என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ‘வேறு நோய்கள் இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தொற்றிக்கொள்ளும்’ என்ற பயம்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.

    மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. வலியோடு உள்ள கட்டிகள் பைப்ரோ சிஸ்டிக் டிசீஸ் எனப்படும். சிறுவயதிலே பூப்படைந்த பெண்களுக்கும், குறிப்பிட்ட வயதை கடந்த பின்பும் தாய்மையடையாத பெண்களுக்குமே இந்த பாதிப்பு தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : அங்கும் இங்குமாக அசையாத கடுமையான கட்டிகள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதோடு அக்குளிலும், கழுத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் தென்படுதல். மார்பக காம்புகள் உள்அமுங்குதல். அவைகளில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளிப்படுதல் போன்றவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.

    சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். அப்போது நடக்கும்போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும் சுவாசத் தடையோடு உடல் நடுக்கமும் ஏற்படலாம். ஆஸ்துமா மூலமான சுவாசத் தடை ஏற்பட்டால் விடாத இருமலும், இழுப்பும் தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : சுவாசத் தடையோடு நெஞ்சுவலி, மூச்சிறைப்பு இருந்தால் கவனியுங்கள். கை, கால்கள் வீங்கி காணப்படுதல், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல், துப்பும்போது ரத்தம் வெளியேறுதல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

    தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதே நேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் அதனை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு தலையை திடீரென்று திருப்பும்போது தலைசுற்றும்.

    கவனிக்க வேண்டியவை : தலைசுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் பேசும்போது நாக்கு உளறுதல், ஒவ்வொரு பொருளும் இரண்டாக காட்சியளித்தல், நடக்கும்போது பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுதல் போன்றவை பக்கவாதம் தோன்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தலைசுற்றலோடு தலைவலியும் இருந்தால் அது ஒற்றைத்தலைவலி பாதிப்பாக இருக்கலாம்.

    பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும்.

    அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. அதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ஈ.சி.ஜி. எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. நெஞ்சுக்கூட்டில் நீர்கோர்த்திருத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. சுவாசப் பகுதிகளில் ஏற்படும் நெருக்கடிகளும் நெஞ்சுப் பகுதியில் அவஸ்தைகளை ஏற்படுத்துவதுண்டு.

    கவனிக்க வேண்டியவை : நெஞ்சின் நடுப்பகுதியில் பாரம் ஏற்றியதுபோலவோ, நெஞ்சுப் பகுதி உடைவதுபோலவோ கடுமையான வலி ஏற்படுதல். வேலை செய்யும்போது வலி தோன்றுதல், ஓய்வெடுக்கும்போது வலி அகலுதல். வலியோடு நெஞ்சுப் பகுதியில் துடிப்பு ஏற்படுதல், சுவாச தடை உருவாகுதல், அதிகமாக வியர்த்தல். நெஞ்சுவலியோடு இடது கைகளுக்கோ, இரு கைகளுக்குமோ, கழுத்துக்கோ வலி பரவுதல் போன்றவை கவனிக்கத்தகுந்தவை.
    அழகாக தோன்ற விரும்பும் பெண்களும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.
    பெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருப்பது, சுத்தம். அதிலும் குறிப்பிடத்தக்கதாக இருப்பது அந்தரங்க சுத்தம். அதனால் அழகாக தோன்ற விரும்பும் பெண்களும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.

    அந்தரங்க சுத்தம் பற்றி குறிப்பிடும்போது பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. வெள்ளைப்படுதல் என்பது இயற்கையானது. ஆரோக்கியமான கருப்பை யும், சினைப்பையும், இனப்பெருக்கத்திறனும் கொண்ட எல்லா பெண்களுக்குமே இயற்கை யாகவே உறுப்பு பகுதியில் வெள்ளைப்படுதல் தோன்றும். அதுபோல் பெண்களின் இனப் பெருக்க உறுப்புகளில் நோய் எதிர்ப்புத்திறனை தருவதற்காக இயற்கை அணுக்களும் காணப்படும். வெள்ளைப்படுதலை தவறாக புரிந்துகொண்டு தேவையற்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டுவிட்டால், அந்த நல்ல அணுக்கள் அழிந்துவிடும். அப்போது அந்த திரவம் நிறமாற்றத்துடன் வெளிப்பட்டு வாடையும் வீசும். அதுதான் நோய் பாதிப்பின் அறிகுறியாகும்.

    பாதிப்பு எதுவும் இல்லாத இயற்கையான திரவம் நிறமற்றதாக இருக்கும். முகர்ந்து பார்த்தால் அதில் இருந்து வாடை எதுவும் வீசாது. இந்த இயற்கையான வெள்ளைப் படுதல் ஏற்படும்போது சுத்தமான நீரால் கழுவினாலே போதுமானது. உறுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கி சுத்தப்படுத்துவதும் அந்தரங்க சுத்தத்திற்கு அவசியம். கணவரோடு தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளும் பெண்கள் பாலியல் உறவுக்கு முன்பும், பின்பும் தண்ணீர் பயன்படுத்தி கழுவவேண்டும். கணவன், மனைவி இருவருமே இதை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும். அந்தரங்க சுத்தம் இல்லாத தம்பதிகளுக்கு தாம்பத்ய ஆர்வம் குறைந்துபோகும். அதனால் அவர்கள் தாய்மையடைவதும் தள்ளிப்போகும்.

    அந்தரங்க சுத்தத்திற்கு உள்ளாடை பராமரிப்பும் இன்றியமையாதது. செயற்கை நூற்களால் உருவான உள்ளாடைகள் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதல்ல. கோடைகாலத்தில் தொடை இடுக்குப்பகுதிகளில் அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வை தேங்காத அளவுக்கு உறிஞ்சி எடுக்கும் உள்ளாடைகளையே அணிய வேண்டும். அதனை துவைத்து சூரிய ஒளிபடும் இடத்தில்தான் உலரவைக்க வேண்டும்.
    ‘தம்பதிகள் இருவரில் யாருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகம்?’- என்ற ருசிகரமான ஆராய்ச்சி உலகளாவ நடந்துகொண்டிருக்கிறது. திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
    ‘தம்பதிகள் இருவரில் யாருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகம்?’- என்ற ருசிகரமான ஆராய்ச்சி உலகளாவ நடந்துகொண்டிருக்கிறது. ஆய்வு முடிவுகளை பாலியல் நிபுணர்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

    அதில் அதிரடி திருப்பமாக வெளிவந்திருக்கும் தகவல் என்னவென்றால், 35 வயதுப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரித்திருக்கிறதாம். அதே வயதுடைய ஆண்களில் 55 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

    35 வயது பெண்மணி ஒருவரிடம் இந்த ஆய்வு பற்றி ஆய்வுக்குழு கருத்துக்கேட்டபோது “நான் தாம்பத்திய தொடர்பை அதிகம் விரும்புபவள்தான். ஆனால் அலுப்புதரும் அலுவலக வேலையால் தினமும் சோர்ந்து போகிறேன். மாதம் நான்கு முறைதான் கணவருடன் உறவு வைத்துக்கொள்ள முடிகிறது. கணவரும் என்னைப் போலவே நீண்ட நேரம் பணி செய்கிறார். அதனால் 40 வயதுக்குப் பிறகு அவருக்கு ஆர்வம் குறையத் தொடங்கியிருக்கிறது. அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் எங்கள் தாம்பத்திய வாழ்க்கையை முழுங்கி வருகிறது” என்கிறார்.

    கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற 30 வயது இளம் பெண் ஒருவரின் கருத்து மிகவும் கவனிக்கத் தகுந்ததாக இருக்கிறது. “நாங்கள் இருவரும் கடைசியாக எப்போது உறவு வைத்துக்கொண்டோம் என்பதே நினைவில் இல்லை. அந்த அளவிற்கு நாங்கள் உறவு கொண்டு பல மாதங்கள் ஆகிவிட்டன” என்று வேதனையோடு கூறியிருக்கிறார்.

    இந்த வேதனைக்கு காரணம், இளம் ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசைதான். 25-30 வயது என்பது, வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருக்கிறது. எனவே பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். ஒரு குழந்தை போதுமென்றும், தாம்பத்திய உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்தக் கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் ஆர்வம் குறைந்து விடுகிறது.

    இப்படி எல்லாம் இருந்தாலும் 35 வயதை நெருங்கும்போது பெண்கள் அதிக தாம்பத்திய ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். இருந்தாலும்கூட அப்போது அவர்களின் குழந்தைகளும் வளரிளம் பருவத்தை அடைகிறார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள் என்றும் சர்வே சொல்கிறது.

    இந்தக் கருத்தை 40 வயது குடும்பத்தலைவி ஒருவர் ஒத்துக்கொள்கிறார். “நான் 25-வது வயதிலேயே 2 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந்தே வேலைக்கும்-குழந்தைகளுக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் தாம்பத்திய ஆசைகள் திரும்புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை” என்று கூறியிருக்கிறார்.

    திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    30 வயதுகளில் பெண்களுக்கு தாம்பத்திய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். அவர்கள் மனஅமைதி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தால், இந்த வயதில் தாம்பத்திய ஆசை உச்சத்துக்குச் செல்லும். குழந்தைகள் இருந்தால் அவர்களை கவனிப்பது, பராமரிப்பது, குடும்ப நிர்வாகம் போன்ற அனுதின பிரச்சினைகள், அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை குறைக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    40 வயதுகளில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் பாலியல் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.

    ஐம்பது வயதுகளில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் பாலியல் ஆர்வத்தை குறைக்கிறது இந்தப் பருவம்.

    இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்திய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தம்பதிகளிடம் இணக்கமும், மகிழ்ச்சியும் உருவாக தாம்பத்தியம் தேவைப்படுகிறது. தாம்பத்திய திருப்திக்கு மனைவி மட்டும் உடல் நலத்தை கவனித்தால் போதாது. கணவரும் உடல் மீது அக்கறை கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் இருவரும் இணக்கமாக இருந்தால்தான் திருப்தியான பாலுறவை மேற்கொண்டு மகிழ்ச்சியாக வாழமுடியும்.
    பெண்களுக்குள் புயல் வீசுவது போன்ற இந்த அவஸ்தைக்கு காரணம் ஹார்மோன் செய்யும் கலாட்டாதான் என்பதை பெண்கள் புரிந்துகொண்டு கோபதாப உணர்வுகளை கட்டுப்படுத்தி, அந்த சில நாட்களை கடக்க முயற்சிக்கவேண்டும்.
    மனித உடலில் இருக்கும் சுரப்பிகள் சுரக்கும் தனித்துவமான திரவங்கள்தான் ஹார்மோன்கள். உடல், டஜன் கணக்கில் ஹார்மோன்களை சுரக்கிறது. ஹார்மோன்களின் சிக்னலுக்கு தக்கபடிதான் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் எல்லாம் செயல்படுகின்றன. உடல் வளர்ச்சி, பருவகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், உணர்ச்சிகள், நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரணம், உடலுக்கு தேவையான சத்துக்களை சேகரிப்பது, தூக்கத்தை உருவாக்குவது.. இப்படி ஹார்மோன்களால் உடலுக்குள் ஏற்படும் செயல்பாடுகள் ஏராளம். பொதுவான ஹார்மோன்களின் செயல்பாடுகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரி இருந்தாலும், இனப்பெருக்க விஷயத்தில் ஆண்-பெண் ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுபடுகின்றன. ஆண்களுக்குள் ஆண்மையை உருவாக்குவதும், பெண்களுக்குள் பெண்மையை உருவாக்குவதும் தனித்தனி ஹார்மோன்கள்.

    பெண்களை எடுத்துக்கொண்டால் வருடத்தில் 365 நாட்களும் ஹார்மோன்கள் ஒரே மாதிரி சுரந்து கொண்டிருப்பதில்லை. சில நேரங்களில் ஹார்மோன்களின் சுரப்பில் சமச்சீரற்ற நிலை உருவாகிவிடும். அதற்கு தக்கபடி பெண்களின் உடல் செயல்பாட்டிலும் மாற்றங்கள் தோன்றும்.

    டெஸ்டோஸ்டிரான் என்பது ஆண் களுக்கான ஹார்மோன். அது சிறிதளவு பெண்களின் உடலிலும் இருக்கிறது. ஆண், பெண் இருபாலரிடமும் பாலியல் ஆர்வத்தைத் தூண்டுவது, இந்த ஹார்மோன்தான். மூளையில் இருக்கும் ‘ஹைப்போதலமஸ்’, ஹார்மோன்களுக்கு மூல காரணமாக இருக்கிறது. அதை தவிர ஹைப்போதலமஸ்க்கு வேறுசில பணிகளும் உள்ளன. உடலில் உள்ள சீதோஷ்ண நிலையை சமன் செய்தல், வேலை நேரத்திக்கு தக்கபடி தூக்கத்தின் செயல்முறையை மாற்றுதல் போன்றவைகளையும் செய்கின்றன. கடுமையான மன அழுத்தம் ஏற்படும்போது ஹைப்போதலமசின் பணிகள் பாதிக்கும். அப்போது ஹார்மோன் உற்பத்திக்கான சிக்னல்களை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பெண்கள் அதிக மனஅழுத்தத்தில் இருக்கும்போது அவர்களது இனப்பெருக்க செயல்பாடுகள் முடங்கிப் போவதுண்டு. அப்போது ஹைப்போதலமஸ், அதற்குரிய ஹார்மோன்களை சுரக்காததே அதற்கான காரணம்.

    பெண்கள் வயதுக்கு வந்த தொடக்க காலத்தில் ‘பி.எம்.எஸ்.’ எனப்படும் ‘பிரி மென்ஸ்டுரல் சிம்டம்’ தொந்தரவால் அவதிப்படுவதுண்டு. மாதவிலக்கு தொடங்குவதற்கு முந்தைய சில நாட்களில் இந்த பாதிப்பு உருவாகும். கோபம், எரிச்சல், பதற்றம், மன அழுத்தம், கவலை போன்றவை அதன் அறிகுறிகளாகும். மாதவிலக்கு சுழற்சி காலத்தின் முதல் பகுதி நாட்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருக்கும். அப்போது சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் பெண்கள் அனுபவிப்பார்கள். நினைவாற்றலும் அதிகரிக்கும். நினைத்ததை எல்லாம் நடத்திமுடித்துவிடும் ஆற்றலை கொண்டிருப்பதாக கருதுவார்கள்.

