என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கருவில் உள்ள குழந்தைக்கு நம் உணர்வுகள் துல்லியமாகத் தெரிந்து விடுவதோடு நில்லாமல், அது மேற்கொண்டு அந்தக் குழந்தையையும் பாதிக்கவும் செய்கின்றன.
    கர்ப்பமாக இருக்கும் போது, நமக்கு நேரும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களைக் குறித்து தெரிந்து கொண்ட அளவிற்கு, கருவைப் பற்றியோ, கருவிற்குப் பிடித்த பிடிக்காத விசயங்களைப் பற்றியோ நாம் பெரிதாகச் சிந்திக்க மாட்டோம். பலர் வயிற்றில் வளரும் கருவிற்கு உணர்ச்சிகள் கிடையாது என்று கூடச் சொல்லுவார்கள், நினைப்பார்கள். ஆனால், கருவில் உள்ள குழந்தைக்கு நம் அகப்புற உணர்வுகள் துல்லியமாகத் தெரிந்து விடுவதோடு நில்லாமல், அது மேற்கொண்டு அந்தக் குழந்தையையும் பாதிக்கவும் செய்கின்றன.

     * தன் அம்மா இதமான இசையைக் கேட்பதும், தகவல்களைக் கேட்பதும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த இசையின் தன்மை சற்று மாறினாலோ, ஒலி அதிகமானாலோ குழந்தைக்குப் பிடிக்காது. பேரிரைச்சல், கடினமான சத்தங்களை ஏற்படுத்தும் சில வாத்திய கருவிகளின் இசை எல்லாம் குழந்தைக்குப் பிடிக்காதவை.

    * நாம் சோகமாக இருப்பதோ, மனச்சோர்வில் இருப்பதோ குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்புடையது கிடையாது. ஆகையால் சிரித்துக் கொண்டே இருங்கள்! நம் அகம் நிறைந்தால், கருவறையில் குடி இருக்கும் குழந்தையின் மனமும் பூத்துக் குலுங்கும். உங்கள் மகிழ்ச்சி தான் குழந்தையின் மகிழ்ச்சியாகவும் எதிரொலிக்கும் என்பதை மறந்து விடவே கூடாது.

    * தனது மூன்றாம் கர்ப்பகாலத்தில் அம்மா உடலுறவு வைத்துக் கொள்வது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. எனவே அது குழந்தைக்குப் பிடிக்காது. இது குழந்தையைக் கோபப் படுத்தவோ, வருத்தமாக்கவோ கூட செய்து விடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், உடலுறவில் ஈடுபடும் போது அம்மாவின் வயிற்றுச் சதைகள் இறுக்கமாகி விடுகின்றன. ஏற்கெனவே குழந்தை முழு வளர்ச்சி அடைந்து விட்டதால், அதற்கு வயிற்றில் இடம் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் சதை இறுக்க மானால், இடம் மிகவும் குறைந்து விடும். எனவே, குழந்தைக்கு இது பிடிக்கவே சாத்தியம் கிடையாது.

    * குழந்தை வளர வளர, அம்மாக்களுக்குப் படுப்பது மிகவும் சிரமமாகி விடும். சரியாகப் படுத்து உறங்குவதற்குள் விடிந்தே போய் விடும். புரண்டு புரண்டு படுத்துச் சிரமப்படுவார்கள். தாய் படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க, குழந்தையும் வயிற்றில் உருண்டு கொண்டே இருக்கும்! அங்கும் இங்கும் திரும்பிப் படுக்கும் போதெல்லாம், குழந்தையும் இடம் மாறுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  இது குழந்தைக்குப் பிடிக்காத ஒரு முக்கியமான செயல் ஆகும். வாகனத்தில் குலுங்குவது எப்படியோ அதே போலத் தான் இதுவும். பகலில் நன்றாக வேலை பார்த்து விட்டு, இரவில் படுத்ததும் தூங்கி விடுவது மாதிரி பார்த்துக் கொண்டால், தாய்க்கும் சேய்க்கும் பரம திருப்தியாக இருக்கும்!

    * குழந்தைக்கு தாயின் குரல் மிகவும் பரிட்சயமானது. அதே சமயம் மிகவும் பிடித்தமானது. அதற்கு செவிப்புலன் வந்தது முதல் கேட்ட முதல் குரல் உங்களுடையது தான். எப்போது எல்லாம் உங்கள் குரல் அதன் செவிகளில் விழுகிறதோ, அப்போதெல்லாம் அது கருவறையில் மிகவும் பாதுகாப்பாக உணரும். அப்படி இருக்க அதை மறந்து நீங்கள் யாரிடமாவது வாதிட்டாலோ, கடுமையான குரலில் சண்டை யிட்டாலோ அது அச்சம் கொள்ளும். குழந்தைக்கு இந்த செயல் சுத்தமாகப் பிடிக்காது. அதனால் இயன்ற வரை தேவையில்லா வாதத்தை தவிர்த்து, இனிமையான குரலோடே எல்லோரிடமும் பேசிப் பழகுங்கள்.

