என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    புத்தி மயகோசம், நன்றாக இயங்க யோகாசனங்கள் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாளமில்லா சுரப்பிகள் சரியாக சுரக்கும் புத்தி கூர்மையுடன் செயல்பட முடியும்.

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கால்களையும் நீட்டவும். ஒவ்வொரு காலாக மடித்து இடது காலை வலது தொடை மேலும், வலது காலை இடது தொடை மீதும் போடவும். இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரலை ஆள்காட்டி விரல் நுனியில் இணைக்கவும், மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து ஐந்து நிமிடங்கள் மூச்சோட்டதை தியானிக்கவும்.

    இந்த பத்மாசனத்தில் சின் முத்திரை செய்யும் பொழுது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், சோம்பல், பொறாமை, பயம், பேராசை, வெறுப்பு போன்ற பண்புகள் ஒழிகின்றது. நம்பிக்கை வளரும், அன்பு மலரும், எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் வளரும். பய உணர்வு நீங்கும் . தெளிந்த சிந்தனை பிறக்கும். எப்பொழுதும் மனம் உற்சாகமாக இருக்கும்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    பிராணமய கோசத்தை சுத்தப்படுத்த, அதனை சரியாக இயங்கச் செய்யத்தான் நாடிசுத்தி மூச்சு பயிற்சி உள்ளது. இது தான் யோகக் கலைகள் ஆகும்.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இரு கைகளையும் சின் முத்திரை வைத்து மிக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதே போல் பத்து முறைகள் காலை, மாலை பயிற்சி செய்யவும்.

    ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெது வாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும்.

    மாலை 5 மணி முதல் 6 .30 மணிக்குள் நிமிர்ந்து அமர்ந்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து ஐந்து வினாடிகள் மட்டும் மூச்சடக்கி இருந்து பின் மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். இதனால் பிராணமய கோசம் மிகச் சிறப்பாக இயங்கும். நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். நுரையீரல் நல்ல காற்றை உள்வாங்கி அசுத்த காற்றை வெளி யேற்றும். உடலில் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440

    நமது உடலை சுத்தம் செய்ய தினமும் குளிக்கின்றோம். நமது முதல் அடுக்கு இதுதான், கண்ணுக்கு தெரியும் அன்னமய கோசம். தினமும் காலை மாலை இருவேளையும் குளிக்க வேண்டும். இதனால் நமது அன்னமய கோசம் சுத்தமடைகின்றது.
    விரிப்பில் குப்புறபடுக்கவும். ஒவ்வொரு கையால் காலை மடக்கி கணுக்காலை பிடிக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து தலையை மேல்நோக்கி பார்க்கவும். (படத்தை பார்க்கவும்) பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக தரையில் படுக்கவும். மீண்டும் இதேபோல் பயிற்சி செய்யவும். மூன்று முறைகள் பயிற்சி செய்யவும். காலை மாலை இரண்டு வேளை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்

    வயிற்றுப் பகுதி நன்கு அமுக்கப்படுகின்றன, உடலை ஒரு வில் போல் வளைக்கின்றோம். உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் நன்கு சக்தி பெற்று இயங்கும். சிறுகுடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீரகப்பை, இதயம், நுரையீரல், கல்லீரல், முதுகுத்தண்டு, தைராய்டு, பாரா தைராய்டு, கண்கள், மூக்கு அனைத்தும் சிறப்பாக இயங்குகின்றது. இந்த உறுப்புகள் நன்கு பிராண சக்தி பெற்று இயங்குவதால் மூட்டுவலி, கழுத்துவலி, இதயவலி, சுகர், ரத்த அழுத்தம், முதுகுவலி போன்ற பிரச்சினைகள் வராமல் வளமாக வாழலாம்.

