என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    நேயர்களே கீழே குறிப்பிட்ட முத்திரை, யோகாசனம், தியானம் தினமும் பயின்று கழுத்து, முதுகு, நடு முதுகு, அடி முதுகு, இடுப்பு வலி வராமல் வாழுங்கள்.
    முதுகு வலி நீங்க அனுசாசன முத்திரை: விரிப்பில் நேராக அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் சுண்டு விரல் மோதிரவிரல், நடுவிரலை உள்ளங்கையில் மடக்கி கட்டை விரலை மோதிர விரலின் வெளிப்பகுதியில் படும்படி வைக்கவும். ஆள்காட்டி விரலை நேராக படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். இரு கைகளையும் தோல்பட்டை அருகில் வைக்கவும். ஆள்காட்டி விரல் வெளிப்புறமாக இருக்க வேண்டும். காலை மாலை சாப்பிடும் முன் இரண்டு வினாடிகள் இருக்கவும்.

    புஜங்காசனம்: விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். இரு கைகளையும் இதயம் பக்கத்தில் வைத்து மூச்சை இழுத்து கொண்டே மெதுவாக பின்புறமாக வளையவும். இடுப்பு வரை தரையில் இருக்க வேண்டும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையில் படுக்கவும். இரண்டு முறைகள் செய்யவும்.

    குறிப்பு: இந்த ஆசனம், முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், எலும்பு வீக்கம், வரிசை அகன்று உள்ளவர்கள் செய்ய வேண்டாம். தகுந்த யோகா வல்லுனரின் நேரடிப் பார்வையில் செய்யவும்.

    அர்த்த ஹாலாசனம்:விரிப்பில் நேராகப் படுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை பக்கவாட்டில் விரல்கள் தரையில் படும்படி வைக்கவும். கைகளை நன்கு அழுத்தி மூச்சை இழுத்துக்கொண்டே வலது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு காலை கீழே போடவும். பின் இடது காலை ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு காலை கீழே போடவும். இதேபோல் இரண்டு முறைகள் பயிற்சி செய்யவும்.

    அமரும் நிலை:எப்பொழுதும் நிமிர்ந்து உட்காரக் கற்றுக்கொள்ளுங்கள். சாப்பிடும் பொழுது, வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்கள் வீட்டு அலமாரியை 2 மணிநேரம் சுத்தப்படுத்தினால் போதும், அது 20 நிமிடங்களுக்கு நடை பயிற்சி செய்வதற்கு சமமாகும். இதனால் 200-300 கலோரிகள் வரை எரிக்கப்படும்.
    உடல் எடையை வீட்டிலேயே குறைக்க முடியும். சின்னச் சின்ன உடற்பயிற்சிகள், சில முயற்சிகளின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். அதுவும் 10 நிமிடங்களே போதுமானது. அத்தகைய வழிமுறைகள் இதோ....

    ஸ்கிப்பிங் பயிற்சியை 10 நிமிடங்களுக்கு செய்யுங்கள். குறிப்பாக 100-200 முறை ஸ்கிப்பிங் செய்யவேண்டும். பிறகு புஷ் அப் (10 முறை), ஸ்குவாட் (15), கிரஞ்சஸ் (25) போன்றவற்றை செய்ய வேண்டும். பின்பு 1-2 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்த மொத்த சுற்றையும், உங்கள் உடலைப் பொறுத்து, 2-3 முறைகள் தொடர்ந்து செய்யுங்கள்.

    சுறுசுறுப்பான நடை பழக்கத்தை அன்றாடம் 10-20 நிமிடங்களுக்கு செய்யலாம். முடிந்த வரை வேகமாக நடங்கள். அமெரிக்கன் காலேஜ் ஆப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் படி, 10 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாகநடந்தால் தோராயமாக 106 கலோரிகள் வரை குறைக்கலாம். இப்படி நடக்கையில், கைகளை நன்றாக மேலேயும், கீழேயும் அசையுங்கள்.

    ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து உடல் எடையை குறைக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு 400-600 கலோரிகள் வரை எரிக்கலாம்.

