என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற படி பொம்மைகளை வாங்கி தர வேண்டும். அந்த வகையில் 6 வயது வரை எந்த மாதிரியான பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். குழந்தைகளின் வாழ்வில் சில காலத்துக்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். வயதுக்கு ஏற்ற படி நிறைய பொம்மைகள் கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.

    0-6 மாத குழந்தைகள்

    குழந்தைகள் தங்களிடம் நெருங்கும் நபர்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கண்களைத்தான் அதிகமாக குழந்தைகள் பார்ப்பார்கள். முகம், கண், கைகள் அசைவு, பளிச் நிற உடைகள் ஆகியவற்றை பார்ப்பார்கள். தன் கை, கால்களால் என்ன செய்ய முடியுமோ அதைக் கவனித்து கொண்டிருப்பர். தலையைத் தூக்குவது, சத்தம் எழுப்புவது, வாயில் கை வைப்பது இதைத்தான் அதிகம் செய்வார்கள். கைகளில் பிடித்துக்கொள்ள ஏற்றதாக இருப்பதை, குழந்தைகள் வாயில் வைத்து சப்புவார்கள் என்பதால் பெரிய பொம்மைகளாக வாங்கி கொடுக்கலாம். சத்தம் வரக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம். பெரிய ரிங், ஸ்குவீஸ் டாய்ஸ், டீத்திங் டாய்ஸ், சாஃப்ட் டால்ஸ், டெக்ஸ்சர் பால்ஸ், வினைல், போர்ட் புக்ஸ் போன்றவை வாங்கி கொடுக்கலாம். ரைம்ஸ் உள்ள சிடி போடுவது, சின்ன சின்ன மியூசிக் சிடி, தூங்க வைக்கின்ற தாலாட்டு பாடல்கள் போன்றவை வாங்கி ஒலிக்க செய்யலாம். சிறிய பொருட்களை வாங்கி தர கூடாது. வாயில் வைத்து விழுங்கும் அபாயம் உள்ளது.

    7-12 மாத குழந்தைகள்

    இந்தப் பருவத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர கூடியவர்கள். உட்காருவது, புரள்வது, தவழ்வது, நிற்பது, நடப்பது, கத்துவது, அழுவது, இழுப்பது போன்றவற்றை செய்வார்கள். அவர்களின் பெயர் அவர்களுக்கு தெரியும். பொதுவாக ஓரளவு வார்த்தைகளை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். தண்ணீர் டாய்ஸ், சக்கரம் உள்ள மரக்கட்டை பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பப்பட்ஸ், பெரிய பந்து, பெரிய சாஃப்ட் பிளாக்ஸ், கட்டையால் ஆன சதுரங்கள், தவழ்ந்து வரும் பொம்மைகள், எடை இல்லாத பொம்மைகள் வாங்கி கொடுக்கலாம். முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம். வாக்கர் தவிர்க்கவும்.

    1 வயது குழந்தைகள்

    போர்ட் புக்ஸ் - சின்ன, எளிமையான படங்கள் இருப்பது. நிறைய நிஜ படங்கள் இருக்கும் புத்தகங்கள் வாங்கி தரலாம். வாஷ்ஷபிள் மார்க்கர்ஸ், கிரெயான்ஸ், பெரிய பேப்பர், நச்சுகள் இல்லாத கலர்ஸ் வாங்கி தரலாம். பொம்மை ஃபோன், பெண், ஆண், குழந்தை பொம்மைகள், குழந்தைகளுக்கான பர்ஸ், ஸ்கார்ஃப், பொம்மை பேக், விலங்கு பொம்மைகள், பொம்மை வண்டிகள் வாங்கி கொடுக்கலாம். மரகட்டை பிளாக்ஸ், கார்ட் போர்ட் ஆகியவை வாங்கி தரலாம். ஓவிய புத்தகம், கலர் பெயின்டிங்ஸ் கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு 6 வயது வரை என்னென்ன பொம்மைகள் வாங்கி தரலாம்