    * தாய் உண்ணும் உணவுகளை கருவில் வளரும் குழந்தையும் சுவைக்கத் தொடங்கி விடும். இது நிறைய தாய்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் குழந்தை முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே சுவைகள் பற்றி உணர்ந்து கொள்கின்றது என்பது அழகான ஆச்சரியம். ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைக்கு அது பிடிப்பதில்லை. ஆக, தாய் மிகவும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
    எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்.
    ‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

    ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங்கள் தான் அவை.

    இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்தமிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ்நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார்.

    ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளிடம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கிறான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.

    இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல்களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.

    ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
    ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மறதி நோயான அல்சமீர் நோய் தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43 ஆயிரத்து 34 பேரிடம் ஆய்வு நடத்தினர். அப்போது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு விஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப் படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. அதில், ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.

    பெண்களின் முன் பக்க மூளை பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, பச்சாதாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுய கட்டுப்பாடு ஆகிய வற்றில் மிகவும் உறுதியானவர்களாக உள்ளனர். அதேபோன்று பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின் போது மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு சாப்பிடுவதில் சீரற்ற தன்மை, கவலை எழுதல் போன்றவற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். மொத்தத்தில் ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் இயங்குகிறது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
    கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன.
    கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன. எனவே அது மாதிரியான சத்து வகைகளை கர்ப்பிணி பெண்கள் உணவாக கொள்ளவேண்டும்.

    கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கிடைக்க தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடுங்கள். வாரம் ஒரு முறை வெல்லம் கலந்த உணவு சாப்பிடுங்கள். அவ்வப்போது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் சுண்டைக்காய், பாகற்காய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிப்பதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாமல் காபி, டீ போன்றவை தடுத்து விடுகின்றன.

    அதே நேரத்தில் டீ, காபிக்கு பதிலாக கர்ப்பிணிகள் பால் குடிப்பது மிகவும் நல்லதாகும். கருப்பை, நஞ்சு, குழந்தை ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் தாயின் ரத்த ஓட்டத்துக்கும் புரத சத்து தேவையாகும். பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றில் இருந்து புரதச்சத்து கிடைக்கும். பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் போலிக் அமில சத்து வெளியேறி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். பிரசவ தேதி நெருங்கும் போது, முதலில் பின் முதுகில் வலி ஏற்படும். தொடர்ந்து அந்த வலி, அடி வயிற்றுக்கு வந்து இரு தொடைகளுக்கும் அது பரவுமானால், அது உண்மையான பிரசவ வலியாகும்.

    ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப பை திறப்பதன் அறிகுறியாக வாந்தி ஏற்படும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம் தானே!
    வலிப்பு நோயுள்ள பெண்கள்தான் கருத்தரித்த உடனேயே அருகில் இருக்கும் மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து தனது வலிப்பு மருந்துகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது நல்லது.
    வலிப்பு நோயுள்ள பெண்கள் கருத்தரித்த பின்பும் அவர்களது வலிப்பு மாத்திரைகளை தொடர்ந்து விடாமல் சாப்பிட வேண்டும். மாத்திரையினால் சிசுவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோரது மனதிலும் தோன்றக்கூடிய சந்தேகம். பிரசவ காலத்தில் வலிப்பு மாத்திரைகளை திடீரென்று குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ வலிப்பு திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம், அவ்வாறு வலிப்பு ஏற்பட்டால் தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்து குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

    அதனால் மாத்திரைகளின் பக்க விளைவுகளை பற்றி அதிகமாக யோசிக்காமல் பிரசவ காலத்தில் பெண்கள் தமக்கு வலிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. ஒரு சில மருந்துகளே குறிப்பாக வால்பிரோயேட்(Valproate) பினோபார்பிடோன்(Phinobarbitone) ஆகியவற்றை வலிப்பை குறைக்க அதிக அளவில் எடுத்துக்கொண்டால், சிசுவின் உறுப்பின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

    பெரும்பாலும் இந்த மருந்துகளை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. அப்படியே இம் மருந்துகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளின் அளவை குறைத்துக் கொண்டு வேறு வலிப்பு மருந்துகளை சேர்த்துக்கொள்ளலாம். தாயின் கருவில் இருக்கும் சிசுவிற்கு முதல் மூன்று மாதங்களில் தான் முக்கிய உறுப்புகள் உருவாகின்றன.

    எனவே, வலிப்பு நோயுள்ள பெண்கள்தான் கருத்தரித்த உடனேயே அருகில் இருக்கும் மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து தனது வலிப்பு மருந்துகளை ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. கர்ப்பகாலத்தின்போது உடல் எடை கூடுவதாலும், நீர்ச்சத்து அதிகரிப்பதாலும், உடம்பில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் புரதங்களில் மாற்றங்கள் ஏற்படுவதினாலும் வலிப்பு மருந்துகளின் செயல் `தன்மைகளில்(Pharmacokinetics) சிறிது மாற்றம் ஏற்படும். ஆகவே 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகளின் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சாப்பிடுவது நல்லது.

