என் மலர்
அழகுக் குறிப்புகள்
- அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது 'கோகோ பட்டர்'.
- கோகோ பட்டர் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன.
சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது 'கோகோ பட்டர்'. கோகோ விதைகளில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் நிறப் பொருளே 'கோகோ பட்டர்' என அழைக்கப்படுகிறது. இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு, காப்பர் மற்றும் பல தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன. இதைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இதோ…
கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன. இதில் இருக்கும் 'பைட்டோ கெமிக்கல்கள்' எனப்படும் இயற்கை தாவர மூலக்கூறுகள், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.
எக்ஸிமா மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோகோ பட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்களை உபயோகப்படுத்தினால் எளிதாக குணம் அடையலாம். சருமத்தின் மீது கோகோ பட்டரை நேரடியாகப் பயன்படுத்தும்போது, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
கோகோ பட்டரில் ஒலிக், பால்மிடிக், லினோலிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் உள்ளன. இவை சேதமடைந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கி, புதிய சரும அடுக்குகளை உருவாக்குகின்றன.
சருமத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை மென்மையாக்கி மறைக்கும் தன்மை கோகோ பட்டரில் உள்ள மூலக்கூறுகளுக்கு உண்டு. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்பும், பெண்கள் கோகோ பட்டரை உபயோகப்படுத்தினால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம்.
கோகோ பட்டர் ஸ்கிரப்
தேவையான பொருட்கள்:
கோகோ பட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
லவங்கப்பட்டை பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை: கோகோ பட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் உருக்கவும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து பயன்படுத்தவும்.
பயன்படுத்தும் முறை: வெதுவெதுப்பான தண்ணீரில் சருமத்தை கழுவ வும். பின்னர் இந்த ஸ்கிரப்பை சருமத்தின் மீது வட்ட இயக்கத்தில் பூசவும். ஸ்கிரப் செய்தபடியே மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் சருமத்தை சுத்தம் செய்து மென்மையான துண்டால் துடைக்கவும். கோகோ பட்டருடன், ஷியா பட்டர், தேன் மெழுகு, வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை கலந்து மாய்ஸ்சுரைசராகவும் உபயோகிக்கலாம்.
- கோயில்களில் கடவுளுக்கு படைக்கும் நகைகளில் வெள்ளியும் ஒன்று.
- பெண்கள் அணியும் கொலுசு, மெட்டி, மோதிரம், காதணி அனைத்திலும் வெள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.
வெள்ளி என்பது ஒரு வகை உலோகம். இது குளிர்ச்சியான உலோகம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட பின்பு தான் வெள்ளி தேவையான பொருள்களாக உருமாறுகிறது.
பண்டைய காலத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக உபயோகிக்கும் உலோகம் வெள்ளி. வெள்ளியில் கிண்ணம் ஸ்பூன் டம்ளர், ஸ்ட்ரா டம்ளர் கொலுசு, காப்பு, காதணிகள், கழுத்தில் அணியும் மாலைகள், பூஜை பொருட்கள், தட்டு என்று பலவித பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணம் ஸ்பூன் தட்டு என்று பயன்படுத்துகிறார்கள். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளியில் கால் தண்டை அணிவதும் மிகச் சிறப்பான ஒன்றாகும். வெள்ளி உலோகம் நச்சு தன்மையை அழித்து நன்மை அளிக்கிறது. வெள்ளி தூய்மையான உலோகம் என்று கருதப்படுகிறது. வெள்ளியில் உள்ள தாதுக்கள் பருவ மாற்றத்திற்கு ஏற்ப வரும் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.
வெள்ளியில் கூஜா, செம்பு, பெரிய தட்டுக்கள், குங்குமச்சிமிழ், வெள்ளி விளக்கு என திருமணங்களில் பெண் வீட்டு சீர் வரிசையில் வெள்ளி பாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணப் பெண்ணுக்கு வெள்ளியில் மெட்டி அணிவதும் திருமணங்களில் மிக முக்கியமான விசேஷம் ஆகும்.
பூஜை பொருட்கள் வெள்ளியில் சூட தட்டு, சாம்பிராணி தட்டு, வெள்ளி விளக்கு, தட்டு, சந்தனக் கும்பா, குங்குமச்சிமிழ் என பல வகை உண்டு. திருமண வைபோகங்களில் வெள்ளியில் பரிசளிப்பது ஆதிகாலம் முதலே வழக்கமான ஒன்றாகும்.
சில வீடுகளில் பூஜை அறையில் வெள்ளியிலான விநாயகர் சிலை, அன்னபூரணி சிலை போன்ற பல கடவுளின் உருவச் சிலைகள் இருக்கும். வெள்ளி முலாம் பூசப்பட்ட சிலைகளும் உருவப் படங்களும் பிரசித்தி பெற்றவையாகும்.
கோயில்களில் கடவுளுக்கு படைக்கும் நகைகளில் வெள்ளியும் ஒன்று. வெள்ளி மூக்குத்தி, சூலாயுதம், வேல் என வெள்ளி அலங்கார பொருட்கள் என பலவகையான வெள்ளிப் பொருள்கள் கோயில்களில் பயன்படுத்தப்படுகிறது. கோயில் மற்றும் கோயிலில் நடக்கும் பூசையில் வெள்ளியின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. எல்லா விசேஷங்களிலும் வெள்ளி நாணயம் பரிசளிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. பெண்களுக்கு நிகராக ஆண்களும் இன்றைய காலங்களில் கைகளில் வெள்ளியில் காப்பு போன்று அணிகிறார்கள்.
மற்ற உலோகங்களை ஒப்பிடும் பொழுது வெள்ளி மலிவான விலையில் கிடைக்கிறது. ஆதலால் வெள்ளி அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.வெள்ளி வெப்பத்தை தணிக்கும் உலோகம் என்பதால் அன்றாட வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ளது. பெண்கள் அணியும் கொலுசு, மெட்டி, மோதிரம், காதணி கழுத்து மாலை அனைத்திலும் வெள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.
- முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு தான் சருமத்தில் கருந்திட்டு பிரச்சினை ஏற்படும்.
- இப்போது 20 வயதிலேயே பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்களின் அழகை பாதிக்கும் சரும பிரச்சினைகளில் ஒன்று பிக்மென்டேஷன். இதை 'கருந்திட்டு' அல்லது 'மங்கு' என்றும் கூறுவார்கள். இது கன்னம், நெற்றி, மூக்கின் மேல் பகுதி, கழுத்தின் பின் பகுதியில் காணப்படும் ஒரு வகையான கருப்பு நிற படையாகும். தோலின் நிறத்தைப் பொறுத்து இதன் அடர்த்தி வேறுபடும். பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
பிக்மென்டேஷன் ஏற்பட காரணம் என்ன?
முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு தான் சருமத்தில் கருந்திட்டு பிரச்சினை ஏற்படும். ஆனால் இப்போது 20 வயதிலேயே பலர் பாதிக்கப்படுகிறார்கள். கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து சரியாக வெளியேறாமல் இருப்பது, ஊட்டச்சத்து பற்றாக்குறை, சருமத்தில் படியும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்காமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை ஏற்படுகிறது.
ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதாலும் முகத்தில் ஆங்காங்கே கருந்திட்டு மற்றும் சிவப்பு நிற புள்ளி வருகிறது.
குழந்தைப்பேறுக்கும், பிக்மென்டேஷனுக்கும் சம்பந்தம் உண்டா?
குழந்தைப்பேறின்போது அதிக ரத்த இழப்பு உண்டாகும். பால் ஊட்டும்போது உடலில் சத்து குறைபாடு ஏற்படும். இதனால்தான், கர்ப்ப காலத்திலும், குழந்தை பெற்ற பிறகும், தாய் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவுகளை சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது. காலநிலை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் பிக்மென்டேஷன் பிரச்சினை வரலாம். இதற்கு வெளிப்பூச்சு கிரீம்கள் தீர்வு தராது.
எத்தகைய உணவுகள் பிக்மென்டேஷனை தடுக்கும்?
கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, மீன் எண்ணெய் போன்றவையும், பாதாம், பூசணி விதை, ஆளி விதை, நெல்லிக்காய், வில்வ இலை, திரிபலா சூரணம், கருஞ்சீரகம், சோற்றுக் கற்றாழை ஆகியவையும் பிக்மென்டேஷனைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.
பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
சமச்சீரான உணவு, நேரம் தவறாத தூக்கம், போதுமான தண்ணீர், உடற்பயிற்சி, அமைதியான மனநிலை போன்றவை பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த மருந்துகளை சாப்பிட்டு உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுதல், தோலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொறுத்து சிகிச்சை பெறுதல் போன்றவையும் பிக்மென்டேஷன் பிரச்சினையை குணமாக்கும். குப்பைமேனி இலை, வேப்ப இலை, அருகம்புல் ஆகியவற்றை சம அளவு எடுத்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் பிக்மென்டேஷன் குணமாகும்.
- தேசத்து மக்கள் தலைமுறை தலைமுறையாக ‘கலாசாரத்தை’ இழக்கவில்லை.
- நகைகள் என்பது அவர்களின் அன்றாட வாழ்வில் ஆழமான நம்பிக்கைகள்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நகை வடிவமைப்புகளை ஆராய்வதன் மூலம், நிலத்தின் கலாச்சாரம் மற்றும் கைவினைப்பொருளின் ஆழம் மற்றும் மகத்துவத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
பாரம்பரியங்கள், மரபுகள் மற்றும் சடங்குகள் நிறைந்த பூமியாக இருப்பதால், தமிழ் மக்கள் தங்கள் கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுகள் மூலம் தங்கள் வாழ்க்கையை கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். தேசத்து மக்கள் தலைமுறை தலைமுறையாக ராஜ்ஜியங்கள் எழுச்சி பெறுவதையும், வீழ்ச்சியடைவதையும் கண்டிருந்தாலும், அவர்கள் தங்கள் அரவணைப்பையும், 'கலாசாரத்தையும்' இழக்கவில்லை. நகைகள் என்பது அவர்களின் அன்றாட வாழ்வில் ஆழமான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் திறமைகளை மேம்படுத்துவதற்கான மற்றொரு வழியாகும். தமிழர்கள் எப்போதுமே கோயில் கைவினை, பட்டு நெசவு மற்றும் பரதநாட்டியம் போன்ற தேர்ந்த கலை வடிவங்களால் தனித்து நிற்கின்றனர்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நகைகள் மாங்கா மாலை, அட்டிகை, காசு மாலை, கோவில் நெக்லஸ்கள், கெம்ப் நெக்லஸ்கள், நாகாசி நெக்லஸ்கள், நீண்ட ஹாரம், வெற்றிலை கோவை, ஜடநாகம், சூரியப்பிறை, சந்திரபிறை, சந்திரஹாரம், கவுரிசங்கம் மற்றும் பல வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய கழுத்தணிகள்
1. மாங்கா மாலை,
2. காசு மாலை
3. லட்சுமி மாலை
4. முல்லை மோட்டு மாலை
5. விளக்குமூக்கு மாலை
6. மகர காந்தி ஹரம்
7. அட்டிகை
8. கிளிகாசு மாலை
9. சாவடி
10. கோதுமை விடை மாலை
11. மல்லிகை அரும்பு மாலை
12. சந்திரஹாரம்
13. தாலி அல்லது திருமாங்கல்யம்
14. பிறண்டை கட்டை
15. ஈரட்டை வடம் மாலை
16. கொடி மாலை
17. கான்ட்ராகாரம்
18. சங்கிலி
19 மிளகு மணி மாலை
20.கழுத்திரு - (செட்டியார் மணமகள்)
தமிழ்நாட்டின் பாரம்பரிய காதணிகள்
1. ஜிமிக்கி,
2. லோலக்கு
3. பாம்படம்
4. மட்டல்
5. குண்டலம்
6. கடுக்கன்
7. தோடு
மோதிரங்கள்
1. கெம்பு கல் மோதிரம்
2. உங்கிலா
3. வைரமோத்திரம்
வளையல்கள்
1. பச்சக்கல் வாழை
2. வைரவளை
3. லட்சுமி வாலை
4. கப்பு
5. கங்கணம்
6. கெம்பு கல் வாழை
முடி நகைகள்
1. சூர்யா பிறை & 2.சந்திர பிறை - இவை திருமணம் மட்டுமல்ல பரதநாட்டிய ஆடை ஆபரணங்களின் ஒரு பகுதியுமாகும்.
