என் மலர்
பெண்கள் மருத்துவம்
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது சில நிலைகளில் அமர்ந்து கொடுப்பது குழந்தைக்கும்,உங்களுக்கும் சௌகரியமாக இருப்பது அவசியம் அதோடு பால் வேகமாக வரவும் ஏதுவாக இருக்கும்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கான முதல் உணவு தாய்ப்பால். அதற்கு ஈடு இணையான ஊட்டச்சத்து எதுவுமில்லை எனலாம். எனவே அதை மேலோட்டமாக அணுகுவதை விட உள்ளார்ந்த உணர்வுடன் விரும்பி கொடுக்கும்போது அதன் ஆரோக்கியம் மேலும் கூடுகிறது.
அப்படிக் கொடுக்கும்போது சில நிலைகளில் அமர்ந்து கொடுப்பது குழந்தைக்கும்,உங்களுக்கும் சௌகரியமாக இருப்பது அவசியம் அதோடு பால் வேகமாக வரவும் ஏதுவாக இருக்கும். அவை என்னென்ன பார்க்கலாம்.
தொட்டில் பிடி நிலை : இது பொதுவாக குழந்தைக்கு முதன் முதலில் பால் கொடுக்கும்போது துவங்கும் நிலைதான். இரு கைகளால் தொட்டிலில் படுக்க வைப்பது போல் பிடித்துக்கொண்டு பால் தருவார்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். பழகிவிட்டால் இந்த நிலைதான் சௌகரியம் என நினைப்பீர்கள்.
தொட்டில் பிடி நிலை : இது பொதுவாக குழந்தைக்கு முதன் முதலில் பால் கொடுக்கும்போது துவங்கும் நிலைதான். இரு கைகளால் தொட்டிலில் படுக்க வைப்பது போல் பிடித்துக்கொண்டு பால் தருவார்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். பழகிவிட்டால் இந்த நிலைதான் சௌகரியம் என நினைப்பீர்கள்.
குறுக்கு தொட்டில் பிடி : இது குழந்தையை குறுக்காக ஒரு கையில் பிடித்தபடி கொடுக்கும் நிலை. சிறு குழந்தையாக 6 மாதக் குழந்தையாக இருக்கும் வரை இப்படி கொடுப்பது சௌகரியமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கு முலைகளைப் பிடித்துக் குடிக்க நல்ல நிலை.
கால்பந்து நிலை : கேட்பதற்கு சற்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அதிகபட்சமாக இரட்டை குழந்தைகள் பிறந்தால் ஒரே நேரத்தில் பால் கொடுக்க இந்த நிலை சிறந்தது. அதேபோல் பெரிய மார்பகங்கள் கொண்டவர்களுக்கும் வசதியானது. மற்றவர்களுக்கும் இந்த நிலை சௌகரியமாக இருந்தால் கொடுக்கலாம்.
பக்கவாட்டில் ஒருபுறமாக சாய்ந்த நிலை : படுத்தபடி ஒரு புறமாக திரும்பி பால் கொடுப்பதுதான். இரவில் ஆரம்ப காலகட்டத்தில் பாலுக்காக அடிக்கடி அழும் குழந்தைக்கு அமர்ந்துகொண்டு பால் கொடுக்க முடியவில்லை எனில் இந்த நிலையில் படுத்துக் கொண்டு கொடுக்கலாம். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் காயம் ஆறும் வரை இந்த நிலை சௌகரியமாக இருக்கும்..
கர்ப்ப காலத்தின் இந்த உணவுமுறைகளை பின்பற்றினால் ஸ்பைனா பிபிடா(Spina bifida), என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கலாம்.
நிற்பது, நடப்பது, அமர்வது, ஓடுவது என நமது இயக்கத்துக்கு காரணமான ஆணைகளை இடுவது தலைமைச் செயலகமான மூளை. அதை கட்டுப்படுத்தி, செயல்படுத்துவது முதன்மை கம்பித்தடம் போன்ற நமது தண்டுவட நரம்புகளே. மூளை, தண்டுவடம் என்கிற இந்த முக்கிய உறுப்புகள் இரண்டையும் பல அடுக்கு பாதுகாப்புடன் படைத்துள்ளது இயற்கை. மூளைக்கு எப்படி மெனிஞ்சஸ் என்கிற மூன்றடுக்கு பாதுகாப்பு உறையும் அதற்கு மேல் மண்டையோடு என்கிற உறுதியான வளையமும் இருக்கின்றனவோ, அதேபோல் மூளையில் இருந்து வெளிவரும் நரம்பு மண்டலத்துக்கும் மெனிஞ்சியல் உறைகளும் அதற்கு மேல் முதுகுத் தண்டுவட எலும்புகளும் பாதுகாப்பை வழங்குகின்றன.
அதேபோல் மூளையை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் சி.எஸ்.எப். என்கிற மூளை தண்டுவட திரவம், தண்டுவட நரம்புகளின் வெப்பத்தைச் சீராக்கி பாதுகாக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக, தோல் என்கிற முக்கிய உறுப்பு, வெப்பத்தின் அளவை மாற்றும் குளிர்சாதன பெட்டிபோல் வேலைசெய்வதால்தான், நம்மால் இயங்கவே முடிகிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் கரு உருவாகும் தொடக்க நாட்களிலேயே, பல்வேறு காரணங்களால் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் ஒன்றோ இரண்டோ உருவாகாமல் போக நேரிடலாம்.