    சுகப்பிரசவமா சிசேரியனா?

    எல்லா வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிரசவத்திற்கான நேரத்தில்தான் இதனை முடிவு செய்ய முடியும். தாயின் உடல்திறன், சிசுவின் வளர்ச்சி, உடம்பில் உடனிருக்கும் வேறு ஏதும் தொந்தரவுகள், வலிப்பு நோயின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு மகப்பேறு மருத்துவர் நரம்பியல் நிபுணர், மயக்க மருந்து நிபுணர் அனைவரும் கூடி அந்த நேரத்தில் முடிவு செய்வதை பொறுத்துதான் சுகப்பிரசவமா அல்லது சிசேரியன் டெலிவரியா என்பதை தெளிவாக கூற முடியும்.
    35 வயதிற்கு மேல் கர்ப்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சில நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம்.
    இன்றைய காலத்தில் பெண்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது.

    இவ்வாறு 35 வயதானப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்ப்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் இருக்கிறது. ஆகவே எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் எக்காலத்திலும் தள்ளி வைக்கக்கூடாது.

    ஆனால் 35 வயதிற்கு மேல் கர்ப்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சில நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம்.

    அதிலும் சரியான மருத்துவரின் ஆலோசனை மற்றும் உடல் ஆரோக்கிய பராமரிப்புக்களின் மூலம், வயதானாலும் பிரச்சனையின்றி குழந்தை பெற்றெடுக்க முடியும். இப்போது 35 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான வழிமுறைகளை உள்ளன. இந்த முறைகளை பின்பற்றி வந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

    • எப்போதும் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் இறைச்சி, மீன், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், கருமுட்டையின் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    • குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் முன், குறைந்தது மூன்று மாதத்திற்கு போலிக் ஆசிட் மாத்திரைகள் அல்லது உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு, இது மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல், இந்த போலிக் ஆசிட் குழந்தையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவரை அணுக வேண்டும்.

    • குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், அதற்கு முதலில் சரியான நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு ஓவுலேசன் கால்குலேட்டரைப் பயன்படுத்தினால், எப்போது உறவு கொண்டால், கர்ப்பமாகக்கூடும் என்பதை சொல்லும். அந்த காலத்தில் உறவு கொண்டால், எளிதில் கருத்தரிக்கலாம்.

    • பொதுவாக 35 வயதிற்கு மேல், மன அழுத்தமானது அதிகம் இருக்கும். ஆகவே குழந்தை பெற ஆசைப்பட்டால், அத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொண்டு, மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் கூட ஒரு வகையில் கரு உருவாவதற்கு தடையாக இருக்கும்.

    • ஆண்களுக்கு வயதானால், விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடும். எனவே ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். இதனால் விந்தணுவின் உற்பத்தியானது அதிகரித்து, எளிதில் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.

    • 35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக்கும் முன், முதலில் மருத்துவரைச் சென்று அவர்களிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்வதோடு, கருத்தரிக்க வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கேட்டறிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.
    வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன்தான் வாங்குகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன்தான் வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கு நம்மிடம் ஒரு அடிப்படைத்தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீத தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை ‘டவுன் பேமென்ட்’ என்று சொல்லுவார்கள்.

    உதாரணத்துக்கு ரூ.50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள் கடன் தரும்.

    வீடு வாங்கும்போதே இத்தனை வருடத்துக்குள் வாங்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்ப முதலீட்டை செய்துகொள்ளலாம். மூன்று வருடங்களுக்கு பிறகு எனும்பட்சத்தில் கொஞ்சம் மிதமான ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம். வங்கி மற்றும் தபால்நிலைய சேமிப்புகளில் கிடைக்கும் தொகையைவிட ‘பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்’களில் (இதில் நாம் முதலீடு செய்யும் தொகையை பங்குச்சந்தை மற்றும் கடன்சந்தையில் முதலீடு செய்வார்கள்) முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம்.

    இதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு மாதம் 10,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய்க்கு மேல் இதுபோன்ற பேலன்ஸ்டு மியுச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

    ஒரு வேளை மூன்று வருடத்துக்கும் குறைவாகவே வாங்கத் திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால், பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களை தவிர்த்துவிட்டு வங்கி, தபால்நிலைய சேமிப்பு அல்லது கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடு மட்டுமே போதும். குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது.

    இந்த தொகையை சேமிப்பதற்கு முன்பாக உங்களுக்கு வேறு ஏதாவது கடன் இருந்தால், அந்த கடனை அடைத்தபிறகு வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டியைவிட, நீங்கள் கடனுக்காக செலுத்தும் வட்டி அதிகமாக இருக்கும். அதனால் கடனை முழுமையாக அடைத்த பிறகு, வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம்.

