்ள வேற்றுமையைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி சற்று விரிவாகக் காணலாம்.

    உண்மையான பிரசவ வலி


    உண்மையான பிரசவ வலி சரியான இடைவெளியில் வரும். அதாவது பத்து நிமிடத்துக்கு ஒரு முறை என்ற அளவில் வரும். இந்த இடைவெளி அளவு சிறிது சிறிதாகச் சுருங்கத் தொடங்கும்.அதாவது பத்து நிமிடம் ஏழு நிமிடம், பின் ஏழு நிமிடம் ஐந்து நிமிடம் என்று குறைவு ஆகும். அதே மாதிரி அந்த வலியின் கால அளவும் அதிகரிக்கும். இறுதிக்கட்ட பிரசவ நேரத்தில் இறங்கும் பொழுது இந்த பிரசவ வலி நொடிகளுக்கு ஒரு நொடி திரும்ப வாய்ப்பு உள்ளது.

    பொய்யான பிரசவ வலி

    இந்த பொய் பிரசவ வலியானது ஒரு ஒழுங்கான கால அளவில் ஏற்படாது. அந்த வலியின் அளவும் அதிகரித்துக் கொண்டு செல்லாது. அதே மாதிரி வலிகளுக்கு இடையேயான கால இடைவெளி குறையாது. இது சாதாரண வயிற்று அல்லது தசைப் பிடிப்பு மாதிரியானது. இதை பிராக்ஸ்டன் ஹிக்கஸ் கன்ட்ராக்ஜன் (Braxton-Hicks contraction) என்பார்கள்.இதுவும் கடைசி கர்ப்ப காலங்களிலே ஏற்படுகிறது.

    கர்ப்பிணிப் பெண்களுக்குச் சுகப் பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
    பத்தாம் மாதம் தொடங்கிய உடனேயே கர்ப்பிணிப் பெண் தன் உடல் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் பல நுணுக்கமான விஷயங்களும் அறிகுறிகளும் பிரசவம் சீக்கிரம் நிகழப் போகின்றது என்பதை உணர்த்திய வண்ணம் இருக்கும்.
    எந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் சுகப் பிரசவ வழியிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்புவாள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்கால உடல் ஆரோக்கிய நிலைகளுக்கும் ஏற்புடையது. பத்தாம் மாதம் தொடங்கிய உடனேயே கர்ப்பிணிப் பெண் தன் உடல் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் பல நுணுக்கமான விஷயங்களும் அறிகுறிகளும் பிரசவம் சீக்கிரம் நிகழப் போகின்றது என்பதை உணர்த்திய வண்ணம் இருக்கும். அப்படி என்னென்ன விஷயங்களைக் கர்ப்பிணிப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைக் கீழே பார்க்கலாம்.

    * பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு அவ்வப்போது முதுகு வலி ஏற்படுவது இயல்பானதுதான். இருப்பினும் பிரசவம் நிகழப்போகும் காலகட்டத்தில் இந்த முதுகுவலி வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படும். இதைக்கொண்டு பிரசவம் சீக்கிரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ளலாம்.இது நிச்சயம் சுகப் பிரசவத்திற்கான அறிகுறி தான்.

    * சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கு சில நாட்களோ அல்லது வாரங்களுக்கு முன்னர் இந்த பிரசவ அறிகுறி தென்படும். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து அதன் மூலம் இந்த விஷயத்தில் அறிந்து பயமில்லாமல் எதிர் கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் பிரசவத்தை எதிர்நோக்கி தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம். செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும் பொழுது 10 சென்டி மீட்டர் என்ற அளவை அடைந்து இருக்கும்.

    * கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல்வேறு ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும். கருவில் உள்ள குழந்தை முழு வளர்ச்சியைக் கடைசி மாதத்தில் எட்டி இருக்கும். அந்த நேரத்தில் குழந்தையின் தலை திரும்பி பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக வரத் தயாராகும். குழந்தையின் தலைப் பகுதியானது செர்விக்ஸ் பகுதியில் அழுத்தம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும். இந்த நேரத்தில் செர்விக்ஸ் கிளான்டானது சளி மாதிரியான திரவத்தைச் சுரக்கத் தொடங்கும். இந்த சளியானது சற்று அடர்த்தியான தன்மையோடு காணப்படும். சில சமயங்களில் இதனோடு இரத்தம் அல்லது இரத்தக்கட்டிகள் காணப்படும். பிரசவம் நிகழப் போவதற்கான இந்த அறிகுறி பல கர்ப்பிணிப் பெண்களிடம் காணப்படுகின்றன. இருப்பினும் ஒரு சில கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த அறிகுறிகள் தென்படுவதில்லை.