இதனால், அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அடிக்கடி மருத்துவ உதவி பெற வேண்டிய கட்டாயமும், வாழ்நாளின் பெரும் பகுதியை மருத்துவமனைகளில் கழிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். இவ்வளவு பிரச்சினைகளை தரக்கூடிய ஸ்பைனா பிபிடா வராமலேயே தடுக்க முடியாதா.
அதை தடுப்பது மிக எளிது. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு, கொட்டை வகைகள், சிறுதானியம் போன்றவற்றை உண்ணும்போது இவற்றில் இயற்கையாகவே காணப்படும் போலிக் அமிலம், செல்களின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. வளர்ச்சிக்கும், மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது. அத்துடன், ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கிறது.
கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்வது மட்டுமன்றி, கருச்சிதைவையும் குறைப்பிரசவத்தையும் கட்டுப்படுத்தி, தாயின் ரத்த சோகைக்கும் அருமருந்தாவதால் ‘கருவின் தோழி‘ என்று கொண்டாடப்படுகிறது போலிக் அமிலம் என்கிற இந்த எளிய ‘பி‘ விட்டமின். ஆனால், இயற்கை தரும் உணவு வகைகளில் இருக்கும் போலிக் அமிலம், சமைக்கும்போது நீரில் கரைந்து சிதைந்துவிடுவதால், 400 முதல் 600 மெக் போலிக் அமில மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.
கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத்தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம். இரும்புச்சத்து போலிக் அமில மாத்திரைகளை கர்ப்பிணிப் பெண்களுக்கும், பருவ வயதை எட்டிய பெண்களுக்கும் அரசு இலவசமாக வழங்கிவருவது இதனால்தான்.
முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம்.
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.
அந்தவகையில், முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம்.
அன்னாசி பூ மணம் தரக்கூடியது. உணவாவது மட்டுமின்றி உன்னதமான மருந்தாக விளங்குகிறது.
மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது.
மாதவிலக்கை தூண்டி முறைப்படுத்துகிறது.
தாய்ப்பாலை பெருக்க கூடிய அற்புத சக்தி உடையது.
அதிக சத்துக்கள் உள்ள இது, புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும்.
செரிமானத்தை தூண்டும். சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாகிறது.
அன்னாசி பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
அன்னாசி பூ
பெருங்காயம்
பனைவெல்லம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவுக்கு போடவும். கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை தினமும் காலை வேளையில் எடுத்துவர தடைபட்ட மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கை சீர் செய்கிறது. இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்கிறது.
பெண்கள் உள்ளாடை என்று வரும் போது பெரும்பாலனோர் நல்ல கவர்ச்சியான உள்ளாடைகளை அணிகிறார்களே தவிர தரமான உள்ளாடைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை.
பெண்கள் உள்ளாடை பராமரிப்பு என்று வரும் போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. ஏனெனில் நம்மில் பெரும்பாலனோர் நல்ல கவர்ச்சியான உள்ளாடைகளை அணிகிறார்களே தவிர தரமான உள்ளாடைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை.
உள்ளாடை மீது கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இது தான் பெண்ணுறுப்பை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைக்க உதவுகிறது. பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் பெண்ணுறுப்புக்குள் நுழைவதை தடுக்கிறது. பெண்ணுறுப்பில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நமைச்சலை தடுக்கிறது.
எனவே இப்படி பாதுகாப்பு அளிக்கும் உள்ளாடைகளை நாம் எப்படி பராமரிக்க வேண்டும், அதை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மகப்பேறியியல் மருத்துவர் நமக்கு விளக்கம் அளிக்கிறார்.
உங்க உள்ளாடை கவர்ச்சியாக இருப்பதை விட தரமான ஒன்றாக இருக்க வேண்டும். உங்க உள்ளாடை 100% பருத்தியால் செய்யப்படவில்லை என்றால் ஈரப்பதத்தை உறிஞ்சாது. எனவே குறிப்பாக நைலான், பாலியஸ்டர் போன்ற உள்ளாடைகளுக்கு தயவு செய்து செல்லாதீர்கள். இது உங்க பெண்ணுறுப்பில் அரிப்பு, சிவத்தல் மற்றும் எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. தினமும் பருத்தி உள்ளாடைகளை மட்டுமே அணிய வலியுறுத்துகிறார் மருத்துவர். இது தான் உங்க சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கும். வியர்வையை உறிஞ்ச உதவி செய்யும்.
பெரும்பாலான பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை உள்ளாடைகளை மாற்றுவதையே கஷ்டமாக உணர்கின்றனர். முடிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உங்க உள்ளாடைகளை மாற்ற முயற்சி செய்யுங்கள். ஒருவேளை பிறப்புறுப்பு திரவ வெளியேற்றம் மற்றும் ஈரப்பதம் இருந்தால் உடனே உங்க உள்ளாடைகளை மாற்றுவது அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளாடைகளை அணிவது ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். ஒருவேளை நீங்கள் உடற்பயிற்சி செய்து வியர்க்க ஆரம்பித்தால் உடனே உள்ளாடைகளை மாற்ற முயலுங்கள்.