    அதேபோல இந்த டவுன்பேமென்ட் தொகையை திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்ட வகைகளில் பணத்தை திரட்ட வேண்டாம். இந்த வகைகளில் வட்டி அதிகம். மேலும் இந்த வகையில் பணத்தை திரட்டிவிட்டு, வீட்டுக்கடன் வாங்கும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பெருமளவு கடனை திருப்பி அடைப்பதற்கு போய்விடும். அதனால், அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

    பொதுவாக ஒருவருடைய மாத வருமானத்தில் 40 சதவீததுக்கு மேல் கடனுக்கு செல்வது ஆரோக்கியமானது கிடையாது. திடீரென வருமானம் பாதிக்கப்பட்டால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

    ஆனால், அதேநேரம் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வட்டி இல்லாமல் கடனைத் திரட்ட முடிந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எப். தொகையில் இருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் வரிச்சலுகை வேண்டும் என்பதற்காக வீட்டுக்கடனை வாங்கவேண்டாம்.
    பெண்கள் கருத்தரித்தவுடன் சில அரிய உடல் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்கவேண்டும் எனத் திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
    பெண்கள் கருத்தரிப்பது என்பது அவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அம்சமாகும். அதுவும் முதல் பிரசவம் என்றால் எல்லா விடயமும் வித்தியாசமாகவும், சந்தேகத்துடனும், விளங்காத புதிராக இருக்கும். கர்ப்பகாலத்தில் இயற்கையாக ஏற்படும் சில சின்ன பிரச்சினை கூட பெரிய பிரச்சினையாக தோன்றும். அதே போல சில அரிய உடல்மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்கவேண்டும் எனத் திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை சுருக்கமாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

    ஆலோசனை பெறுதல் : இதுதான் கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். கருத்தரிக்கும் முன்பு என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எப்போது கருத்தரிக்கும் என்பன போன்ற விவரங்களையும், பாதுகாப்பான முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மாதவிலக்கு தள்ளிப்போதல் : கர்ப்பத்தின் அடையாளம் இது. மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவாலும் இப்படி நேரிடலாம். அடுத்த விலக்குவரும் வரை பொறுத்திருந்து கர்ப்பமானதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    பிரசவ காலம் : கடைசி மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து கர்ப்ப காலம் கணக்கிடப் படுகிறது. சரியான பிரசவ காலத்தை தெரிந்துக் கொள்ள, கடைசியாக உங்களுக்கு மாதவிலக்கு எப்போது ஆனது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    உணவு: தாய் போதுமான ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொண்டால்தான் பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களால் உணவில் மீது வித்தியாசமான ஆசைகள் ஏற்படலாம். புளிப்பான சுவை கொண்ட உணவுகளை அதிகம் விரும்புவர். முதல் சில மாதங்கள் மசக்கை இருப்பதால் சாப்பிடப்பிடிக்காது. புளிப்பு சுவை கர்ப்பகாலத்தில் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு கேடானது என்பதை அறிந்து தவிர்த்து விட வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

    இரத்த சோகை : கருக் காலத்தில் குழந்தை ஒட்சிசன், ஊட்டம் போன்றவை தாயின் இரத்திலிருந்தே அனுப்பப்படுகிறது. எனவே தாய்க்கு கூடுதலான இரத்த உற்பத்தி இருக்க வேண்டும். பழங்கள், கீரைகள் போன்றவற்றை நிறைய சாப்பிட்டால் இரத்த உற்பத்தியும் ஊட்டமும் கிடைக்கும். இல்லா விட்டால் இரத்த சோகை ஏற்படும். இது கர்ப்பிணிக்கு மட்டுமின்றி கருவுக்கும் ஆபத்தை தரும். இரும்புச்சத்து, பாலிக் அமில மாத்திரைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
    கால்சியம் : குழந்தையின் எலும்பு, பல் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து தேவை, பால், பால் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    வலிகள் : கருப்பை வளர்த்து முன்னே தள்ளும்போது உடல் சமநிலையை இழந்து தடுமாறும். இதனால் முதுகு வலி வரக்கூடும். கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் கருப்பை வளர்ச்சியால் அழுத்தப்படுவதால் கால்கள் வலிக்கும், வாசனைகளை முகர்ந்தால் ஒத்துக்கொள்ளாமல் அவ்வப்போது தலைவலி போன்றவை வரக்கூடும்.

    மார்பகங்கள் : கர்ப்பம் தரித்த பிறகுதான் மார்பகத்தின் வளர்ச்சி முழுமையடையும். நிறமாற்றங்கள் ஏற்படும். இரத்த அழுத்தம் அந்தப் பகுதிக்கு அதிகம் செல்வதால் இரத்த நாளங்கள் வீங்கி தொட்டாலே வலிக்கும். மார்பகப்பகுதிகளைச் சுற்றி சின்னச்சின்ன முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும். இதெல்லாம் மார்பக மாற்றங்கள். இதை ஏதோ பிரச்சினை என நினைத்து பயப்படகூடாது.

    மூச்சு திணறல்: கரு வளர்ச்சியடையும் போது கருப்பையானது மேல் நோக்கி அழுத்து வதால் நுரையீரல் முழுமையாக விரிவடைய இயலாது. இதனால் ஆழ்ந்து சுவாசிக்க இயலாமல் அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படும். இது கர்ப்ப காலத்தில் சாதாரணம்.

