என் மலர்

  ஆரோக்கியம்

  பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?
  X
  பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?

  பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.
  பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.

  இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே… இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள். காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும். எண்ணற்ற பழங்கள் இருக்கின்றன. பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

  கொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம். மாதவிடாய் தொல்லை இருப்பவர்கள் கொள்ளு சாப்பி மருத்துவர் அனுமதியுடன் சாப்பிடலாம்.

  எலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து பருகவும். கொழுப்பு, அடைப்பு போன்றவை நீங்கிவிடும். கழிவுகள் வெளியேறும். ரத்தம் சுத்தமாகும், தொப்பைக் குறையும்.

  தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, சிறுதானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசியைத் தொட்டு சாப்பிடுங்கள். காய்கறிகள்தான் பிரதான உணவு. அரிசி போன்ற தானியங்கள் குறைவான அளவாக இருக்க வேண்டும்.

  பாலை விட அதிக கால்சியம் தரும் உணவுகள் நிறையவே உள்ளன. கேழ்வரகு, எள்ளு, ஆரஞ்சு, புரோக்கோலி, வெண்டைக்காய், அத்தி, காராமணி, பாதாம் இன்னும் பல… பால் இல்லாத டீ, காபி சாத்தியம் என்றால் அதைக் குடியுங்கள். ஆசைக்கு வேண்டுமென்றால் ஒரு டம்ளர் நீர்த்த மோர் குடிக்கலாம்.

  காய்கறி, கீரைகள், பழங்களிலிருந்து உங்களுக்கு நார்ச்சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்குத் தேவையான 25 கிராம் நார்ச்சத்து கிடைக்காததால் கொழுப்பு சேர்கிறது. எனவே காய்கறிகளும் பழங்களும் பிரதான உணவாக்கிக் கொள்ளுங்கள். தினசரி கீரை அல்லது வாரம் 5 முறை கீரை சாப்பிடுங்கள்.

  பாயில் அல்லது யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும். 2-3 இன்ச் அளவுக்கு இரு கால்களையும் முட்டி மடங்காமல் தூக்கவும். உயரத்தில் காலைத் தூக்கத் தேவையில்லை. வயிறு நடுங்குவதை உங்களால் உணர முடியும். முடியாத போது காலை கீழே இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுங்கள். பிறகு மீண்டும் பயிற்சியை செய்யுங்கள். இதுபோல 5 முறை செய்யவும். வெறும் வயிற்றில், காலை மற்றும் மாலை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் தொப்பைக் குறையும்.

  அருகில் உள்ள யோகா மையத்துக்கு செல்லுங்கள். மூச்சு பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாள்தோறும் மூச்சு பயிற்சி செய்யுங்கள். தொப்பை இருக்கவே இருக்காது. மீண்டும் கொழுப்பு உடலிலும் சேராது.
  Next Story
  ×