என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    44.4% கர்ப்பிணி பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்த சோகையால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    தமிழ்நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சதவிகிதம் 55.1%. அதுபோல, 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்த சோகை ஏன் இவ்வளவு பேரை பாதிக்கிறது? எதனால் இந்த பிரச்சனை வருகிறது? என்று பார்க்கலாம்.

    முதலில் ஹீமோகுளோபின் பற்றித் தெரிந்தால் ரத்தசோகை பற்றிப் புரிந்து கொள்ள முடியும். ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும்.நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும். சிவப்பு ரத்த அணுக்களின் தோற்றத்தை சரியாக பராமரிப்பதற்கும் ஹீமோகுளோபின் முக்கியம்.

    இரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் அளவு, சிவப்பு ரத்த அணுக்களில் சரியாக இல்லையென்றாலோ குறைவாக இருந்தாலோ, உடலுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை இரத்த சிவப்பு அணுக்களால் கொண்டு செல்ல முடியாது. இந்த பிரச்னையைதான் ‘இரத்த சோகை நோய்’ என்கிறார்கள்.

    இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்


    பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.

    மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.

    இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

    இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

    பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.

    இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.

    வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
    மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    பருவமடைந்த ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் (28 நாட்கள்) சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை முதிர்ச்சியடைந்து, சினைக்குழாய்க்கு வரும். இரண்டு சினைப்பைகள் இருந்தாலும் ஒரு மாதம் ஒரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை மட்டுமே வெளிவரும், அடுத்த மாதம் மற்றொரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளிவரும். 

    கருப்பையில் இருந்து வெளியேறும் இந்த கருமுட்டையானது ஆணுடைய விந்துடன் இணைந்தால் கருப்பையில் தங்கி குழந்தையை உருவாக்கும். கருவின் வளர்ச்சிக்காகக் கருப்பையின் உட்புறத்தில் ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறை ஒன்றும் ஒவ்வொரு மாதமும் உருவாகும். கருமுட்டை கருவுறாதபோது, அத்துடன் சேர்ந்து கருப்பையில் இருக்கும் இந்த ரத்த நாளங்களான உள்ளுறையும் சிதைந்து கருப்பை வாய் வழியே வெளியாகிவிடும். இந்த உதிரப்போக்கையே மாதவிலக்கு என்கிறோம்.

    ஒரு பெண்ணின் இளம் வயதில் முதன்முதலாய் இந்த நிகழ்வு ஏற்பட்டு உதிரப்போக்கு ஆவதையே பூப்பெய்தல், பருவமடைதல், வயதிற்கு வருதல் என்று அழைக்கிறார்கள். இது 10-ல் இருந்து 16 வயதிற்குள் நிகழ்கிறது. 18 வயதிற்கும் மேலும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசிப்பது அவசியம். மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்கள் அதிகமானாலும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது. 

    * மாதவிலக்கு நாட்களில் சுத்தமான நீரில் தினசரி குளிப்பது அவசியம், தீட்டு என நினைத்துக்கொண்டு குளிக்காமல், மேலாடை மற்றும் உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது சுகாதாரமல்ல.

    * அந்நாட்களில் தேங்கிய நீர் நிலைகளான ஆறு , ஏரி, குளம், குட்டை, கிணறுகளில் குளிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மாதவிலக்கின் போது கருப்பையின் வாய்ப் பகுதி திறந்து இருக்கும், அப்போது சுத்தமில்லாமல் நீரில் குளிப்பது தொற்று கிறுமிகள் பிறப்புறுப்பை பாதிக்க வழிவகுக்கும்.

    * மாதவிலக்கு நாட்களில் தினமும் இரு முறையாவது பிறப்புறுப்பை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும். சுத்தமான பருத்தி உள்ளாடைகளையே பயன்படுத்த வேண்டும். உதிரப்போக்கை உறிஞ்சுதற்கு நாப்கின்களை பயன்படுத்தலாம், துணிகளைப் பயன்படுத்துவது என்றால் அவற்றை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தி உபயோகிக்க வேண்டும், அழுக்குத் துணிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. 

    * சானிடரி நாப்கின்களை ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது மாற்ற வேண்டும். உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை நிச்சயம் மாற்ற வேண்டும். 

    * மாதவிலக்கின் போது பள்ளி, கல்லூரி அல்லது வேறு விசேஷங்களுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ஓரிரு நாப்கின்களை எடுத்துச்செல்வது அவசியம்.
    துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா? அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா?
    Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள பூதம் DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது. மேலும் இது மூத்திரக்குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமிக்கிறது.

    உங்கள் உடலில் நுழைந்த dioxin 7 முதல் 11 ஆண்டுகள் வரை தங்கியிருந்து உங்கள் உடலை நாசமாக்கும்.