3. நெத்தி சுட்டி - சிவப்பு மற்றும் வெள்ளை கற்கள் பதித்த மாங்கனி. திருமணங்கள் மற்றும் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
4. ராக்கோடி - ராக்கோடி என்பது முடி ரொட்டியைப் பிடிக்க கெம்ப் மற்றும் வெள்ளைக் கற்களால் பதிக்கப்பட்ட வட்ட வடிவ முடி துணை ஆகும்.
5. நெத்தி பட்டை (கவுண்டர் மணமகள்) - கவுண்டர் மணமகளின் திருமண விழாவின் போது நெற்றியில் அணியும் சடங்கு.
6. ஜடநாகம் - 'ஜடை' என்றால் முடி 'நாகம்' என்றால் பாம்பு. ஜடநாகம் என்பது தமிழ் மணமகளின் நீண்ட சடை முடியில் நீண்ட நகைகள் வெட்டப்பட்ட பாம்பு. ஜடநாகம் பொதுவாக பின்னலின் வால் நுனியில் குஞ்சாலத்துடன் இருக்கும்.
துணை நகைகள்
1. ஒட்டியானம்
2. வங்கி
3. மெட்டி
4. கொலுசு
5. தந்தை
6. மூக்குத்தி
7 பேசரி
8. புல்லக்கு - புல்லக்கு பொதுவாக சிவப்பு அல்லது வெள்ளை கற்களால் அலங்கரிக்கப்படுகிறது. இது செப்டம் வளையத்தை ஒத்த ஒரு மூக்கு துணை. இந்த நகை அணிகலன் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
- மாதம் ஒருமுறை முடியை மிகக்குறைந்த அளவு ட்ரிம் செய்ய வேண்டும்.
- சீப்பால் தலையைச் சீவும்போது, தலைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
* 300 மி.லி தேங்காய் எண்ணெயில் 150 மி.லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி வடிகட்டி, பெண்கள் 21 நாட்கள் தலையில் தடவிவந்தால், தலைமுடி நன்றாக வளரும்.
* வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைப் பகுதியைத் தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து உலர வைத்துக் குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வளரும். முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ள ஊட்டச்சத்துகள், முடியின் வேர்க்கால்களைச் சரிசெய்யும் தன்மை கொண்டவை. மேலும், முடியை மென்மையாகவும் பொலிவோடும் வைக்கும்.
* ஆண்கள், கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிப்பதற்கு முன்பு, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்துவந்தால், இளமையில் ஏற்படும் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; இளநரை குறையும்.
* முடி வளரும்போது, முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால், முடியின் வளர்ச்சி குறையத் தொடங்குகிறது. மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமை அதிகரிக்கும். மாதம் ஒருமுறை முடியை மிகக்குறைந்த அளவு ட்ரிம் செய்ய வேண்டும்.
* வாரம் ஒருமுறை தவறாமல் தேங்காய் எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து, நன்கு ஊறவைத்துக் குளிக்க வேண்டும். இதனால், முடிக்கு வேண்டிய சத்துகள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
* சீப்பால் தலையைச் சீவும்போது, தலைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆண்கள் தினமும் மூன்று முதல் நான்கு முறை தலைக்குச் சீப்பைப் பயன்படுத்தித் தலை சீவலாம். இதனால், முடியின் வேர், புத்துணர்ச்சியுடன் இருக்கும். கூர்மையான பிளாஸ்டிக் சீப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிருதுவான முதல் தர பிளாஸ்டிக் அல்லது மரச் சீப்பைப் பயன்படுத்தலாம்.
* கோடை காலங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முடியின் மீது சூரிய ஒளி நேரடியாகப் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். சூரியக் கதிர்கள் தலைப்பகுதியைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். இந்த நேரத்தில் புறஊதா பி கதிர்கள் முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி வறட்சியை ஏற்படுத்தும். எனவே, வெளியே செல்லும்போது தலைக்குத் தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டாவைத் தலையில் கட்டிக்கொண்டோ செல்லலாம்.
* பெண்கள், தங்களது அடர்ந்த கூந்தல் ஈரமாக இருக்கும்போது, தலைக்குச் சீப்பு பயன்படுத்த வேண்டாம். முடி ஈரமாக இருக்கும்போது வலிமை இழந்து இருக்கும். அப்போது, சீப்பைப் பயன்படுத்தினால், முடி வேரோடு வந்துவிடும். முடி உலர்ந்த பின்னரே சீப்பு பயன்படுத்த வேண்டும்.
* அதீத வெப்பம் தலைமுடியைப் பாதிக்கும். தலைக்குக் குளித்த பின்னர், முடியை உலரவைக்க பலர், எலெக்ட்ரானிக் ஹேர் டிரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படிப் பயன்படுத்துவதால், முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். இவ்வாறு தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கை ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. எனவே, எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலரவைப்பதுதான் நல்லது. தலைக்குக் குளித்தவுடன் வெயிலில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
* வெங்காயத்தை நீரில் வேகவைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம். வெங்காயச் சாற்றைக்கொண்டு முடியை மசாஜ் செய்து, ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம், முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
* கண்டிஷனர் முடிக்கு நல்லதுதான். ஷாம்பு, சிகைக்காய் பயன்படுத்துவதால் ஏற்படும் வறட்சியைப் போக்கி, முடியை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும். தரமற்ற கண்டிஷனர் முடியின் வேர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையான கண்டிஷனரானத் தயிரைப் பயன்படுத்தலாம். இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
* குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். அதற்கும் குறைவாகத் தூங்கினால், முடி ஆரோக்கியத்தை இழந்துவிடும். தினமும், போதிய அளவு தூங்குங்கள். இதனால் முடியின் ஆரோக்கியமும் அடர்த்தியும் அதிகரிக்கும்.