    2 வயது குழந்தைகள்

    மொழியை வேகமாக கற்கும் பருவத்தில் இருப்பார்கள். உயரத்திலிருந்து குதிப்பார்கள், எதிலாவது ஏறுவார்கள், எதையாவது பிடித்துக்கொண்டு தொங்குவார்கள், முரட்டுத்தனமாக விளையாடவும் செய்வார்கள். கைகள், தன் விரல்களால் சின்ன சின்ன பொருட்களைகூட அழகாக எடுத்து விளையாடுவார்கள். பிளாக்ஸ், மர பொம்மைகள் ஏற்றது. பிளாக் பில்டிங் - நிறைய தீம்களில் வரும். வீடு கட்டுதல், ரயில் வண்டி கட்டுதல், கிச்சன் செட், நாற்காலி போன்ற மூளைக்கு வேலை தரும் பொம்மைகள் நல்லது. பொம்மைகளுக்கு உடை அணிவது, அலங்கரிப்பது, மண், தண்ணீரில் விளையாட அதற்கு ஏற்ற பொம்மைகளும் கிடைக்கின்றன. சாக், போர்ட், பெரிய கிரெயான், டிராயிங் புக்ஸ் கொடுக்கலாம். படங்கள் நிறைய இருக்க கூடிய புத்தகங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மியூசிக், ரைம்ஸ் நிறைந்த சிடி, டிவிடி கொடுக்கலாம். இந்த வயதில் மூன்று சக்கர வண்டி வேண்டாம்.

    3-6 வயது குழந்தைகள்

    பள்ளிக்கு செல்லும் வயது இது. ப்ரீகேஜி, எல்.கே.ஜி சேரும் வயது. நிறைய கேள்விகளை கேட்பார்கள். நண்பர்களுடன் விளையாட அதிகம் விரும்புவார்கள். 12 -20 பீஸ் உள்ள பசல்ஸ் கொடுத்து விளையாட வைக்கலாம். இந்த வயதுக்கான பெரிய பொம்மைகள், பில்டிங் பிளாக்ஸ் வாங்கி கொடுக்கலாம். களி மண் கொடுத்து உருவங்கள் செய்ய சொல்லலாம். வரைதல், கிறுக்குவது மிகவும் பிடிக்கும். கீபோர்ட் வாசிப்பது, சத்தம் வர கூடிய கருவிகள் வாங்கி தரலாம். வயதுகேற்ற படங்கள் உள்ள புத்தகங்கள் வாங்கி தரலாம். மூன்று சக்கர வண்டி வாங்கி தரலாம். 3 வயது வரை சின்ன பொம்மைகள் தவிர்க்கலாம். கூர்மையான பொம்மைகள், அதிக எடையுள்ள பொம்மைகள் தவிர்க்கலாம். வாக்கர் வாங்கி தர வேண்டாம். குழந்தைகளின் இயல்பான சில பருவ காலத்தையும், மைல்கற்களையும் மாற்றி விடும். முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம்.
    ஸ்மார்ட் போன் பழக்கத்தால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை என்பதை அறிவது முக்கியமாகும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    குழந்தையின் பேச்சு ஆற்றல் விருத்தியடையும் காலத்தில் அவர்கள் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் அவர்களின் பேச்சு ஆற்றல் விருத்தியடைவது தாமதம் அடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சொல்லாற்றல் குறைவதுடன் அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது குறைந்துவிடும்

    அதே போல அவர்களது எழுத்து ஆற்றலும் பாதிக்கப்படும். விரல் நுனிகளால் போனைத் தட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்களது விரல்களை வளைத்து எழுத்துக்களை உறுப்பாக எழுதுவதில் ஆர்வம் விட்டுப் போய் எழுதும் ஆற்றல் பாதிக்கப்படும்.