    * ஹார்மோன்களுடன் விளையாடத் துவங்கும் (Hormonal Imbalance)
    * சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது
    * இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி
    * சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)
    * கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)
    * கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)
    * கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)
    * தைராய்டு (Thyroid)
    * கல்லீரல் வேலையில் மாறுபாடு
    * ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு
    * வெள்ளைப்படுதல்
    * தோல் நோய்கள்
    * Toxic Shock Syndrome (திடீர் மரணம்)
    * நீரிழிவு (DIABETS)
    * மன அழுத்தம் (Depression)
    * கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)
    * குழந்தையின்மை (Fertility problems)
    * மார்பக புற்றுநோய் (breast cancer)
    * கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)

    இன்னும் இன்னும், உலக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட பல பேராபத்துக்கள் இதில் உள்ளது. நம் நாட்டில் பெண்கள் என்ன புகைப்பிடிக்கிறார்களா? அல்லது மதுப் பழக்கத்திற்குத்தான் அடிமையாகி உள்ளார்களா? எதுவுமே இல்லை. பிறகு ஏன் இவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வர வேண்டும்???

    இதை பற்றி எதுவும் தெரியாமல் இன்னும் பல பெண்கள் கடைகளில் கிடைக்கும் நச்சு ரசாயன Sanitary Napkin களை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 100 ல் 99 பெண்களுக்கு கருப்பை பிரச்சனை உள்ளது.

    பெண்களே ஒவ்வொரு முறை நாம் நாப்கினை பயன்படுத்தும் போது, அடுத்த தலைமுறைக்கு கொள்ளி வைக்கிறோம் என்பது நினைவிற்கு வரட்டும்.

    ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் சுரப்பு குறைவதுதான் பெண்களின் எடை அதிகரிப்பதற்கான முதல் காரணம்.
    ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் சுரப்பு குறைவதுதான் பெண்களின் எடை அதிகரிப்பதற்கான முதல் காரணம். மெனோபாஸ் காலம்வரை ஒரு பெண் எடையை தாங்கும் எந்தப் பயிற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தால், அவருக்கு தசைத் திசுக்கள் குறைவாக இருக்கும்.

    அதாவது அவை கலோரிகளை எரிக்கும் ஆற்றலை இழந்திருக்கும். அதனால், அவர்களது எடை அதிகரிக்கும் என்கிறது, மருத்துவ ஆய்வு ஒன்று. மேலும் இளவயதில் பெண்களைவிட ஆண்களுக்கே தசைத்திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும். பெண்கள் தசைத்திசு அடர்த்தியை அதிகரிக்கும் முயற்சிகளை செய்வதில்லை. அதன் விளைவு அவர்களது மெனோபாஸ் பருவத்தில் பிரதிபலிக்கும். தசைத்திசுக்கள் அடர்த்தியின்றி இருந்தால் எலும்புமுறிவு ஏற்படும் அபாயமும் அதிகம். எனவே விளையாட்டு துறை சார்ந்த பிசியோதெரபிஸ்ட்களை சந்தித்து, தசைத்திசுக்களின் அடர்த்தியை அதிகரிக்கும் வழிகளை கேட்டுப் பின்பற்றலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளும் இதற்கு உதவும்.

    உடல் உணர்த்தும் சிக்னல்களை கவனிக்காவிட்டால் நம்மையும் அறியாமல் அதிக அளவு சாப்பிடுவோம். உணவை நன்கு மென்று, அது கூழான பிறகே விழுங்க வேண்டும். குறைந்தது 30 முறையாவது மென்ற பிறகே உணவை விழுங்க வேண்டும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள். காலையில் தூங்கி எழுந்த 2 மணி நேரத்துக்குள் காலை உணவையும், மதியம் 12 முதல் 1 மணிக்குள் மதிய உணவையும், இரவு 7 மணிக்குள் இரவு உணவையும் சாப்பிடுங்கள். இரவு உணவு முடித்து 3 மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லுங்கள்.

    உணவை அளந்து சாப்பிடுங்கள். அதற்கென அளவு கப்புகள் அல்லது எடை மெஷின் பயன்படுத்துங்கள். 2 கப் காய்கறியுடன், ஒரு கப் பருப்பு சாப்பிடுங்கள். குறைந்த ஸ்டார்ச் சத்துள்ள காய்கறிகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கேரட், பீட்ரூட், மஞ்சள் பூசணி, அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதை தவிருங்கள். ஒரு நாளைக்கு 2 முதல் 3 டீஸ்பூனுக்கு மேல் எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். பாதாம், வால்நட், ஆளிவிதை போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கும்.

    ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் ஒரு டம்ளர் மோர் அருந்துங்கள். அது நீங்கள் சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்கும். எந்த உணவை சாப்பிடும் போதும் அதில் புரதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். புரதமும் நார்ச்சத்தும் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசியை கட்டுப்படுத்துபவை. தவிர தினசரி உங்கள் உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளையும் தருபவை. உணவில் நார்ச்சத்து தவறாமல் இடம்பெறட்டும். காய்கறி, பழங்கள் மட்டுமன்றி, ஓட்ஸ் தவிடு, கோதுமைத் தவிடு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    முழு தானியங்கள், சிறு தானியங்கள், சிவப்பரிசி அவல் போன்றவற்றை உணவுக்குப் பிறகும் தொடரும் பசியின் போது சாப்பிடலாம். மைதா, பொரித்த உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்த்த உணவுகள், கிரீம் சேர்த்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்தாலே உடல் பருமனாகும் வாய்ப்புகளை குறைக்கலாம்.
    மாதவிலக்கு நிகழும் நேரங்களில் ஆரோக்கியமான தற்சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் இனப்பெருக்கத் தடத் தொற்றுக்களுக்கு பெண்கள் ஆளாக நேரிடும்.
    மாதவிலக்கு நிகழும் நேரங்களில் ஆரோக்கியமான தற்சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் இனப்பெருக்கத் தடத் தொற்றுக்களுக்கு பெண்கள் ஆளாக நேரிடும்.