    வீட்டை சுத்தப்படுத்தி பொருட்களை ஒழுங்கு படுத்துவது, உடலை சற்று கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளவும், மனஅழுத்தத்தை நீக்கவும் உதவும். இதனுடன் சேர்த்து போனஸாக உடல் எடையும் குறையும். உங்கள் வீட்டு அலமாரியை 2 மணிநேரம் சுத்தப்படுத்தினால் போதும், அது 20 நிமிடங்களுக்கு நடை பயிற்சி செய்வதற்கு சமமாகும். இதனால் 200-300 கலோரிகள் வரை எரிக்கப்படும்.
    முத்திரை செய்யும் பொழுது கவனம், சிந்தனை வேறெங்கும் செல்லக் கூடாது. அதற்கு உங்கள் கவனத்தை விரலில் கொடுக்கும் அழுத்தத்தில் நிலை நிறுத்தவும்.
    சூன்ய முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடு விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். காலை மாலை இரண்டு வேலையும் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    முத்திரை செய்யும் பொழுது கவனம், சிந்தனை வேறெங்கும் செல்லக் கூடாது. அதற்கு உங்கள் கவனத்தை விரலில் கொடுக்கும் அழுத்தத்தில் நிலை நிறுத்தவும்.  நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

    முத்திரையில் இருக்கும் பொழுது உங்கள் மூச்சோட்டத்தை தியானிக்கலாம். முத்திரையை தனிமையில் அமர்ந்து செய்யுங்கள். பயிற்சியின் பொழுது பேசக்கூடாது. குறிப்பாக செல்போனை அணைத்துவிடுங்கள்.

    இது ஒரு தெய்வீகக் கலை. நம் உடம்பில் உள்ள அற்புத ஆற்றலை வளர்க்கும் கலை. நம் சித்தர்கள் பல வருடங்கள் தவம் செய்து உடலை ஆராய்ச்சி செய்து நரம்பு  மண்டலங்கள் சிறப்பாக இயங்கச் செய்ய அருளிய அருமையான கலை என்பதை உள்ளத்தில் நிறுத்தி நிதானமாக, பொறுமையாக, அன்புடன் பயிற்சி செய்யுங்கள்.

    முதலில் மனிதன் தன்னை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தன் உடலை, உடல் உறுப்புக்களை நேசிக்கும் அற்புதக்கலைதான் இந்த முத்திரையாகும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும் குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும்.
    இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். உடல் உள் உறுப்புக்களை சரியாக இயங்கச் செய்யும் யோகா பயிற்சிகளை நாம் எடுத்துக் கொண்டால் ராஜ உறுப்புக்கள் சரியாக இயங்கும்.
    அபான முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரல் நடு விரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். மற்ற இரண்டு விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

    அபான வாயு முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் முதலில் அபான முத்திரை செய்து நடுவிரல் மோதிரவிரல் அதன் மையத்தில் பெரு விரலை வைக்கவும். பின் ஆள்காட்டி விரலை கட்டைவிரல் அடியில் வைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரண்டு கைகளிலும் செய்யவும். காலை மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
    கீழ்கண்ட யோகா பயிற்சியை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
    விரிப்பில் நேராக அமரவும். இரு கால்களையும் நீட்டவும். வலது காலை மடக்கி இடது கால் தொடை மீது வைக்கவும். பின் இடது காலை மடித்து படத்தில் உள்ளது போல் கொண்டு வரவும். இந்த ஆசனத்தில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.இதேபோல் காலை மாற்றி இரண்டு நிமிடங்கள் இருக்கவும். ஒவ்வொரு காலிலும் இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வலது பக்க, இடது பக்க மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாக பாயும். மூளை செல்கள் நன்கு இயங்கும். மன அமைதி கிட்டும்.

    அதிகப்படியான இடுப்பு, முட்டி, கணுக்கால் வலி உள்ளவர்கள் தவிர்க்கலாம். அவ்வளவாக தரையில் உட்கார்ந்து பழக்கம் இல்லாதவர்கள், இந்த ஆசனத்தில் அமர்வது சிரமம். எனவே, அவர்களும் தவிர்ப்பது நல்லது. அல்லது, ஒருசில விநாடிகளுக்கு மட்டும் இருக்கலாம்.

    இது மன அமைதிக்கான ஆசனம். அதனால், சிரமமின்றி அமர வேண்டியது அவசியம். கால்கள் நன்கு இழுக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, வலியோடு செய்யக் கூடாது. சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு கால்களோடு மல்லுக்கட்டக் கூடாது.

    மேற்குறிப்பிட்ட பயிற்சியை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    யோகக் கலைமாமணி
    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com
    மனிதனுக்கு தினமும் இரவு நல்ல தூக்கம் இருந்தால் தான் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த தூக்கம் வருவதற்குரிய யோகா முத்திரை பயிற்சியை நாம் தெளிவாக காணப்போகின்றோம்.
    முத்திரைகள் செய்யும் பொழுது நமது பண்புகள் மாறிவிடும். அன்பு, கருணை மலரும். கோபம் நீங்கும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும். அதனால் நமக்கு நித்திரை கை கூடும். ஒரு மனிதனுடைய உடலில் பஞ்ச பூதங்களும் சமமான விகிதத்தில் இயங்கினால் ஆழ்ந்த நித்திரை கை கூடும். பஞ்ச பூதங்களை சமப்படுத்துவது முத்திரைகளாகும்.