    குழந்தைகளுக்கு தூக்கம் பெரியவர்களைவிட அதிக நேரம் தேவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஸ்மார்ட் போனில் ஆர்வம் கொண்டு அதில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறதாம். அண்மைய ஆய்வு முடிவுகளின்படி குழந்தை ஒரு மணிநேரம் ஸ்மார்ட் போனில் செலவிட்டால் 15 நிமிடங்கள் தூக்கம் குறைகிறதாம்.

    இவற்றை விட, ஸ்மார்ட் போனில் பார்க்கும் விடயங்களால் உடலியல் மற்றும் உளவியில் தாக்கங்களும் குழந்தைக்கு ஏற்படுகிறது.

    ஸ்மார்ட் போனில் இருந்து நீலக் கதிர் வீச்சு ஏற்படுகிறது. நீலக் கதிர்களால் உடற் கடிகார இயங்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது தூங்கும் நேரம் விழித்தெழும் நேரம் போன்ற எமது நாளாந்த செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அந்தக் கதிர்கள் கண்களினுள் ஆழப் புகுந்து நுண்பார்வைக்கு முக்கியமான மக்கியூலா பகுதியை பாதிக்கும். இது குணப்படுத்த முடியாத பாதிப்பு ஆகும்.

    கிருமித் தொற்று நோய்கள் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஏனெனில் 90 சதவிகிதத்திற்கு மேலான போன்களில் கிருமி பரவியிருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

    குழந்தையை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு நீங்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவெனில் நீங்கள் முன்மாதிரியாக இருப்பதுதான். நீங்கள் ஸ்மார்ட் போன் பாவனையை கட்டுப்படுத்துவது அவசியம்.

    முக்கியமாக குழந்தையின் கண்பார்வை படும் இடத்திலிருந்து பாவிக்க வேண்டாம். அதில் அழைப்பு வந்தால் அதற்கு மறுமொழி கொடுத்துவிட்டு உடனடியாகவே அதை குழந்தையின் கைபடாத இடத்தில் வைத்து விடுங்கள்.

    நீங்கள் ஸ்மார்ட் போனில் நோண்டிக் கொண்டிருப்பது குழுந்தையின் கவனத்தை ஈர்த்து, அதன் ஆவலைத் தூண்டி குழந்தையையும் அதில் கைபோட வைக்கும். இந்த விடயத்தில் பெற்றோர் முன்மாதிரியாக இருப்பது அவசியம். அத்துடன் பெற்றோர் ஸ்மார்ட் போனில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதானது குழந்தை தான் அலட்சியப்படுத்தப் படுவதான உணர்வைக் கொடுத்து அதை ஏக்கமடையச் செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குழந்தையுடன் பேசுவது, அதற்கு விருப்பமான கதைகளைக் கூறுவது, அதனுடன் சேர்ந்து விளையாடுவது, அதன் வயதிற்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள்.

    குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதும், அதன் வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையும் உங்கள் குழந்தையின் கவனத்தை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு உதவும்.

    பொதுவாக இரண்டு வயதுவரை குழந்தைகள் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பழகிப் புரிந்து கொள்ள வேண்டிய காலம். பெற்றோருடனும் மற்றவர்களுடனும் ஊடாட வேண்டிய காலம். ஸ்மார்ட் போன் ஆகவே ஆகாது. மூன்று வயதில் அவர்கள் ஸ்மார்ட் போன் ஊடாக சிலவற்றைக் கற்கக் கூடிய காலம். கண்காணப்போடு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஸ்மார்ட் போனைக் கொடுக்கலாம்.
    தற்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான டயாபர்களில் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. அவற்றை அணிவது குழந்தையின் சருமத்திற்கு நல்லதல்ல.
    குழந்தைகளுக்கு துணி டயாபர்களை பயன்படுத்துவது நல்லது. குழந்தைக்கு அதனை அணிவது மென்மையாக இருக்கும் என்பதோடு நீண்ட நாட்கள் பயன்படுத்தவும் முடியும். அதனால் விலையும் குறைவாக இருக்கும். ஆனால் அத்தகைய டயாபர்கள் இந்தியாவில் அதிக அளவில் புழக்கத்தில் இல்லாத நிலையே இருக்கிறது.