    ஒரு பெண் பருவமடைவதற்கும், அவளுடைய இனப்பெருக்க உறுப்புகளான பிறப்புறுப்பு, மார்பகம், கருப்பை மற்றும் சினைப்பைகள் செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது. உடல் எப்போது, எப்படி வளரவேண்டும் என்பதை ஹார்மோன்களே கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து வெளியாகும் முட்டை ஆணுடைய விந்துடன் இணைந்து கருவாக மாறும் போதும் கருப்பையினுள் தங்கி வளர்ச்சியடையத் தேவையான ஏற்பாடுகளையும் இந்த ஹார்மோன்களே செய்கின்றன.

    45 அல்லது 50 வயதை ஒரு பெண் நெருங்கும்போது அவளுடைய உடலில் இந்த ஹார்மோன்களின் உற்பத்தி படிப்படியாக குறைகிறது. இதனால் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவதும் நின்றுவிடுகிறது, இதையே  ‘மெனோபாஸ்’ (Menopause) என்கிறோம்.

    பொதுவாக நமது கை, கால்களில் அடிபட்டு ரத்தம் வந்தால் அதில் காற்று படும்போது ஒருவிதமான வாடை வீசுவது இயல்பு, அதே போன்று மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தத்தில் இருந்து வாடை வருவதும் இயல்பு. வாடை வருவதால் பலர் இதைக் கெட்ட ரத்தம் என்கிறார்கள், அது முற்றிலும் தவறு. நமது உடலில் எந்தப் பகுதியிலும் கெட்ட ரத்தம் என்று ஒன்று இல்லை என்பதே உண்மை.

    மாதவிலக்குப் பிரச்னை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் ரத்தசோகைதான். உதிரப்போக்கின் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும்  சிறிது ரத்த இழப்பு ஏற்படுகிறது. இது பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிலக்கு மற்றும் நீண்டகால இடைவெளியில் மாதவிலக்கு ஏற்படுகிறது.

    எனவே ரத்த சோகையை தடுக்க இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை நமது உணவு பழக்கத்தில் சேர்க்க வேண்டும். அதாவது முருங்கைக்கீரை, அறைக்கீரை, பேரிசை பழம் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மாதுளை பழம், கர்ப்பப்பை வலுப்பெற அத்திப் பழம் போன்றவற்றைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்காமல் உண்ண வேண்டும்.
    பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு உடலில் நிறைய இடங்களில் சுருக்கம் ஏற்படும். இதற்கு பெண்கள் செய்ய வேண்டியவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு உடலில் நிறைய இடங்களில் சுருக்கம் ஏற்படும். அல்லது உடல் பருமனாக இருந்து டயட் செய்து அதன் பின் உடல் மெலிந்தாலும் வயிறு, இடுப்பு, தொடை, பின்புறம் என பெரும்பாலான பகுதிகளில் சுருக்கம், தழும்பு அல்லது தடிமன் ஏற்படும். இதனைத் தவிர்க்க சில டிப்ஸ்:

    உடல் இளைக்க டயட்டிங் மட்டும் செய்தால் போதாது. யோகா அல்லது உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். தினசரி கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடலை நீட்டி மடக்கி செய்யக் கூடிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும் மேலும் தோல் தொய்வடையாமல் இருக்கும்.

    வைட்டமின் C மற்றும் துத்தநாகம் அதிகமுள்ள உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். காரணம் இதில்  கொலாஜன் உற்பத்தி செய்ய உதவுகின்றன. கொலாஜன் என்பது ஒரு வகை புரதம், இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது.

    போதிய அளவு தண்ணீர் குடிப்பது  சருமத்திற்கு மிகவும் நல்லது.  இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து சமன்நிலையில் இருப்பதுடன் சருமம் நீரேற்றம் பெறும், இது பொலிவையும் ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் இளமையுடன் இருக்கும்.
    கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிட்டது எனக் கருதி ஒருபோதும் உணவை குறைக்கவே கூடாது. குழந்தைப் பிறக்கும் வரை எடை அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது.
    பேறு காலத்தில், தாயின் உடல் எடை 12 முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதற்காக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு எடை அதிகரித்திருக்க வேண்டும் என்றும் வரையறுத்துக் கூறுவார்கள். துரித உணவுகளை அதிகம் உட்கொண்டால் உடல் எடை உடனடியாக அதிகரித்துவிடும். ஆனால், கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பு என்பது குழந்தைகளின் நலன் காக்கும் கலோரிகளை அதிகரிப்பதாகும். எனவே நல்ல கலோரிகள் அதிகம் எடுத்துக்கொண்டு, உடல் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

    மேலும் சாப்பாட்டில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதால், உணவு சமைக்கும்போது குறைந்த அளவு உப்பு போட்டு சமைப்பது நல்லது. உப்பு இல்லாமல் சாப்பிடுவது சிரமமாக இருக்கும் என்பதால், உணவு எடுத்துக்கொள்வதை ஒரு நாளைக்கு ஆறு – ஏழு வேளைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். உடலுக்கு தேவையான கலோரிகளை நேரத்துக்குக் கொஞ்சமாக எடுத்துக்கொண்டால், தாய்க்கும் சிரமம் இருக்காது. குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்.

    கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிட்டது எனக் கருதி ஒருபோதும் உணவை குறைக்கவே கூடாது. குழந்தைப் பிறக்கும் வரை எடை அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

    தவிர்க்க வேண்டியவை…

    மைதாவில் தயாரான உணவு பொருட்களை சாப்பிடவேக் கூடாது. மேலும் இனிப்பு , அரிசி ஆகியவற்றை சாப்பிடும் அளவை குறைத்துக்கொள்ளலாம். மது அருந்தும் பழக்கமுள்ள பெண்கள், முற்றிலுமாக கைவிடுவது நல்லது. அல்லது குழந்தை பிறக்கும் வரை இது மாதிரியான பழக்கம் கூடவே கூடாது. ஆல்கஹால், குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும்.

    கருவில் உள்ள சிசுவின் உடல் எடையை அல்ட்ரா ஸ்கேன் வசதி மூலம் கண்டறிந்து விடலாம். துல்லியமாக தெரியாவிட்டாலும் ஏறத்தாழ உரிய எடை தெரிந்துவிடும். இதை வைத்துதான் மருத்துவர்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை அறிகிறார்கள். பேறு காலத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை குழந்தையின் உடல் எடையைக் கணக்கிட்டு அதற்கேற்ற உணவு மற்றும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். மேலும் மாதம்தோறும் தாயின் எடையும் கணக்கிடப்படுகிறது.

    வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவதால் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால், புரதம் அதிக அளவில் எடுத்துக்கொள்வதால், குழந்தையின் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் புரதம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளாமல், தேவையான அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

    எந்த சந்தேகத்துக்கும் மருத்துவரை அணுகி விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுவதில் தயக்கம் கூடவே கூடாது. தயக்கமின்றி நீங்கள் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளும் உணவுதான் குழந்தையின் எதிர்காலத்துக்கு அஸ்திவாரமாகப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!
    எந்த வகையான உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், சரியான உடல் எடையுடன் குழந்தை பிறக்கும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
    கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பிறந்த குழந்தையின் எடை மூன்று கிலோ இருக்க வேண்டும். அதற்கும் கீழ் என்றால் குறைந்த பட்சம் 2.75 கிலோ வரை இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதைவிட குறைவாக இருந்தால் ஊட்டசத்து குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அக்குழந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    கருவில் குழந்தை வளரும்போதே சிசுவுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், குழந்தை குறித்துக் கவலையின்றி வாழலாம். ஏனென்றால் அது இயற்கையாகவே ஆரோக்கியமான உடலைப் பெற்று விடும். சரி என்னென்ன உணவுகள் சிசுவின் எடையை அதிகரிக்க உதவும் என்பது பற்றிப் பார்க்கலாம். எந்த வகையான உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், சரியான உடல் எடையுடன் பிறக்கும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

    * காய்கறிகளை விட முட்டையில் அதிகளவு புரோட்டின் இருக்கிறது. மேலும் இதில் கூடுதலாக போலிக் ஆசிட், கோலின் மற்றும் இரும்புச் சத்து ஆகியவையும் உள்ளதால் தினமும் ஒரு வேக வைத்த முட்டையைச் சாப்பிட்டு வந்தாலே கர்ப்பிணிப் பெண்களுக்குப் போதுமானது. மருத்துவர் பரிந்துரைத்தல்படி அளவில் சிறு மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதனால், அளவுக்கு அதிகமான முட்டையை எடுத்துக்கொள்ளக் கூடாது. உடலில் புரதத்தின் அளவு அதிகமானால், குழந்தை குண்டாகப் பிறக்கும் அபாயம் உள்ளது.

    * கர்ப்பிணிகள் உலர்ந்த பழங்களைத் தினசரி சாப்பிட வேண்டும். அதாவது உலர்ந்த திராட்சை, அத்திப் பழம், பேரீட்சை ஆகியவற்றைத் தினசரி மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் நான்கு ஐந்து பழங்களாவது சாப்பிட்டு வர வேண்டும்.

    * முந்திரி, பாதாம் உள்ளிட்ட கொட்டை வகைகளில் புரதத்துடன் விட்டமின்களும் இருப்பதால், இவற்றையும் தினசரி உட்கொள்ள வேண்டும். உலர்ந்த பழங்களைப் போலவே இவற்றை மாலை நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. அல்லது பகல் நேரங்களில் அவ்வப்போது ஒன்று இரண்டுப் பழங்களாகச் சாப்பிடலாம்.

    * முருங்கைக் கீரை, அரைக் கீரை, மணத்தக்காளி என எந்த வகை கீரையாக இருந்தாலும் கர்ப்பிணிகள் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும். அகத்திக் கீரையைத் தவிர்ப்பது நல்லது. அது பேறு காலத்தில் சாப்பிடும் மாத்திரை காரணமாக ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கீரை வகைகளில், வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான சத்துக்கள் இருப்பதால், இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.