    மாதவிலக்கு சுழற்சி காலத்தின் இரண்டாம் பகுதி நாட்களில் மன அழுத்தம் கொள்வது, ‘மூட் அவுட்’ ஆவது போன்றவை தோன்றும். அப்போது புரோஜெஸ்ட்டிரான் அதிகமாக சுரக்கும். மாதவிலக்கு தொடங்கும் நாட்களில் புரோஜெஸ்ட்டிரான் அதிகமாக சுரப்பதே ‘பி.எம்.எஸ்’ நெருக்கடி தோன்ற காரணமாக அமைகிறது. பெண்களில் 40 சதவீதம் பேர் இந்த அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். பெண்களுக்குள் புயல் வீசுவது போன்ற இந்த அவஸ்தைக்கு காரணம் ஹார்மோன் செய்யும் கலாட்டாதான் என்பதை பெண்கள் புரிந்துகொண்டு கோபதாப உணர்வுகளை கட்டுப்படுத்தி, அந்த சில நாட்களை கடக்க முயற்சிக்கவேண்டும்.
    மார்பக புற்றுநோய் அறிகுறிகள் பற்றியும், சிகிச்சை முறை பற்றியும், சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பு பற்றியும் மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன் விளக்கமாக பேசுகிறார்.
    ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த மாதத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், நோய் தடுப்பு கருத்தரங்குகளும் அதிகளவில் நடத்தப்படும். அப்படி இருந்தும் பெண்களிடம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது என்கிறார், மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன். சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த மார்பக சீரமைப்பு நிபுணரான இவர், புற்றுநோய்க்கு பிறகான மார்பக பராமரிப்பு வழிகாட்டுதல்களை யூ-டியூப் வாயிலாகவும், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாகவும் வழங்கி வருகிறார். அவர் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் பற்றியும், சிகிச்சை முறை பற்றியும், சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பு பற்றியும் விளக்கமாக பேசுகிறார்.

    * மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இருக்கிறதா?

    கடந்த 3 ஆண்டுகளைவிட, விழிப்புணர்வு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுவதால், அந்த காலத்தில் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். பொது இடங்கள், அலுவலகங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகளில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதால், போதிய விழிப்புணர்வு இருக்கிறது.

    * எதனால் விழிப்புணர்வு குறைகிறது?

    கூச்ச சுபாவம், பயம் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் பற்றி பிறரிடம் பேசுவதில்லை. மேலும் மார்பகங்களில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை குடும்ப பெண்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அதை பெற்றோரிடமும், கணவரிடமும் பகிர்ந்து கொள்வதும் இல்லை.

    * மார்பக புற்றுநோயை எப்படி கண்டறிவது?

    யூ-டியூப் தளத்தில் ‘பிரஸ்ட் கேன்சர் எக்சாமினேசன் அட் ஹோம்’(Breast Cancer Examination at home) என்று தேடிப்பார்த்தால் நூற்றுக்கும் அதிகமான வீடியோக்கள் வரும். அதில் மார்பகங்களை எப்படி வீட்டிலேயே பரிசோதிப்பது என்பதை வீடியோவாக விளக்கி இருப்பார்கள். அதை பின்பற்றி மாதம் ஒரு முறை மார்பகங்களை வீட்டிலேயே பரிசோதித்து பாருங்கள். மார்பகம், அக்குள் போன்ற பகுதிகளில் ‘கட்டி’ இருக்கிறதா?, அவை வலியை உண்டாக்குகிறதா? என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெறுங்கள்.

    * பயப்படவேண்டிய அவசியம் உண்டா?

    முடிந்தவரை ஆரம்பநிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், மார்பக புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம். கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற பல சிகிச்சைகள் மூலம் ஆரம்பநிலை நோயிலிருந்து குணம் பெறலாம். நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில்தான் பாதிக்கப்பட்ட மார்பகத்தை அகற்றவேண்டியிருக்கும். அதை நினைத்தும் வருந்த தேவையில்லை. ஏனெனில் தமிழகத்தில் மார்பக சீரமைப்பு, செயற்கை மார்பக உருவாக்கம் போன்ற சிகிச்சை முறைகள் அதிகரித்துவிட்டன.

    * மார்பக அகற்றம் சிகிச்சைக்கு பிறகான வழிகாட்டுதல் எப்படி இருக்கும்?

    மூன்று முறைகளில் செயற்கை மார்பகத்தை உருவாக்கலாம். ஒன்று உடலில் இருக்கும் தசைகளை கொண்டு உருவாக்குவது. மற்றொன்று, உடல் கொழுப்புகளை கொண்டு உருவாக்குவது. இறுதியாக வெளிநாடுகளில் பிரபலமான சிலிக்கான் பொருளை உட்செலுத்தியும் செயற்கை மார்பகத்தை உருவாக்கலாம்.

    * பக்க விளைவுகளை உருவாக்குமா?

    இல்லை. உலக அளவில் இது மிகவும் வெளிப்படையான சிகிச்சை. ஆனால் தமிழ்நாட்டில்தான் கூச்சப்படக்கூடிய, மூடிமறைக்கக்கூடிய சிகிச்சையாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இதுபோன்ற சிகிச்சைகள் சத்தமில்லாமல் அரங்கேறுகின்றன. பக்க விளைவும் மிகமிக குறைவு என்பதால், பல்வேறு காரணங்களால் மார்பகத்தை இழந்தவர்களும், மார்பகத்தை சீரமைக்க விரும்புபவர்களும் முயன்று பார்க்கலாம். செலவும் ரூ.1 லட்சம் முதல் ஒன்றரை லட்சத்திற்குள் அடங்கிவிடும்.

    * மார்பக சீரமைப்பு சிகிச்சையில் உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?

    டீன்-ஏஜ் பெண் ஒருவர் புற்றுநோயால் மார்பகத்தை இழந்துவிட்டார். உயிர் பிழைத்து வந்த மகிழ்ச்சியைவிட சமூகத்தை எப்படி எதிர்கொள்வது?, கல்லூரிக்குள் எப்படி நுழைவது?, குடும்ப வாழ்க்கை கேள்விக் குறியாகுமா? போன்ற பல கேள்விகள் அவளது மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தன. நான் அவளை சந்தித்து, திடப்படுத்தினேன். செயற்கை மார்பக உருவாக்கம் பற்றி விளக்கி, தைரியம் கொடுத்தேன். அதற்கு பிறகுதான், அவளுக்கு வாழ்க்கை இனிக்க தொடங்கியது. அவளது தன்னம்பிக்கையும் உயர்ந்தது. இவர் மட்டுமல்ல, குடும்ப பெண்கள், மாடல் அழகிகள், தொலைக்காட்சி பிரபலங்கள் போன்றோரும் தன்னம்பிக்கைக்காக மார்பக சீரமைப்பு, மார்பக குறைப்பு, உடல் கொழுப்பு அகற்றம் போன்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

    * மார்பக புற்றுநோய் சம்பந்தமாக நீங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு முயற்சிகளை பற்றி கூறுங்கள்?

    சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். குறிப்பாக யூ-டியூப் சேனல் மூலமாக மார்பக புற்றுநோய் குறித்தும், விழிப்புணர்வு விஷயங் களையும், செயற்கை மார்பக சிகிச்சை குறித்தும் பகிர்ந்து வருகிறேன்.
    ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம்.
    ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை மிகவும் உடையக்கூடியதாக ஆக்குகிறது. இதனால் லேசான இருமல் அல்லது இடுப்பை சற்று வளைத்தல், போன்ற செயல்களால் முதுகெலும்பு அல்லது மணிக்கட்டில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தும். எலும்புகள் உடையக்கூடியதாக இருப்பதால் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம். ஏனெனில் இவர்களுக்கு எலும்பு உடைந்துவிட்டால் சரிசெய்வது சற்று கடினம். பெண்கள் வயதாகும்போது முதுகு கூன் போடச் செய்துவிடும். எலும்பு முறிவு ஏற்பட்டால் அது மிகவும் மெதுவாகத் தான் குணமாகும்.

    மீனாட்சி மருத்துவமனை ஆஸ்டியோ போரோசிஸ் மருத்துவர் கே.கனகசாரதி கூறியதாவது:-

    ஆஸ்டியோபோரோசிஸ் எம்பது நம் உடலில் உள்ள எலும்புகளில் எளிதில் உடையக் கூடிய நிலையைக் குறிப்பதாகும். இடுப்புகளை சிரமப்படுத்தி வளைத்து உடற்பயிற்சி செய்தல், கடுமையான யோகா, குளியளறையில் வழுக்கி விழுந்தால், குறைவாக பளு தூக்கினாலும் கூட இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

    ஆண்களை விடப் பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே அதிகம் இருப்பதால் சூரிய ஒளியில் இருக்கும் வைட்டமின் D3 அவர்களுக்கு அதிகம் கிடைக்காமல் போய்விடுகிறது. சத்தான உணவில் அக்கறை காட்டாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

    இடுப்பு முழங்கால், முதுகு போன்ற எடை அதிகம் தங்குகின்ற மூட்டுகளில் அதிக வலி உண்டாகும். முதுகுத் தண்டுவடம் வளையத் தொடங் கும். இவைகளை ஆஸ்டியோ போரோசின் அறிகுறிகளாகக் கொள்ளலாம். இம்மாதிரியான எலும்பு முறிவு ஏற்பட்டால் குணமாவதற்கு கால தாமதம் ஆகும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் ஏதேனும் தொடர் தொற்றுகள், நீரிழிவு இருதய பாதிப்பு, புற்றுநோய் இருப்பவர்கள் ஆண்டுக் கணக்காக ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பர் கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவ சியம்.

    இன்றைய மருத்துவ வளர்ச்சி யில் ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பதை எக்ஸ்ரே மற்றும் டெக்சா என்கிற ஸ்கேன் முறையிலும் பி.எம்.டி.(Bone mineral denssity) என்று சொல்லப்படும் எலும்பின் அடர்த்தி அறியப்படும். சோதனைகளாலும் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

    சத்தான பழங்கள், காய் கறிகள், கீராவகைள், பால், முட்டை, ஈரல் முதலான கால்சியம், இரும்புச் சத்து மற்றும் D3 உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதற்கான உரிய சில உடற்பயிற்சிகளை மேற் கொள்வதாலும் முறையான மாத்திரைகளாலும் ஆஸ்டியோபோசிசை நிச்சயமாகக் குணப்படுத்த முடியும்.

    ஆஸ்டியோபோரோசிஸுக்கு சிகிச்சையளிக்கும் போது பிற மருந்து, உடற்பயிற்சி, புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் குடிப்பதைத் தவிர்ப்பது மிகப்பெரிய பலனை ஏற்படுத்துகின்றன. எலும்பை வலுவாக வைத்திருக்க வைட்டமின் D முக்கியம். சத்தான உணவினை நாம் சாப்பிடுவது மிக முக்கியம் இல்லையெனில் என்றாவது ஒருநாள் இதுபோன்ற நோய்களுக்கு ஆளாகக்கூடும். அன்றாட உணவில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

    நம்மை காக்கும் எலும்புகளை நாமும் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ‘உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம்’ என்பதை இந்த தருணத்தில் முதல் குழந்தைக்கு புரிய வைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே, அதற்கு முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும்.
    இரண்டு குழந்தைகள் தேவை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால் இரண்டாவது முறையாக தாய்மையடையும்போது, எல்லா குடும்பங்களிலும் மகிழ்ச்சி இரட்டிப்பாகி விடுகிறது. ஆனால் இரண்டாவது குழந்தையின் வரவு, முதல் குழந்தையின் மகிழ்ச்சியான உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடாது. இரண்டாவது குழந்தையின் வரவால், புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால் அவர்கள் நிச்சயம் ஏங்கிப்போவார்கள்.

    இரண்டாவது குழந்தைக்கு முன்னுரிமை கிடைப்பதை கவனிக்கும் மூத்த குழந்தை, மனதளவில் மிகவும் பாதிக்கப்படும். சில குழந்தைகள் சோர்வாகவும், இன்னும் சிலர் கோபமாகவும் மாறிப்போக வாய்ப்புள்ளது. கத்துவது, அழுவது, சேட்டை செய்வது என அவர்கள் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். இது மற்றவரின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியாகும்.

    சில குழந்தைகள் உடல் வளர்ச்சியில் பின்தங்கிப்போகும் சூழ்நிலை உருவாகும். டம்ளரில் பால் குடித்துப் பழகிய அவர்கள், சிறு குழந்தையாக இருந்தால்தான் கவனிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் புட்டிப்பால் குடிக்கும் பழக்கத்திற்கு மாறுவார்கள். இதுபோல பேச்சிலும், நடவடிக்கையிலும் சில பின்னடைவுகளை வேண்டுமென்றே முதல் குழந்தை உருவாக்கலாம்.

    இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு, பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் முதல் குழந்தை ‘எதையும் தாங்கும் பக்குவத்திற்கு வந்துவிட்டது’ என்று தவறாக கணிக்கிறார்கள். இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டாலும், முதலில் பிறந்ததும் அதுபோன்றதொரு குழந்தைதான் என்பதை பெற்றோர் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

    ‘உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம்’ என்பதை இந்த தருணத்தில் முதல் குழந்தைக்கு புரிய வைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே, அதற்கு முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும்.

    தாயின் வயிறு பெரிதாகிக் கொண்டே வருவதுகூட முதல் குழந்தைக்கு வித்தியாசமாகத் தெரியும். தாயின் மேடான வயிற்றைத் தொட்டுப் பார்க்கவும், வயிற்றில் தட்டவும் அதற்குத் தோன்றலாம். அப்போதே முதல் குழந்தைக்கு உண்மையை புரியவைத்து, பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்தி, தன் சகோதரனை (அல்லது சகோதரியை) வரவேற்க முதல் குழந்தையை தயார் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் தன் உடன்பிறப்பை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இப்படி கர்ப்பத்திலிருந்தே மூத்த குழந்தையை சகோதர பாசத்திற்குப் பழக்கினால், அது இயல்பாகிவிடும்.

    பிறக்கப் போகும் பாப்பா உன்னுடன் விளையாட ஓடி வரும். நீ சொன்னதையெல்லாம் கேட்கும், நீதான் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும், என்றெல்லாம் கூறி முதல் குழந்தையிடம் ஆவலைத்தூண்ட வேண்டும்.

    இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நிஜமாகவே முதல் குழந்தையிடம் முன்பு போல் அக்கறை காட்ட முடியாமல் போக வாய்ப்புகள் அதிகம் என்பதால், கர்ப்பகாலத்திலே முதல் குழந்தைக்கு ஏக்கம் ஏற்படாத அளவுக்கு பாசத்தை புரியவைக்கவேண்டும்.

