search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    சின் முத்திரை, பிராண முத்திரை
    X
    சின் முத்திரை, பிராண முத்திரை

    பய உணர்வு, தூக்கமின்மையை போக்கும் முத்திரை

    நீங்கள் கொரோனாவுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை முடிந்து சரியான பின், உடலையும், மனதையும், உற்சாகமாக வைத்துக் கொள்ளும் முத்திரை, மூச்சுப்பயிற்சி பயின்று இதன் மூலம், மனதை சிறப்பாக இயங்கச் செய்யலாம்.
    நிறைய நபர்கள் இப்பொழுது வைரஸ் வந்து சிகிச்சை எடுத்து தனிமைப்படுத்தி சரியான பின், மனதில் ஒரு பய உணர்வும்., தூக்கமின்மையும் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதற்கு பிராண முத்திரையும், சின் முத்திரையும் செய்ய வேண்டும்.

    பிராண முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடிமெதுவாக மூச்சை இழுத்து மெது வாக மூச்சை வெளி விடவும் பத்து முறை. பின் மோதிரவிரல் சுண்டு விரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். இரவு படுக்குமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்

    சின் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடி முதல் இருபது வினாடிகள் இயல் பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    எளிமையான மூச்சுப்பயிற்சி: நிமிர்ந்து அமரவும். இரு நாசி வழியாக மெதுவாக ஆழ்ந்து மூச்சை இழுக்கவும். மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள் இவ்வாறு ஆழ்ந்த சுவாசம் செய்யவும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்யவும். ஒரு நாளில் காலை மூன்று முறைகள், மதியம் மூன்று முறைகள், மாலை மூன்று முறைகள் செய்யவும். இதனால் உடல் முழுக்க நல்ல பிராண சக்தி கிடைக்கும். சோம்பல் நீங்கும். சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். சளி பிடிக்காது, நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாயும். நற்சிந்தனைகள் பிறக்கும். பயம், எதிர்மறை எண்ணங்கள் அகலும்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440

    Next Story
    ×