    * கர்ப்பிணிப் பெண்கள் தினசரி குறைந்தது 2 டம்ளர் அளவு பால் குடிக்க வேண்டியது அவசியம். தினசரி 200-500 மி.லி பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். காலை, மாலை என இரு வேளை அளவான அளவில் பால் எடுத்துக்கொள்ளலாம். பாக்கெட் பால்களைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக பசு அல்லது எருமை மாட்டுப் பாலை பருகினால் நல்லது.

    * யோகர்ட்டில் போதுமான அளவு புரோட்டினும், பாலை விட அதிகளவு கால்சியமும் உள்ளது. மேலும் இதில் விட்டமின் பி காம்ளக்ஸ் மற்றும் துத்தநாகமும் இருப்பதால், குழந்தை உடல் எடை குறைந்து பிறப்பதைத் தடுக்கும். இது சாதாரணமாகப் பால் விற்பனை நிலையங்களிலேயே கிடைக்கிறது.

    * வைட்டமின் சி நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம், மேலும் ஃபைபர், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டசத்துகள் நிறைந்த ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. அன்னாசி, பப்பாளி போன்ற வெப்பம் தரும் பழ வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

    * ஆரஞ்சு ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் கர்ப்பிணிகளுக்கு நல்லது. பழமாக சாப்பிட விரும்பாத கர்ப்பிணிகள் அவற்றை ஜூஸ் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். ஃபிரஸ் ஜூஸ் என பல பழங்களைக் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸைவிட, தனித்தனியே எடுத்துக்கொள்வது நல்லது.

    * கேரட், பீட்ரூட், வெண்டைக் காய் போன்ற பச்சை காய்கறிகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை உள்ளன. விட்டமின் ஏ, ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவுகிறது. மேலும் இது குழந்தை ஆரோக்கியமான உடல் எடையைப் பெறவும் உதவுகிறது. பச்சைக் காய்கறிகளைக் கர்ப்பிணிகள் சாப்பிடும்போது அதை நன்கு வெந்நீரில் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும்.

    * கர்ப்பிணிகளுக்கு மீன் ஆரோக்கியம் தரும் உணவு. ஆனால் மீனை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் பகுதிகளில் வளரும் மீன்களில் ரசாயன பொருட்கள் இருக்கலாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். ஏரி அல்லது அணைகளில் பிடிக்கப்பட்ட மீன்களோ அல்லது ஆழ்கடல் மீன்களோ என்றால் அச்சம் தேவையில்லை. இதுவும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

    * கம்பு சோறு, சோள சோறு போன்றவற்றில் புரதம், இரும்புச் சத்து, நார்ச் சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை தினசரி முளைக் கட்டிய தானியங்களாகவும்  எடுத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

    * வைட்டமின்கள் ,தாது உப்புகள் என கவனத்தில் கொண்டு உணவு எடுத்துக்கொள்வதால், உடலுக்கு தேவையான கொழுப்பு கிடைக்காமல் போய் விடும். வெண்ணெயில் உடல் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. வெண்ணெயைத் தனியாகவோ அல்லது பிரட், பாதாம், உலர்ந்த பழங்கள் போல வேறு ஏதேனும் உணவுப் பொருளுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

    * உடலுக்கு தேவையான இரும்புச் சத்து, தானியங்கள் மட்டுமின்றி இறைச்சியிலும் கிடைக்கிறது. நன்கு வேக வைத்த இறைச்சியை வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். ஆடு இறைச்சி, குறிப்பாக ஆட்டு ஈரலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான இரும்புச் சத்துடன், பிற விட்டமின்களும் கிடைக்கும்.

    * சூரியகாந்தி எண்ணெய் அல்லது பால்ம் ஆயில் பயன்படுத்துவதைவிட, நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. நல்லெண்ணெய் உடலுக்குக் குளிர்ச்சி தரும். மேலும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையாது இருக்கும்படிப் பார்த்துக்கொள்கிறது. இதன் காரணமாகக் குழந்தையின் வளர்ச்சியும் சீராகிறது.

    * வாரம் மூன்று அல்லது நான்கு முறை இளநீர் குடிப்பது கர்ப்பிணிகளுக்கு நல்லது. உடலின் வெப்பம் தணிவதால், கர்ப்பிணிகளின் உடல் எடையுடன் சிசுவின் உடல் எடையும் சீராக இருக்க உதவுகிறது.
    கர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் உங்களது கர்ப்பக் கால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும்.
    வயிற்றில் குழந்தையுடன் மிகவும் ஆவலாக எதிர்நோக்கி காத்திருப்பீர்கள். நீங்கள் நல்லவையை செய்து ஆரோக்கியமாக இருந்தால் குழந்தையும் ஆரோக்கியமுடன் பிறக்கும். கர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் உங்களது கர்ப்பக் கால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும்.

    தவிர்க்க வேண்டியவை


    எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். திறந்த வெளியில் கர்ப்பிணிகள் படுத்துத் தூங்க கூடாது. அமாவாசை, பௌர்ணமி, கிரகண நாட்களில் வெளியில் செல்ல கூடாது. மூளை வளர்ச்சி பாதிப்புகள் ஏற்படலாம். கருவுற்ற 10-16 வது வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    மசக்கையைத் தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்கலாம். அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை சுமப்பது, இறுக்கமான ஆடைகள் அணிவது, நீண்ட நேரம் கண் விழிப்பது, பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவை செய்ய கூடாது. தூங்கி கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம் போட்டோ பயமுறுத்தியோ எழுப்ப கூடாது. வேக்சிங் செய்ய கூடாது.

