என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    காதலில் கசிந்துருக உடலுக்கும், மனதுக்கும் சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலை தூண்டும் உணவுகள் பற்றி பார்ப்போமா...
    காதல் தவிர்க்க முடியாதது. இயற்கையாக எழும் உணர்வும் கூட. பசி, தாகம் போல காதலும் நமக்கான உணர்வுதான். அனைத்து உயிர்களின் இலக்கும் ஏதோ ஒரு வழியில் காதலை சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கும். காதலில் கசிந்துருக உடலுக்கும், மனதுக்கும் சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலை தூண்டும் உணவுகள் பற்றி பார்ப்போமா...

    தக்காளி

    காதலுணர்வையும், பாலுணர்வையும் தூண்டக்கூடிய சத்துக்கள் இதில் உள்ளதால், ‘லவ் ஆப்பிள்’ என்று பெயர் பெற்றது. தோற்றத்திலும் கவர்ச்சிகரமான உணவு இது.

    கிவி

    இதில் போலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தை பேறுக்கு திட்டமிடும் பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய பழம் இது. உடலுக்கு சக்தி கொடுக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்.

    லெட்யூஸ்

    முட்டைகோஸ் போன்ற தோற்றமுடைய இது பல வகை வைட்டமின்கள் நிறைந்திருக்கும் கீரை. இதன் சாறு, நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடியது. பதற்றம், பயம், கவலை ஆகியவை நீங்கி நல்ல உணர்வுகளை உருவாக்கும். காதல் உணர்வை தூண்டும்.

    பட்டாணி

    ‘மூட் ஸ்விங்ஸ்’ என்று சொல்லக்கூடிய இது மன ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளுக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகளை போக்கும் தன்மை உண்டு. இதுவும் அந்த வகையை சேர்ந்ததுதான். மனச்சோர்வை குறைப்பதுடன், காதல் உணர்வுக்கும் வழி அமைத்துக் கொடுக்கும்.

    மாதுளை

    மாதுளையைப் பழமாகவோ, ஜூஸாகவோ தொடர்ந்து அருந்தி வர, ஆண்களின் உடல் வலிமை பெறும். காதலுக்கு மட்டுமல்ல, இல்லற வாழ்க்கைக்கும் மிகவும் ஏற்றது.

    டார்க் சாக்லேட்

    செரோட்டொனின் என்ற ஹார்மோனை தூண்டுவதில் டார்க் சாக்லேட்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தை அளித்து, ரத்த நாளங்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். இதனால், பாலியல் உணர்வை சீராக தூண்ட உதவும்.

    காபி

    காபியில் உள்ள காபின் தற்காலிக எனர்ஜியைத் தரக்கூடியது என்பதால் ஆண், பெண் இருவருமே பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத காபியை அருந்தலாம். காதல் உறவுக்கு எனர்ஜி தரும் அற்புத பானம் இது.

    தர்பூசணி

    இந்தப் பழத்தை, ‘நேச்சுரல் வயாகரா’ என சொல்லலாம். இதில், அமினோ ஆசிட் சிட்ருலீன் எனும் சத்து, வயாகராவுக்கு இணையான பலன்களை தர வல்லது.

    ஆப்பிள்

    ஆப்பிளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பாலி பீனால்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட் ஆகியவை காதல் உணர்வை தூண்டக்கூடியவை. உடலுக்கு அதிக சக்தியை தரக்கூடியவை. இது, திருமணமான பெண்களுக்கு மிகவும் நல்லது.
    கருவுறும் தருவாயில் இருக்கும் இளம்பெண்கள், கருவுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய உணவு, கரு தங்காமல் தாமதப்படுத்தும் உணவு என பிரித்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும்.
    குழந்தைக்கான தவமிருக்கும் பெண்கள் தேவையான உணவுகளை சாப்பிட்டும், சாப்பிடக்கூடாத உணவுகளை தவிர்த்தும் வந்தால், நிச்சயம் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

    திருமணம் ஆன சில மாதங்களிலேயே, என்ன ஏதாவது விசேஷமா? என்று உறவினர்கள் கேட்பார்கள். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்தம். அப்படி கருவுறும் தருவாயில் இருக்கும் இளம்பெண், கருவுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய உணவு, கரு தங்காமல் தாமதப்படுத்தும் உணவு என பிரித்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும்.

    கருவை பாதிக்கக்கூடிய உணவு எது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதன்படி தேவையான உணவுகளை சாப்பிட்டும், சாப்பிடக்கூடாத உணவுகளை தவிர்த்தும் வந்தால், நிச்சயம் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

    வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம். கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். காரணம் அந்த பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.