இரவில் உள்ளாடை அணியாமல் தூங்குவது அந்த பகுதியை சுவாசிக்க வைக்கிறது. காற்றோட்டமாக வைக்கிறது. இரவில் உங்களால் நிம்மதியாக தூங்க முடியும். சிலருக்கு உள்ளாடை அணியாமல் தூங்குவது செளகரியமாக இருக்கலாம். சிலருக்கு அதில் இஷ்டம் இல்லையென்றால் காற்றோட்டமான உள்ளாடைகளை தேர்வு செய்து அணியுங்கள். இது உங்க சொந்த விருப்பத்தை பொருத்தது.
உள்ளாடை மிகவும் மென்மையானது. எனவே இதை உங்க ஆடைகளை விட கவனமாக கையாள வேண்டும். முடிந்தால் உள்ளாடைகளை தனியாக துவைக்க முற்படுங்கள். ஏனெனில் உள்ளாடைகளில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதை மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைக்க வேண்டாம். எனவே உள்ளாடைகளை தனியாக துவைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உள்ளாடைகளை துவைக்க மைல்டு சோப்பு பயன்படுத்துங்கள். சூரிய ஒளியில் உலர வையுங்கள். ஏனெனில் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் உள்ளாடைகளில் உள்ள பாக்டீரியாக்களை கொல்ல உதவும்.
ஒவ்வொரு ஆண்டும் பழைய உள்ளாடைகளை மாற்றி புதிய உள்ளாடைகளை வாங்க மகப்பேறியியல் மருத்துவர் பரிந்துரைக்கிறார். ஒருவேளை துணியின் நெகிழ்வுத்தன்மை இழந்து விட்டாலோ அல்லது துர்நாற்றம் வீச ஆரம்பித்து விட்டாலோ உடனே மாற்றுவது நல்லது. எனவே எப்போதும் புதிய உள்ளாடைகளை கைவசம் வைத்து இருங்கள் என்று மகப்பேறியியல் மருத்துவர் கூறுகிறார்.
அதிசயங்கள் நிறைந்த சுரங்கமாக இருக்கும் மனித உடலில் இனப்பெருக்க செயல்பாடுகள் பல்வேறு ஆச்சரியங்களை அரங்கேற்றுகின்றன.
இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டிலும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. தொடர்ச்சியாக மனித இனம் உருவாகிக் கொண்டே இருக்க இனப்பெருக்க உறுப்புகள் தான் காரணம். ஆண் இனப்பெருக்க உறுப்பிற்கும், பெண் இனப்பெருக்க உறுப்பிற்கும் வித்தியா சங்கள் இருந்தாலும், இரண்டும் இணைந்து உருவாக்கம் நிகழ்த்தும் விதத்தில் அவை அற்புதமாக படைக்க பட்டிருக்கின்றன.
ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான், ஆணின் விரைகளில் செயல்பட்டு உயிரணுவை உற்பத்தி செய்கிறது. ஒரு மில்லி விந்துவில் ஒன்றரை கோடி உயிரணுக்கள் இருக்கும். பெண்ணை கருத்தரிக்க வைக்க அதில் ஒன்றே ஒன்று போதுமானது. பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் தான், மனித உற்பத்திக் கேந்திரம்.
பெண்ணுறுப்பு, கருப்பை, சினைப்பைகள், கருக்குழாய்கள் போன்றவைகள் அதில் குறிப்பிடத்தக்கவை. பெண்ணுறுப்பு கிட்டத்தட்ட பத்து செ.மீ. நீளம் கொண்ட ஒரு குழல் போன்ற அமைப்பு. அதன் முகப்பு பகுதி கன்னிச்சவ்வு மூலம் மூடப்பட்டிருக்கும்.
அதன் நடுவில் உள்ள சிறிய துவாரத்தின் வழியாகத்தான் மாதவிலக்கு உதிரம் வெளியேறுகிறது. உறவின் போது ஆணின் உயிரணுவை, யோனி நாளம் வரவேற்கிறது. பெண்ணுறுப்புக்கு பார்தோலின் என்ற சுரப்பி சுரக்கும் திரவம் வழுவழுப்புத் தன்மையை உருவாக்குகிறது. இவை அனைத்தும் உடலியல் விஞ்ஞான தகவல்கள் ஆகும்.
எட்டு செ.மீ. நீளமும், ஐந்து செ.மீ. அகலமும் கொண்ட தசையாலான பை தான் கருப்பை. இனப்பெருக்கத்தில் இது செய்யும் பணி அதிசயமானது. 50 கிராம் எடை கொண்ட கருப்பை, கருவை உள்வாங்கி, அதைவிட பலமடங்கு கொண்ட குழந்தையாக வளர்த்தெடுக்கிறது.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினை முட்டையும் சந்தித்து, கருக்குழாயில் கருவாகிறது. அந்த கரு, கருப்பைக்குள் சென்று பதியமாகி சிசுவாகி, குழந்தையாக வளருகிறது. கருப்பையின் மேல் பகுதியில், இருபுறமும் இரு சினைப்பைகள் உள்ளன. இதில் இருந்து தான் மாதந்தோறும் சினைமுட்டை வெளி வருகிறது.
பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் பெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாயின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. முடியை விட மெலிதாக இருக்கும் இந்த குழாய்கள் தான் சினை முட்டையையும், உயிரணுவையும் சந்திக்க வைக்கவும் - கருவாக்கி - அதனை கருப்பைக்குள் அனுப்பும் பணியையும் செய்கின்றன.