* தினமும் தலைக்குக் குளித்தால், தலையில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசை வெளியேறிவிடுவதோடு, முடி, பொலிவை இழந்துவிடும். முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாரத்துக்கு இரண்டு முறை தலைக்குக் குளித்தால் போதும்.
* காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால், முடியின் வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகரிக்கும். முடியின் வேர்கால்களில் இயற்கையான எண்ணெய்ப் பசை நிலைத்திருக்கும்.
- தங்க நகைகள் மீது பெண்களுக்கு தனி ஈடுபாடு உண்டு
- ஆண்களுக்கான இந்திய கலாச்சாரத்தில் நகைகள் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன.
தங்க நகைகள் மீது பெண்களுக்கு தனி ஈடுபாடு உண்டு; அவர்களின் ஆபரணங்கள் குறிப்பிடத்தக்கவை. இருப்பினும், ஆண்களின் நகைகளும், அதன் வகைகளில் சொந்த அழகைக் கொண்டுள்ளது. நகைகளைப் பற்றி பேசும்போது ஒருவர் பெரும்பாலும் ஆண்களைப் பற்றி நினைப்பதில்லை, ஆனால் நகை மரபுகள் பெண்களைப் போலவே ஆண்களிடமும் உள்ளன. ஆண்களுக்கான இந்திய கலாச்சாரத்தில் நகைகள் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. கழுத்தணிகள், மோதிரங்கள் மற்றும் வளையல்கள் முதல், ஆண் நகை மரபுகள் அலங்காரம் மட்டுமல்ல, வலிமை , கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் சின்னங்கள்.
இந்திய நகைகள் அலங்காரமானது மட்டுமல்ல, தாயத்து பண்புகளையும் கொண்டுள்ளது. ஆயுர்வேத மற்றும் இந்து ஜோதிட மரபுகளில் ஆரோக்கியம் மற்றும் ஜோதிட பலன்களை வழங்குவதாக நம்பப்படுகிறது, மக்கள் துளையிடுதல் (காது மற்றும் மூக்கு குத்துதல்)மற்றும் பிற நகைகளைப் பயன்படுத்தி அக்குபிரஷர் புள்ளிகளைத் தூண்டுகிறார்கள்.
நகைகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான உலோகம் தங்கம். இது நீடித்தது மற்றும் அன்றாட பயன்பாட்டிற்குப் பிறகும் கெடுக்காது. இந்து மத நம்பிக்கை கொண்ட பல இந்தியர்களுக்கு, தங்கம் விலைமதிப்பற்றதாக கருதப்படுகிறது. தங்கம் தொட்டால் எதையும் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது என்று நம்பப்படுகிறது. இது சக்தி மற்றும் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் குறிக்கிறது.
ஆண்களுக்கான பல வகையான இந்திய நகைகளின் வடிவம் மற்றும் செயல்பாடு முதன்மையாக பாதுகாப்பிற்காக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஆண்களுக்கான பதக்கங்கள் தீய சக்திகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முதன்மை தேவையிலிருந்து எழுந்தன. பெரும்பாலும் ஒரு நெக்லஸ் அல்லது வளையலில் அணியும், பதக்கங்கள் ஆபத்தைத் திசைதிருப்பும் சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, தீமையிலிருந்து பாதுகாக்கிறது, மேலும் நல்லதை ஈர்க்கும் சக்தியையும் கொண்டுள்ளது.
பிரிட்டிஷ் தொழிலதிபர் சர் தாமஸ் வார்டில் 1901 இல் கருத்துத் தெரிவிக்கையில், ஆண்களுக்கான வெள்ளியில் ப்ரோச்ஸ் மற்றும் வளையல்களை தயாரிப்பதில் இந்தியாவில் உள்ள திறமை வியக்கத்தக்கது என்றார்.
மிகவும் பிரபலமான ஆண்கள் நகை வடிவமைப்புகள்கழுத்தணிகள் மற்றும் சங்கிலி
ராயல் அல்லது பணக்கார இந்திய ஆண்கள் பொதுவாக பெண்களின் கனமான குந்தன் நகைகளுக்கு மாறாக மாலைகள் எனப்படும் வைரம், மரகதம் மற்றும் முத்துக்களின் சரங்களை அணிவார்கள். அனைத்து இந்திய சமூகங்களின் ஆண்களும் பொதுவாக ஹான்ஸ்லி, காலர் போன்ற நெக்லஸ் அல்லது மெல்லிய தங்கச் சங்கிலிகளை அணிவதைக் காணலாம். ஹன்ஸ்லி என்ற பெயர் கிளாவிக்கிளில் இருந்து பெறப்பட்டது, அங்குதான் இந்த ஆபரணம் உள்ளது. மேற்கத்திய இந்திய கலாச்சாரத்தில், கியூபா இணைப்பு பாணி வடிவமைப்பு போன்ற எளிய தங்க சங்கிலிகளால் ஆண்கள் தங்களை அலங்கரிப்பது மிகவும் பொதுவானது.
கட வளையல்கள்
பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட கடா என்பது அனைத்து மதங்களைச் சேர்ந்த இந்திய ஆண்களால் பொதுவாக அணியும் வளையலாகும். கடஸ் என்பது தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட வளையல் வடிவமாகும். கடா வளையல்களின் உட்புறம் சில நேரங்களில் வண்ணமயமான பற்சிப்பி, பின்னிப் பிணைந்த யானை தும்பிக்கைகள், மயில்கள் அல்லது முதலைகளின் மலர் வடிவமைப்புகளால் மூடப்பட்டிருக்கும். கடா வளையல்கள் வெள்ளி அல்லது தங்கத்தால் எனாமல் செய்யப்பட்ட உட்புறத் தகடு, விலங்கு மற்றும் மலர் வடிவங்களைக் கொண்டவை.