    * குழந்தை கருவறையிலிருந்து வெளியே வர நேரம் வந்துவிட்டது என்றால் கர்ப்பிணிப் பெண்களின் பெல்விக் பகுதி எலும்புகள் மற்றும் இணைப்புகளும் சற்று தளர்ச்சி அடையத் தொடங்கும். இதுவும் பிரசவம் விரைவில் நிகழப் போவதற்கான அறிகுறியே ஆகும். அப்போது தான் எலும்புகள் சற்று விரிவடைந்து குழந்தை எளிதாகச் சுகப் பிரசவ வழியில் வெளி வர முடியும்.

    * கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலம் முழுவதும் சற்று சோர்வாகும் களைப்பாகவும் இருப்பர். ஆனால் சுகப் பிரசவம் நிகழப்போகும் தருணம் நெருங்குகையில் அவர்கள் மிகவும் தெம்பாகவும் சக்தி நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இதற்குக் காரணம் பிரசவத்தைத் தாங்க கூடிய சக்தி உடலில் இயற்கையாக உற்பத்தியாவது தான். இதை ஆங்கிலத்தில் நெஸ்டிங்(nesting) என்பார்கள்.

    * கடைசி பிரசவ காலத்தில் குழந்தையின் தலை திரும்பி பெல்விக் பகுதியில் இருக்கும். இந்த காரணத்தினால் கர்ப்பிணிப் பெண்ணின் சிறுநீர்ப்பை குழந்தையின் தலைப் பகுதியால் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டபடி இருக்கும். இது சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும்.

    * கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்ற சமயத்தில் அவர்களின் பிறப்பு உறுப்பில் வலி ஏற்படுகின்றது. இந்த வித வலி எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. சில பெண்களுக்கு மட்டும் ஏற்படுகின்றது.

    * கர்ப்பிணிப் பெண் தன் பிரசவ நேரத்தை எட்டிக் கொண்டிருக்கும் போதே அவளால் இலகுவாக சுவாசிக்க முடிகின்றது. ஆரம்பத்தில் இருந்து மூச்சுத் திணறல் எல்லாம் குறையும். குழந்தையின் நிலை மாறுதலே இந்த புதிய மாற்றத்தை சாத்தியப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் டையப்ரம் பகுதியிலிருந்து அழுத்தம் குறைந்ததே ஆகும்.

    * செர்விக்ஸ் பகுதியானது பிரசவ நேரத்தை நெருங்கும் காலகட்டத்தில் மெல்லிய நிலையை அடையும். இவ்வாறான மாற்றம் செர்விக்ஸ் பகுதியில் ஏற்படுவதாலேயே அதனால் இலகுவாக விரிவடைய முடியும். இதை ஆங்கிலத்தில் தின்னிங்(thinning) என்று கூறுவார்கள். இதனால் குழந்தை எளிதாக பிறப்பு உறுப்பு வழியே வெளியேற முடியும்.

    * குழந்தையின் தலைப் பகுதியானது சற்றுத் திரும்பி கீழே வரும். இவ்வாறான நிலையை கர்ப்பிணிப் பெண்ணின் உடலமைப்பில் இருந்தும் கண்டு கொள்ளலாம். கூர்ந்து கவனித்தால் கர்ப்பிணி பெண் இந்த மாற்றத்தை உணர வேண்டும். இயற்கையாகவே ஒரு பெண்ணின் உடல் ஒவ்வொரு விசயத்திலும் குழந்தையைச் சுகமான வழியில் பிரசவிக்கத் தயார்ப் படுத்திக் கொண்டே இருக்கும்.