    தற்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான டயாபர்களில் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. அவற்றை அணிவது குழந்தையின் சருமத்திற்கு நல்லதல்ல. அவை குப்பைகளாக குவிந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. ஒரு டயாபர் மக்குவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்படுகிறது. துணியால் தயாரிக்கப்படும் டயாபர்கள் சருமத்தை உலர்வாக வைத்திருக்கும் விதத்திலான துணிகளால் உருவாக்கப்படுகின்றன.

    குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் மென்மையாக இருக்கும். சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும். இந்த வகை டயாபரின் விலை அதிகமாக இருப்பதாக தோன்றினாலும் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும் என்பதால் செலவு குறையும். அவற்றை எளிதாக துவைத்து உலரவைத்து பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த இத்தகைய டயாபர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.

    பிறந்த குழந்தை வளர்ந்து சுயமாகவே கழிவறைக்கு செல்வதற்கு பழகும் வரை சுமார் 4 ஆயிரம் டயாபர்கள் தேவைப்படலாம். அதற்காக ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகக்கூடும். துணியால் தயாரிக்கப்படும் டயாபர்களை பயன்படுத்தினால் நான்கில் ஒரு பங்குதான் செலவாகும்.
    ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம்.
    குழந்தை நடக்க ஆரம்பித்ததுமே ஷூக்களை மாட்டிவிட்டு அழகு பார்க்கிறோம். கீச்… கீச்… என்று அதிலிருந்து ஒலியை கேட்டு குழந்தைகளும் குதூகலிக்கிறார்கள். ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம்.

    ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

    ‘வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.

    அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.
    அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது.

    சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
    தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சமூக சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாக மாறி வருகிறது. பெற்றோர்கள், குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளோடு செலவழித்து அவர்களது நலனுக்கு என்ன செய்ய முடியும் என்பதை பற்றி ய சிந்தனை தொகுப்பே இது.
    தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சமூக சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாக மாறி வருகிறது. சமூக ஊடகங்கள், வெளியுலத் தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள் என பல காரணிகள் குழந்தைகளின் குணநலனை கட்டமைக்கின்றன. பெற்றோர்கள், குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளோடு செலவழித்து அவர்களது நலனுக்கு என்ன செய்ய முடியும் என்பதை பற்றி ய சிந்தனை தொகுப்பே இது.

    குழந்தைக்கு முதலில் அன்பாக பேச கற்றுத்தர வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர் அன்பாக பேச வேண்டும். பெற்றோர் வழியில் தான் குழந்தைகளும் நடப்பார்கள் என்பது பொதுவான உண்மையாகும்.

    எப்போதும் குழந்தைகளுக்கு நல்ல சொற்களை பேச கற்று கொடுங்கள். குழந்தைகள் இருக்கும் போது வசவுச்சொற்களை பயன்படுத்த வேண்டாம். பள்ளியில் அல்லது விளையாட செல்லும் இடங்களில் குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்தோ அல்லது சுற்று வட்டார நபர்கள் மூலமாகவோ தவறான சொற்களை கற்று கொள்ளலாம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என எடுத்துசொன்னால் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

    அனைவரும் வேலையை விரைவாக முடித்து விட்டு வீடு திரும்பவும் தங்கள் தேவைகளை பார்த்து கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். வீட்டிலும் அப்படி இல்லாமல் பெரியோர்களையும் உறவினர்களையும், நண்பர்களையும் மதித்து நடப்பதன முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் வலியுறுத்த வேண்டும். கொடுத்தால் திருப்பி கிடைப்பதில் மரியாதையும் ஒன்று என்பதை அவர்கள் மனதில் பதிவு செய்ய வேண்டும்.