பிண்டி மோதிரங்கள்
இந்திய ஆண்களுக்கான மற்றொரு பிரபலமான ஆபரணங்களில் பிண்டி (அல்லது, பெட்டி) மோதிரம் அடங்கும். ஆண்களுக்கான இந்த பாரம்பரிய மோதிரங்கள் பெரும்பாலும் அணிந்தவரின் ஜோதிட முறைக்கு ஏற்ப ரத்தினக் கற்களால் அமைக்கப்படுகின்றன அல்லது மத தெய்வங்களின் சித்தரிப்புகளுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விரல்களின் மென்மையான பகுதி ஒரு அக்குபிரஷர் புள்ளி மற்றும் ஒரு மனிதனின் உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆண்களுக்கான இந்திய நகைகள் நீண்ட காலத்திற்கு முந்தையவை மற்றும் அவற்றின் கலாச்சார முக்கியத்துவத்திற்காக இன்னும் மதிக்கப்படுவதால், இந்திய ஆண்களின் பல நூற்றாண்டுகள் பழமையான நகை மரபுகளை மறைக்க முடியாது. இந்த ஆபரணங்கள் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளன - அலங்காரத்திற்காக மட்டுமல்ல, ஆரோக்கிய நலன்களுக்காகவும், ஒரு மனிதனின் சமூக மற்றும் அரசு குறிகாட்டியாகவும், அவனது சமூகம், மதம் மற்றும் சுயம் ஆகியவற்றுடனான உறவு தங்க நகைகளுக்கு உள்ளது
இன்று, ஆண்கள் செயின்கள்,மோதிரங்கள், பிரேஸ்லெட்கள், காதணிகள் போன்ற நகைகளை அணிவது பெரும்பாலும் சிறப்பு சந்தர்ப்பங்கள் மற்றும் திருவிழாக்களில் மட்டுமல்லாமல் தினசரி நகைகளாகவும் மாறி இருக்கிறது.
- சாயம் போகும் ஆடைகளை சூரிய ஒளியில் நேரடியாக உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
- சாயம் போகும் ஆடைகளை உள்பக்கமாக மடித்து வைப்பது நல்லது.
ஆடைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில் பெண்களுக்கு பொறுமை அதிகம். துணியின் தரம், நிறம், விலை, தங்களுக்கு அந்த உடை பொருத்தமாக இருக்கிறதா? என்றெல்லாம் கவனமாக பார்த்து வாங்குவார்கள். அவ்வாறு வாங்கும் ஆடைகளின் விஷயத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று சாயம் போவது. இதற்கு முக்கிய காரணம் தரமற்ற சாயங்களை ஆடைகளுக்கு பயன்படுத்துவது தான்.
மேலும் ரசாயனம், வெப்பநிலை, சுற்றுச்சூழல் மாசு போன்ற இதர காரணங்களாலும் துணிகள் வெளுத்து போக நேரிடும். சாயம் போகும் ஆடைகளை சரியாக பராமரிப்பதன் மூலம் பொலிவு குறையாமல் வைத்திருக்க முடியும். அதற்கான சில பராமரிப்பு முறைகளை இங்கே காண்போம்.
புதியதாக வாங்கிய துணிகளை முதன்முதலில் துவைக்கும்போது தனியாக ஊற வைப்பதன் மூலம்,அந்த துணிகள் சாயம் போகுமா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதோடு, அந்த சாயம் பிற துணிகள் மீது பற்றிக்கொள்வதையும் தவிர்க்கலாம். சாயம் போகும் ஆடைகளை சில நாட்களுக்கு தனியாக துவைப்பதே சிறந்தது. உப்பு மற்றும் வினிகர் கலந்த தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் துவைத்து அலசுவதன் மூலம் துணிகள் சாயம் போவதை சீக்கிரமே தடுக்க முடியும்.
சில துணிகள் இரண்டு அல்லது மூன்று சலவைகளிலே முழுவதும் சாயம் போய் வெளிர் நிறமாக மாறிவிடும். இயற்கையான சோப்பு அல்லது மென்மையான ஷாம்பு பயன்படுத்தி இந்த துணிகளை துவைப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். சாயம் போகும் ஆடைகளை சூரிய ஒளியில் நேரடியாக உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் துணிகள் விரைவாகவே வெளிறிவிடும்.
இதனைத் தவிர்க்க நிழலில் உலர்த்தலாம். சில நேரங்களில் சாயம் போகும் துணியுடன் வெள்ளை நிற உடைகளை தெரியாமல் ஊறவைத்திருப்போம். அப்போது அந்த சாயம் வெள்ளை உடைகளில் பற்றிக்கொள்ளும். அதைப் போக்க இவ்வாறு செய்ய வேண்டும். சாயம் பிடித்த உடையை உலர வைக்கும் முன்பே, வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு பிளீச்சிங் பவுடரை கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
அதில் பாதி எலுமிச்சம்பழத்தின் சாற்றினை ஊற்றி, அந்த நீரில் வெள்ளைத் துணிகளை ஐந்து நிமிடம் ஊற வைத்து துவைப்பதன் மூலம் சாயக்கறையை நீக்கிவிடலாம். சாயம் போகும் ஆடைகளை உள்பக்கமாக மடித்து வைப்பது நல்லது. மடித்து வைத்த பின்பும் சில துணிகளில் சாயம் போகலாம். எனவே நிறங்களின் அடிப்படையில் துணிகளை தனித்தனியே பிரித்து அடுக்கி வைப்பது சிறந்தது.
- வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி.
- சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது.
கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம்.
இயற்கை முறையில் தீர்வுகள்
* நுங்கு, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும்.
* வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்; கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
* வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.
* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.
* அருகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.
* மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.
* பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.
* கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.
* சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம்.
* உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* நேரம் தவறித் தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது. காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்.
* குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; வியர்க்குரு நெருங்காது.
- சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்காத போது அந்த பகுதி கருப்பாக மாற தொடங்குகிறது.
- சில நேரங்களில் பயன்படுத்தும் பொருளின் விளைவு காரணமாக தோலின் நிறம் கருமையாகிறது.
பெரும்பாலானவர்களுக்கு அவர்களது கைகள் மற்றும் கால்களின் முட்டிகளில் சொரசொரப்பாகவும் கருமையாகவும் சருமம் மாறியிருக்கும். இந்த கருமையை வீட்டிலேயே இயற்கையான முறையில் எளிமையாகப் போக்கிவிடலாம்.
நாம் முறையாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்காத போது அந்த பகுதி கருப்பாக மாற தொடங்குகிறது. சூரிய ஒளியின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக, தோலின் நிறம் கருமையாக மாற தொடங்குகிறது. அதாவது ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்னை ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், உடலின் சில பாகங்களின் நிறம் மாறுகிறது. சில நேரங்களில் பயன்படுத்தும் பொருளின் விளைவு காரணமாக தோலின் நிறம் கருமையாகிறது.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்
எள்ளு பவுடர் – சிறிதளவு
ஆலிவ் ஆயில் – 1-2 டீஸ்பூன்
இவை மூன்றையும் பேஸ்ட் போல் நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை கை மற்றும் காலின் முட்டி பகுதியில் தடவி நன்றாக தேய்க்கவும். இதனால் அது சருமத்தில் உறிஞ்சப்படும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மாறத்தொடங்கும்.
முகத்துடன் கை மற்றும் கால்களின் முட்டி பகுதியையும் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதனால் இறந்த சரும செல்கள் நீங்கி சருமம் சுத்தமாக காட்சியளிக்கும். ஓட்ஸை மிக்ஸியில் நைஸாக அரைத்து வீட்டிலேயே ஸ்க்ரப் செய்யலாம்.
முகத்துடன், முழங்கைகளையும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும். இதற்கு மாய்ஸ்சரைசர் க்ரீம் அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் குளிக்கும் போதெல்லாம், கை மற்றும் கால்களின் முட்டி பகுதியை நன்றாக தேய்த்து குளிக்கவும். இதனால் அவை சுத்தமாக இருக்கும்.
- மஞ்சளின் மருத்துவக் குணங்கள் தொடர்பான பட்டியலுக்கு முடிவே கிடையாது.
- மஞ்சளில் நச்சுத்தன்மை கிடையாது.
மஞ்சள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சருமப் பராமரிப்பிலும், திருமணங்களிலும் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்ததே.
மஞ்சளின் பிரகாசமான நிறத்துக்கு, அதிலுள்ள கர்கியூமின் என்ற நிறமியே காரணம். இது மிகவும் முக்கியமான வேதிப்பொருள். புண்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. அழற்சி-வீக்கத்தை குறைக்கும் அற்புதமான நிறமி.
மஞ்சளில் நச்சுத்தன்மை கிடையாது. மார்புச்சளி அல்லது கன்றிப் போன ஊமைக் காயத்துக்கு பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் குணமளிக்கும் பண்பை அதிகரிக்க, பனங்கற்கண்டு சேர்ப்பது கூடுதல் பலன் தரும்.
மஞ்சளின் மருத்துவக் குணங்கள் தொடர்பான பட்டியலுக்கு முடிவே கிடையாது. ஏற்கனவே, சொன்ன பலன்களைத் தாண்டி கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும் இயற்கை மருந்தாக மஞ்சள் இருக்கிறது. மண்ணீரல், கணையம், வயிற்றுச் செயல்பாடுகளை அது மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பாற்றலை வலுவாக்குகிறது. செரிமானத்தை எளிதாக்குவதுடன், கருப்பை கட்டிகள், கருப்பை நீர்க்கட்டிகளையும் குறைக்கிறது.
நமது முன்னோர்கள் காலத்தில் பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். முகம், கை, கால்கள் என கஸ்தூரி மஞ்சள் தூளைக் குழைத்து அல்லது முட்டா மஞ்சளை உரைத்து பூசி குளிப்பார்கள். இதனால் சருமம் பொலிவு பெறும். முகத்தில் பருக்கள், கரும் புள்ளிகள்போன்றவை ஏற்படாது. இயற்கை அழகோடு மஞ்சள் அழகும் இணைந்து பெண்கள் ஆரோக்கிய அழகை பெற்றிருந்தார்கள்.
வயது பேதமில்லாமல் முகத்தில் பரு, கரும்புள்ளி, ஹார்மோன் மாற்றங்களால் இலேசான மீசை முடி என்று இளம்பெண்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மஞ்சளை உபயோகப்படுத்தினால் குறைந்த நாட்களில் பயன்பாடு தெரியும்.கஸ்தூரி மஞ்சளை குளியல் பொடியுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.
பெண்கள் சிலருக்கு ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் மாறுபாடுகள் முகத்தில் தேவையற்ற ரோம முளைக்கிறது. இத்தகைய ரோமங்களை நீக்க சிறந்த இயற்கை வைத்திய பொருளாக மஞ்சள் இருக்கிறது. தினமும் மஞ்சளை நீரில் கலந்து, முகத்திற்கு நன்கு பூசி சிறிது கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் முளைக்கின்ற தேவை முடிகள் உதிரும். எதிர்காலத்தில் முகத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காமல் தடுக்கவும் செய்கிறது.
மாதவிடாய்க் காலங்களுக்கு முன் சிலருக்கு முகத்தில் சிறு சிறு பருக்கள் அல்லது கட்டிகள் உருவாகக் கூடும்.பகல் நேரங்களில் இல்லையென்றாலும் இரவு நேரங்களில் மஞ்சளைக் குழைத்து பூசி வந்தால் பருக்கள் வருவது தடைபடும்.