    இரண்டாவது குழந்தைக்கு பொருட்கள் ஏதாவது வாங்கச்சென்றால், மூத்த குழந்தையையும் அழைத்துச் செல்லுங்கள். பாப்பாவுக்கு எந்த உடையை தேர்வு செய்யலாம், எந்த பொம்மையை வாங்கலாம் என்று ஆலோசனை கேளுங்கள். பாப்பாவுக்கு இது நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறும் கருத்து களுக்கு முன்னுரிமை தாருங்கள். அதையே தேர்வு செய்து இரண்டாவது குழந்தைக்கு கொடுங்கள். அது இரு குழந்தைகளையுமே மகிழ்ச்சிப்படுத்தும்.

    பாப்பாவை நானும் தூக்கிவைத்துக்கொள்கிறேன் என்று மூத்த குழந்தை கேட்டால், அவர்களின் மடியில் பாதுகாப்பாக உட்காரவைக்க அனுமதியுங்கள். உன்னால் வைத்துக்கொள்ள முடியாது என்று கூறி, புறக்கணிக்காதீர்கள். அந்தக் குழந்தையை கவனிக்க முதல் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.
    சிறுவயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் பற்றி புதிய ஆய்வுகள் பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றன.
    பத்து வயதில், இருபது வயதுக்குரிய உடல் தோற்றம் கொண்ட சிறுமிகள் இப்போது அதிகரித்து வருகிறார்கள். பருவம் அடைதல் என்பது திடீரென்று அதிரடியாக நிகழும் மாற்றம் அல்ல. அதற்கான ஹார்மோன் மாற்றங்களும், உடல் வளர்ச்சிகளும் ஐந்து வருடங்களாக மெல்ல மெல்ல உருவாகி, பூப்படைதலாக அரங்கேறுகிறது. பெண்கள் வயதுக்கு வரும்போது மார்பக வளர்ச்சி, ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி, உடல் உயரம் அதிகரித்தல், பூசி மொழுகுவது போன்ற தசை வளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.

    சிறுமிகள் பொதுவாக 13 முதல் 15 வயதுக்குள் பூப்படைவார்கள். தற்போது 10 வயது முதலே பூப்படையத் தொடங்கிவிடுகிறார்கள். இப்படி சிறு வயதிலே வயதுக்கு வருவதை மருத்துவ உலகம், ‘பிரிகோசியஸ் பியூபெர்டி’ என்று அழைக்கிறது. சிறுவயதிலே பெண்கள் வயதுக்கு வந்துவிடுவது, அவர்களது உடல் அளவில் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்துவதோடு சமூக அளவிலும் சிக்கல்களை உருவாக்குகிறது.

    சிறு வயதிலேயே பெண்கள் வயதுக்கு வருவதற்கான காரணங்களை பற்றி உலக அளவில் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. உணவுகள் மூலமாகவும், இதர வழிகளிலும் உடலுக்குள் செல்லும் ரசாயனங்களே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கொழுப்பு கலந்த உணவுகளை அதிகமாக உண்பது, பூச்சி மருந்துகள் கலந்த உணவுகள் உடலுக்குள் அதிக அளவில் செல்வது, ஹார்மோன் அடங்கிய உணவுகளை உண்பது, சில வகை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவது, பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த கடல் பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்களை உண்பது போன்ற காரணங்களால் சிறுமி களின் உடலில் ஹார்மோன் சமச் சீரற்றநிலை ஏற்படுகிறது. அதனால் அவர்கள் சிறுவயதிலே வயதுக்கு வந்துவிடுகிறார்கள்’-என்கிறது, புதிய ஆய்வுகள்.

    கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது லெப்டின் என்ற ஹார்மோன் அதில் இருந்து உருவாகிறது. சிறுமி, பருவமடைய தயாராகிவிட்டதை மூளைக்கு உணர்த்துவது இந்த ஹார்மோன்தான். கொழுப்பு கலந்த உணவுகளை அதிகம் உண்ணும்போது, அதிக அளவு லெப்டின் உருவாகி, மூளைக்கு சமிக்ஞை கொடுப்பதோடு அவர்கள் உடலையும் அளவுக்கு அதிகமாக பருக்க வைத்து விடுகிறது. அதனால் சிறுமிகள் சிறிய வயது, பெரிய உடல் என்ற சிக்கலை சந்திக்கிறார்கள். நாம் பசுக்களிடம் இருந்து அதிக பாலை பெறவும், பழங்களை செயற்கையாக பழுக்கவைக்கவும் மோசமான ரசாயனங்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். அவைகளை சிறுமிகள் அதிகம் சாப்பிடுகிறார்கள். அதுவும் சிறுவயதிலேயே வயதுக்கு வருவதற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.

    தற்போது பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் பிளாஸ்டிக்கில் தயாரான டிபன் பாக்ஸ்கள், பாட்டில்கள், பைகளை அதிகம் பயன் படுத்துகிறார்கள். அதில் கலந்திருக்கும் சில ரசாயனங்களும் அவர்களின் உடலில் சேர்கிறது.

    சிறு வயதிலே பருவ மடைவது பற்றிய இன்னொரு ஆராய்ச்சியில், அசைவ உணவைவிட, சைவ உணவு சிறந்தது என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சைவ உணவை சாப்பிடுபவர்களைவிட , அசைவ உணவை சாப்பிடுபவர்களே அதிக அளவில் சிறுவயதிலே வயதுக்கு வருகிறார்கள்.

    இதில் இருக்கும் சமூக சிக்கல் என்னவென்றால், சிறுவயதிலே வயதுக்கு வரும் பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சிகளில், அவர்களிடம் பாலியல் தூண்டுதல் அதிகமாக இருப்பதாகவும், அது தொடர்பான பிரச்சினைகளில் அவர்கள் அதிக அளவில் சிக்கிக்கொள்வதாகவும் வெளிப்படுத்தியிருக் கிறார்கள். சிறு வயதிலே பருவ மடைவது பாரம்பரியத்தோடும் தொடர்புடையது. தாய் சிறுவயதிலே பருவமடைந்திருந்தால், மகளும் அதே நிலையை அடையலாம். சிறுவயது பருவம், பிற்காலத்தில் மூளையில் கட்டி போன்ற நோய்களை உருவாக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    பருவமடைவதோடு, பெரும்பாலான பெண்களின் உடல் வளர்ச்சி நின்றுபோகிறது என்று சொல்லலாம். பருவம் அடையும்போது அவள் 4 அடி உயரம் என்றால், பின்பு நான்கு அல்லது ஐந்து சென்டிமீட்டர் அளவுக்குதான் வளருவாள் என்கிறார்கள். பருவம் அடைவதோடு மூளையில் இருந்து வரும் கட்டளையால் எலும்புகள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்வதுதான் இதற்கு காரணம். பொதுவாகவே இப்போது பெண்கள் உயரம் குறைவாக இருப்பதற்கு அவர்கள் சிறுவயதிலேயே பருவமடைந்துவிடுவதும் ஒரு காரணம்.

    சிறுவயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் பற்றி புதிய ஆய்வுகள் பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றன. அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 9 முதல் 11 வயதுக்குள் பருவம் அடைபவர் களுக்கு, 12 முதல் 15 வயதுக்குள் பருவம் அடைபவரைவிட நோய் தாக்கும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம். பெண்கள் பருவமடைந்த முதல் ஐந்து வருடத்தில் இருந்து 15 வருடங்கள் வரை ஆரோக்கியமான கருமுட்டை உற்பத்தி இருக்கும். ஒரு பெண் 14 வயதில் பருவம் அடைகிறாள் என்றால், 19 முதல் 29 வயது வரை ஆரோக்கியமான கருமுட்டை உற்பத்தியாகும். அதற்குள் அவள் திருமணமாகி கர்ப்பம் தரிக்கவேண்டும். ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க ஆரோக்கியமான கருமுட்டை மிக அவசியம்.

    இப்போது பெண்கள் தாமதமாக திருமணம் செய்துகொண்டு, தாமதமாகத்தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். பத்து வயதிலே பருவ மடைந்துவிட்ட பெண், தாமதமாக திருமணம் செய்துகொள்கிறாள் என வைத்துக்கொள்வோம். அவள் கர்ப்பத்தை பற்றி முடிவெடுப்பதற்குள் அவளது கருமுட்டை ஆரோக்கியமற்றதாகிவிடக்கூடும். அதனால் அவள் குழந்தையின்மை என்ற நெருக்கடிக்கு ஆளாகவேண்டியதாகிவிடுகிறது.

    இதுபோன்ற பாதிப்புகளை தாய்மார்கள் உணர்ந்து, மகள்களை ஆரோக்கியமாக வளர்க்கவேண்டும். அவர்களது உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்.
    ‘தாம்பத்திய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்களிடம் அதற்கு தகுந்த விதத்தில் தெளிவு ஏற்படாததால் ஆண்கள் இப்போதும் அந்த விஷயத்தில் பழமைவாதிகளாகவே இருக்கிறார்கள்’ என்று நவீன கால தாம்பத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    ‘தாம்பத்ய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்களிடம் அதற்கு தகுந்த விதத்தில் தெளிவு ஏற்படாததால் ஆண்கள் இப்போதும் அந்த விஷயத்தில் பழமைவாதிகளாகவே இருக்கிறார்கள்’ என்று நவீன கால தாம்பத்ய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘இந்தியர்களின் தாம்பத்ய வாழ்க்கை எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் சுவாரசியமான பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

    * தான் சொல்வதைக் கேட்டு மனைவி நடந்துகொள்ளவேண்டும் என்று 72 சதவீத ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். (முன்பு இந்த எண்ணம் கொண்ட ஆண்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருந்தது கவனிக்கத்தகுந்தது)

    * பெரும்பாலான ஆண்கள், மனைவி தங்களை குழந்தை போன்று பராமரித்து பாசம் செலுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அதில் 60 சதவீத ஆண்கள் தங்கள் எதிர்பார்ப்பு ஈடேறுவதாகவும் சொல்கிறார்கள்.

    * உயர்ந்த கல்வியும், அதிக சம்பளத்துடன்கூடிய வேலையும் பெண்களுக்கு கிடைத்திருந்தாலும் அவர்களுக்கு உரிய முழு அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை என்பது 22 சதவீத ஆண்களின் கருத்தாக இருக்கிறது.

    * 8 சதவீத ஆண்கள், வேலைபார்க்கும் தங்கள் மனைவி நண்பர்களுடனான பார்ட்டிகளில் பங்குபெறுவதை ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.

    * மனைவியின் அலுவலக நண்பர்கள் வீடு தேடி வந்து உரையாடிவிட்டு செல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் என்று 52 சதவீத ஆண்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.

    * மனைவி மீது அதிக பாசம் இருந்தாலும், மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் மனைவியை விட்டு விலகி இருப்பது பாசத்தை அதிகரிக்க உதவும் என்பது 70 சதவீத ஆண்களின் கருத்து. அதே நேரத்தில் அது சரியான முடிவுதான் என்று 48 சதவீத பெண்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது பெண்களில் பெரும்பாலானவர்கள் கணவர் தங்களைவிட்டு ஒருசில நாட்கள் கூட விலகியிருக்க கூடாது என்றே இப்போதும் விரும்புகிறார்கள்.

    * சினிமா கதாநாயகர்கள் போன்றவர்களோ, கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போன்றவர்களோ கணவராக வேண்டும் என்று முன்பு தாங்கள் எதிர்பார்த்தது உண்மைதான் என்றும், இப்போது அப்படிப்பட்ட கனவுகள் காண்பதில்லை என்றும், சராசரி மனிதர்களையே கணவராக எதிர்பார்ப்பதாகவும் 81 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

    * தாம்பத்ய செயல்பாடுகளில் தங்களுக்கு முழுதிருப்தி ஏற்படுவதாக 38 சதவீத பெண்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த விஷயத்தில் கணவர் தங்களது கருத்துக்களை கேட்பதில்லை என்பது 48 சதவீத பெண்களின் குறையாக இருக்கிறது.

    * ‘நாங்கள் தாம்பத்ய செயல்பாட்டு விஷயத்தில் புதுமைகளுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் கணவர்தான் அதில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை’ என்பது 22 சதவீத நடுத்தர வயது பெண்களின் கருத்தாக பதிவாகி இருக்கிறது.

    * கணவரிடம் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன என்ற கேள்விக்கு, ‘சுகாதாரத்தை கடைப்பிடிக்காதது, எப்போதும் எரிச்சலடைவது, அலட்சியமாக இருப்பது, பொறுப்பாக நடந்துகொள்ளாதது, புகைப்பிடிப்பது, பொய் சொல்வது, மது அருந்துவது..’ என்று நீளமாக பெண்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.

    இந்த கருத்துக்கணிப்பு பற்றி மனோதத்துவ நிபுணர் அளித்திருக்கும் விளக்கம் :

    “இந்த சர்வேயில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கணவன்மார்களிடம் பிடிக்காதவைகளை பற்றி பெண்கள் வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதை ஒரு பாசிட்டிவ்வான கருத்தாக ஆண்கள் ஏற்றுக்கொண்டு, தங்களிடம் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை இனிக்கும்.

    தாம்பத்ய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆணும், பெண்ணும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து கணவன்- மனைவியாக வாழ்க்கையில் இணைகிறார்கள். அதனால் எடுத்த எடுப்பிலே அவர்களுக்குள் ஐக்கியம் ஏற்பட்டுவிடாது. அதை புரிந்துகொண்டு படிப்படியாக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இருவரும் முன்வரவேண்டும். அதற்கு அன்பும், நம்பிக்கையும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிப்பதும் மிக அவசியம்” என்கிறார்.
    முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.
    பெண்கள் தாய்மையடையும்போது இயற்கை அவர்களது உடலில் மிகப்பெரிய அற்புதம் ஒன்றை நிகழ்த்துகிறது. அதாவது கருவுறும் தொடக்க காலத்திலே, பிறக்கப்போகும் குழந்தையின் உணவுக்காக தாயின் மார்பகங்கள் பால் உற்பத்திக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுவிடும். அத்தகைய மாற்றங்கள் தாய்மையடைந்த ஆறாவது வாரத்திலேயே மார்பகங்களில் தென்படும். அப்போது மார்பகங்களுக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து ரத்த நாளங்கள் புடைத்து எழுவதால் வலியும் தோன்றும்.