இதன் பணிகள் அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. பெண் பூப்படைவது மூலம் அவள் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டாள் என்பது உணர்த்தப்படுகிறது. பெண்ணின் ஒவ்வொரு மாதவிலக்கு சுழற்சி காலத்திலும் சினை முட்டை முதிர்ந்து வெடித்து வெளியே வருகிறது. அது ஆணின் உயிரணுவோடு சேர்ந்து கருவாகும் சூழல் உருவாகிறது.
சினைமுட்டை வெளியேறும் ஒவ்வொரு மாதமும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஆகிய ஹார்மோன்கள் கருப்பைக்குள் என்டோமெட்ரியம் என்ற பஞ்சுப்பொதி போன்ற மென்பொருளை உருவாக்குகிறது. கருப்பைக்குள் வரும் கரு வளர படுக்கை அமைத்து கொடுப்பது போன்ற பணியை என்டோமெட்ரியம் செய்யும். ஆனால் ஆணும், பெண்ணும் இணையாவிட் டால் கருத்தரிப்பு அங்கே நிகழாது.
அதனால் என்டோமெட்ரியத்திற்கு அங்கே வேலையில்லை. அதனால் அது ரத்தத்தோடு மாதந்தோறும் வெளியேறும். அப்படி வெளியேற்ற படுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். கர்ப்ப காலத்தில் மாதவிலக்கு தோன்றாது. அதிசயங்கள் நிறைந்த சுரங்கமாக இருக்கும் மனித உடலில் இனப்பெருக்க செயல்பாடுகள் பல்வேறு ஆச்சரியங்களை அரங்கேற்றுகின்றன.
இந்த அதிசயங்களை பார்த்து மலைத்து, சிலிர்த்துப் போவதைவிட இந்த அற்புத உயிர் இயந்திரத்தின் இயக்கத்தில் எந்த கோளாறும் (நோயும்) வராமல் பார்த்துக் கொள்வது தான் நாம் நமது உடலுக்கு செய்யும் மரியாதையாகும்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மார்பகங்களை நீக்கம் செய்த பின்பு அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் சொல்ல முடியாததாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களின் கவலையையும்,கண்ணீரையும் அருகில் இருந்து பார்த்த ஜெயஸ்ரீ ரத்தன் அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் புன்னகையை உருவாக்கச் செய்யும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மார்பகங்களை இழந்த பெண்களின் வாழ்க்கையில் இதன் மூலம் புது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். அதற்காக சாய்ஷா என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.
“புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்த பெண்களை இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திக்கும் சூழ்நிலை உருவானது. அவர்களது மனக்கஷ்டங்களை கேட்டபோது பிராக்களின் உள்ளேவைக்க கூடிய பொருளை தயார் செய்யலாமா என்று யோசித்தேன். கம்பளி நூலால் மார்பக வடிவம்கொண்ட நாக்கர்ஸ் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘நிட்டட் நாக்கர்ஸ்’ அமைப் பிடம் தொடர்புகொண்டு பேசினேன். அவர்கள் இங்கே அதனை தயார் செய்துகொள்ளும் உரிமையை வழங்கினார்கள். நாங்கள் இங்கே தயார்செய்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் கண்ணீர் கலந்த நன்றியை தெரிவிக்கிறார்கள்” என்கிறார், ஜெயஸ்ரீ. இவர் சென்னை குட்ஷெப்பர்டு கான்வென்டில் படித்தவர்.
இவர் குரோஷா மற்றும் நிட்டிங் தெரிந்த தனது தோழிகளுடன் சேர்ந்து அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சாய்ஷா அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த அமைப்புக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 170 சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு வருடங்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ‘நாக்கர்ஸ்’ வழங்கியிருக்கிறார்கள். தேவைப்படு பவர்களுக்கு வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.
“மார்பகம் நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். அதற்கு செலவு செய்ய முடியாதவர்களுக்கு இதனை இலவசமாக வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்கிறார், வல்ச மேரி மேத்யூ. திருவனந்தபுரத்தை சேர்ந்த இவரும் சாய்ஷா அமைப்பின் சேவகராக பணியாற்றுகிறார்.
“நானும், ஜெயஸ்ரீயும் சென்னையில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தோம். பள்ளிப் படிப்பை முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பு கடந்த ஆண்டு முன்னாள் மாணவிகளான நாங்கள் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடினோம். அப்போதுதான் ஜெயஸ்ரீ, சாய்ஷா அமைப்பின் செயல்பாடுகள் பற்றி என்னிடம் சொன்னார். அப்போது நான் வங்கி மேனேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தேன்.
அக்ரிலிக் நூல் மூலம் வழக்கமாக குரோஷா தயார் செய்வார்கள். ஆனால் நமது நாட்டு சீதோஷ்ணநிலைக்கு காட்டன் நூலால்தான் நாக்கர்ஸ் தயார்செய்யவேண்டும். கோவா, வதோரா போன்ற பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் காட்டன் நூல் வினியோகிக்கிறார்கள். அதற்கான செலவுகளை வாலண்டியர்களான நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். குரோஷா, நிட்டிங் தெரிந்த எல்லோருமே ‘பேட்டர்ன்’ தெரிந்தால் நாக்கர்ஸ் வடிவமைக்கலாம். ஏ, பி, சி, டி போன்ற கப் சைஸ்களில் எவ்வாறு நாக்கர்ஸ் தயார் செய்வது என்ற விவரம் பேட்டனில் தரப்பட்டிருக்கிறது.