    அதேபோல பப்பாளியிலும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் அதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.

    வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.

    கரும்பிலும் வைட்டமின் சி உள்ளது. மேலும் கரும்பு உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகும். எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கரு கலைந்துவிடும்.

    வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.

    எள் கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டது. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் அதிக அளவு உள்ளது. எனவே இதையும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
    பூக்கள் உடலில் உள்ள செல்களை உற்சாகப்படுத்தி மன அமைதியை ஏற்படுத்தும் குணம் கொண்டவை. இன்றைய தலைமுறை இளம் பெண்கள் பூச்சூடுவதை பழக்கப்படுத்தி கொள்வது சிறந்ததாகும்.
    பூக்களை சூடிக்கொள்வதால் பெண்களை பூவையர் என்று குறிப்பிடும் சொல் வழக்கு ஏற்பட்டது. மலர்களை சூடுவதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும். மலர்கள் மருத்துவ தன்மை கொண்டவை.

    ஒவ்வொரு பூவையும் குறிப்பிட்ட கால அளவு வரை மட்டுமே சூடிக்கொள்ள வேண்டும். அவ்வாறு சூடுவதால் மட்டுமே நன்மைகள் ஏற்படும்.

    பூக்கனை சூடிக்கொள்வதன் மூலம் பெண்மைக்கான ஹார்மோன்கள் சீராக சுரக்கக்கூடும். பூக்களில் உள்ள மிக நுட்பமான ஆற்றல் மூளையின் செல்களால் உட்கிரகிக்கப்படுவதால் நாளமில்லா சுரப்பிகள் மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் நன்றாக இயங்குகின்றன.

    ரோஜா பூவை சூடிக்கொள்வதால் தலைசுற்றல், கண் நோய் போன்றவை குணமாகும். ரோஜாவை இரண்டு நாட்கள் வரை சூடிக்கொள்ளலாம்.

    செண்பகப்பூவை 15 நாட்கள் வரை சூடிக்கொள்ளலாம். இதன் மூலம் பார்வைத்திறன் மேம்பாடு அடையும். வாதம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

    கிராமப்புற பெண்கள் அதிகம் பயன்படுத்தும் கனகாம்பரப்பூ தலைவலியை சரி செய்கிறது. இதை ஒரு வேளை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

    அனைத்து பெண்களும் விரும்பக்கூடிய மல்லிகைப்பூ கண்களுக்கு குளிர்ச்சி தருவதுடன் மன அமைதியை ஏற்படுத்தும். திருமணமான பெண்கள் மல்லிகையை அடிக்கடி சூடிக்கொள்வதன் மூலம் தாம்பத்திய உறவின் போது கணவன் மனைவி இருவரது ஹார்மோன் சுரப்பும் தூண்டப்படுவதால் கருவுறுதல் எளிதாக நடக்கும். மல்லிகைப்பூவை அரைநாள் மட்டுமே கூந்தலில் சூடிக்கொள்ள வேண்டும்.

    தாழம்பூவை சூடிக்கொள்வதால் அதன் நறுமணம் சீரான தூக்கத்தை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் சோர்வை நீக்கக்கூடிய தன்மை இந்த பூவிற்கு உள்ளது. தாழம்பூவை அதன் வாசனை இருக்கும் வரை சூடிக்கொள்ளலாம்.

    நறுமணம் வீசக்கூடிய பூக்களை மட்டும் தான் சூட வேண்டும். வாசமில்லாத மலர்களை சூடிக்கொள்வதால் கூந்தல் வறட்சி ஏற்படலாம். பூச்சூடும் போது காதின் மேல் மற்றும் கீழ் நுனியில் சற்றே இடைவெளி விட்டு சூட வேண்டும். துளசி, மரிக்கொழுந்து போன்றவற்றை பூக்களோடு இணைத்து கட்டி சூடிக்கொள்வதன் மூலம் ஈறு, பேன் போன்றவை நீங்கும்.