    முத்திரைகளை காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்ய வேண்டும். ஒரு முத்திரையை இரண்டு நிமிடம் செய்தால் போதும். சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து பயிற்சி செய்யலாம். தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகுத்தண்டை நேராக வைத்து செய்யவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.

    தூக்கம் வருவதற்கு பல விதமான யோகமுத்திரை சிகிச்சையை அளிக்கின்றோம். நம்பிக்கையுடன் பயிலுங்கள். நிச்சயம் நல்ல தூக்கம் வரும். இந்த பயிற்சியினால் எந்த ஒரு பக்க விளைவும் வராது. மாறாக இந்த முத்திரைகளினால் மற்ற பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.

    பிராண முத்திரை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள், கூர்ந்து தியானிக்கவும். பின் மோதிரவிரல், சுண்டுவிரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற இருவிரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும் இரு கைகளிலும் செய்யவும். பின் கைகளை சாதாரணமாக வைக்கவும்.

    பிரமர முத்திரை: நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராகயிருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் ஆள்காட்டி விரலை மடக்கி நடுவிரல் நுனியை கட்டைவிரல் நுனியோடு அழுத்திப் பிடித்து மற்ற இரு விரல்களையும் நேராக படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    சின் முத்திரை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.

    அர்த்த பத்மாசனம்: விரிப்பில் நேராக அமரவும். இரு கால்களையும் நீட்டவும். வலது காலை மடக்கி இடது கால் தொடை மீது வைக்கவும். பின் இடது காலை மடித்து படத்தில் உள்ளது போல் கொண்டு வரவும். இந்த ஆசனத்தில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.இதேபோல் காலை மாற்றி இரண்டு நிமிடங்கள் இருக்கவும். ஒவ்வொரு காலிலும் இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வலது பக்க, இடது பக்க மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாக பாயும். மூளை செல்கள் நன்கு இயங்கும். மன அமைதி கிட்டும்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சியை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். இரவு படுக்கும் பொழுது மட்டும் படுப்பதற்கு முன்பாக பிராண முத்திரையை இரண்டு நிமிடம் செய்துவிட்டு படுக்கவும். 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். தூக்கம் வரும்.

    யோகக் கலைமாமணி
    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com
    பொறுமையாக தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் ஆன்மாவுடன் இணைந்து ஆத்ம சக்தியை உணர்ந்து வாழ வழிவகை செய்கின்றது.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். வாயை விசில் மாதிரி வைத்து வாய் வழியாக (உதட்டை குவித்து) மூச்சை மெதுவாக இழுக்கவும். வாயை மூடி இரு மூக்கு துவாரம் வழியாக மூச்சை மெதுவாக வெளியிடவும். இது போல் பத்து முறைகள் பொறுமையாக பயிற்சி செய்யவும். வாய்வழியாக மூச்சை இழுக்கும் பொழுது அடிவயிறு லேசாக வெளிவர வேண்டும். மூக்கு வழியாக மூச்சை வெளியிடும் பொழுது அடிவயிறு லேசாக உள்ளே செல்ல வேண்டும். இந்த உணர்வுடன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்: உடலில் உள்ள அதிக உஷ்ணம் நீங்கும். வயிற்றுப்புண்கள், அல்சர், வாய் புண்கள், நாக்கு புண்கள் வராது. தலைவலி வராது. மூளை சூடு தணியும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். ரத்த அழுத்தம் வராமல் வாழலாம். நரம்பு மண்டலம் நன்கு இயங்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.

    பொறுமையாக தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் ஆன்மாவுடன் இணைந்து ஆத்ம சக்தியை உணர்ந்து வாழ வழிவகை செய்கின்றது.

    உணவில் ஒழுக்கம், உடலுக்குரிய ஓய்வு, எண்ணங்களை சரி செய்து விழிப்புடன் நல்ல எண்ணங்களை மட்டும் பின்பற்றி வாழ்தல், முத்திரை, தியானம், மூச்சு பயிற்சி செய்யுங்கள். தனிமனித ஒழுக்கத்தை வாழ்வில் கடைபிடியுங்கள், வாழ்க்கை இன்பமாகவே அமையும், துன்பமின்றி வாழலாம்.