நாக்கர்ஸின் உள்ளே ரெக்ரான் பைபரை வைக்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு எதிரானதல்ல. மட்டுமின்றி கழுவியும் பயன்படுத்தலாம். எடை மிக குறைந்தது என்பதால் உபயோகிக்கவும் சிரமம் ஏற்படாது. உலகின் பல பகுதிகளில் இருந்து தயார் செய்து அனுப்பப்படும் நாக்கர்ஸில் கப் சைஸ் அளவுக்கு ஏற்றபடி ரெக்ரான் பைபரை நிரப்பி, லேபிள் செய்யும் பணி மும்பையில் நடக்கிறது.
ஒரு மார்பகம் மட்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாக்கர்ஸ் வழங்குகிறோம். கழுவி, காயவைத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப கூடுதலாக ஒன்று வழங்குகிறோம். ஒருமுறை பெறுபவற்றை இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு எங்கள் அமைப்பை தொடர்புகொண்டு புதியவற்றை வாங்கிக்கொள்ளலாம். இந்த சேவையில் மனநிறைவு கிடைக்கிறது. முதலில் எங்களிடம் இருந்து நாக்கர்ஸ் பெற்றவர்கள், பின்பு எங்களோடு சேர்ந்து வாலண்டியராக சேவை செய்ய முன்வருகிறார்கள். அதனால் எங்கள் சேவை விரிவடைந்துகொண்டிருக்கிறது” என்கிறார், ஜெயஸ்ரீ ரத்தன்.
குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை பல விதங்களில் பாதுகாக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது.
இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) உள்ளது. இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.
அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
இதன் அறிகுறிகள் திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம் (நீர் வெளியேறுதல் -Water outflow) இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
மருத்துவ முறை 34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்
ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கொடி கீழிறங்குவது (The umbilical cord is lowered) உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.
இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
பெண்கள் பிரா வாங்கும்போது எதில் தவறு செய்கிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?, எப்படி வாங்க வேண்டும் என்பதை வழிகாட்டுகிறது இந்தக் கட்டுரை.
தவறான பிரா வாங்கினால் ஏற்படும் பாதிப்புகள் :
பெண்கள் எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் சிக்கனமாக இருக்கலாம்.
ஆனால் உள்ளாடை வாங்கும்போது மட்டும் சிக்கனம் பார்க்காமல் பிராண்டாகவும், தரமானதாகவும் வாங்க வேண்டும்.
அதேபோல் தவறான அளவில் வாங்கினாலும் அது அசௌகரியத்தை உண்டாக்கும்.
அதேசமயம் அதன் ஷேப்பையும் மாற்றும். எதிரே பார்க்கும்போது தோற்றம் நன்றாக இருக்காது.
அதேபோல் தவறான பிரா அளவு தோள்பட்டை வலி, முதுகு வலிக்கு காரணமாக அமையும். இறுக்கமான எலாஸ்டிக் பிரா அணிந்தாலும் மார்பகங்களுக்குக் கீழ் கருப்பாக மாறும்.
எப்படி பிரா வாங்க வேண்டும்..?
மார்பக அளவை தெரிந்துகொள்ள இஞ்ச் டேப் பயன்படுத்தி சுற்றளவை எடுக்க வேண்டும். அதற்கு மார்பகங்களுக்குக் கீழ் இஞ்ச் டேப்பை வைத்து அளவு எடுக்க வேண்டும்.
இது 32,34, 36 என அதன் அளவு இரட்டை படை எண்களில் இருக்கும்.
அப்படி வரும் எண்ணுடன் ஐந்தை கூட்டிக்கொள்ள வேண்டும். ( உதாரணத்திற்கு 38 + 5 = 43 )
ஒருவேளை அளவு ஒற்றைப் படை எண்ணில் வந்தால் அதன் அடுத்த இரட்டை படை எண்ணை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஐந்துடன் கூட்டிய எண் 43 என வந்தால் அதன் அடுத்த எண்ணான 44 அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தற்போது இதுதான் பிராவின் சுற்றளவு.
அடுத்ததாக கப் சைஸ் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது மார்பகங்களின் அளவு.
இந்த கப் சைஸ் என்பது எண்ணிக்கையில் அல்லாமல் எழுத்தாக A,B,C,D என வரும்.
இதற்கு இஞ்ச் டேப்பை மார்பகங்களின் மேல் வைத்து அளவு எடுக்க வேண்டும்.
அந்த அளவு 40 என வந்தால் அதை மார்பக சுற்றளவுடன் கழிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு கப் அளவு 40 – சுற்றளவு 44 கழித்தால் 4 வரும். இந்த நான்கு என்பது Dயைக் குறிக்கும். எனவே கப் அளவு D கப்.
தற்போது பிரா வாங்கும்போது சுற்றளவு மற்றும் கப் சைஸ் இரண்டையும் சேர்த்து கேட்க வேண்டும். அதாவது பிரா சைஸ் 44 கப் சைஸ் D என கேட்டு வாங்க வேண்டும்.