    மயக்கம் : இரத்த அழுத்தம் அவ்வப் போது குறைந்துவிடுவதால் களைப்பு, கிறுகிறுப்பு, திடீர் மயக்கம் போன்றவை ஏற்படக் கூடும். பட்டினியின்றி சாப்பிட வேண்டும்.

    மலச்சிக்கல், மூலநோய் : ஜீரண மண்டலம் மெதுவாகச் செயற்படுவதாலும், ஹார்மோன் மாற்றத்தால் குடல் விரிவடைதாலும் குடலுக்கு உணவுப் பொருட்கள் தள்ளப்படுவரில் தாமதம் ஏற்படும், நீர்ச்சத்துக்களை குடல் உறிஞ்சி விடும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும். இது தொடர்ந்தால் மூலநோய் வரும். கருப்பை இடுப்புக் கூட்டை அழுத்துவதாலும் ஆசன வாயின் சிரை நாளங்கள் வெளி நோக்கித் தள்ளப்பட்டு மூலக் கட்டிகள் தோன்றும். இந்தப் பிரச்சினை பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்றாலும் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    கண்களில் மாற்றம் : திடீர் திடீரென இரத்த அழுத்தம் உயர்வது, குறைவது இயல்பு. ரத்த அழுத்தம் உயர்வதால் கண்களில் ஏதோ திரை விழுந்ததைப் போன்று இருக்கும். பார்வை மங்கலாகும். இதற்குப் பயப்பட வேண்டியதில்லை. பிரசவத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.

    ஈறுகளில் அழற்சி : கர்ப்பத்தின்போது ஈறுகள் மென்மையடைவதால் ஈறுகளில் அழற்சி தோன்றுவது இயல்பு. கடினமான பொருட்களைக் கடிக்காதீர்கள். பல் பாதுகாப்பில் கவனம் செலுத்தங்கள்.

    தடையற்ற சிறுநீர் : கர்ப்பத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் அதிர்ந்து சிரித்தாலோ அல்லது பேசினாலோ சிறுநீர் தானாகப் பிரியும். பத்தாம் மாதவாக்கில் இப்படி சிறு நீர்க்கசிவு தொடர்ந்து இருந்தால் பனிக்குடம் உடைந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே மருத்துவரை பார்க்க வேண்டும். இல்லா விட்டால் குழந்தைக்கு ஆபத்து.

    உறக்கமின்மை : அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருப்பதால் உறக்க மின்மை ஏற்படும். எந்தப் பக்கம் படுத்தால் சரியாக இருக்கும் என்பது தெரியாததாலும் இவ்வாறு ஏற்படும்.

    நமைச்சல் : கர்ப்பக் காலத்தில் வயிற்றுப் பகுதியில் வரிக்கோடுகள் தோன்றுவதால் நமைச்சலெடுக்கும். உடல் முழுவதும் நமைச்சலெடுத்தால் கல்லீரல் பாதிப் பிருக்கலாம். இந்த பிரச்சினை அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது.

    மூட்டுகள் : கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாவதால் தசைநார்கள் தளர்ந்து மென்மையடைந்து விடும். இதனால் உடலிலுள்ள மூட்டுகளில் வலி ஏற்படும். ஓய்வு எடுப்பது, உறங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையும் தேவை.

    பாலுறவுசிந்தனைகள் : ஹார்மோனின் ஏற்ற இற்றங்களால் பாலுறவு அதிகரிப்பதும், குறைவதும் கர்ப்பக் காலத்தில் இயல்பு.

    மனநிலையில்மாற்றம் : தாய்மையை நினைத்து சந்தோஷப்பட்டாலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள், பிரசவத்தைப் பற்றி பயம் ஆகியவற்றால் திடீரென பயம், கவலை போன்ற மனமாற்றங்கள் வரலாம். அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறவேண்டும். கருக்காலத்தில் அதிகமாக வீடு மற்றும் வெளி வேலை செய்வதால் எரிச்சல், கோபம், சோர்வு போன்றவை ஏற்பட்டு அதன் காரணமாக மன நிலையில் மாறுதல் வரலாம்.

    நீர்கோர்த்தல் : கர்ப்ப காலத்தில் உடலில் நீர்கோர்த்தல், பனிக் குடத்தில் நீர் சேருதல் இயல்பு. இதனால் கை, கால்களில் வீக்கம் வருவதும் இயல்பு. பயப்பட வேண்டாம். நடை பயிற்சி செய்யுங்கள்; ஓய்வெடுங்கள்.

    இதயத் துடிப்பு : கர்ப்ப காலத்தில் இதயம் மிக அதிகமாகத் தூண்டப்படுவதால் படபடப்பு அதிகமாகும். பயம் வேண்டாம். சருமம் : சருமத்தில் வரிக்கோடுகள் தோன்றும். இளமையான சருமம் இப்போது மாறத் தொடங்கும். இது இயல்பு. பெரும்பாலானவை மறைந்து விடும், சில கோடுகள் இறுதிவரை நீடித்திருக்கும்.
    எடை அதிகரிப்பு : கர்ப்ப காலத்தில் 12 கிலோவரை எடை அதிகரிக்கும். இதில் குழந்தையின் எடை, நஞ்சு, தொப்புள்கொடி போன்றவற்றின் எடை, கொழுப்பு போன்றவை அடங்கும்.

