என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    முதுகெலும்பு பிரச்சினைகளால் அவதிப்படும் நபர்களுக்கு இந்த போஸ் உதவும். இது தொடை எலும்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்காமல் முதுகு தசைகளுக்கு இதமளிக்கும்.
    யோகாசனங்களில் ஒன்றான பட்டாம்பூச்சி ‘ஆசனம்’ தசைகளை தளர்வடைய செய்யும் தன்மை கொண்டது. கழுத்து வலி மற்றும் முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெற விரும்புபவர்கள் பட்டாம்பூச்சி ஆசனத்தை முயற்சித்து பார்க்கலாம். இது ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தக்கூடியது. ‘டைட்லி ஆசனம்’, ‘பாத கோனாசனா’ போன்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த ஆசனத்தை செய்வது எளிதானது.

    இந்த ஆசனம் செய்யும்போது இரு கால்களும் இடுப்பு பகுதியை நோக்கி நெருக்கமாக இழுத்து வைக்கப்படும். இரு கைகளும் இறுக்கமாக ஒன்றிணைக்கப்படும். இந்த ஆசனத்தின் சிறப்பு என்னவென்றால், பட்டாம்பூச்சியின் இறக்கைகள் போல கால்கள் அசைந்தாடுவதுதான். முதலில் தரையில் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். பின்பு இரு கால்களையும் மடக்கிக்கொள்ள வேண்டும். அப்போது கால்களின் பாதங்கள் இரண்டும் ஒன்றொடொன்று ஒட்டிய நிலையில், நேராக இருக்க வேண்டும். பின்பு பாதங்களின் மீது கைகளை குவித்து இறுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதைத்தொடர்ந்து மூச்சை உள் இழுத்து மெதுவாக சுவாசிக்க வேண்டும். அதே சமயத்தில் இரண்டு கால்கள் மற்றும் தொடை பகுதிகளை மேலும் கீழும் அசைக்க வேண்டும். அப்போது முதுகெலும்பு நேரான நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    முதுகெலும்பு பிரச்சினைகளால் அவதிப்படும் நபர்களுக்கு இந்த போஸ் உதவும். இது தொடை எலும்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்காமல் முதுகு தசைகளுக்கு இதமளிக்கும். இடுப்பு பகுதிக்கு அருகில் குதிகால்களை வைப்பதால் கீழ் முதுகு பகுதி தளர்வடையும். பின்புற முதுகு தசைகளும் வலுப்பெறும். இந்த பட்டாம்பூச்சி போஸ் கழுத்து, முதுகு, தலை பகுதிகளை தளர்வடைய செய்யும். இந்த பயிற்சியின்போது மூளைக்கு எளிதில் ஆக்சிஜன் சென்றடைவதால் தலைவலியின் தீவிரத்தையும் குறைக்க உதவும். மேலும் இந்த ஆசனம் மேற்கொள்ளும்போது சுவாசம் வழக்கம்போலவே நடைபெறுவதால் எந்த சிரமமும் ஏற்படாது. கவலையில் இருந்து விடுபட வழிவகுக்கும். இந்த ஆசனத்தை செய்யும்போது கால்களை தொடையின் உள்புற பகுதிக்கு அருகில் வைக்க வேண்டியிருக்கும். அந்த தோரணையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது தசைகள், மூட்டுகள் மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்த உதவும்.

    பட்டாம்பூச்சி போஸ் கருப்பையின் செயல்பாட்டை மேம்படுத்தும். இனப்பெருக்க அமைப்புக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். ரத்தம் மட்டுமின்றி ஆக்சிஜனும் அதிகம் சென்றடைவதால் இனப்பெருக்க அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். இந்த ஆசனத்தை செய்வதன் விளைவாக ரத்த ஓட்டம் துரிதமடைவதோடு, சோர்வு மற்றும் சோம்பலையும் குறைக்க முடியும். நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள் அல்லது நடப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் பயனடைவார்கள். அவர்களின் ஆற்றல் மட்டம் மேம்படும். உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த இந்த ஆசனத்தை முயற்சி செய்யலாம்.
    நாம் முதுகுத்தண்டை திடப்படுத்த முத்திரைகள் செய்தால் அதை சார்ந்த உள் உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
    விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  விரிப்பில் அமர முடியா தவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும்.  ஒரு பத்து வினாடிகள். பின் கண்களை திறக்கவும்.