    பகலில் தூங்க கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் வந்து விடும். சிறுநீரை அடக்க கூடாது. அடக்குவதால் சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

    வாகனங்களில் பயணம் செய்வது, சமநிலையில்லாத சேர், ஆசனங்களில் உட்கார்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவை செய்ய கூடாது. பயத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள், நாடகங்கள், சம்பங்கள், செய்திகள் ஆகியவற்றைப் பார்க்க கூடாது. கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் தோல் நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நோய்கள் மரபணு மூலமாக குழந்தையைத் தாக்கலாம். காதில் ஹேர் பின் போன்ற பொருட்களை நுழைப்பது போன்ற செயல்கள் கூடாது.

    செய்ய வேண்டியவை


    வெள்ளை, இளஞ்சிவப்பு போன்ற மைல்டான நிறங்களில் உடைகளை அணியலாம். அடர்நிறங்களைத் தவிர்க்கலாம். சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக குளியல் சூரணம், நீராட்டுச் சூரணம் ஆகியவற்றைக் குளிப்பதற்கு பயன்படுத்தலாம். இதனால் உடல் சுத்தமாகும். பிறப்புறுப்பு, மார்பக பகுதிகளில் கிருமிகள் உண்டாவது தடுக்கப்படும். கர்ப்பமும் பாதுகாக்கப்படும். அமாவாசை, பௌர்ணமி, கிரகண நாட்களில் வீட்டில் தூங்கி ஓய்வு எடுக்கலாம்.

    உணவில் சீரகம், சோம்பு, இஞ்சி, ஏலக்காய், இந்துப்பு ஆகியவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பக் கால முதல் ஆறு மாதங்கள் வரை பால், வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். உயரம் குறைவான கட்டில் மெத்தையில் படுக்கலாம். குங்குமப்பூவை லேசாக வறுத்து, பொடித்துக் காய்ச்சிய பசும்பாலில் குடித்து வர இரும்புச்சத்து கிடைக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.

    உலர்திராட்சை, ஆல்பகோடா, மாதுளை, நெல்லி வற்றல், நாரத்தை, எலுமிச்சை ஆகியவற்றைப் பயன்படுத்தி மசக்கையைத் தடுக்கலாம். வாந்தி வந்தால் வாந்தி எடுப்பது நல்லது. மாத்திரையால் தடுக்க முயன்றால் குடல் பாதிப்புகள் ஏற்படலாம். தளர்வான ஆடைகளை அணியலாம். வெயில் காலங்களில் மட்டும் உடல் சூட்டைக் கட்டுப்படுத்த பகலில் 2 மணி நேரம் வரை தூங்கலாம். இரவில் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.

    மருத்துவரின் ஆலோசனைப்படி, மாதம் ஒரு முறை என ஆறாம் மாதம் வரை தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். இளஞ்சூடான வெந்நீரில் தினமும் குளிக்கலாம். வாரம் இருமுறை தலைக்கு குளிக்கலாம். வெயில் காலங்களில் தினந்தோறும் அல்லது வாரம் 4 முறை குளிக்கலாம். ஈரத்தை நன்கு துவட்டி விட வேண்டும். சைனஸ், தலைவலி வருபவர்கள் தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் நொச்சி இலை, வேம்பு இலை, புளி இலை ஆகியவை போட்டுக் குளித்தால் நுண்கிருமிகள் அண்டாது.

    கர்ப்பிணிகளின் வயிற்றில் குழந்தை வளர வளர வயிற்றுத் தசைகள் தளர்ந்து, கூபக தசைகள் மற்றும் இடுப்பு தசைகளில் இறுக்கம் ஏற்படுவதால் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும்.

    சுத்தமான, ஆர்கானிக் ரோஜா பூ இதழ்களை கழுவி 2 நாட்கள், வெயிலில் காய வைத்து, 5 நாட்கள் நிழலில் உலர வைத்து, இவை மூழ்கும் அளவு நல்ல, சுத்தமான தேனை ஊற்றி, அவ்வப்போது கிண்டி தேன் வற்ற வற்ற கொஞ்சம் தேன் சேர்த்து தினமும் 5 கிராம் இரவில் சாப்பிட்டு வர மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது.

    கீரைகள், காய்கறிகள், விதை அதிகம் உள்ள பழங்கள், நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் வராது. மலச்சிக்கல் அதிக நாட்கள் நீடித்தால் திரிபலா சூரணம் 3 அல்லது 5 கிராம் தினமும் இரவில் வெந்நீருடன் கலந்து சாப்பிடுங்கள். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால், நீரைப் பெருக்க கூடிய சுரை, பூசணி, புடலை, பரங்கி, வெண்டை, காசினிக் கீரை, வெந்தயக்கீரை ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.