இப்படி உங்களின் மார்பக சுற்றளவு, மார்பக அளவு எவ்வளவு வருகிறது என இஞ்ச் டேப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள்.
ஒருவேளை இஞ்ச் டேப் இல்லை என்றாலும் பிரா விற்கும் கடைகளில் இஞ்ச் டேப் வைத்திருப்பார்கள். உதவிக்குக் கேட்டால் கொடுப்பார்கள்.
அல்லது அருகில் உள்ள டெய்லர் கடையில் சென்றும் உங்கள் அளவை தெரிந்துகொண்டு, நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
கர்ப்பிணி பெண்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் பாக்டீரியாக்களால் தொந்தரவு நேரும்.
கர்ப்பிணி பெண்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் பாக்டீரியாக்களால் தொந்தரவு நேரும். அவை உணவு மூலம் பரவும் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிடும் உணவு விஷயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பழங்கள் சாப்பிடுவதில் கட்டுப்பாட்டை பின்பற்றுவது அவசியமானது.
கர்ப்பகாலத்தில் திராட்சைப்பழம் சாப்பிடலாமா? என்பதில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. சில மருத்துவ வல்லுனர்கள் திராட்சையை தவிர்க்குமாறு பரிந்துரைக்கிறார்கள். திராட்சை செடிகளில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அதற்கு காரணமாக கூறுகிறார்கள். மேலும் திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் எனும் ரசாயனம் அதிக அளவு இருக்கிறது. இந்த ரசாயனம் நச்சுத்தன்மை கொண்டது. அது தாய்க்கும், சேய்க்கும் தொந்தரவு உண்டாக்கும். திராட்சையில் வைட்டமின் ஏ, சி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. என்றாலும் கர்ப்பகாலத்தில் திராட்சை பழம் சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களை கலந்தாலோசிப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் நல்லதல்ல. அதில் ப்ரோமைலின் நிறைந்துள்ளது. இது கர்ப்பப்பை வாய் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கக்கூடியது. கர்ப்பம் தரித்ததும் முதல் மூன்று மாதங்களில் அன்னாசி பழத்தை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. அன்னாச்சி பழ சாறு பருகினால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும் என்றாலும் கர்ப்பகாலத்தில் தவிர்ப்பதே நல்லது.
கர்ப்பகாலத்தில் பப்பாளி பழத்தையும் தவிர்க்கும் நடைமுறை இருக்கிறது. அதுவும் சரியானதுதான். பப்பாளி சாப்பிடுவது கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பது ஓரளவு உண்மையானதுதான். பப்பாளி காய் மற்றும் பாதி பழுத்திருக்கும் பழத்தில் லேடெக்ஸில் நிறைந்திருக்கும். அது கருப்பை சுருக்கங்களை தூண்டும். அதனால் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.
இருப்பினும், பழுத்த பப்பாளி பழத்தை பிரசவ காலத்திற்கு பிறகு சாப்பிடலாம். பழுத்த பப்பாளி பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்கும். தேன் மற்றும் பால் கலந்த பப்பாளி தாய்மார்களுக்கு ஒரு சிறந்த டானிக் ஆகும். குறிப்பாக பாலூட்டும் சமயத்தில் உட்கொள்ளலாம். ஏனெனில் பழுத்த பப்பாளி பழங்களில் மிகக்குறைந்த அளவு பப்பேன் உள்ளது. மேலும் ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் உள்பட பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது.
அதேவேளையில் கர்ப்ப காலத்தில் பழங்கள் உணவில் முக்கிய இடம் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பிடித்தமான பழங்களை பட்டியலிட்டு சாப்பிடுவது அவசியம். அவை வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் ஆரோக்கியமானதுதானா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.
பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை: மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய். உலக அளவில் கணக்கிட்டால் சுவாசப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பிடித்திருக்கிறது.
மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தன்மை கொண்டது என்று கருதப்படுகிறது. நெருங்கிய உறவினர்களில் யாருக்காவது வந்திருந்தாலும் அதே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். 12- வயதுக்கு முன்பு வயதுக்கு வந்துவிட்டாலும், 55-வயதுக்கு பின்பு மாதவிலக்கு நிலைத்துப்போனாலும் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நிலைத்த பின்பு உடல் எடை அதிகரிக்கும் பெண் களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசங்கள், மது போன்றவைகளை தவிர்ப்பது மார்பகபுற்று நோயை தடுக்கும். கர்ப்பத்தடை மாத்திரைகள், மாதவிலக்கு நாட்களை தள்ளிப்போடுவதற்காக உட்கொள்ளும் மாத்திரைகள், குழந்தையின்மைக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் ஹார்மோன் தன்மைகள் போன்றவை மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.
மார்பகங்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏதாவது தோன்றியிருந்தாலும், அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கியிருந்தாலும் கவனமாக இருங்கள். பிற்காலத்தில் ஒருவேளை அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.
கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் பகுதி, பெண்களின் பிறப்பு உறுப்பின் உள்பகுதியில் அமைந்திருக்கிறது. பெண்கள் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கடந்த பின்பு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். 30 வயதைக் கடந்த பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 65 முதல் 75 வயதுக்கு உள்பட்ட மூதாட்டிகள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியதில்லை.