    பூக்கள் உடலில் உள்ள செல்களை உற்சாகப்படுத்தி மன அமைதியை ஏற்படுத்தும் குணம் கொண்டவை. இன்றைய தலைமுறை இளம் பெண்கள் பூச்சூடுவதை பழக்கப்படுத்தி கொள்வது சிறந்ததாகும்.
    பெண்களுக்கு எப்போதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும் ஒல்லியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
    இன்றைக்கு அதிகமான இளம்பெண்கள் உடல் பருமனாக இருப்பதற்கு வேலைப்பளு, படிப்பு, உடற்பயிற்சி செய்ய நேரமில்லை போன்ற காரணங்களை கூறி நம்மை நாமே சமாதானப்படுத்தி கொண்டிருந்தாலும் உண்மையில் உடற்பருமன் ஏன் உருவாகிறது என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

    பெண்களுக்கு எப்போதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும் ஒல்லியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இதற்கெல்லாம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் பொருளாதார செலவுகளும் ஏராளம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த முடிவு கிடைப்பதில்லை. ஒரு பெண் உடல் எடை அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உணவு பழக்க வழக்கம் தான் முக்கிய காரணம். நாம் உண்ணும் உணவிற்கும் உடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    நவீனமான உணவு வகைகளில் சுவைக்காக சேர்க்கப்படும் சுவை ஊக்கிகள் நமது உடலின் தன்மையையே மாற்றி விடுகிறது. ஒருமுறை சாப்பிட்ட சுவையை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் போது தான் ஹார்மோன்களில் மாற்றம் ஆரம்பிக்கிறது. ஒரு சிலருக்கு குறிப்பிட்ட உணவு வகைகள் மிகவும் பிடித்து நாள் தோறும் அதையே சாப்பிடுவார்கள். இது போன்றவர்களுக்கு நிச்சயம் ஹார்மோன்களின் இயல்பு நிலை மாறியிருக்கும்.இந்த வகையினருக்கு எந்தவிதமான உடற்பயிற்சியும் எடையை குறைக்க பலன் தராது. முறையான பரிசோதனை செய்து ஹார்மோன்களை சீர்செய்தாலே தானாகவே எடை குறைய தொடங்கும்.

    ஒரு பெண்ணின் புறத்தோற்றம் அவளின் அகத்தோற்றத்தை, அகப்பை தோற்றத்தை, கர்ப்பப்பை தோற்றத்தை குறிக்கிறது எப்போது ஒரு பெண்ணிற்கு ஆரோக்கியமான பூப்பு சுழற்சி மாதவிடாய் சுழற்சி நிகழ்கிறதோ அப்போது அந்தப் பெண்ணின் உடல் எடை ஆரோக்கியமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த மாதவிடாய் பிரச்சனைகளை சீர் செய்யாமல் அதிக உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவுக்கட்டுப்பாடு இவையெல்லாம் நம் உடலையும் மனதையும் சோர்வாக்கும்.

    நாம் செய்ய வேண்டியது உடலின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் ஹார்மோன்களின் செயல்களை சீர் செய்தாலே உடல் எடை கட்டுக்குள் இருக்கும். தைராய்டு புரோலாக்டின் போன்ற ஹார்மோன்களின் ஏற்ற இரக்கத்தினால் உடல் எடை கூடுகிறது. சித்த ஆயுர்வேத மருந்துகளின் மூலம் நம் ஹார்மோன்களை சீர்செய்து அதன் பிறகு உணவு பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்தினால் அனைவரும் கட்டுடலுடன் வாழ முடியும். தனது 10 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் பெண்களின் உடல் பிரச்சனைகள் குறிப்பாக உடற்பருமனுக்கு காரணம் ஹார்மோன்களே என உறுதிப்படுத்தி ரத்த பரிசோதனையின் மூலம் மேலும் அதனை ஆய்வு செய்து தகுந்த மருந்துகளின் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்த முடியும் என லோட்டஸ் பெண்கள் நல மருத்துவமனை நிரூபித்துள்ளது..

    இதன் மூலம் பெண்களின் உடலில் ஏற்படும் அதிக தொப்பை முகத்தில் முடி வளர்ச்சி முகப்பரு கருந்திட்டுகள் தலைமுடி உதிர்தல் மனச்சோர்வு கோபம் பதட்டம் தூக்கமின்மை போன்ற அனைத்து பிரச்சினை களையும் அனைத்து பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த முடியும் உடற்பருமனால் தள்ளிப் போகும் குழந்தை பாக்கியத்தையும் பெண்களால் அடைய முடியும். வெளிப்புற அழகையும் நம்மால் பாது காத்துக் கொள்ள முடியும். இவை அனைத்தையும் மூலிகைகளாலான சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் செயல்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பெண்ணின் ஆரோக்கியமும் கர்ப்பப்பை சார்ந்ததே என்பதை வழிமொழிந்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் முறையில் செயல்படுகின்றனர்.
    பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.
    பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.

    நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன.

    எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது.

    இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி?

    வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும்.

    வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கி யிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.

    தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால் வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

    உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும். ரோல் ஆன் பயன்படுத்தும்போது முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.
    குழந்தையின் முதல் 6 மாதங்களில் அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளன. குழந்தைக்கு தண்ணீர், டீ, மற்ற பால் உணவுகள், வேறு வகையான உணவுகள் போன்ற எதுவும் தர கூடாது.
    சீம்பால் என்பது குழந்தை பிறந்த முதல் 2, 3 நாட்கள் வரை தாயிடம் ஊறும் கெட்டியான மஞ்சள் நிற பால். தாயிடமிருந்து வரும் சீம்பாலில் விட்டமின் ஏவும், நோய் எதிர்ப்பு சக்தியும், குழந்தை வளர்ச்சிக்கான சத்து பொருட்களும் உள்ளன. சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதால் வயிற்றுப்போக்கு, நோய் தொற்றுகள் உள்ளிட்ட பல நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காக்கும். மேலும், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை சீம்பால் அதிகரிக்கும்.

    ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 2-3 மணி நேரத்துக்குள் ஒருமுறை பால் ஊட்ட வேண்டும். அதாவது 8-12 தடவை குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டும். மாலையிலும் இரவிலும் பால் ஊறுவது அதிகம் என்பதால் ராத்திரி நேரத்திலும் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டும்.

    ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.

    ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம். குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.

    குழந்தையின் முதல் 6 மாதங்களில் அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளன. குழந்தைக்கு தண்ணீர், டீ, மற்ற பால் உணவுகள், வேறு வகையான உணவுகள் போன்ற எதுவும் தர கூடாது.

    மற்ற உணவுகளைப் போலவே தண்ணீரும் குழந்தைக்கு 6 மாதங்கள் நிரம்பிய பிறகே தர வேண்டும். அதற்கு முன்னால் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவு தந்தாலும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கலாம். நோய் தொற்றுக்கு குழந்தை ஆளாகலாம்.
    இன்றைய தனிக்குடித்தன வாழ்வில் உறவுகளின் உதவிகள் முழுமையாக கிடைப்பதில்லை. பிரசவித்த தாயே தனக்கான வேலைகளை கவனித்துக்கொள்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
    பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், பிரசவத்துக்கு பின்னர் ஏற்படும் மன அழுத்தம் முக்கியமானது. இது காலம்காலமாக பிரசவித்த பெண்கள் சந்திப்பதுதான் என்றாலும், தற்போதைய நகர நாகரிகத்தில் அதன் பாதிப்பும், எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதற்கான தீர்வு பற்றி பல்வேறு மருத்துவ வல்லுனர்கள் அளித்த ஆலோசனைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

    காரணங்கள்

    முந்தைய தலைமுறையில் பிரசவித்த பெண்ணை பாட்டி, பெரியம்மா, சித்தி, அத்தை போன்றவர்கள் கவனித்துக்கொள்வார்கள். அதன் காரணமாக குழந்தைக்கு பாலூட்டி விட்டு, குழந்தை உறங்கும்போது தாயும் உறங்கி ஓய்வெடுத்துக்கொள்வார்.

    மேலும் தாய்க்கு அவசியமான பத்திய சாப்பாடு, துணிகளை துவைப்பது உள்ளிட்ட பல உதவிகளை வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் செய்தார்கள். அதன் மூலம் பிரசவித்த பெண்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அமைதியான சூழலைப் பெற்றிருந்தார்கள்.

    இன்றைய தனிக்குடித்தன வாழ்வில் உறவுகளின் உதவிகள் முழுமையாக கிடைப்பதில்லை. பிரசவித்த தாயே தனக்கான வேலைகளை கவனித்துக்கொள்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    மேலும், பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், கர்ப்ப காலத்தில் சந்தித்த அதிர்ச்சிகள், பிரசவம் குறித்த மன தெளிவின்மை, உடல் ரீதியான காரணங்கள், பொருளாதார மற்றும் சமூக ரீதியான காரணங்களால் பிரசவத்துக்கு பின்னர் மன அழுத்தம் உருவாகிறது. பிரசவித்த பெண்களில் சுமார் 7 பேரில் ஒருவருக்கு இது ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அறிகுறிகள்  

    பிரசவித்த பெண்கள் மன அழுத்தம் காரணமாக யாரிடமும் பேசாமல் இருப்பது, தனிமையை விரும்புவது, குழந்தையை கவனிப்பதில் அக்கறையின்மை, குழந்தை மற்றும் தனக்கான பராமரிப்புகளை சரியாக செய்யாதது, தானாக அழுவது, கோபமடைவது, சரியாக உணவு உண்ணாதது உள்ளிட்ட வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகளில் தங்களை அறியாமல் ஈடுபடுவார்கள்.