    கர்ப்பிணிகள் எளிமையான, சிறிய வேலைகளை செய்யலாம். தினமும் 15-30 நிமிடங்கள் வீட்டிலே, வெளிப்புறத்திலே நடைப்பயிற்சி செய்வது நல்லது. எளிமையான சமையல் வேலை, நிமிர்ந்தபடி கூட்டுதல், துணிகளை அலசி காயப் போடுதல் ஆகியவற்றை செய்யலாம். மெல்லிய இசை கேட்கலாம். மியூசிக் தெரபி கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
    பெண்களை தாக்கும் PCOS பிரச்சனையில் இருந்து தீர்வு காண ஒரு சில உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
    தற்போது இருக்கும் நவீன உலகில் புதிதாக பல நோய்கள் நம்மை தாக்க தொடங்கி உள்ளன. பழங்காலத்தில் அனைவருக்கும் சுகப்பிரசவம் ஆன காலம் போய் இப்போது யாரைக் கேட்டாலும் சிசேரியன் என்று கூறுகின்றனர். நம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே இது போன்றவை நிகழ்கிறது.

    PCOS பிரச்சினை இருப்பவர்கள் சர்க்கரை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். வெள்ளை சர்க்கரை உடலுக்கு கேடு வெல்லம் பனங்கற்கண்டு போன்றவை உடலுக்கு நல்லது என்ற தப்பான ஒரு விஷயம் பரவி வருகிறது. வெள்ளை சர்க்கரை, வெல்லம், பனங்கற்கண்டு ஆகிய மூன்றிலும் ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் இருக்கும். ஃபிரக்டோஸானது உடலுக்கு தீங்கையே தரும். அதனால் எந்த விதமான இனிப்பையும் குறைத்து கொள்வது நல்லது.

    டிரான்ஸ் பேட்டை பல நாடுகளில் தடை செய்த போதிலும் அது குறைவான விலையில் கிடைப்பதால் இன்னும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பேக்கரிகளில் வாங்கப்படும் பேஸ்ட்ரீஸிலும், ஒரு சில ஹோட்டல்களில் விற்கப்படும் பிரியாணியிலும் இந்த டிரான்ஸ் பேட்டை பயன்படுத்துகின்றனர். PCOS பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக இதனை தவிர்க்க வேண்டும்.

    அடுத்தாக PCOS பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சாய் சம்மந்தப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம். சாய்களில் ஜெனிஸ்டீன், டெய்டுஜீன் என்ற இரு பொருட்கள் அதிகமாக காணப்படுகிறது. PCOS பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த பொருட்கள் அறவே ஆகாது.

    PCOS பிரச்சினை இருப்பவர்களுக்கு தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற இன்னல்கலால் அவதிப்படுவார்கள். கஃபீனை காபி, டீ, குளிர் பானங்கள் போன்ற எந்த வகையிலாவது உட்கொண்டால் இந்த இன்னல்களை அது இன்னும் அதிகப்படுத்தும். மேலும் மது பழக்கத்தை அறவே விட்டு விட வேண்டும். மேலும் மைதா, ஜன்க் ஃபுட், பிராஸஸ் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்த்தல் நலம். 
    ர்ப்ப காலத்தில் பெண்களால் நிம்மதியாக தூங்க கூட முடியாது. முழு நேரமும் அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டியதிருக்கும்.
    கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு சந்தோஷமான தருணம் மட்டுமல்ல. ஏகப்பட்ட உடல் நல பிரச்சனைகளையும் அவர்கள் தாண்டி வர வேண்டியிருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களால் நிம்மதியாக தூங்க கூட முடியாது. முழு நேரமும் அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டியதிருக்கும்.

    கர்ப்ப காலத்தில் இது தான் எல்லை என்று எதையும் உங்களால் வரையறுக்க முடியாது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் மனநிலையில் மாற்றம், உடல்நிலையில் மாற்றம் ஏற்படலாம். அதில் ஒன்று தான் தூக்க பிரச்சனை. தற்போதைய ஆய்வுகளின் படி 80% க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒரு முறையாவது தூக்கக் கோளாறுகளை சந்திக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றன.

    இப்படி கர்ப்ப காலத்தில் தூங்காமல் இருப்பது அவர்களுக்கு சில சமயங்களில் வெறுப்பை கூட ஏற்படுத்தும். இந்த தூக்க கோளாறுகள் மட்டுமல்லாமல் ஹார்மோன் மாற்றங்களாலும் பல கர்ப்ப கால பிரச்சனைகளையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். இந்த மாதிரி கர்ப்ப காலத்தில் தூக்கம் வராமல் இருக்க எது காரணமாக இருக்கின்றன. இதை எப்படி சமாளிக்கிறது என்பதை கீழ்க்கண்டவாறு காணலாம்.

    கர்ப்ப காலத்தின் கடைசி மாதத்தில் வயிற்றில் வளரும் குழந்தையின் அசைவு கூட அசெளகரியத்தை ஏற்படுத்தும். இதனால் இரவில் சரியாக தூங்க இயலாது.