    சுண்டுவிரல், மோதிர விரல் நடுவிரலை உள்ளங்கைக்குள் மடக்கி கட்டை விரலை மோதிர விரலில் படும்படி வெளியில் வைக்கவும்.  ஆள்காட்டி விரல் படத்தில் உள்ளதுபோல் நேராக இருக்கட்டும்.  இரு கைவிரல்களில் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும்.

    எப்பொழுதும்  நிமிர்ந்து உட்கார கற்றுக் கொள்ளவும்.  அதிக காரம், புளிப்பு, உப்பு தவிர்த்து சாத்வீகமான உணவை எடுக்கவும். நாம் முதுகுத்தண்டை திடப்படுத்த முத்திரைகள் செய்தால் அதை சார்ந்த உள் உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் கட்டை விரலை உள்ளங்கையில் வைத்து மீதி நான்கு விரல்களையும் படத்தில் உள்ளது போல் மடித்து இரு கைகளிலும் செய்யவும்.  இந்த முத்திரையில் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    பலன்கள் :

    நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது.

    முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

    தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது.

    மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

    வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.

    தோல், நாக்கு, கண், மூக்கு, காது ஆகிய ஐந்து புலன்களுக்கும் இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
    துவிபாத பீடாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தூக்கமின்மை, மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். மார்பகங்கள் தொய்வற்று என்றும் இளமையோடு இருக்கும்.
    செய்முறை :

    மல்லாந்து படுக்கவும். இரு கால்களையும் படத்தில் உள்ளபடி முழங்கால் அளவு மடக்கி, கைகளை தலைக்குப் பின்னால் நீட்டவும். மூச்சை இழுத்து நிறுத்தி, மார்பு, இடுப்பு பகுதிகளை நன்றாக படத்தில் உள்ளதுபோல் தூக்கவும். இப்போது சாதாரண நிலையில் சுவாசம் செய்யவும். 20 எண்ணும் வரை இருந்து கால்களை கீழே போடும்போது மூச்சை இழுத்து நிறுத்தி கால்களை நீட்டவும். ஓய்வு எடுத்த பின்னா் அடுத்த முறை செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 தடவைகள் செய்யலாம்.

    பலன்கள் :

    தூக்கமின்மை, மலச்சிக்கல் நீங்கும். கால்கள் வலிமை பெறும். இதய பலவீனம் அகன்றுவிடும். மூளைக்கு புத்துணா்ச்சி கிடைக்கும். தைராய்டு கோளாறுகள் சரியாகும். பெண்களுக்கு மிக வரப்பிரசாதமான ஆசனம். மார்பகங்கள் தொய்வற்று என்றும் இளமையோடு இருக்கும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் இந்த ஆசனம் செய்து வந்தால் தீரும்...
    செய்முறை:

    விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோர்த்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும், இடுப்பிலிருந்து கால்களை நேராகத் தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். சாதாரண மூச்சில் பதினைந்து வினாடிகள் இருக்கவும்.  பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம். இதேபோல் மூன்று முறைகள் மாலை பயிற்சி செய்யவும்.

    இந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும், படபடப்பு, இதயத்தின் இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்கள், முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்யக் கூடாது.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    உடல் உள் உறுப்புகளில் ஏதேனும் சரியாக இயங்கவில்லை என்றாலும் தோல் தசைகளில் அரிப்பு, புண் ஏற்படும். கணையம் நன்றாக இயங்கவில்லை என்றால் தோல்களில் அரிப்பு, புண் ஏற்படும், ஆறாமல் இருக்கும்.
    மனித உடல் இயக்கம் பற்றி ஆராயும் பொழுது நமது உடலில் அனைத்து உறுப்புகளும் முக்கியமானது தான்.  அதில் இறைவன் அனைத்து உறுப்புகளையும் உள்ளே வைத்து எந்த ஒரு தையலும் இல்லாமல் தோலால் மூடி அழகாக படைத்துள்ளான்.  இந்த தோல் தசைகளின் மூலமாக பிராண சக்தி உடலுக்கும் செல்கின்றது.  உடல் ஆரோக்கியத்திற்கு தசைகள் மிக முக்கியமானதாகும்.  பிரபஞ்சத்தின் சக்திகள்.  பிராண ஆற்றல் தசைகளின் மூலம் உள்ளே செல்லும்.  அதுபோல் உடல் கழிவுகள் வியர்வையாக தசைகளின் வழியாக வெளியே வரும்.  நல்ல பிராணன் உள்ளே செல்வதற்கும், கழிவுகள் வெளியே வருவதற்கும் தசைகளின் இயக்கம் நன்றாக இருக்க வேண்டும்.