    நமது உடல், மன இன்ப துன்பத்திற்கு நாமே முழு காரணமாவோம். எண்ணம், சொல், செயலால் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தால், நன்மையை செய்வதாக இருந்தால் நமக்கு நன்மையே நடக்கும். வாழ்வில் இன்பமே இருக்கும்.

    யோகக் கலைமாமணி
    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com
    இந்த முத்திரை செய்து வந்தால் பெண்களுக்கு கருப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும், மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் கண்களை திறந்து கட்டை விரலை உள்ளங்கையில் மடக்கி அதன்மேல் ஆள் காட்டி விரல், நடு விரலை மடக்கி தொட்டுக்கொண்டிருக்கட்டும். மோதிரவிரல், சுண்டு விரலும் நீட்டப்பட்டு நுனிகளில் தொட்டுக்கொண்டிருக்கட்டும். படத்தை பார்க்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்:

    ஆழந்த தூக்கம் கிடைக்கும், சிறுநீரகம் சிறப்பாக சக்தி பெற்று நன்கு இயங்கும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் செய்தால் அக்குறை நீங்கும். இதயம், நுரையீரலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். பெண்களுக்கு கருப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும், மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.

    யோகக் கலைமாமணி
    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com
    “என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்“ என்பதற்கேற்ப நமது தலையில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும். முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் பிராண சக்தி பெற்று இயங்கும்.
    நிமிர்ந்து விரிப்பில் அமரவும். முதுகு எலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள்செய்யவும். பின் உங்கள் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றையொன்று தொடும்படி வைக்கவும். மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் தொடுமாறு வைக்கவும். சுண்டு விரல் நேராக இருக்கட்டும். படத்தைப் பார்க்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    பலன்கள்:“என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்“ என்பதற்கேற்ப நமது தலையில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும். முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் பிராண சக்தி பெற்று இயங்கும். இதனால் மூளை பகுதியில் உள்ள டென்ஷன் நீங்கும்.

    தலைவலி நீங்கும். உடல் சூடு சமமாகும். அடிக்கடி தலைவலி வருபவர்கள் இந்த முத்திரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். கண் வலி வராது. கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். சைனஸ், மூக்கடைப்பு, சலி தொந்தரவு வராது. சுவாச உறுப்புகள் நன்றாக இயங்கும்.

    முக பொலிவு உண்டாகும். முகத்தசைகள் சுருக்கமில்லாமல் பளபளப்புடன் பிராண ஆற்றல் பெற்று இயங்கும். கழுத்துவலி வராமல் பாதுகாக்கும். சுறுசுறுப்பும், உற்சாகமும் கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். தேவையற்ற எண்ணங்கள் நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழலாம்.

    யோகக் கலைமாமணி
    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com
    எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி.
    உடல் எடையைக் குறைப்பதற்கு, உடலுக்குத் தேவையான அளவு கலோரியை மட்டும் எடுத்துக்கொள்வது, அதிகப்படியாக சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை பயன்படுத்துவது என இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவே, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.

    உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலில் செலவழிக்கப்பட்டது போக, மீதி உடலில் அப்படியே தங்கிவிடும். இவ்வாறு தங்கும் அதிகப்படியான ஆற்றல் கொழுப்பாக மாறும்.

    எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி.

    எந்த வகையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும், உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தில் மாற்றங்கள் நிகழும். இவை நம் உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைப்பதற்கு உதவும். இதன் மூலம் உடல் எடை வெகுவாக குறையும்.

    உடற்பயிற்சி என்றவுடன் கடுமையாக உடலை வருத்தி பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது ஏரோபிக்ஸ், ஜும்பா, உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள், ஆரம்ப கட்ட தசைப்பிடிப்பு தளர்வு பயிற்சிகள், இதயத்தை பலமாக்கும் பயிற்சிகள், ஜாக்கிங், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அல்லது மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். இது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கணிசமான அளவு குறைக்கும்.

    தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் சேமிக்கப்படும் கலோரிகள் அதிக அளவில் எரிக்கப்படுகிறது. இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். உடல் எடையைக் குறைக்கவும், கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் இயலும். தவிர, இதயம் சார்ந்த நோய்களும், பிரச்சினைகளும் ஏற்படுவதை தடுக்கும். உடலின் சீரான ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் உள் உறுப்புகள் அனைத்துக்கும் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி வகுக்கும்.

    இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். தடைகளற்ற சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கும். உடலையும், மனதையும் இளமையாக வைத்திருக்க உதவும்.

    உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் வேதி மாற்றங்கள் உடல் மற்றும் மனநலனில் நன்மை பயக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் மூலம் உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் அழுத்தம், சோர்வு நீங்கி புத்துணர்வு பெற செய்யும். சிந்தனைத் திறனை மேம்படுத்தி, எளிதில் சரியான முடிவெடுக்கும் தன்மையை ஊக்குவிக்கும்.

    ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உணர வேண்டும். அதற்கு இந்த உடலுக்குரிய மருந்து யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி உள்ளத்திற்குரிய மருந்து தியானம்.
    நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கண்ணை மூடி உங்கள் உடம்பில் இயங்கும் மூச்சோட்டத்தை அமைதியாக கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவது, மூச்சு வெளியே வருவது, இதனை மட்டும் கூர்ந்து கவனியுங்கள். இது தியானமாக மலரும். எண்ணங்கள் ஒடுங்கும். உங்கள் உணர்வு அன்னமய கோசத்தில் இருந்து, பிராணமய கோசம், பின் மனோன்மய கோசம், பின் புத்திமய கோசம் சென்று கடைசியில் ஆனந்தமய கோசமான உயிரில் லயித்து, அந்த உயிர் சக்தி உடல் முழுக்க பரவும்.

    ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உணர வேண்டும். அதற்கு இந்த உடலுக்குரிய மருந்து யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி உள்ளத்திற்குரிய மருந்து தியானம்.

    இந்த பயிற்சி செய்தால் நாம் சிறப்பாக, ஆரோக்கியமாக, ஆத்மானந்தமாக வாழலாம். நிறைய மனிதர்கள் தன்னை உணராமல் தனது ஆத்மசக்தியை உணராமல் அவதிப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தனது சக்தியை உயிர்சக்தியை உணருங்கள்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    63699 40440
    யோகப் பயிற்சிகள் தினமும் பயின்று நான்கு அடுக்குகளையும் சுத்தப்படுத்தினால் நமது உணர்வு விரிந்து ஐந்தாவது அடுக்கிற்கு சென்று ஆத்ம சக்தியை விரிவடைய செய்யும்.
    புத்திமய கோசம் நன்கு இயங்க ஹாக்கினி முத்திரை பயிற்சி செய்ய வேண்டும். நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் இரு கை விரல்கள் நுனியையும் இணைத்து ஒரு பந்து போல் படத்தில் உள்ளபடி செய்யவும். எல்லா விரல் நுனிகளிலும் சிறிய அழுத்தம் கொடுக்கவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    இந்த முத்திரையால் பிட்டியூட்டரி, பீனீயல் சுரப்பிகள் நன்கு இயங்கும். மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் பாயும். நமது எண்ணம், சொல், செயல், நமக்கும் நன்மை விளைவிக்கும். மற்றவர்களுக்கும் நன்மை தரும்படி அமையும்.

    இந்த சிறிய பயிற்சிகளை தினமும் காலை மாலை இரண்டு வேளைகளும் சாப்பிடும்முன் ஒரு மண்டலம் (48 ) நாட்கள் செய்யுங்கள். ஒவ்வொரு அடுக்கும் மிகச் சிறப்பாக இயங்கும். இதன் காரணமாக நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆனந்தமய கோசம் - உயிர் ஆற்றல் மிகச் சிறப்பாக இயங்கும்.
    ஒரு மனிதனின் உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள உயிர் சக்திதான் “நான்” அந்த உயிர் ஆற்றலை மெய்யுணர்வு என்கிறோம். இது அழியாதது. அற்புத சக்தி வாய்ந்தது. இந்த உடல் மன இயக்கத்திற்கு ஆதாரமான சக்தி இதுவே. மற்ற உடல் உள்ளுறுப்புகளில் என்ன குறைபாடுகள் வந்தாலும், அதனை சரி செய்யும் ஆற்றல் இந்த உயிர் சக்திக்கு உண்டு.

    மேற்குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் தினமும் பயின்று நான்கு அடுக்குகளையும் சுத்தப்படுத்தினால் நமது உணர்வு விரிந்து ஐந்தாவது அடுக்கிற்கு சென்று ஆத்ம சக்தியை விரிவடைய செய்யும். உயிர் ஆற்றல் வெளிப்படும். புத்தி கூர்மையடையும். மனம் தெளிவடையும். உடல் ஆரோக்கியம், உள் அமைதி கிட்டும். வளமாக நலமாக வாழலாம்.
    ×