    முழு சுரப்பியின் பரிமாணமும் அதன் வெளிப்புற நுண்ணறைகளில்தான் முதலில் வெளிப்படும். அப்போது மார்பகங்கள் கெட்டியாகவும், மேடான முனைப்புகளுடனும் காணப்படும். மெதுவாகத் தொட்டாலே வலிக்கும். இந்த நிலை கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தின் இறுதியில் தொடங்கி, குறிப்பிட்ட காலம் வரை இருந்துகொண்டிருக்கும்.

    மார்பகத்தின் வெளிப்புறத்தை மெதுவாக அழுத்தினால் மார்பகக் காம்பு வழியாக தெளிந்த கசிவு கொஞ்சமாக வெளிப்படும். சிலருக்கு தாமாகவேகூட வெளிப்படும். அது முதலில் மெல்லிய வைக்கோல் நிறத் திரவம் போலவும், பிறகு கெட்டியாகி அடர் மஞ்சள்நிறமாகவும் தோன்றும். 14-வது வாரத்தில் மார்பகக் காம்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நிறம்மாறும். கர்ப்பகாலத்தில் பெண்களின் மார்பகங்களில் பலவிதமான மாற்றங்கள் தோன்றும். அவை இயற்கையானவைதான்.

    முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.

    இயல்பான கர்ப்பமாக இருந்தால், உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. தாம்பத்யம் கொள்வதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கருப்பைக் கழுத்தின் தசைகளும், கர்ப்பத்தின்போது உருவாகும் சளித் தொகுப்பும் கருப்பையை முற்றிலுமாக மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் பொருத்தமான முறையில் உடலுறவு கொள்ளலாம்.

    இருந்தாலும், இதற்கு முன்பு கருச்சிதைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை தாம்பத்யத்தை தவிர்ப்பது நல்லது. சிறிது ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தாலோ, பிறப்புறுப்பு அல்லது அடிவயிற்று வலி இருந்தாலோ, தாம்பத்யத்தை தவிர்த்து முழுமையாக ஓய்வெடுக்கவேண்டும். கர்ப்பகாலத்தில் எப்போதுமே கர்ப்பிணியின் மனநிலை, உடல்நிலை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். கர்ப்பிணி விரும்பும்பட்சத்தில் பாதுகாப்பான ‘பொஷிஷனில்’ தாம்பத்யத்தை அமைத்துக்கொள்ளலாம்.

    முதல்முறையாக கர்ப்பம்தரிக்கும் பெண்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் எழும். அனைத்து சந்தேகங்களுக்கும் அவர்கள் மகப்பேறு டாக்டரிடம் விளக்கம் கேட்டு விடைதேடிக்கொள்ளவேண்டும். அப்போது கர்ப்பகால தாம்பத்யம் குறித்தும் கூடுதல் தகவல்களை கேட்டுத்தெரிந்துகொள்வது அவசியம்.

    தற்போது குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் பெரும்பாலான பெண்கள் திருமணமானதும், ‘தமக்கும் குழந்தையில்லாத நிலை ஏற்பட்டுவிடுமோ!’ என்று பயம்கொள்கிறார்கள். எந்த கருத்தடை முறையையும் கடைப்பிடிக்காமல் இயல்பாக தாம்பத்ய உறவு மேற்கொண்டு குறைந்தது ஆறு மாதம் வரையில் கருத்தரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். முப்பது வயதுக்குள் உள்ள பெண்கள், திருமணமாகி இரண்டாண்டு வரை கருத்தரிப்புக்காகக் காத்திருக்கலாம். முப்பது வயதுக்குமேல் ஆகி, கருத்தரிக்கக் காலதாமதமானால் விரைந்து குழந்தையின்மை சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

    பொதுவாக திருமணமாகி ஒவ்வொரு வயது அதிகரிக்கும்போதும், பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பில் அதிக சிக்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். 30 முதல் 35 வயதுக்கு இடையே கருத்தரிக்கும் வாய்ப்பு, அதற்கு முன் கருத்தரிப்பதில் இருந்த வாய்ப்பைவிட பெருமளவு குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு விஷயம் என்னவென்றால், புகையிலையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுத் தன்மை உள்ள பொருள்கள் உள்ளன. இவற்றில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவை, புற்றுநோயைத் தூண்டக்கூடியவை. அவற்றுள் பல மலட்டுத்தன்மையையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு தரமான சினைமுட்டையும், ஆற்றல்மிகுந்த உயிரணுவும் தேவையாக இருக்கிறது. சினைமுட்டை முதிர்ந்து வெடித்து மாதந்தோறும் சினைப்பையில் இருந்து வெளியேறும். முட்டையானது சினைப்பையில் இருந்து வெளியான பிறகு 24 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். கருத்தரிப்பு நடைபெற, இந்த 24 மணி நேரத்தில் அது உயிரணுவோடு சேர்ந்துவிட வேண்டும். அவ்வாறே, உயிரணுவானது 48 முதல் 72 மணி நேரம்வரை உயிருடன் இருக்கும். ஆகவே கருத்தரிக்க சிறந்த நேரம், முட்டை வெளியான காலத்தை சார்ந்தே இருக்கிறது.
    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும். இதற்கு சூப்பரான வீட்டு வைத்திய குறிப்புகளை பார்க்கலாம்.
    பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பல பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கின்றனர். இதில் ஒரு குறிப்பிடத் தகுந்த பிரச்சனையாகக் கருதப்படுவது கர்ப்பிணிப் பெண்களின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அடைதல் ஆகும். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும்.

    கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக நிற்கும் பொழுது இரத்த ஓட்டம் சரியானபடி இருக்காது. அதனால் கால் வீக்கம் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் நெடுநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

    வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரம், உதாரணமாக மதிய நேரம் வெளியில் செல்ல வேண்டாம்.

    ஒரு நாளில் மூன்று நான்கு வேளைகளில் 15 நிமிடம் என்ற நேர அளவில் கால்களைத் தலையணைக்கு மேலே உயர்த்தி வைக்கலாம். இது ஒரு எளிமையான மற்றும் சிறந்த வழி.

    சற்று மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிவது சிறந்தது. கடுமையான ரக செருப்புகள் மற்றும் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை முற்றிலுமாகக் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

    நீச்சல் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி. நீச்சல் அடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். நீச்சல் பயிற்சி முறைப்படி கற்றறிந்த கர்ப்பிணிப் பெண்கள் நீச்சல் அடிக்கலாம். இதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

    கர்ப்பிணிப் பெண்கள் போதிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்வது அவசியம். இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள தேவை யில்லாத கழிவுகள் நீங்கும். கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கம் வடிய வாய்ப்பு உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உப்பின் அளவை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் உணவில் அதிக பட்சமான உப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.இவ்வாறு கட்டுப்பாடான அளவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். இதன் விளைவாக அவர்களின் கால் வீக்கம் குறையும்.

    கர்ப்பிணிப் பெண்களின் உடலில் அதிக அளவு ஊட்டச் சத்து தேவைப்படும். எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவும் அறிவும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம்.   ஊட்டச்சத்து பொட்டாசிய த்தை போதிய அளவிற்கு உடலில் கிடைக்கச் செய்வதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்யலாம்.

    வாழைப்பழம், அவகேடோ அத்திப்பழம், லீட்டாஸ், செலரி, கிவி போன்ற பழங்களில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலும் இந்த சத்து நிறைந்துள்ளது. கீரை வகையான புதினாவிலும் பொட்டாசியம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் காபியில் நிறைந்துள்ள கேஃபைன் சிறு நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும்.

