
பொதுவாக நிறைய நபர்களுக்கு கால் வலி, உள்ளங்கால் வலி, பாத வீக்கம், கால் ஆணி, விரல்கள் நடுவில் புண் முதலியவை வரும். இவை வராமல் தடுக்கும் எளிய யோகா பயிற்சியை தினமும் செய்தால் வளமாக வாழலாம்.
சுமண முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கவும். கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். பின் கைவிரல்களை அப்படியே மாற்றி இரு கைகளையும் சேர்க்கவும். கட்டைவிரல் தவிர மற்ற நான்கு விரல்கள் ஒன்றையன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். படத்தைப் பார்க்கவும். இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் இருக்கவும். காலை/மாலை இருவேளைகள் பயிற்சி செய்யவும்.
எளிய நரம்பு பயிற்சி: விரிப்பில் நேராக இரு கால்களையும் நீட்டி அமரவும். இரு கைகளை பக்கவாட்டில் இடுப்புப் பக்கத்தில் வைக்கவும். உள்ளங்கை தரையில் இருக்கட்டும்.
இரு கால் விரல்களை நன்கு முன்னாள் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் கால் விரல்களை பின்னால் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும், இதே போல் இரண்டு முறைகள் செய்யவும்.
பின் ஒரு கால் பக்கவாட்டில் படத்தில் உள்ளது போல் வலப்பக்கம் வளைக்கவும். வலது காலை தொய்வாக போட்டு இடது காலை இழுத்து விடவும். பத்து வினாடிகள் இருக்கவும். அதேபோல் இடப்பக்கம் செய்யவும். பின் சுழற்சியாக செய்யவும். படத்தை பார்க்கவும்.