    உடல் உள் உறுப்புகளில் ஏதேனும் சரியாக இயங்கவில்லை என்றாலும் தோல் தசைகளில் அரிப்பு, புண் ஏற்படும். கணையம் நன்றாக இயங்கவில்லை என்றால் தோல்களில் அரிப்பு, புண் ஏற்படும், ஆறாமல் இருக்கும்.

    ஒவ்வொரு மனிதனும் தசைகள் நன்கு இயங்க கீழே குறிப்பிட்ட முத்திரையை  பயிற்சி செய்யவும்.

    வருண முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் சுண்டுவிரல் பெருவிரல் நுனியை இணைக்கவும்.  மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.  இருகைகளிலும் செய்யவும்.  காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    குளியல்:தினமும் காலை / மாலை இருவேளை குளிக்கவும்.  சோப்பிற்கு பதில் பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு தேய்த்து குளிக்கவும்.வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்.

    ஆதி முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் கட்டை விரலை உள்ளங்கையில் வைத்து மீதி நான்கு விரல்களையும் படத்தில் உள்ளது போல் மடித்து இரு கைகளிலும் செய்யவும்.  இந்த முத்திரையில் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    தியானம்:விரிப்பில் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும்.  மெதுவாக மூச்சை இருநாசி வழியாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் இழுப்பதாக எண்ணவும்.  மூச்சை வெளிவிடும்பொழுது நமது உடல், மனம் அதிலுள்ள டென்ஷன் வெளியேறுவதாக எண்ணவும்.  உடல் வெளி தசைகள் முழுக்க நல்ல பிராணக் காற்று கிடைப்பதாக எண்ணவும்.  பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் நெற்றி புருவ மத்தியில் 5  நிமிடங்கள் தியானிக்கவும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஒரே இடத்தில் உடல் அசையாமல் அமர்ந்து பல மணிநேரம் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கான சிறந்த பயிற்சியாக தொட்டில் யோகா அமைகிறது.
    குழந்தையாக இருந்தபோது அம்மாவின் புடவையில்  தொட்டில் கட்டி விளையாடி இருப்போம். காற்றில் அசையும் தொட்டிலோடு, நாமும் அசைந்து ஆடி மகிழ்ந்திருப்போம். தற்போது அதே தொட்டிலைகொண்டு யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் ஆன்ட்டி கிராவிட்டி எனும் இநத் பயிற்சியை அழகு தமிழில் தொட்டில் யோகா என்கிறோம்.

    தலை முதல் கால் வரை பல நன்மைகளை கொடுக்கக்கூடிய இந்த பயிற்சியை எளிதாகவும், சுலபமாகவும் செய்யலாம். யோகாவில் காலில் அழுத்தம் கொடுத்து செய்யும் பயிற்சிகள் சிரமமானது. அதனாலேயே யோகா கற்கும் பலரும் இநத பயிற்சிகளை தொடருவது இல்லை.

    அவர்களுக்குக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்திருப்பது தொட்டில் யோகா. தரையின் மீது செய்யும் அனைத்து யோகா பயிற்சிகளையும், தொட்டில் யோகா முறையில் செய்யலாம். சிரமமின்றி எளிதாக ரசித்தபடியே இந்த யோகாவை செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    தொட்டில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுவதால் ரத்த ஓட்டம் சீராகும். முதுகுவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த யோகாவை செய்யலாம். இதனால் வலி குறையும். முதுகு பகுதியில் உள்ள முக்கியமாக தசைகள் வலுவடைவதால் முதுகொலும்பு, தோள் பட்டை போன்றவற்றின் நெகிழ்வுத்தன்மை மேம்படுத்த முடியும்.

    தொட்டில் யோகாவில் பலவித அசைவுகள் இருப்பதால், ஜீரண உறுப்புகள் சீராக செயல்படும். இதன் மூலம் ஜீரண கோளாறுகள் குணமாகும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஒரே இடத்தில் உடல் அசையாமல் அமர்ந்து பல மணிநேரம் வேலை  செய்கிறார்கள். இவர்களுக்கான சிறந்த பயிற்சியாக தொட்டில் யோகா அமைகிறது.