    இதனால் உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உடலின் எலக்ட்ரோலைட் பேலன்ஸ் பாதிக்கப்படும். இதற்கு மாற்றாக மிளகு மற்றும் புதினா கலந்த தேநீரை அருந்தலாம். இது கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் படுக்கும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். நேராகப் படுப்பது அல்லது வலது பக்கமாகப் படுப்பதை விட இடது பக்கமாகப் படுப்பது சிறந்தது. இவ்வாறு படுப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீரான அளவில் இருக்கும். ஆகக் கால் வீக்கமும் குறையும்.

    கர்ப்பிணிப் பெண்கள் தினம் மாலை நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மாலை வேளை என்று இல்லை வீட்டில் இருக்கும் நேரத்திலும் அவ்வப்போது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நடப்பது நல்லது. இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சரியான அளவில் நடைபெறும். இதன் மூலம் நிச்சயம் கால் வீக்கம் குறையும்.

    கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் உணவுகளை யும் சாலையோரங்களில் மலிவான விலையில் கிடைக்கும் துரித உணவு களையும் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவு எண்ணெய் மற்றும் உப்பும் சேர்த்து இருப்பார்கள். இது கால் வீக்கத்தை அதிகரிக்க செய்து விடும். ஆக இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தையோ அல்லது டப்பையோ எடுத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு எப்சம் சால்ட்டைக் கலந்து கொள்ளவும். இதில் தேவைப்பட்டால் சில சொட்டுகள் லேவண்டர் ரோசையும் கலந்து கொள்ளலாம். இதில் பெண்கள் தங்கள் கால்களை விட்டுக் கொள்ளலாம். தினம் ஒரு 15 நிமிடங்கள் இதைச் செய்யலாம். இந்த எப்சம் சால்ட் தசை வலிகளை நீக்க உதவும். இது கால் மற்றும் பாதங்களில் உள்ள நச்சுகளையும் கழிவுகளையும் நீக்க வல்லது. ஆர்னிகா எண்ணெயைப் பாதங்கள் மற்றும் கால்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யலாம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீர் அடையும்.கால் வீக்கம் வடியும்.
    மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
    மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தபடும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. சிலிக்கான் மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும்

    செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்டு மார்பகங்களில் பொருத்தப்படுகின்றன. சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்ட ஓடுகள் பெண்களின் செயற்கை மார்பக அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சலைன் வகை அறுவை சிகிச்சையில், உப்பு நீர்; கொண்ட செயற்கைப் பொருளை சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன் படுத்துகி றார்கள்.

    மார்பகங்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவோ அல்லது மேலும் அழகுபடுத்தவோ மேற்கண்டவற்றில் எந்த வகையான மார்பக அறுவை சிகிச்சைகளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். சிலிக்கான் வகை அறுவை சிகிச்சையை விட சலைன் வகை (உப்பு நீர்) அறுவை சிகிச்சையே சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது.

    சுலைன் வகை அறுவை சிகிச்சையின் போது பெருமளவு அபாயங்கள் தவிர்க்கப்பட்டாலும், அதை 100% பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்று சொல்ல முடியவில்லை.மார்பக அறுவை சிகிச்சைகள் பெண்களின் மார்பகம் தொடர்பான கோளாறுகளை சரி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் தவிர்க்க முடிவதில்லை. இவ்வாறு செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவுகளைப் பற்றி கொடுத்துள்ளோம்

    1. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்னையாக இருப்பது ‘லீக்கேஜ்’. அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு பொருத்தப்படும் சிலிக்கான் அல்லது சலைன் ஒழுகத் தொடங்கி, மார்பில் அதன் விளைவுகளை காட்டத் தொடங்கும். இதன் காரணமாக மயக்க உணர்வு, நரம்புகளில் எரிச்சல் மற்றும் குமடடல் போன்ற விளைவுகள் ஏற்படும். சலைன் வகை செயற்கை மார்பகத்தில் கோளாறுகள் ஏற்படும் போது அது பாக்டீரியாவை உருவாகவும், உடலில் அச்சுகள் உருவாகவும் வகை செய்யும்.

    2. மார்பக அறுவை சிகிச்சையில் செயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நமது உடல் செயற்கையான பொருட்களை நிராகரிக்கும் குணத்தை கொண்டுள்ளது. இவ்வாறு செயற்கையான பொருளை உடல் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மார்பகங்களில் வலி, வீக்கம் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

    3. மார்பக அறுவை சிகிச்சை செய்வதால் மார்பகங்கள் ஒரே அளவாக இல்லாமல் போகவும் கூடும். அறுவை சிகிச்சையால் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகள் மாறிவிடும். இந்த சிகிச்சை தவறாக முடியும் போது, இயற்கையான மார்பகங்களுக்கு உள்ள அழகு பாழ்பட்டு விடுகிறது.

    4. ஒவ்வொரு முறை மார்பக அறுவை சிகிச்சை செய்யும் போதும், அதை 7-8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரி செய்ய வேண்டும். மேலும், அது நிலையாக பயன்படுத்தப்படுவதாக இல்லாமல், மாற்றக் கூடியதாக இருக்கும். இந்த செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்படவோ வாய்ப்புகள் உண்டு.

    5. செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படுவது அவற்றின் முதன்மையான குறைபாடுகளில் ஒன்றாக உள்ளது. மார்பக ஓடுகளில் விரிசல்கள் ஏற்படுவதால் சிலிக்கான் ஜெல் அல்லது உப்பு நீர் ஆகியவை உடலில் ஓடத் துவங்குகின்றன. மேலும், இந்த விரிசல் எந்தவித அறிகுறியையும் வெளியே காட்டுவதில்லை.

    6. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்களின் தமனிகளுக்கு அருகே அரிப்பு ஏற்படும். இந்த செயற்கையான அமைப்பு தமனிகளை பாதித்து அவற்றில் வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது.

    7. மார்பக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகள் வாழ்நாள் முழுமையும் மறையாமல் நீடித்திருக்கும். தங்களுடைய மார்பக அறுவை சிகிச்சையை மறைக்க நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பெருத்த பின்னடைவாக இருக்கும்.

    8. இயற்கையாகவே நியூரோடாக்ஸின் உள்ள பொருட்களை கொண்டே செயற்கை மார்பகம் தயாரிக்கப்படுகிறது. எனவே, சிலிக்கான் ஜெல்லின் உள்ள சில குணங்கள் அது ஒழுகும் வேளைகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்கின்றன.

    9. மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் ஜெல் கார்சினோ ஜெனிக் என்ற இயற்கையான பொருளைக் கொண்டிருக்கிறது. இந்த பொருள் மார்பக புற்று நோய் வர காரணமாக இல்லாவிட்டாலும், வயிற்று புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் வேறு பலவகையான புற்றுநோய்கள் வரக் காரணமாக உள்ளது. உடலில் ஒழுகி ஓடும் சிலிக்கான் பல்வேறு தீய விளைவுகளின் தொடக்கமாக இருக்கும்.

    10. செயற்கை மார்பக சிகிச்சையின் மூலம் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் சற்றே அதிகரிக்கும், இதனை வெளியே தெரியாமல் மறைப்பது கடினம். குறிப்பாக, சலைன் வகை அறுவை சிகிச்சை செய்யும் போது மார்பகங்கள் இயற்கையானதாக தோன்றுவதில்லை.
    ×