அம்மை, தழும்பு, கரும்புள்ளி போன்றவை மறைய மஞ்சளுடன் சோற்றுக்கற்றாழை நுங்கை (ஜெல்லை) குழைத்து அந்த இடத்தில் பூசி வந்தால் நாளடைவில் அவை மறைந்து சருமம் இயல்பாகும்.
சரும சுருக்கத்தைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கும் மஞ்சள், எண்ணெய் வழிந்த முகத்தைக் கொண்டிருக்கும் பெண்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். விலை மதிப்புள்ள க்ரீம்கள் செய்யவேண்டிய வேலையைப் பால், தேன் உடன் கலந்து பூசும் மஞ்சள் எளிதாக செய்து விடுகிறது.
உடலில் பித்தம் அதிகரிப்பதாலும், பாதங்களில் ஏற்படும் கிருமித் தொற்றுகளாலும் பலருக்கு பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாத வெடிப்புகளுக்கு இரசாயன மருந்துகளை பூசுவதைவிட தேங்காய் எண்ணெயுடன், மஞ்சள் தூளை நன்கு கலந்து, பாதத்தில் உள்ள வெடிப்புகளில் தடவி வந்தால் வெகு விரைவில் பாத வெடிப்புகள் குணமாகும்.
- கோயில் நகை வடிவமைப்புகள் நாட்டின் பழமையான நகைகள் செய்யும் முறைகளில் ஒன்றாகும்.
- செட்டியார் மணப்பெண்ணின் திருமண நகை வடிவமைப்புகள் கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கும்.
தமிழகம், நேர்த்தியான கோவில்கள், கைவினை மற்றும் ஆழமான வேரூன்றிய, துடிப்பான கலாச்சாரத்தின் நிலம். தமிழ்நாட்டின் பாரம்பரிய நகை வடிவமைப்புகளை ஆராய்வதன் மூலம், நிலத்தின் கலாச்சாரம் மற்றும் கைவினைப்பொருளின் ஆழம் மற்றும் மகத்துவத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
பாரம்பரியங்கள், மரபுகள் மற்றும் சடங்குகள் நிறைந்த பூமியாக இருப்பதால், தமிழ் மக்கள் தங்கள் கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுகள் மூலம் தங்கள் வாழ்க்கையை கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். தேசத்து மக்கள் தலைமுறை தலைமுறையாக ராஜ்ஜியங்கள் எழுச்சி பெறுவதையும், வீழ்ச்சியடைவதையும் கண்டிருந்தாலும், அவர்கள் தங்கள் அரவணைப்பையும், 'கலாசாரத்தையும்' இழக்கவில்லை. நகைகள் என்பது அவர்களின் அன்றாட வாழ்வில் ஆழமான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் திறமைகளை மேம்படுத்துவதற்கான மற்றொரு வழியாகும். தமிழர்கள் எப்போதுமே கோயில் கைவினை, பட்டு நெசவு மற்றும் பரதநாட்டியம் போன்ற தேர்ந்த கலை வடிவங்களால் தனித்து நிற்கின்றனர்.
தோற்றம்
வலிமைமிக்க சோழர்கள், சேரர்கள் மற்றும் பாண்டியர்கள் தங்கள் சிற்பங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் பெருமைகளால் தமிழ்நாட்டின் நிலத்தில் , வரலாற்றில் பதிந்துள்ளனர். தமிழ்நாட்டின் கோயில்கள், நினைவுச் சின்னங்கள், பழக்கவழக்கங்கள், கலை வடிவங்கள் மற்றும் பாரம்பரிய நகை வடிவமைப்புகளில் அவர்கள் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டின் நகைகள் பண்டைய இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நகைகள் என்று நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நகைகளின் வகைகள்
தமிழ்நாட்டின் பாரம்பரிய நகைகள், பழங்கால சடங்கு மற்றும் மத நகைகளைத் தவிர, இந்த வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அணியும் இடத்தின் அடிப்படையில் நகைகளின் வழக்கமான பிரிவையும் கருத்தில் கொள்ளலாம்.
கோவில் நகைகள்
கோயில் நகை வடிவமைப்புகள் நாட்டின் பழமையான நகைகள் செய்யும் முறைகளில் ஒன்றாகும். முதலில் கோயில்களின் தெய்வங்களை அலங்கரிக்க மட்டுமே நகைகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர், பரதநாட்டிய நடனக் கலைஞர்கள் அந்த நகைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
கோயில் நகைகள் பொதுவாக தங்கத்திலும், சூரியன், சந்திரன், நாகங்கள் மற்றும் பலவற்றைக் குறிக்கும் கல் அமைப்புகளாலும் செய்யப்படுகின்றன. இந்த நகை வடிவமைப்புகளில் பொதுவாக வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை கற்கள் காணப்பட்டன.
நகாக்ஷி நகைகள்
தமிழ்நாட்டின் கோயில்கள் தெய்வீகத்தன்மைக்கு மட்டுமின்றி கட்டிடக்கலைக்கும் பெயர் பெற்றவை. நக்ஷி அல்லது நகாஷி நகைகள் தமிழ்நாட்டின் கோயில் கட்டிடக்கலையிலிருந்து அதன் பாணியை ஏற்றுக்கொண்டன, இது நவீன கோயில் நகைகள் என்று பெயர் பெற்றது. அசல் கோயில் நகைகள் இல்லையென்றாலும், நக்ஷி வேலைக்கும் அந்த பெருமைகள் உண்டு.
செட்டிநாடு நகைகள்
செட்டியார் மணப்பெண்ணின் திருமண நகை வடிவமைப்புகள் கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கும். செட்டிநாட்டு நகை வடிவமைப்புகளில் முக்கியமாக பர்மிய (இன்றைய மியான்மர்) மாணிக்கங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த நகைகள் கெம்ப் நகைகள் என்றும் அழைக்கப்படுகிறது. கபோகான் மாணிக்கங்கள் கனமான தங்க அமைப்புகளில் பதிக்கப்பட்டன. பெரும்பாலான செட்டிநாட்டு நகை வடிவமைப்புகள் தாய்மார்களிடமிருந்து மகள்களுக்கு சீராக அனுப்பப்படுகின்றன. அவை விலைமதிப்பற்றவை மற்றும் ஈடுசெய்ய முடியாதவை.