    இதில் பல அசைவுகள் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் உடலின் வளைவுத்தன்மை அதிகரிக்கும். 16 வயது முதல் 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். உயர் ரத்த அழுத்தம், இதயப்பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    எந்த யோகா செய்வதாக இருந்தாலும் உடல் இலகுவாக இருக்க வேண்டும். தொட்டில் யோகாவிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது. பயிற்சி செய்வதற்கு முன்பு திட உணவை சாப்பிடக்கூடாது. முடிந்தவரை பழச்சாறு, தண்ணீர் அருந்துவது சிறந்தது. அவசர கதியில் பயிற்சி செய்யாமல் நிதானமாக செய்தால் மனம் இலகுவாகும்.

    தளர்வான ஆடைகள் அணியாமல் உடலுக்கு ஏற்ற சற்றே இறுக்கமான ஆடைகளை அணியலாம். தொட்டில் யோகாவை செய்வதற்கு முன் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. இதன் அடிப்படைகளை தெரிந்து கொண்டால் வீட்டிலேயே பயிற்சி செய்யலாம்.
    அடிமுதுகு வலி வந்தால் சிறுநீரகம், சிறுநீரகப்பைக்கு சக்தி ஓட்டம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். நாம் முதுகுத்தண்டை திடப்படுத்த முத்திரைகள் செய்தால் அதை சார்ந்த உள் உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
    மனிதனின் ஆரோக்கியம் அவனது முதுகு தண்டை சார்ந்துள்ளது.  முதுகுத் தண்டுவடத்திற்கும் உடலின் உள் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
    அடிமுதுகு - கோனாடு சுரப்பியை சார்ந்தது.  அடிமுதுகு வலி வந்தால் சிறுநீரகம், சிறுநீரகப்பைக்கு சக்தி ஓட்டம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
    நடுமுதுகு வலி வந்தால் சிறுகுடல், பெருங்குடல் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம்.

    கழுத்து முதுகுவலி வந்தால் நுரையீரல், இதயம் சரியாக இயங்கவில்லை. அப்பகுதியில் சக்தி ஓட்டம் குறைவு என்று அர்த்தம்.

    எனவே நாம் முதுகுத்தண்டை திடப்படுத்த முத்திரைகள் செய்தால் அதை சார்ந்த உள் உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    அனுசாசன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  விரிப்பில் அமர முடியா தவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும்.  ஒரு பத்து வினாடிகள். பின் கண்களை திறக்கவும்.

    சுண்டுவிரல், மோதிர விரல் நடுவிரலை உள்ளங்கைக்குள் மடக்கி கட்டை விரலை மோதிர விரலில் படும்படி வெளியில் வைக்கவும்.  ஆள்காட்டி விரல் படத்தில் உள்ளதுபோல் நேராக இருக்கட்டும்.  இரு கைவிரல்களில் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும்.

    எப்பொழுதும்  நிமிர்ந்து உட்கார கற்றுக் கொள்ளவும்.  அதிக காரம், புளிப்பு, உப்பு தவிர்த்து சாத்வீகமான உணவை எடுக்கவும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    நிறைய நபர்களுக்கு கால் வலி, உள்ளங்கால் வலி, பாத வீக்கம், கால் ஆணி, விரல்கள் நடுவில் புண் முதலியவை வரும். இவை வராமல் தடுக்கும் எளிய யோகா பயிற்சியை தினமும் செய்தால் வளமாக வாழலாம்.
    மனித உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானவை தான்.  கால் பாதம், கால் விரல்கள் நன்கு இயங்கினால் தான் நாம் நடக்க முடியும்.  நமது எல்லா செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும்.

    பொதுவாக நிறைய நபர்களுக்கு கால் வலி, உள்ளங்கால் வலி, பாத வீக்கம், கால் ஆணி, விரல்கள் நடுவில் புண் முதலியவை வரும்.  இவை வராமல் தடுக்கும் எளிய யோகா பயிற்சியை தினமும் செய்தால் வளமாக வாழலாம்.

    சுமண முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கவும்.  கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும்.  பின் கைவிரல்களை அப்படியே மாற்றி இரு கைகளையும் சேர்க்கவும்.  கட்டைவிரல் தவிர மற்ற நான்கு விரல்கள் ஒன்றையன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.  படத்தைப் பார்க்கவும்.  இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் இருக்கவும்.  காலை/மாலை இருவேளைகள்  பயிற்சி செய்யவும்.
    எளிய நரம்பு பயிற்சி: விரிப்பில் நேராக இரு கால்களையும் நீட்டி அமரவும். இரு கைகளை பக்கவாட்டில் இடுப்புப் பக்கத்தில் வைக்கவும். உள்ளங்கை தரையில் இருக்கட்டும்.

