search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தியானம்
    X
    தியானம்

    உயிர் ஆற்றல் பெற தியானம்

    நம்பிக்கையுடன் தினமும் காலை / மாலை சாப்பிடுமுன் இந்த தியானத்தை 10 நிமிடம் முதல் 15 நிமிடம் பயிற்சி செய்யுங்கள். ஒரு மாதத்தில் உயிர் ஆற்றல் உடல் முழுவதும் பரவுவதை உணரலாம்.
    தரையில் விரிப்பு விரித்து அதில் கிழக்கு முகமாக நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். கண்களை மூடி தலை முதல் கால்வரை ஒவ்வொரு பகுதியாக மனதை நிறுத்தி அதில் உள்ள டென்ஷன், அழுத்தத்தை பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி தளர்த்தவும். பின் மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் உங்களது மனதை, எண்ணத்தை நெற்றி புருவ மையத்தில் நினைத்து கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி நெற்றிப் புருவ மையத்தில் கிடைப்பதாக எண்ணவும். வேறு எண்ணங்கள் வந்தாலும் மீண்டும் உங்களது மூச்சை நெற்றிப் புருவ மையத்தில் வைத்து தியானிக்கவும். பத்து நிமிடங்கள் தியானிக்கவும். இது உயிர் (ஆன்மா) ஆற்றலை உடல் முழுக்க ஒவ்வொரு செல்களிலும் உயிர் ஆற்றல் திறம்பட இயங்க பயன்படுகின்றது. ஆன்மாவின் மற்றொரு கண் தான் நெற்றிப் புருவ மையம். இந்த இடத்தில் உயிர் ஆற்றல் அற்புதமாக குவிந்துள்ளது.

    நாம் உயிரை தலைவனாக நினைத்து அந்த நெற்றிப்புருவ மையத்தில் தியானிக்கும் பொழுது உயிர் ஆற்றல் உடல் முழுக்க பரவும். நமது உடல் உறுப்புக்களில் எந்தப் பகுதியில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளதோ அந்தப் பகுதிக்கு நல்ல பிராண சக்தி பரவி சிறப்பாக இயங்கச் செய்யும். இதுவே நமது உடலை, உடல் உள் உறுப்புக்களை காக்கும் உண்மையான மருந்து.

    நம்பிக்கையுடன் தினமும் காலை / மாலை சாப்பிடுமுன் இந்த தியானத்தை 10 நிமிடம் முதல் 15 நிமிடம் பயிற்சி செய்யுங்கள். ஒரு மாதத்தில் உயிர் ஆற்றல் உடல் முழுவதும் பரவுவதை உணரலாம். சுறுசுறுப்பாக இருக்கலாம். ரத்த அழுத்தம் வராது. மனம் சோர்வு நீங்கும். மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிட்டும்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    Next Story
    ×