    தீர்வுகள்

    இந்தப் பிரச்சினை தானாகவே 3 மாதத்துக்குள் குணமாகி விடும். இல்லாவிட்டால் தக்க மருத்துவரிடம் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம்.

    * நெருங்கிய உறவினர்களிடம் அல்லது தோழிகளிடம் மனம் விட்டு பேசும் சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * பிரசவித்த பெண்ணின் கணவர் ஆதரவுடன் நடந்து கொள்வது அவசியம். தாய்க்கு சத்தான உணவு வகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். போதுமான அளவு தண்ணீர்  பருக வேண்டும்.

    * நகர்ப்புற குடியிருப்புகளில், பக்கத்தில் வசிக்கும் மனிதாபிமானம் கொண்ட பாட்டிகளிடம் ஆலோசனை பெறலாம்.

    * எளிய உடற்பயிற்சிகள் செய்வது, மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை கேட்பது, தகுந்த நபர்களிடம் ஆலோசனை பெற்று யோகா, மூச்சுப்
    பயிற்சி மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

    * பாலூட்டும் தாயின் மன அழுத்தம் காரணமாக, பிஞ்சு குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை பிரசவித்த பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
    பொதுவாக, 49 முதல் 52 வயது வரையிலான பெண்களுக்கு, ஒரு வருடத்துக்கும் மேலாக மாதவிடாய் சுழற்சி நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸ் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.
    40 வயதைக் கடந்த பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார்கள் அல்லது அடிக்கடி சோர்ந்து காணப்படுகிறார்கள் என்றால், அது மெனோபாஸுக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்கிற புரிதல் அவசியம். பெண்களுக்கு மெனோபாஸ் ஏன் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டோம் என்றால், மெனோபாஸுக்குப் பிறகான சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

    ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறக்கும்போதே அவர்கள் சினைப்பையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கருமுட்டைகள் இருக்கும். இந்தச் சினைப்பையில்தான் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், ஒரு பெண் பூப்பெய்துதலில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை முதிர்வடைந்து வெளியிடப்படுவதும் மாதவிடாய் சுழற்சியும் நடக்கும். பெண்களுக்கு  குறிப்பிட்ட வயதுக்கு மேல் சினைப்பை கருமுட்டை வெளியிடுவதை நிறுத்தும்போது, மாதவிடாய் நின்றுவிடும். தொடர்ந்து ஓராண்டுக்கு மாதவிலக்கு இல்லை என்ற நிலையை மெனோபாஸ் என்கிறோம்.

    பெண்களின் உடல்நிலை, மரபு ஆகியவற்றைப் பொறுத்து, மெனோபாஸ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் நிகழலாம். பொதுவாக, 49 முதல் 52 வயது வரையிலான பெண்களுக்கு, ஒரு வருடத்துக்கும் மேலாக மாதவிடாய் சுழற்சி நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸ் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். சிலருக்குச் சீரற்ற சுழற்சி காரணமாகவும் மாதவிடாய் தள்ளிப்போகலாம் என்பதால், ஆறு மாதங்கள் வரை மாதவிடாய் நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸாகப் பொருட்படுத்தத் தேவையில்லை.

    சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான உதிரப்போக்கு அல்லது குறைவான உதிரப்போக்கு, 15 நாள்களுக்குள் மாதவிடாய் சுழற்சி, பிறப்புறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டமின்மை, எரிச்சல், கோபம், சரும வறட்சி, அதிகப்படியாக வியர்த்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்… இவை யாவும் இதன் அறிகுறிகள்.
    மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு இயல்பாகவே ‘மூட் ஸ்விங்’ ஏற்படலாம். இதனால் சோர்ந்துபோவது, பயம், பதற்றம், தூக்கமின்மை, ஞாபகமறதி இவையெல்லாம் அளவுக்கு அதிகமாக நிகழலாம்.

    கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் எலும்புத் தேய்மானமும், மூட்டுவலியும் உண்டாகலாம். ஆதலால் இந்தக் காலகட்டத்தில் எலும்புகளுக்குப் பலம் சேர்க்கும்விதமாகக் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ளலாம்.

    சிலருக்கு 30 வயதைத் தாண்டியதுமே மெனோபாஸ் அறிகுறிகள் தென்பட வாய்ப்புண்டு. அதனால் அப்போதிருந்தே ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுடன் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வைத் தரக்கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
    யோகா செய்வது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.
    அக்குபிரசர் - உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

    மாதுளை - இது மாதவிடாயின் போது ஏற்படும் தாங்கமுடியாத தசைப்பிடிப்பை தடுக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைபாட்டையும் தடுக்கக்கூடியது

    யோகா - இது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.