    கரு நெளிதல் : 18 20 வாரங்களில் முதன் முறையாக கரு நெளிதல் ஏற்படும். குழந்தையின் உதைப்பு வலித்தாலும், இன்பம் தரக்கூடியது. இந்த உதைப்பு குறைந்து விட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

    வேலை, ஓய்வு : கர்ப்பக் காலம் முதல் பிரசவத்திற்குத் தயாராவது என வேலை செய்வதில் தவறில்லை. ஆனால் போதுமான ஓய்வு தேவை, அலைச்சல் இருக்கக்கூடாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே மருந்து மாத்திரை பயன்படுத்த வேண்டியிருந்தால் டாக்டரைக் கேட்டு அதன்படி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை உருவாகும் போதே குறைபாடுகள் தோன்றலாம்.

    பிரசவம் : பிரசவிக்கும் போது வலி இருக்கத்தான் செய்யும். இந்த வலி பத்து நிமிடங்கள் அல்லது அதிகமாகக் கூட இருக்கலாம். குழந்தை பிறப்பதற்கு வசதியாக அமைந்திருந்தால் சாதாரணமாகப் பிறந்துவிடும். இல்லாவிட்டால் சிசேரியன் நடக்கலாம்.
    திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானது என்றாலும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள்.
    திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானது. இருப்பினும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிந்தைய எடை அதிகரிப்புக்கு பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

    உணவுப் பழக்கம்:


    புதுமண தம்பதியர் தங்கள் புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை அனுபவிக்க விரும்புவார்கள். பெரும்பாலான வீடுகளில் திருமணமான புதிதில் புதுப்பெண்ணை வீட்டு வேலைகள் செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். அப்படியே செய்தாலும் சமையலை தவிர வேறு எந்த வீட்டு வேலையையும் செய்ய விடமாட்டார்கள். வெளி இடங்களில் சாப்பிடுவது, உறவினர் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வது என பிசியாக இருப்பார்கள். அந்த சமயங்களில் பெரும்பாலான புதுமண தம்பதியர் சாப்பிடும் விஷயத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அதாவது உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. அதுவே ஆரம்ப ஆண்டுகளில் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    மகிழ்ச்சி:

    திருமணமான புதிதில் தங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்ப நாட்களில் மகிழ்ச்சிதான் பிரதான அங்கம் வகிக்கும். அப்போது தங்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை விரும்பி ருசித்துக்கொண்டே உரையாடலை தொடர்வார்கள். அத்துடன் கணவருக்கு பிடித்தமான உணவு பட்டியலை கேட்டு தெரிந்து கொண்டு அவற்றை சமைத்து கொடுப்பதற்கும் மனைவி ஆர்வம் காட்டுவார். கணவர் மற்றும் குடும்பத்தினரை ஈர்ப்பதற்கு புதிய சமையல் குறிப்புகளையும் கையாளுவார். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். சுவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை பேணும் விதத்தில் சமையலை செய்வது நல்லது.

    மன நிம்மதி:


    திருமணமான புதிதில் நிம்மதியான வாழ்க்கை சூழலை அனுபவிப்பார்கள். திருமணத்திற்கு முன்பு எதிர்கொண்ட பிரச்சினைகள், மன வருத்தங்கள், துயரங்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பார்கள். அதிக நேரம் ஓய்வும் எடுப்பார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு எடை அதிகரிப்பதற்கு மற்றொரு பொதுவான காரணமாகும்.

    வீட்டில் அதிக நேரம் செலவிடுவது:

    திருமணத்திற்கு முன்பு வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு வீட்டில்தான் அதிக நேரம் செலவிடுவார்கள். மலைவாசஸ்தலங்களுக்கு சென்று அங்கு நேரத்தை செலவிட விரும்புவார்கள். தேனிலவு காலம் உடல் பருமன் பிரச்சினைக்கு அடித்தளம் அமைத்துவிடக்கூடியது. ஏனெனில் அன்றாட செயல்பாடுகளை சில காலம் விலக்கி வைக்க வைத்துவிடும்.

    தேனிலவுக்கு செல்லும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானது. கடற்கரையில் நடந்தபடி பேசுவது, காலை, மாலை வேளையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, ஜாக்கிங் செய்வது என உடல் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனெனில் உடல் எடையை அதிகரிக்க வைப்பது எளிது. குறைப்பதுதான் கடினம். அலட்சியமாக இருந்தால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்.

    கர்ப்ப காலம்:

    திருமணமான உடனேயே தம்பதியர் குழந்தை பெற திட்டமிட்டால், பெண்ணின் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் காரமான, எண்ணெய்யில் தயாரான உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். அத்துடன் உணவு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் விதவிதமான உணவுகளையும் சாப்பிடுவார்கள். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். ஆதலால் திருமணமான புதிதில் எடை அதிகரிப்பதற்கான காரணங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
    முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது.
    முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது. அத்தகைய ஊட்டச்சத்துக்கள் குறித்து பார்ப்போம்.