    இன்று பல குழந்தைகள் உறவினர்களை பிரிந்து தாய், தந்தையோடு அடுக்குமாடி குடியிருப்பில் யாரிடமும் பேசாமல் வாழ்கின்றனர். பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தை தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால் பல விஷயங்களில் எப்படி நடந்த கொள்வது எப்படி சூழலை சமாளிப்பத என்று தெரியாமல் பயம் கொள்கிறார்கள். கவமாக இருக்க வேண்டுமே தவிர பயந்து போய் இருக்க வேண்டியதில்லை என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

    குழந்தைகள் உற்சாகத்தோடு இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமை நேர்மாறாக உள்ளது. காரணம் அவர்கள் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை தான். அவர்கள் சுறுசுறுப்பாக பிற குழந்தைகளோடு கூடி விளையாடும் சூழலை உருவாக்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தையோடு விளையாடி சிரித்து மகிழ வேண்டும். நிறைய வெளி இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

    விரும்பிய பொருளோ அல்லது விஷயமோ பெற்றோர், உறவினர்கள, நண்பர்கள் அல்லது பிற மனிதர்கள் மூலம் கிடைக்க நேர்ந்தால் உடனே அவர்களுக்கு நன்றி சொல்லும் பண்பை கற்றுகொடுங்கள். அது நன்றி உணர்வை அதிகரித்து அவர்களை பண்பாளராக வளரச்செய்யும்.
    குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம்.
    குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். வாயாடி.. சண்டைக்காரன்.. திருடன்.. பொய் பேசுகிறவன்.. பிடிவாதக்காரன்.. சுயநலவாதி.. என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி அதிகமாக பயன்படுத்தக்கூடியவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட `வார்த்தை முத்திரை' குத்தப்படுவது, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை கலந்த தவறாகும். அது அவர்களை காயப்படுத்திவிடும்.

    குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.

    5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.

    `அய்யோ.. அம்மா இங்கே ஓடி வா..' என்று சிறுவன் அலறியபடி அழைப்பான். எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு அம்மா ஓடிவந்து பார்த்தால், அங்கே ஒரே ஒரு கரப்பான் பூச்சி நின்றுகொண்டிருக்கும். `இதற்கா இவ்வளவு பயந்தாய்? நீ சரியான பயந்தாங்கொள்ளி' என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.

    தனது குழந்தையை பயந்தாங்கொள்ளி என்று அம்மா சொல்லிவிட்டு அதோடு மறந்துவிடுவார். அவரைப் பொறுத்தவரையில் அந்த பிரச்சினை அப்போதே தீர்த்துவிடும். ஆனால் பயந்த அந்த குழந்தையிடம் அப்போதுதான் பிரச்சினையே தொடங்கும்.

    எதிர்காலத்தில் எது தன்னை பயமுறுத்தினாலும், அம்மா ஏற்கனவே சொன்ன `பயந்தாங்கொள்ளி' என்ற வார்த்தைதான் உடனே அவனது நினைவுக்கு வரும். அதனால் தாயிடம் மட்டுமின்றி யாரிடமும் தனது பயத்தை வெளிப்படுத்தாமல், பயத்தை தனக்குள்ளே புதைத்துக்கொள்வதால் எதிர்காலத்திலும் பயம் அவனிடமிருந்து விலகாமல் அப்படியே இருந்துவிடும்.

    பயம் கொண்ட குழந்தைகளை அதை கூறி கிண்டல் அடிப்பதோ, கேலி செய்வதோ அவர்களை தைரியமானவர்களாக மாற்றாது. மாறாக தங்களை பயந்தாங்கொள்ளி, தைரியமற்றவர்கள் என்று முடிவுசெய்து தங்களை தாங்களே மன அழுத்தத்திற்குள்ளாக்கிக் கொள்வார்கள்.