பரிசோதனையில் பாதிப்பு இருப்ப தாக கண்டறிந்தால், அது முதல் நிலை அல்லது இரண்டாவது நிலையில் இருந்தால் 85 முதல் 95 சதவீத நோயாளிகளை குணப்படுத்தி விடலாம். அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
ஹுயூமன் பாபிலோமா என்ற ஒருவகை கிருமிகள்தான் இந்த நோய்க்கு காரணம். அவை கருப்பைவாய் திசுக்களை கடந்து சென்று, அந்த திசுக்களில் ஆபத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது திடீரென்று ஏற்படும் மாற்றமல்ல. பல வருடங்களாக நடப்பதாகும்.
இளம் பருவத்திலே பாலியல் தொடர்பில் ஈடுபடுகிற பெண்கள், இளம் வயதிலே பிரசவிக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகித்தான் ஆகவேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. முன்பு இருந்ததைபோலவே உடல்வாகு பழைய நிலைக்கு உடனே திரும்பி விடும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது. ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு புரோஜெஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களின் அளவுகள் குறைய தொடங்கிவிடும். அதனால் பிரசவத்திற்கு பிறகு மனச்சோர்வு அதிகரிக்கும். அது சில காலம் நீடிக்கும். அன்றாட வாழ்க்கை முறையிலும் அதன் தாக்கம் வெளிப்படும்.
அதுபோல் கவலை, எரிச்சல், மனநிலை மாற்றம், பதற்றம் போன்ற அறிகுறிகள் குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குள் எட்டிப்பார்க்கும். ‘பேபி ப்ளூ’ எனப்படும் இத்தகைய அறிகுறிகள் சில நாட்களிலேயே மறைந்துவிடும். ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகித்தான் ஆகவேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
மார்பகம்: பிரசவத்திற்கு பிறகு குறிப்பிட்டத்தக்க மாற்றங்கள் மார்பகங்களில் ஏற்படுகின்றன. தாய்ப்பால் கொடுப்பதற்கு தயார்படுத்துவதற்காக மார்பகங்கள் முதலில் சற்று பெரிதாகும். அப்போது மார்பகத்தில் இருக்கும் செயலற்ற கொழுப்பு திசுக்கள் செயல்பட தொடங்கும். ஆனால் இந்த மாற்றங்கள் சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும். அதனால் கவலைப்பட தேவையில்லை. மேலும் தாய்ப்பால் சுரப்பு காரணமாக மார்பக அளவு அதிகரிக்கிறது. இனப்பெருக்க செயல்முறை மார்பகங் களில் தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இந்த காலகட்டத்தில் மார்பகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பொருத்தமான பிராக்களையும் அணிய வேண் டும். டாக்டர்களின் ஆலோசனையை பெற்று குறிப்பிட்ட உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள லாம்.
எரிச்சல்: பிரசவத்திற்கு பிறகு சில பெண்கள் எரிச்சல் அடைய தொடங்குவார்கள். சின்ன விஷயத்திற்கெல்லாம் சட்டென்று கோபப்படுவார்கள். பிரசவத்திற்கு பிறகு ஹார்மோன்கள் மாற்றம் அடைவதே அதற்கு காரணம். குழந் தையை பெற்றெடுத்ததும் குறிப்பிட்ட உடல் மாற்றங்களை உணர்வார்கள். அந்த சமயத்தில் மனதுக்கு பிடித்தமானவர்களிடம் இருந்து ஆறுதலையும், அனுசரணையையும் எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காதபட்சத்தில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். பிரசவத்திற்கு பிறகு சருமம், கூந்தல், மார்பகங்கள், உடல் எடை, அடி வயிறு, பிறப்பு உறுப்பு, குடல் போன்றவை மாற்றங்களை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது.
கால் அளவு: கர்ப்ப காலத்தில் கால்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படக்கூடும். அமெரிக்க மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி, கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிக எடை கால்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும். அதனால் கால்களின் அளவில் மாற்றம் ஏற்படும். பிரசவத்திற்கு பிறகு காலணிகளின் அளவை சிலருக்கு மாற்ற வேண்டியிருக்கும்.
வயிற்றுத் தழும்புகள்: கருவில் இருக்கும் குழந்தை வளர ஆரம்பிக்கும்போது வயிற்றின் அளவும் அதிகரிக்கும். வயிற்று தசைகள் விரிவடையும்போது தழும்புகள் ஏற்படும். பிரசவத்திற்கு பிறகும் அந்த தழும்புகள் இருக்கத்தான் செய்யும். சில சமயங்களில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தழும்புகள் மறைவதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
உடல் பருமன்: பிரசவத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடிவிடும். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிப்பதால் பிரசவத்திற்கு பிறகும் அதன் தாக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு கருப்பை சுருங்கி விடும். ஆனால் இடுப்பு, அடிவயிற்றை சுற்றியுள்ள உடல் பகுதி குறையாது. அதன் காரணமாக பிரசவத்திற்கு பிறகு உடல் கொஞ்சம் பெரிதாகத்தான் தோன்றும். உடல் பயிற்சி மூலம் இதை சீராக்கலாம்.