    இந்த ஆசனத்தை உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம், மூட்டு வீக்கம் உள்ளவர்கள் செய்ய வேண்டாம். உடல் வளையும் தன்மை உள்ளவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உடல் ஆரோக்கியம் நம்மிடம் என்றும் நிலைத்திட பயிற்சி செய்யுங்கள்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    எந்த ஒரு தொற்றுக்கிருமி உருமாறி வந்தாலும் அதனை அழித்து நமக்கு ஆனந்தமளிக்கும் மருந்து நம்மிடமே உள்ளது. இந்த யோகக் கூட்டணியுடன் இணையுங்கள்.
    நிமிர்ந்து அமரவும். கை சின் முத்திரையில் வைக்கவும். இரு நாசி (மூக்கு) வழியாக மிக மிக மெதுவாக முடிந்த அளவு மூச்சை இழுக்கவும். உடன் மிக மிக மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக வெளிவிடவும். மீண்டும் இதே போல் நிதானமாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளியிடும்பொழுது உடல் முழுக்க மூச்சு பரவுவதாக எண்ணவும். ஒவ்வொரு அணுக்களும் மூச்சாற்றல் பெறுவதாக என்னனவும்.இவ்வாறு இருபது முறைகள் செய்யவும். இதனை காலை மதியம் மாலை இரவு சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்: உடல் முழுக்க பிராண சக்தி நன்றாக இயங்கும். நுரையீரல் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். நல்ல காற்றை நுரையீரல் உள்வாங்கி, அசுத்தக் காற்றை வெளியேற்றும். எந்த ஒரு தொற்றுக்கிருமியும், வைரசும் உடலில் தங்காமல் வாழ நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். பயமின்றி வாழலாம்.

    யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். உணவில் ஒழுக்கத்தை ஏற்படுத்துங்கள். பசித்தால் மட்டும் பசியறிந்து நல்ல சாத்வீகமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு நேரம் அறைமுறி தேங்காய் இரு வாழைப்பழம் மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை உடலுக்கு ஓய்வு கொடுங்கள். உடலை காக்கும் மருந்து உயிர்தான், எந்த ஒரு தொற்றுக்கிருமி உருமாறி வந்தாலும் அதனை அழித்து நமக்கு ஆனந்தமளிக்கும் மருந்து நம்மிடமே உள்ளது. இந்த யோகக் கூட்டணியுடன் இணையுங்கள்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440

    நம்பிக்கையுடன் தினமும் காலை / மாலை சாப்பிடுமுன் இந்த தியானத்தை 10 நிமிடம் முதல் 15 நிமிடம் பயிற்சி செய்யுங்கள். ஒரு மாதத்தில் உயிர் ஆற்றல் உடல் முழுவதும் பரவுவதை உணரலாம்.
    தரையில் விரிப்பு விரித்து அதில் கிழக்கு முகமாக நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். கண்களை மூடி தலை முதல் கால்வரை ஒவ்வொரு பகுதியாக மனதை நிறுத்தி அதில் உள்ள டென்ஷன், அழுத்தத்தை பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி தளர்த்தவும். பின் மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் உங்களது மனதை, எண்ணத்தை நெற்றி புருவ மையத்தில் நினைத்து கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி நெற்றிப் புருவ மையத்தில் கிடைப்பதாக எண்ணவும். வேறு எண்ணங்கள் வந்தாலும் மீண்டும் உங்களது மூச்சை நெற்றிப் புருவ மையத்தில் வைத்து தியானிக்கவும். பத்து நிமிடங்கள் தியானிக்கவும். இது உயிர் (ஆன்மா) ஆற்றலை உடல் முழுக்க ஒவ்வொரு செல்களிலும் உயிர் ஆற்றல் திறம்பட இயங்க பயன்படுகின்றது. ஆன்மாவின் மற்றொரு கண் தான் நெற்றிப் புருவ மையம். இந்த இடத்தில் உயிர் ஆற்றல் அற்புதமாக குவிந்துள்ளது.

    நாம் உயிரை தலைவனாக நினைத்து அந்த நெற்றிப்புருவ மையத்தில் தியானிக்கும் பொழுது உயிர் ஆற்றல் உடல் முழுக்க பரவும். நமது உடல் உறுப்புக்களில் எந்தப் பகுதியில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளதோ அந்தப் பகுதிக்கு நல்ல பிராண சக்தி பரவி சிறப்பாக இயங்கச் செய்யும். இதுவே நமது உடலை, உடல் உள் உறுப்புக்களை காக்கும் உண்மையான மருந்து.

    நம்பிக்கையுடன் தினமும் காலை / மாலை சாப்பிடுமுன் இந்த தியானத்தை 10 நிமிடம் முதல் 15 நிமிடம் பயிற்சி செய்யுங்கள். ஒரு மாதத்தில் உயிர் ஆற்றல் உடல் முழுவதும் பரவுவதை உணரலாம். சுறுசுறுப்பாக இருக்கலாம். ரத்த அழுத்தம் வராது. மனம் சோர்வு நீங்கும். மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிட்டும்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    முதுகு, இடுப்பு, முழங்கை, கால் முட்டிகள், தண்டுவடம், முதுகெலும்புகள் போன்ற பாகங்களில் காயம் இருந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ துலாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
    செய்முறை

    தரையின் மீது யோகாசன விரிப்பை விரித்து கொள்ளவும். அதன் மேல் கால்களை நேராக நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும்.