    குழந்தை வயிற்றுக்குள் கை, கால்களை அசைக்கும் போதெல்லாம் உங்களுக்கு முழிப்பு தட்ட வாய்ப்புள்ளது. மறுபடியும் தூக்க நிலைக்கு சென்று தூங்குவது கடினமாக இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் மற்றும் அனிஸிட்டி பிரச்சனைகள் இருக்கும். பிரசவம் குறித்த பயமே அதை பற்றி கவலைப்பட வைத்து விடும். இந்த மன அழுத்தங்கள் உங்களுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

    கர்ப்ப கால பெண்களுக்கு நான்காவது மாதத்தில் இருந்து இரவில் கால் உளைச்சல் அதிகமாக இருக்கும். இதனாலும் அவர்களால் இரவில் சரிவர தூங்க இயலாது. இதற்கு பெண்கள் மக்னீசியம், கால்சியம் அதிகமான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். நட்ஸ் வகைகளை சாப்பிடுவது நல்லது. கால்களுக்கு மசாஜ் செய்து விடலாம். வேண்டுமென்றால் கால்களுக்கு செளகரியமாக தலையணைகளை வைத்து தூங்கலாம்.

    கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பொதுவான விஷயம். ஆனால் இரவு தூக்க நேரங்களில் அடிக்கடி எழுந்திருத்து சிறுநீர் கழிக்க செல்வதால் தூக்கம் கெடுகிறது. இதனால் அவர்கள் இன்ஸோமினியா பிரச்சனையை சந்திக்கின்றனர். கடைசி மாதத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது அதிகமாக இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தை அடிக்கடி உதைக்கும். இதனாலும் இரவு நேரங்களில் சரிவர தூங்க இயலாது. மேலும் தூங்குவதற்கு சரியான நிலையை கண்டறிவது சிரமமாக இருக்கும். தூங்கும் நிலை குறித்து எழும் சந்தேகங்களுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

    சில சமயங்களில் இரவில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு கூட தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்கும்.

    இரவில் ரெம்ப நேரம் கழித்து காபி எடுத்துக் கொள்வது சரி கிடையாது. அது உங்கள் தூக்கத்தை கெடுக்க கூடியது. உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் அது சிறந்தது அல்ல. எனவே இரவில் சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள். காபியை தவிருங்கள். வித்தியாசமான கனவுகள் வரக் கூடும் சில பெண்களுக்கு இரவில் வித்தியாசமான கனவுகள் வரக் கூடும்.

    இதனாலும் அவர்கள் இரவில் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான கனவுகள் வருவதற்கு உங்கள் பிரசவம் குறித்த பயமும், எதிர்கால கவலைகளும் தான் காரணம். எனவே எதையும் பற்றி யோசிக்காமல் உங்கள் நலனையும் குழந்தையின் நலனை மட்டும் யோசிக்கவும்.
    மாதவிலக்கு சமயத்தில் பெண்ணின் நலனுக்காக, கர்ப்பப்பையின் ஆரோக்கியத்துக்காக சிலவற்றை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
    மாதவிலக்கான நேரங்களில் பெண்கள் கடுமையான வேலைகளை செய்ய கூடாது. மீறி செய்தால் கருப்பையானது தளர்ந்து கீழிறங்கும் வாய்ப்பு உள்ளது. குதித்து விளையாடினால் கருப்பைத் தசைகள் இறுகி, கர்ப்பப்பையின் மடிப்புகளில் ரத்தம் உறையலாம். கர்ப்பப்பையின் மென் சுவர் விரிந்து, உடைந்து, கட்டிகள், வீக்கம், திசு சிதைவு ஆகியவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில், கர்ப்பப்பைக்கு கூடுதலான ரத்த ஓட்டம் அவசியம். இதற்கு, பெண்களின் பிற உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டும். இதனால்தான் மாதவிலக்கானப் பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

    மாதவிலக்கான பெண்கள் உள்ள வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தூங்கும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ ரத்தப்போக்கின் வாசத்தை பூச்சிகள் அறிந்து, கடித்துப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    ஓய்வு ஏன் அவசியமாகிறது?

    பெண்ணின் உடலானது, கருப்பையைக் கருத்தரிப்பதற்கு ஏதுவாக, “என்டோமெட்ரியம்” என்னும் சவ்வை கரைத்து, வளர வைத்து, பக்குவப்படுத்திக் கொள்கிறது.

    மாதவிலக்கு ஏற்படும் போது 35-40 மி.லி ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

    நீர்ச்சத்து, புரதம், ரத்தம், சளிச்சவ்வு, உப்புகள், எண்டோமெட்டிரிய திசுக்கள் ஆகியன கலந்த கருஞ்சிவப்பு நிற திரவமாக ரத்தம் வெளியேறும்.

    மன அமைதியுடன் அமர்ந்தோ, படுத்தோ ஓய்வெடுக்கும் பெண்களுக்கு 3-4 நாட்கள் சீரான ரத்தப்போக்கு ஏற்படும்.

    மாதவிலக்கு காலத்தில் ஓய்வெடுத்தால், கர்ப்பப்பை வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களும் நன்கு உற்பத்தியாகின்றன.

    மாதவிலக்கு காலத்தில் ஓடலாம், குதிக்கலாம், விளையாடலாம், வண்டி ஓட்டலாம் என விளம்பரம் செய்கின்றனர். இப்படியெல்லாம் செய்தால் ரத்தப்போக்கில் மாறுதல் ஏற்படுவதுடன், கர்ப்பப்பை தசைகள் திடீர் இறக்கத்தால் வீங்கி, கர்ப்பப்பைப் பெரிதாகின்றன.
    ×