    * குழந்தையின் தலைப் பகுதியானது தொடர்ச்சியாக பெல்விக் பகுதியில் அழுத்தம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் அந்தப் பகுதியில் அவ்வப்போது சிறு வலி ஏற்பட்டபடியே இருக்கும். இந்த உணர்வைக் கர்ப்பிணிப் பெண்கள் மலம் வருவது போன்று உணர்வு என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். இது உண்மையில் அழுத்தத்தின் காரணமே ஆகும். இந்த அறிகுறி தென்பட்டாலும் சுகப் பிரசவம் நிகழப் போகிறது என்று அர்த்தம்.

    * குழந்தையானது தாயின் கருவறையில் உள்ள அம்னியாட்டிக் திரவத்தில் வாழும். இந்த அம்னியாட்டிக் திரவமானது நிறமற்றது மற்றும் நறுமணம் அற்றதாகும். இது பார்வைக்குச் சிறுநீர் போலவே தென்படும். இந்த திரவத்தையும் சிறுநீரையும் வேற்றுமைப் படுத்திப் பார்ப்பது சற்று கடினமானது. பிரசவம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக இந்த விஷயம் கருதப்படுகின்றது. பனிக்குடம் உடைந்து நீர் மெல்ல கசியத் தொடங்கும். இந்த அறிகுறி தென்பட்ட உடனேயே கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
    சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.
    கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும். இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.

    சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.

    கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடற்பிரச்னைகளில் மூலமும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.

    ‘‘நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம். வயிற்றுக்கும் ரத்தத்தால் ஆன இத்தூண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. உள் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும்போது அந்த அழுத்தம் மூலத்தில் பரவி அதனை உப்பிப்போக வைக்கும். அப்படியாக கர்ப்ப காலத்தின் போது உள் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும்.

    இதனால் மூல நோய் இல்லாதவர்களுக்கு அது வரக்கூடும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு அதன் படிநிலை அதிகரிக்கக்கூடும். மலம் கழித்த பின் ஆசனவாயில் ரத்தம் வருதல் மற்றும் ஆசனவாய் ஓரத்தில் சில வீக்கங்கள் தெரிவது ஆகியவை இதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும். இப்படியான அறிகுறிகள் தெரிய வரும்போது பயப்படத் தேவையில்லை. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.

    சில கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மலம் மிகவும் கெட்டியாக வெளிவரும்போது மூலத்தில் வெடிப்பு ஏற்படும். அதுதான் Fissure என்று சொல்லக்கூடிய வெடிப்பு மூலம். piles எனப்படும் மூல நோயை விட வெடிப்பு மூலத்தினால் அதிக அளவில் வலி ஏற்படும். மலம் கழித்த பிறகும் கூட வலி இருக்கும். வெடிப்பு மூலத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன. முதலாவது தற்காலிக வெடிப்பு மூலம். இரண்டாவது வகை நிரந்தர வெடிப்பு மூலம்.

    ஆசனவாயில் வெடிப்பு இருக்கும். அதை விரல்களில் தொடும்போது உணர முடியும். ஆனால் வெளியே தெரியாமல் இருப்பது தற்காலிக வெடிப்பு மூலம் ஆகும். இது கர்ப்ப காலத்தில் அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும் மருந்து, மாத்திரைகள் மூலம் இதனை குணப்படுத்தி விட முடியும்.

    ஆசனவாயில் விரல்களால் தொடும்போது தடித்துக் காணப்பட்டால் அது நிரந்தர வெடிப்பு மூலம் ஆகும். இதற்கு லேசர் அறுவை சிகிச்சை செய்வதுதான் தீர்வாக அமையும். இச்சிகிச்சை மூலம் கெட்டியான தசைகளை விடுவிக்கும்போது அது குணமடைந்து விடும். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அக்காலத்தில் அனஸ்தீசியா கொடுப்பது உகந்ததல்ல.

    எனவே கர்ப்பம் தரிப்பதற்கான திட்டமிடலின்போது இப்பிரச்சனையையும் கருத்தில் கொள்வது நல்லது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சனை ஏற்படும்போது மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாக தற்காலிக நிவாரணத்தை அளித்து விட்டு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். மூல நோய்க்கு Stapler gun இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை சிறந்த தேர்வாக இருக்கும். இதனால் வலியே இல்லாமல் சிகிச்சை மேற்கொண்டு நிரந்தரத் தீர்வை அடைய முடியும். 
    ×