    அன்னாசி பழம் - மாதவிடாய் சுழற்சி சீராக்கவும், தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

    இஞ்சி டீ - இது மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்கும். மாதவிடாய் தாமதத்தையும் தடுக்கும்.

    கற்றாழை - இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை இயல்பாக்கக்கூடியது. ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

    பெருஞ்சீரகம் - ஆண்டிஸ்பாஸ்மோடிக் பணபுகள் கொண்ட இது மாதவிடாய் வலியை குறைக்கக்கூடியது.

    லவங்கப்பட்டை - இது பெண்கள் உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குப்படுத்தக்கூடியது. புரோஜெஸ்ட்டிரோன் பற்றாக்குறையையும் போக்கக்கூடியது.

    வெந்தயம் - இது உடலில் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடக்கூடியது.

    பேரீச்சை - இதில் நார்ச்சத்து துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க கனிமங்கள் காணப்படுகின்றன.

    விளக்கெண்ணெய் - இந்த எண்ணெயில் காணப்படும் சேர்மங்கள், இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவும்.

    பின்பற்ற வேண்டியவை

    * தினசரி உணவில் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் இடம் பெறுவதை உறுதி செய்யுங்கள்.

    * தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்குங்கள்

    * காய்கறிகள், பழங்களை ஜூஸாகவும் தொடர்ந்து பருகுங்கள்

    * வைட்டமின் சி சத்து கொண்ட உணவுகளை அதிகமாகவே உட்கொள்ளுங்கள்

    * அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை தவிருங்கள்.
    கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.
    பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும் எலும்புகள் வடிவத்தில் இருக்கும். இது ஹார்மோன்களின் சுரப்பு, ரத்தக்குழாய் சீரான செயல்பாடு, தசைகள் சுருங்கி விரிதல், இதயத்துடிப்பு போன்ற உடல் இயக்கங்களுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும்.

    குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லாது போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.

    கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்

    நம் உடலில் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தினமும் கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம். சத்துள்ள சரிவிகித உணவு உண்ணாமை, செரிமானக்கோளாறுகளால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது, உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் சத்து இருத்தல், சிறுநீரக செயலிழப்பு கணைய ஒவ்வாமை, வைட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

    மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு வயது முதிர்ச்சி போன்ற பிற காரணங்களாலும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

    கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

    கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலமாகவும் கால்சியம் சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.

    முதலாவதாக பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடலில் கால்சியம் சத்து அதிகரிப்பதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

    தினசரி 5 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும். அத்துடன் பாதாமில் உள்ள பி2 வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து உறுதியான தசை வளர்ச்சிக்கு உதவும்.

    கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.

    மீன், ஆட்டு எலும்பு மஜ்ஜைகள், நாட்டுகோழி போன்ற உணவுகளை வாரம்  ஒருமுறை சாப்பிடலாம். இவை கால்சியம் சத்து எளிதில் உடலில் சேரவும், எலும்புகளில் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.

    பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்ற கீரை வகைகளையும் அத்தி, கொய்யா, ஆரஞ்சி, கிவி, பெர்ரி, அன்னாசி, லிச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழவகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்த கொள்ள வேண்டும். இவை உடலில் சீரான இயக்கத்துக்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.

    ஆண், பெண் இருவருக்கும் உடலில் உள்ள பிரச்னைகளாலும் குழந்தையின்மை ஏற்படலாம். குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருபவர்களில் யாராவது ஒருவருக்கு உடலில் பிரச்னை இருப்பது குறைவே.
    ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்தியம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை.

    ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக் காதலை வற்றாதிருக்கச் செய்து… அன்பின் பிணைப்பால் ஆயுள் உள்ளவரை அடுத்தடுத்த சந்ததியரோடான சங்கிலியை வலிமையுறச் செய்கிறது. ஆண் பெண் என்ற இரு உயிர்களுக்கு இடையில் இன்று வரை வற்றாது இயங்கும் பாசம் கூட இனத் தேவைதான்.

    ஆறறிவு கொண்ட மனித இனம் தாம்பத்தியத்தை ரசனையால் அதனை அழகுறச் செய்கிறது. மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்ய அந்த இருவரது ஆயுளின் அந்தி வரை இணைந்து பயணிக்க… அந்தப் பயணம் நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் இனிக்க வேண்டுமல்லவா… அந்த இணைப்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவாக்கித் தருவது தாம்பத்தியம்.