பெண்களில் சிலர், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் தாம்பத்திய உறவில் அதிக ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
வாழ்க்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளால், பெரும்பாலான இளம்தம்பதிகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மனஅழுத்தம் அவர்களது அன்றாட செயல்பாடுகளை பாதிப்பதோடு, தாம்பத்ய வாழ்க்கையிலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்களுக்குள் மகிழ்ச்சியற்ற நிலை நிலவுவதோடு, தாய்மையடைவதும் தள்ளிப்போகிறது. இந்தியா முழுவதும் குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் தம்பதியரில் 30 சதவீதத்தினர் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு குழந்தை இல்லையே என்று மனங்கலங்குவது, மன அழுத்தத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. சிகிச்சைக்கு பின்பும் தாய்மையடையாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி, கூடுதல் மனக்குழப்பத்தை தருகிறது. மருத்துவரின் அறிவுரைபடி, குறிப்பிட்ட நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உருவாகுவது- தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை உட்கொள்வது- அவ்வப்போது பரிசோதனைகளுக்கு உள்ளாகுவது போன்றவைகளும் தம்பதிகளுக்கு மனஅழுத்தத்தை தருகிறது. சிகிச்சைக்காக பெருமளவு பணமும் செலவாகிறது.
தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளும்போது பெண்கள் பதற்றமாக இருந்தால், கருக்குழாயில் உள்ள தசைகள் இறுக்கமாகி விடும். இது, கரு தரிப்பதில் பிரச்சினையை ஏற்படுத்தும். கரு முட்டை வளர்ச்சி குறித்த பரிசோதனை, கரு முட்டை வெளியேறுவதற்கு போடப்படும் ஊசி போன்றவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் தம்பதிகள் மன அழுத்தம் இல்லாமல் இயல்பாக உறவை மேற்கொள்வது தாய்மைக்கு மிக அவசியம்.
பெண்களில் சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் தாம்பத்ய உறவில் அதிக ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இதில் இருக்கும் விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி என்பது மனித உடலுக்கு கட்டாயம் தேவைதான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான். கடுமையான உடற்பயிற்சி என்பது ஆணுக்கு ஆண் மைத் தன்மையையும், பெண்ணுக்கு பெண்மைத் தன்மையையும் குறைக்கவே செய்யும். மணிக்கணக்காக உடற்பயிற்சி செய்யும் ஆண்களிடம் இருக்கும் பாலுணர்வு வேட்கை பற்றி அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் ‘மெடிசின் அன்ட் சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் அன்ட் எக்ஸசைஸ்’ துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள். அதில் கடுமையான உடற்பயிற்சி, பாலுணர்வு வேட் கையை குறைப்பதாக கண்டறிந்து அறிவித்திருக்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சி அவர்கள் வாழ்க்கையில் மிகுந்த களைப்பை ஏற்படுத்துகிறது. அந்த களைப்பு பாலுணர்வை தூண்டக்கூடிய ஹார்மோனின் அளவைக் குறைத்துவிடுகிறது என்கிறார்கள்.
தங்களுக்கு குழந்தை இல்லையே என்று மனங்கலங்குவது, மன அழுத்தத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. சிகிச்சைக்கு பின்பும் தாய்மையடையாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி, கூடுதல் மனக்குழப்பத்தை தருகிறது. மருத்துவரின் அறிவுரைபடி, குறிப்பிட்ட நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உருவாகுவது- தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை உட்கொள்வது- அவ்வப்போது பரிசோதனைகளுக்கு உள்ளாகுவது போன்றவைகளும் தம்பதிகளுக்கு மனஅழுத்தத்தை தருகிறது. சிகிச்சைக்காக பெருமளவு பணமும் செலவாகிறது.
தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளும்போது பெண்கள் பதற்றமாக இருந்தால், கருக்குழாயில் உள்ள தசைகள் இறுக்கமாகி விடும். இது, கரு தரிப்பதில் பிரச்சினையை ஏற்படுத்தும். கரு முட்டை வளர்ச்சி குறித்த பரிசோதனை, கரு முட்டை வெளியேறுவதற்கு போடப்படும் ஊசி போன்றவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் தம்பதிகள் மன அழுத்தம் இல்லாமல் இயல்பாக உறவை மேற்கொள்வது தாய்மைக்கு மிக அவசியம்.
பெண்களில் சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் தாம்பத்ய உறவில் அதிக ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இதில் இருக்கும் விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி என்பது மனித உடலுக்கு கட்டாயம் தேவைதான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான். கடுமையான உடற்பயிற்சி என்பது ஆணுக்கு ஆண் மைத் தன்மையையும், பெண்ணுக்கு பெண்மைத் தன்மையையும் குறைக்கவே செய்யும். மணிக்கணக்காக உடற்பயிற்சி செய்யும் ஆண்களிடம் இருக்கும் பாலுணர்வு வேட்கை பற்றி அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் ‘மெடிசின் அன்ட் சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் அன்ட் எக்ஸசைஸ்’ துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள். அதில் கடுமையான உடற்பயிற்சி, பாலுணர்வு வேட் கையை குறைப்பதாக கண்டறிந்து அறிவித்திருக்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சி அவர்கள் வாழ்க்கையில் மிகுந்த களைப்பை ஏற்படுத்துகிறது. அந்த களைப்பு பாலுணர்வை தூண்டக்கூடிய ஹார்மோனின் அளவைக் குறைத்துவிடுகிறது என்கிறார்கள்.