    பின்பு இடது கால் மேலே இருக்கும் படியாக சம்மணமிட்டு உட்காரவும். 2 கைகளையும் இடுப்புக்கு பக்கவாட்டில் உள்ளங்கைகள் தரையில் படும்படி ஊன்றிக்கொள்ள வேண்டும். இப்போது மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து நிதானமாக வெளியே விட வேண்டும்.

    கைகளுக்கு அழுத்தம் கொத்தவாறு உடம்பை தரையிலிருந்து மேலே தூக்கவும். இந்த நிலையில் 30 வினாடிகள் இருந்து பின்பு மெதுவாக மீண்டும் தரையில் உட்காரவும்.

    பலன்கள்

    அஜீரணம், மலச்சிக்கல், போன்ற வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும். வயிற்றில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைக்கும். முன் கைத்தசைகளையும், தொடைகளின் பின்பகுதி தசைகளையும் வலுப்படுத்தும். இடுப்பு தொடைகள், கால் மூட்டுகள், கணுக்கால்கள் மற்றும் கெண்டைக்கால் தசைகளையும் வலுவாக்கும்.

    தவிர்க்க வேண்டியவர்கள்

    முதுகு, இடுப்பு, முழங்கை, கால் முட்டிகள், தண்டுவடம், முதுகெலும்புகள் போன்ற பாகங்களில் காயம் இருந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ துலாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
    நிறைய நபர்களுக்கு இப்பொழுது கொரோனா வைரஸ் வந்து சிகிச்சை எடுத்து சரியான பின் எலும்பு வலி, மூட்டுக்கள் வலி, முதுகுவலி ஏற்படுவதாக கூறுகின்றனர். இதற்கு அனுசாசன முத்திரையும், வாயு முத்திரையும் செய்ய வேண்டும்.
    அனுசாசன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் சுண்டு விரல் மோதிர விரல் நடுவிரலை மடக்கி கட்டைவிரலை மோதிர விரல் வெளிப்பகுதியில் வைக்கவும். ஆள்காட்டி விரல் நேராக இருக்கட்டும். கைகளை படத்தில் உள்ளது போல் தோள்பட்டை அருகில் வைக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யுங்கள்.

    வாயு முத்திரை செய்முறை : ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது (Supress) என்று சொல்லலாம்.
    நீங்கள் கொரோனாவுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை முடிந்து சரியான பின், உடலையும், மனதையும், உற்சாகமாக வைத்துக் கொள்ளும் முத்திரை, மூச்சுப்பயிற்சி பயின்று இதன் மூலம், மனதை சிறப்பாக இயங்கச் செய்யலாம்.
    நிறைய நபர்கள் இப்பொழுது வைரஸ் வந்து சிகிச்சை எடுத்து தனிமைப்படுத்தி சரியான பின், மனதில் ஒரு பய உணர்வும்., தூக்கமின்மையும் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதற்கு பிராண முத்திரையும், சின் முத்திரையும் செய்ய வேண்டும்.

    பிராண முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடிமெதுவாக மூச்சை இழுத்து மெது வாக மூச்சை வெளி விடவும் பத்து முறை. பின் மோதிரவிரல் சுண்டு விரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். இரவு படுக்குமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்

    சின் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல் பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    எளிமையான மூச்சுப்பயிற்சி: நிமிர்ந்து அமரவும். இரு நாசி வழியாக மெதுவாக ஆழ்ந்து மூச்சை இழுக்கவும். மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள் இவ்வாறு ஆழ்ந்த சுவாசம் செய்யவும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்யவும். ஒரு நாளில் காலை மூன்று முறைகள், மதியம் மூன்று முறைகள், மாலை மூன்று முறைகள் செய்யவும். இதனால் உடல் முழுக்க நல்ல பிராண சக்தி கிடைக்கும். சோம்பல் நீங்கும். சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். சளி பிடிக்காது, நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாயும். நற்சிந்தனைகள் பிறக்கும். பயம், எதிர்மறை எண்ணங்கள் அகலும்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440

    கொரோனா வைரஸ் வந்து குணமானபின் நிறைய நபர்களுக்கு ஜீரண மண்டலம் பாதிப்பு, பசியின்மை, சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்பிசமாக உள்ளது. இதற்கு அபான முத்திரையும், பிருதிவி முத்திரையும் செய்ய வேண்டும்.

    இப்பொழுது கொரோனா வைரஸ் வந்து குணமானபின் நிறைய நபர்களுக்கு ஜீரண மண்டலம் பாதிப்பு, பசியின்மை, சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்பிசமாக உள்ளது. இதற்கு அபான முத்திரையும், பிருதிவி முத்திரையும் செய்ய வேண்டும்.