தமிழ்நாட்டின் சில பாரம்பரிய நகை வடிவமைப்புகள்
தமிழ்நாட்டின் பாரம்பரிய நகைகள் மாங்கா மாலை, அட்டிகை, காசு மாலை, கோவில் நெக்லஸ்கள், கெம்ப் நெக்லஸ்கள், நாகாசி நெக்லஸ்கள், நீண்ட ஹாரம், வெற்றிலை கோவை, ஜடநாகம், சூரியப்பிறை, சந்திரபிறை, சந்திரஹாரம், கவுரிசங்கம் மற்றும் பல வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய கழுத்தணிகள்
1. மாங்கா மாலை,
2. காசு மாலை
3. லட்சுமி மாலை
4. முல்லை மோட்டு மாலை
5. விளக்குமூக்கு மாலை
6. மகர காந்தி ஹரம்
7. அட்டிகை
8. கிளிகாசு மாலை
9. சாவடி
10. கோதுமை விடை மாலை
11. மல்லிகை அரும்பு மாலை
12. சந்திரஹாரம்
13. தாலி அல்லது திருமாங்கல்யம்
14. பிறண்டை கட்டை
15. ஈரட்டை வடம் மாலை
16. கொடி மாலை
17. கான்ட்ராகாரம்
18. சங்கிலி
19 மிளகு மணி மாலை
20.கழுத்திரு - (செட்டியார் மணமகள்)
தமிழ்நாட்டின் பாரம்பரிய காதணிகள்
1. ஜிமிக்கி,
2. லோலக்கு
3. பாம்படம்
4. மட்டல்
5. குண்டலம்
6. கடுக்கன்
7. தோடு
மோதிரங்கள்
1. கெம்பு கல் மோதிரம்
2. உங்கிலா
3. வைரமோத்திரம்
வளையல்கள்
1. பச்சக்கல் வாழை
2. வைரவளை
3. லட்சுமி வாலை
4. கப்பு
5. கங்கணம்
6. கெம்பு கல் வாழை
முடி நகைகள்
1. சூர்யா பிறை & 2.சந்திர பிறை - இவை திருமணம் மட்டுமல்ல பரதநாட்டிய ஆடை ஆபரணங்களின் ஒரு பகுதியுமாகும்.
3. நெத்தி சுட்டி - சிவப்பு மற்றும் வெள்ளை கற்கள் பதித்த மாங்கனி. திருமணங்கள் மற்றும் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
4. ராக்கோடி - ராக்கோடி என்பது முடி ரொட்டியைப் பிடிக்க கெம்ப் மற்றும் வெள்ளைக் கற்களால் பதிக்கப்பட்ட வட்ட வடிவ முடி துணை ஆகும்.
5. நெத்தி பட்டை (கவுண்டர் மணமகள்) - கவுண்டர் மணமகளின் திருமண விழாவின் போது நெற்றியில் அணியும் சடங்கு.
6. ஜடநாகம் - 'ஜடை' என்றால் முடி 'நாகம்' என்றால் பாம்பு. ஜடநாகம் என்பது தமிழ் மணமகளின் நீண்ட சடை முடியில் நீண்ட நகைகள் வெட்டப்பட்ட பாம்பு. ஜடநாகம் பொதுவாக பின்னலின் வால் நுனியில் குஞ்சாலத்துடன் இருக்கும்.
துணை நகைகள்
1. ஒட்டியானம்
2. வங்கி
3. மெட்டி
4. கொலுசு
5. தந்தை
6. மூக்குத்தி
7 பேசரி
8. புல்லக்கு - புல்லக்கு பொதுவாக சிவப்பு அல்லது வெள்ளை கற்களால் அலங்கரிக்கப்படுகிறது. இது செப்டம் வளையத்தை ஒத்த ஒரு மூக்கு துணை. இந்த நகை அணிகலன் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
- உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், ரத்த ஓட்டம் சீரடையும்.
- சரும ஆரோக்கியம் மேம்படும்.
நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் உடல்நலனில் ஏற்படும் பிரச்சினைகளை களையவும் எண்ணெய் குளியல் அவசியம்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது, சித்த மருத்துவம்.
சீரகம் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயை தேய்த்துக் குளிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு, அதிக உடல் சூடு, தூக்கமின்மை, மன அமைதியின்மை போன்ற பித்த நோய்களைத் தடுக்கலாம், குறைக்கலாம்.
செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசாலை சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெய், முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்க உதவும். மனதை அமைதிப்படுத்தும்.
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்கு தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் உடல் நாற்றம், தொண்டை பிரச்சினை, ரத்தக் குறைவு போன்ற நோய்கள் விலகும். சளி, இருமல், சைனஸ் போன்ற கப நோய்களை போக்கச் சுக்கு தைலத்தால் தலைக்கு குளிக்கலாம்.
அத்துடன் வாரம் இரு முறை தலை முதல் கால்வரை எண்ணெய் தேய்த்துக் குளித்துவருவதால், சரும ஆரோக்கியம் மேம்படும். உடலின் வெப்பம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் நோய்கள் தொலைந்து போகும், பசி அதிகரிக்கும். உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், ரத்த ஓட்டம் சீரடையும். உடலின் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, வாத நோய்கள் குணமடையும். மன அழுத்தம் குறையும்.
எண்ணெய் குளியல் நாளன்று அசைவ உணவுகள், காரம் அதிகமுள்ள பொருட்கள், மசாலாப் பொருட்கள், எளிதில் செரிக்காத பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளித்த நாளன்று, உடல் சற்று பலமிழந்து காணப்படுவது இயற்கையே.
எனவே, கடினமான வேலைகளைச் செய்யாமல் ஓய்வெடுப்பது நல்லது. அன்றைக்குப் பகலில் உறங்குவதையும் உடலுறவையும் தவிர்க்க வேண்டும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.