    இரு கால் விரல்களை நன்கு முன்னாள் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் கால் விரல்களை பின்னால் வளைக்கவும்.  பத்து வினாடிகள் இருக்கவும், இதே போல் இரண்டு முறைகள் செய்யவும்.

    பின் ஒரு கால் பக்கவாட்டில் படத்தில் உள்ளது போல் வலப்பக்கம் வளைக்கவும்.  வலது காலை தொய்வாக போட்டு இடது காலை இழுத்து விடவும்.  பத்து வினாடிகள் இருக்கவும்.  அதேபோல் இடப்பக்கம் செய்யவும்.  பின் சுழற்சியாக செய்யவும். படத்தை பார்க்கவும்.

    உணவு முறை:அதிக காரம், புளிப்பு, உப்பு தவிர்க்கவும். பூசணிக்காய், சுரைக்காய் உணவில் எடுத்துக் கொள்ளவும்.  கீரைகளில் முருங்கைக்கீரை, பசலை கீரை, மணத்தக்காளி, வல்லாரை கீரை, முடக்கத்தான் கீரை எடுத்துக் கொள்ளவும்.மாதம் இருமுறை மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை எடுத்துக் கொள்ளவும்.

    வாரம் ஒரு முறை கல் உப்பு ஒரு டப்பில் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் கால் பாதங்களை தண்ணீரில் வைத்து ஐந்து நிமிடம் இருக்கவும்.  பின் கால்களை சாதாரண தண்ணீரில் கழுவவும்.
    உடல் சூடு சரியாகவில்லை என்றாலும் மலம் வெளிவருவதில் சிரமம் இருக்கும். உடல் சூட்டை சரி செய்யும் லிங்க முத்திரையும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண்களை திறந்து எல்லா கைவிரல்களையும் கோர்த்து இடது கை கட்டைவிரல் மட்டும் நேராக படத்தில் உள்ளதுபோல் இருக்கட்டும்.  சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.  காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    உணவு:

    சாத்வீகமான உணவு முறைகள் உட்கொள்ள வேண்டும்.  பழங்கள், கீரைகள் அதிகம் எடுக்கவும்.  அதிக மலச்சிக்கல், ஆசனவாய் அரிப்பு உள்ளவர்கள் இரவு வாழைப்பழம் இரண்டு (நாட்டு வாழைப்பழம்) அரைமுடி தேங்காய் மட்டும் உணவாக எடுத்து ஒரு மண்டலம் 48  நாட்கள் சாப்பிடவும்.    நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    இந்த முத்திரை செய்தால் சிறுநீரகம் மிகச் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும். இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளி விடவும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண்களை திறந்து சுண்டு விரலின் நகத்திற்கு கீழ் கட்டைவிரல் நுனியை தொட வேண்டும்.

    மடக்கிய சுண்டு விரலின் நகத்தின் மேல் கட்டைவிரல் நுனி தொட்டுக் கொண்டிருக்கிறது.

    சுண்டுவிரல் நீர் மூலகம், கட்டை விரல்நெருப்பு மூலகம்.  நீர் மூலகத்தின் மேல் நெருப்பு மூலகம் உள்ளது. இரண்டு நிமிடங்கள் காலை, மாலை பயிற்சி செய்யவும்.  சிறுநீரகம் மிகச் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    தாயின் வயிற்றில் கரு உண்டான மூன்றாவது மாதத்தில் இருந்து மனிதன் வளர்ந்து சாகும் வரை ஓய்வே இல்லாமல் வேலை பார்ப்பது சிறுநீரகம் தான்.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண்களை திறந்து மோதிரவிரல், சுண்டு விரலை மடக்கி உள்ளங்கையை தொடும்படி வைத்து மோதிரவிரல் மீது கட்டை விரலை வைக்கவும்.  ஆள்காட்டி விரலும், நடுவிரலும் நீட்டி இருக்க வேண்டும்.

    இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்பிடும்முன்  செய்யவும்.  மூன்று முறைகள் பயிற்சி செய்ய முடியாதவர்கள் காலை, மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.
    ×