    அபான முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் நடுவிரல், மோதிரவிரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்யவும்.

    பிரிதிவி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரல் பெருவிரல் நுனியை இணைக்கவும் மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும், காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். நல்ல பலன்கள் கிடைக்கும்.

    ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இன்று இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    நிறைய நபர்கள் இப்பொழுது வைரஸ் தொற்று வந்து சிகிச்சை எடுத்து குணமானபின் தொண்டை வலி அதிகமுள்ளது. சளியும் உடலில் தொடர்ந்து இருப்பதாக கூறுகின்றார்கள். இதற்கு சூன்ய முத்திரையும், பிராங்கியல் முத்திரையும். ஜலேந்திர பந்தமும் செய்ய வேண்டும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    செய்முறை:

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும்.

    பின் மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி கட்டை விரல் பக்கத்தில் வைத்து, கட்டை விரலையும் நடு விரலையும் தொடவும். ஆள்காட்டி விரல் தரையை நோக்கி இருக்கவும். இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
    எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி.
    உடல் எடையைக் குறைப்பதற்கு, உடலுக்குத் தேவையான அளவு கலோரியை மட்டும் எடுத்துக்கொள்வது, அதிகப்படியாக சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை பயன்படுத்துவது என இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவே, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.

    உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலில் செலவழிக்கப்பட்டது போக, மீதி உடலில் அப்படியே தங்கிவிடும். இவ்வாறு தங்கும் அதிகப்படியான ஆற்றல் கொழுப்பாக மாறும்.

    எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி.

    எந்த வகையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும், உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தில் மாற்றங்கள் நிகழும். இவை நம் உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைப்பதற்கு உதவும். இதன் மூலம் உடல் எடை வெகுவாக குறையும்.

    உடற்பயிற்சி என்றவுடன் கடுமையாக உடலை வருத்தி பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது ஏரோபிக்ஸ், ஜும்பா, உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள், ஆரம்ப கட்ட தசைப்பிடிப்பு தளர்வு பயிற்சிகள், இதயத்தை பலமாக்கும் பயிற்சிகள், ஜாக்கிங், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அல்லது மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். இது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கணிசமான அளவு குறைக்கும்.

    தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் சேமிக்கப்படும் கலோரிகள் அதிக அளவில் எரிக்கப்படுகிறது. இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். உடல் எடையைக் குறைக்கவும், கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் இயலும். தவிர, இதயம் சார்ந்த நோய்களும், பிரச்சினைகளும் ஏற்படுவதை தடுக்கும். உடலின் சீரான ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் உள் உறுப்புகள் அனைத்துக்கும் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி வகுக்கும்.

    இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். தடைகளற்ற சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கும். உடலையும், மனதையும் இளமையாக வைத்திருக்க உதவும்.

    உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் வேதி மாற்றங்கள் உடல் மற்றும் மனநலனில் நன்மை பயக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் மூலம் உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் அழுத்தம், சோர்வு நீங்கி புத்துணர்வு பெற செய்யும். சிந்தனைத் திறனை மேம்படுத்தி, எளிதில் சரியான முடிவெடுக்கும் தன்மையை ஊக்குவிக்கும்.
    கழுத்துவலி, முதுகு வலி, அடி முதுகு வலி, தோள்பட்டை வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
    செய்முறை:

    வஜ்ராசனத்தில் இருந்து மூச்சை வெளியே விட்டுக் கொண்டு மெதுவாக கீழே குனிந்து நெற்றி தரையில் படட்டும்.  இரு கைகளையும் பக்க வாட்டில் வைக்கவும்  படத்தைப் பார்க்கவும்.  சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இருக்கவும்.  பின் மெதுவாக வஜ்ராசனத்தில் அமரவும்.  இதேபோல் மூன்று முறைகள் காலை மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்:

    கழுத்துவலி, முதுகு வலி, தோள்பட்டை வலி நீங்கும்.  இதயம் நன்கு இயங்கும்.  மலச்சிக்கல் நீங்கும்,  நாளமில்லா சுரப்பிகள் மிக சிறப்பாக இயங்கும்.  அடி முதுகு வலி நீங்கும்.  நீரழிவு வராது.  ரத்த அழுத்தம் வராது.  சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.  மன அமைதி கிடைக்கும்.  சோம்பல் நீங்கும்.  சுறுசுறுப்பாக இருக்கலாம்.
    ×