    தாம்பத்தியத்தின் விளைவாக தங்களது மழலைச் செல்வத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டால் அந்த ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மன உளைச்சல் என பல கட்டங்களாக வளர்ந்து அவர்களது தாம்பத்திய இன்பத்தைத் தகர்த்துவிடுகிறது. பிரச்னையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாததும் தாம்பத்தியம் பற்றிய தவறான நம்பிக்கைகளுமே இதற்குக் காரணம் என்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான கபிலன்.

    குழந்தையின்மைக்கான காரணம் மற்றும் தாம்பத்திய உறவின் இன்பத்துக்கு அதுவே எப்படி பிரச்னையாக மாறுகிறது? இதற்கான தீர்வு குறித்தும் விரிவாகப் பேசுகிறார். குழந்தையின்மைக்கான காரணங்களை தெளிவாகப் புரிந்து கொள்வதும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்.

    திருமணமான தம்பதியர் வேலைச் சூழல் காரணமாக மாதத்தில் சில முறை மட்டும் தாம்பத்யம் வைத்துக் கொள்வது, கணவர் வெளி ஊரில் பணியாற்றுவதால் சில மாதங்களுக்கு ஒரு முறை சந்திப்பதும் நீண்ட நாட்கள் கழித்து தாம்பத்யம் வைத்துக் கொள்வதும் குழந்தையின்மைக்கான காரணமாக இருக்கலாம்.

    இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துப் புரிந்து கொள்வது அவசியம். பாசிட்டிவ்வான விஷயங்களைப் பாராட்டிக் கொள்வது, ‘நீ இந்த டிரஸ்ல அழகா இருக்க’ என பாராட்டுவது, ‘உனக்கு நான் முக்கியமானவன்…’ ‘இந்த உலகத்திலேயே எனக்கு முதன்மையானவள் நீ’ என்பது போன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம். தொடர்ச்சியாக தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதும் அவசியம். அதே சமயம் உடலிலும் எந்தப் பிரச்னைகளும் இருக்கக் கூடாது.

    ஆணுறுப்பு விறைப்புத்தன்மையில் பிரச்னை, விரைவாக விந்து வெளியேறுதல் பிரச்னைகள் இருந்தாலும் குழந்தையின்மை மற்றும் தாம்பத்யப் பிரச்னைகள் இரண்டும் இணைந்து தாக்கும். பாரம்பரியமான குடும்பம், செக்ஸ் பற்றியெல்லாம் பேசக்கூடாது, யோசிக்கவே கூடாது என வளர்க்கப்பட்ட ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின் செக்ஸ் வைத்துக் கொள்ளவே கூச்சப்படலாம், பெண் அருவெறுப்படையலாம். செக்ஸ் பற்றின விழிப்புணர்வு இருக்காது. குழந்தை வரம் கேட்டுக் கோயிலுக்குப் போவார்கள், விரதம் இருப்பார்கள்.

    செக்ஸ் என்பது இயல்பு வாழ்க்கையின் தேவை என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்காது. தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதில் தயக்கம், குழப்பம் இருப்பதாலும் குழந்தை உருவாகாமல் போகலாம்.

    பெண் உடலுறவின் போது ஒத்துழைக்காதது, ஆண் முழு ஈடுபாட்டுடன் தாம்பத்ய உறவு கொள்ளாமல் செயல்படுவது இருவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். மன உளைச்சலை உண்டாக்கும். திருமணத்துக்கு முன் தெளியான பாலியல் கல்வி அவசியம். செக்ஸ் பற்றி ஏற்கனவே மனதில் சேர்த்து வைத்திருக்கும் தயக்கங்களையும் உடைக்க வேண்டும்.

    ஆண், பெண் இருவருக்கும் உடலில் உள்ள பிரச்னைகளாலும் குழந்தையின்மை ஏற்படலாம். குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருபவர்களில் யாராவது ஒருவருக்கு உடலில் பிரச்னை இருப்பது குறைவே. 50 சதவீதம் பேரில் ஆண், பெண் இருவருக்குமே பிரச்னை உள்ளது. சிகிச்சைக்கு வரும் தம்பதியரில் இருவருமே சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

    ஆண்களைப் பொறுத்தவரை விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது முக்கியமான பிரச்னையாக உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களுக்கு வயதாகும்போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். தாமதமாகத் திருமணமாகும்போது விந்தணுக்கள் குறைபாடு ஏற்படலாம்.