    இரும்பு சத்து: கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கோழி இறைச்சி, மீன், கீரை, பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், பயறு, தானியங்கள் உள்ளிட்டவற்றில் இரும்பு சத்து அதிகம் நிறைந்திருக்கும். மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது உடலில் முழுமையாக இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவும்.

    அயோடின்: இந்த தாது அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு தேவையான அயோடின் தாய்மார்களிடம் இருந்து கிடைக்கும். அதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு அயோடின் முக்கியமானது. அதனால் கடல் உணவுகள், முட்டை, பால், தானியங்கள் என அயோடின் நிறைந்திருக்கும் உணவு பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும்.

    புரதம்: தசைகளின் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியம். வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடைய தொடங்கும். அதனை தவிர்ப்பதற்கு கோழி, மீன், பீன்ஸ், பயறு, குறைந்த கொழுப்புள்ள தயிர், பால், பாலாடைக்கட்டிகள், நட்ஸ்கள், கொட்டைகள், முட்டை போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் புரதம் அதிகம் இருக்கிறது.

    வைட்டமின் பி 12 : நரம்பு திசுகள், மூளையின் செயல்பாடு மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் பி 12 அவசியமானது. அவை அதிகம் நிறைந்த மீன், இறைச்சி, முட்டை, பால், பால் பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும். இவை 35 வயதுக்கு பிறகு ஏற்படும் ரத்தசோகை போன்ற சிக்கல்களை போக்கவும் உதவும்.

    கால்சியம் மற்றும் வைட்டமின் டி : எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்வது நல்லது. குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், பாலாடைக்கட்டி, கொழுப்பு நிறைந்த மத்தி மீன் போன்றவை கால்சியம் நிறைந்த உணவு பொருட்கள். கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது. நேரடி சூரிய ஒளி மூலமும் பெறலாம்.

    ஒமேகா 3 கொழுப்பு அமிலம்: இதயம், எலும்பு மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 அவசியம். மேலும் இவை மனம், கண்கள், சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கடல் உணவுகள், நட்ஸ்கள், ஆளி விதை, சோயா பீன் எண்ணெய், முட்டை, தயிர், ஜூஸ், பால், சோயா பானங்கள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

    நார்ச்சத்து: பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவற்றை தினமும் சாப்பிட வேண்டும். வயது அதிகரிக்கும்போது ஊட்டச்சத்தின் தேவையும் அதிகரிக்கும் என்பதால் உணவு அட்டவணை தயாரித்து அதற்கேற்ப உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றி வரலாம். அதன் மூலம் உண்ணும் உணவில் இருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெற முடியும். ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.
    திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:
    திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:

    பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது. பெண்களுக்கு மனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் தாம்பத்யத்தை அனுபவிக்கும் ஆசையும், ஆற்றலும் உண்டு என்பதை நவீன மருத்துவ விஞ்ஞானம் உணர்த்துகிறது.

    திருமணத்திற்கு முன்பே பாலியல் தொடர்புவைத்திருந்தவர்கள், திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுமே அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். புதிய கணவருடன் இணையும்போது குற்றஉணர்ச்சியும் கொள்கிறார்கள். பழைய நினைவுகள் அவர்களுக்கு அடிக்கடி வருவதால் தேனிலவு காலமும் அவ்வளவு தித்திப்பாக அமைவதில்லை.

    காலப்போக்கில் பெண்கள் அத்தகைய பழைய நினைவு களை ஜீரணித்துக்கொள்கிறார்கள். சிலர் அதை கணவரிடம் கூறிவிட்டு, புதிய சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.

    பார்ப்பது, கேட்பது, படிப்பது மூலம் பல்வேறுவிதமான பாலியல் எதிர்பார்ப்புகள் ஆண், பெண் இருவரிடமும் ஏற்படுகிறது. திருமணத்திற்கு பின்பு தனக்கு விருப்பமான முறைகளை கையாள ஆண் விரும்புவதும், பெண் அதை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும் சில குடும்பங்களில் நடக்கிறது. அது தீர்வற்றதாக தொடர்ந்தால் தவறான திசையை நோக்கிச் சென்றுவிடும்.

    சில பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்களை தோழிகளிடம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே, அவர்கள் அளவுக்கு பாலியல் விஷயங்களில் குழப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். இன்னொருவரின் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல அவர்கள் நிபுணத்துவமும் பெற்றி ருப்பதில்லை. சில நேரங்களில் தோழிகள் அல்லது நண்பர்களின் தவறான வழிகாட்டல் தம்பதிகளை பிரிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது.

    மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களும், பிந்தைய சில நாட்களும் பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்கள் மனதில் அதிகம் எழும். சாதாரண விஷயங்களுக்குகூட அதிக கோபம் கொள்வார்கள். மாதவிலக்கு நாட்களில் தாம்பத்யம் வைத்துக்கொள்ள கணவர் விரும்புவது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அப்போது மனைவியை கட்டாயப்படுத்தினால் அது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்.

    பிரசவமாகி ஆறு வாரங்கள் கடந்த பிறகு தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம் என்றாலும், மனைவி அதற்கு மனதளவில் தயாராகிவிட்டால்தான் அது சாத்தியம். தயாராகும் முன்பே தாம்பத்யத்திற்கு கட்டாயப்படுத்தினால், எதிர்காலத்தில் அந்த பெண்ணுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாமல் போவதற்கு வாய்ப்புண்டு.

    ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், தாயார் அந்த குழந்தைகளை பராமரிக்க சிரமப்படுவார். அப்போது பல மாதங்களாக கணவரின் ஆசைகளை நிராசையாக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த காலகட்டத்தில் கணவர் ஆத்திரமடையாமல் மனைவி மீது அன்புசெலுத்த முன்வரவேண்டும்.

    நாற்பது வயதுக்கு பிறகு இயல்பாகவே பெண்களுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் குறையும். அதற்கு அவர்கள் உடலில் உருவாகும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் பருமன், ஆரோக்கிய குறைபாடு போன்றவை காரணமாக இருக்கும். 40 வயதுக்கு பிறகு தம்பதிகளின் வாழ்க்கையில் தாம்பத்யத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கும். அப்போது இருவருமே அன்பை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

    பெண்களின் உடல் எடை குண்டாகிவிடுவது அவர்களது தாம்பத்ய திருப்திக்கு பெரும் இடைஞ்சலாகிறது. 50 வயதுக்கு பிறகு ஆன்மிக பாதையே சிறந்தது என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களது தாம்பத்ய விருப்பங்களுக்கு பூட்டுபோட்டுவிட்டு ஆன்மிகத்தை நோக்கி மனதை திருப்புகிறார்கள். அது சரியல்ல. ஆன்மிகமும், தாம்பத்யமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஆன்மிகம் மனதுக்கு உற்சாகம் தந்தால், தாம்பத்யம் மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து திருப்தி தரும்.
    மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.
    மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி, அசவுகரியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அத்துடன் மனநிலை மாற்றம், தசைப்பிடிப்பு போன்றவை பொதுவாக பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளாகும். அதேவேளையில் மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.

    சில பெண்கள் மட்டுமே, சில மாதங்களில் இத்தகைய சிரமங்களை அனுபவிப்பார்கள். அதாவது ஒவ்வொரு மாதமும் காய்ச்சல், குமட்டல் ஏற்படாது. இந்த பீரியட் காய்ச்சலுக்கு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான் காரணம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். சிலருக்கு மாதவிடாய் காலத்திற்கு முன்பும், மாதவிடாயின் போதும் காய்ச்சல், உடல் சோர்வு, சோம்பல், தலைவலி, தசைப்பிடிப்பு, வயிற்று பிடிப்பு, குமட்டல், வாந்தி, மந்தமான நிலை, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.

    இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை கருத்தரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருக்கும். அதனால் பல பெண்கள் மாதவிடாய்க்கு முன்பு தோன்றும் இந்த அறிகுறிகளை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். உடனே பீதியடையாமல் ஓரிரு நாட்கள் அமைதி காப்பது நல்லது. எந்தவொரு மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் பாதுகாப்பானது. கர்ப்பமாக இருப்பதாக தோன்றினால் வீட்டிலேயே பரி சோதித்து பார்க்கலாம். உண்மையில் கர்ப்பமாக இருக்கும்பட்சத்தில் அவசரப்பட்டு மருந்து உட்கொள்வது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

    கர்ப்பம் தரித்திருக்காவிட்டால் ‘பீரியட் காய்ச்சல்’தான் என்பதை உறுதிபடுத்திவிடலாம். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஒருசில வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

    * அடி வயிற்றில் வலியோ, பிடிப்போ ஏற்பட்டால் ‘ஹீட்டிங் பேடு’ பயன்படுத்தலாம்.

    * மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் அதிக வேலை செய்வதற்கு முயற்சிக்காதீர்கள். கடுமையான வேலைகளைச் செய்தால் பீரியட் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதிகமாகிவிடும். கூடுமானவரை ஓய்வு எடுப்பது நல்லது.

    * வாந்தியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் உடலில் நீர் இழப்பு ஏற்படக்கூடும். எனவே அதிக தண்ணீர் பருகுவது நல்லது. திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான வெந்நீர் பருகுவது நல்லது.

    * துரித உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். அதிக நார்ச்சத்து கொண்ட பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

    * மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு பிடித்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டலாம்.

    * தூக்கமின்மை பிரச்சினையை அதிகரிக்கும் என்பதால் நன்றாக தூங்க வேண்டும். டி.வி பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்றவை தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும் என்பதால் மாதவிடாய் சமயத்தில் அவற்றை தவிர்த்துவிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.
    ×