    வேலைக்காக 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வது. திருமணத்து பின் சில காரணங்களுக்காக குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடுவதாலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இவர்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியில் பிரச்னை இருக்கலாம். விந்தணுக்கள் பயணிக்கும் குழாயில் அடைப்பு இருக்கலாம். இதெல்லாம் சரி செய்யக் கூடிய பிரச்னைகளே.

    வெரிக்கோ சீல் கண்டிஷன் என்பது விந்தணுக்களை எடுத்துச் செல்லும் நரம்புக்குழாயில் பின்னோக்கிச் செல்லும் நிலை இருக்கலாம். விந்தணுக்கள் விரைவாக வெளியேறுவது என ஆணுக்கு இருக்கும் பிரச்னையை பரிசோதனை மூலம் சரியாகக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் சரி செய்ய முடியும். ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் விந்தணுக்களின் உற்பத்தியை சரி செய்ய முடியாமல் போகலாம். இதனை சிகிச்சையால் சரி செய்ய முடியாத ஒரு பிரச்னையாகப் பார்க்கலாம்.

    பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது பாலிசிஸ்டிக் ஓவரீஸ் டிசீஸ், கரு முட்டை வெளியேறும் குழாயில் அடைப்பு இருக்கலாம். கரு முட்டை உற்பத்தியாகி கருக்குழாய் வழியாக கருப்பையை வந்தடைய வேண்டும். ஆணுறுப்பில் இருந்து விந்தணுக்கள் வெளியேறி கருமுட்டையை அடைந்து குழந்தைப் பேறு நிகழ்கிறது. பெண்களுக்கு டியூபில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் முட்டை வெளியேறாது. இதுபோன்ற காரணங்களால் குழந்தையின்மை என்ற நிலை ஏற்படுகிறது.
    மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும்.
    பெண்களின் உடல் உறுப்புகளில் முக்கியமானவை மார்பகங்கள். வயது மற்றும் ஹார்மோன்களின் செயல்பாட்டால் இவற்றில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். மார்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    பூப்பெய்தும் காலத்தில் மார்பகங்கள் வளரத் தொடங்குகின்றன. இவை கொழுப்புத் திசுக்கள், பால் சுரப்பு நாளங்கள் கொண்டவை. உடல் எடை கூடும்போது மார்பகங்களின் அளவும் அதிகரிக்கும். இதன் காரணமாக அவை சீக்கிரமே தளர்ச்சி அடைய நேரிடலாம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சரியான அளவுடைய உள்ளாடைகளை அணிதல் போன்ற வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும்.

    கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களால் மார்பகங்கள் மற்றும் மார்புக் காம்புகள் பெரிதாகுதல், தசைகள் விரிவடைதல், மென்மை
    யாகுதல், மார்புக் காம்புகளைச் சுற்றியுள்ள பகுதி கருமை அடைதல் போன்ற மாறுதல்கள் உண்டாகக்கூடும். இதன் காரணமாக மார்பகங்களில் வலி, அரிப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

    மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும். பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் சிறந்த உணவு. அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தாய்ப்பால் புகட்டுவது தாயின் உடல் நலத்துக்கும் நல்லது. அதன் மூலம் கர்ப்ப காலத்தின் போது அதிகரித்த எடையை எளிதாகக் குறைக்க முடியும்.

    தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்பும், புகட்டிய பின்பும் மார்பகங்களை மிதமான சூடுள்ள நீரால் சுத்தப்படுத்த வேண்டும். பின்பு பருத்தித் துணியால் மென்மையாகத் துடைக்க வேண்டும். இதன் மூலம் மார்புக் காம்புகளில் புண், வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கும் பெண்களுக்கு பால் கட்டுதல், வலி ஏற்படுதல், பால் சுரப்பதில் சிக்கல்கள் போன்றவை ஏற்படும். அவர்களை மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் உள்ளது.

    மேலும் பெண்களுக்கு உடல் பருமன், மரபியல், உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களாலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ‘மேமோகிராம்’ எனும் பரிசோதனையை வருடத்துக்கு ஒரு முறை செய்து கொள்வது நல்லது. இதைத்தவிர சுய பரிசோதனை மூலமும் மார்பகங்களில் கட்டிகள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் உள்ளதா? என்பதை பெண்கள் தெரிந்து கொள்ளலாம்.

    பல பெண்கள் மார்பகங்கள் தளர்ச்சி அடைதல், அவற்றின் அளவு, வடிவம் போன்றவற்றை எண்ணி குழப்பம் அடைந்து தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். அதைத் தவிர்த்து விழிப்புணர்வோடு செயல்படுவோம்.
    ×