    குழந்தைகளுக்கு பயம் எப்படி எல்லாம் உருவாகுகிறது- ஏன் உருவாகிறது என்பதை கண்டறிந்து, அதன் உண்மைத்தன்மையை விளக்கி, அந்த பயத்தில் இருந்து அகல வழிகாட்டவேண்டும். சைக்கிள் மிதித்தல், ஸ்கேட்டிங் செய்தல் போன்றவைகளில் ஈடுபட குழந்தைகள் ஆசைப்பட்டால் பயமுறுத்தி அவைகளில் ஈடுபடக்கூடாது என்று சொல்லக்கூடாது. எப்போதுமே குழந்தைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டவேண்டும்.
    வீட்டு பெரியவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்லும் கருத்துகளையும் நியதியையும் ஏற்றுகொள்ள குழந்தைகளை ஆரம்ப காலத்திலே பழக்கப்படுத்த வேண்டும்.
    குழந்தைகளின் சண்டைக்கு பின் பெரிய, முக்கிய காரணங்கள் இல்லாவிட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய விஷயம். தான் போடும் சண்டைகளிலும் தனக்கு தேவையான விஷயங்களை அடம் பிடித்து வாங்குவதிலோ வெறுப்பு, வஞ்சம் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கும். குழந்தைகளின் சண்டை, அடம் தற்காலிகமானதுதான். ஆனால், அதை நாம் கவனிக்க வேண்டியது முக்கியம். குழந்தைகளுக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம். அதுபோல் ‘அது வேண்டும் இது வேண்டும்’ எனச் சொல்லி அடம் பிடிப்பதும் சகஜம்.
    ஏன் குழந்தைகளுக்குள் சண்டை வருகிறது?

    அடமும் சண்டையும் போட்டும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

    குழந்தையின் இந்தக் குணங்களுக்கு பின்னால் காரணங்கள் இருக்கும். அதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள். குழந்தைகளை அடிப்பதோ மனம் நோகும்படி திட்டுவதோ கூடாது. குழந்தைகளை தனியாக கூட்டி சென்று பக்குவமாக மென்மையாக பேசி புரிய வைப்பது அவசியம். குழந்தைகளை கவனிப்பில்லாமல் அப்படியே விட்டுவிடுவது பெரும் தவறு. குழந்தைகளுக்குள் சண்டை வரும்போது பெரியவர்கள் சமாதானப்படுத்த வேண்டும்.

    வீட்டு பெரியவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்லும் கருத்துகளையும் நியதியையும் ஏற்றுகொள்ள குழந்தைகளை ஆரம்ப காலத்திலே பழக்கப்படுத்த வேண்டும். சண்டை போட்டாலும் அடம் பிடித்தால் நல்ல குழந்தைக்கு அழகல்ல எனச் சொல்லி புரிய வைக்கலாம். சண்டை போட்டாலும் அடம் பிடித்தாலும் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சும். ஆனால், விட்டுக்கொடுத்தோ சமூக நட்புடன் நடந்துகொண்டாலோ அலாதியான இன்பம் கிடைக்கும் எனச் சொல்லுங்கள். கதைகள் மூலம் குழந்தைக்கு நற்பண்புகளை வளர்ப்பது எளிது. அடம் பிடிப்பதைக் கண்டிக்கலாம்.

    ஆனால், அதற்கு அவர்களை அடிக்க கூடாது. அடிக்க அடிக்க சண்டியாகிவிடுவர். எப்போதும் பெரியவர்கள் அடம் பிடிக்கும் குழந்தையிடமும் சண்டையிடும் குழந்தையிடமும் அவர்களின் முழுமையான பேச்சை கேட்ட பின் பதில் சொல்லலாம். பெற்றோர் இவர்களுக்கு பதில் சொல்லும் முன் குழந்தைகளின் உணர்வையும் புரிந்துகொள்ள வேண்டும்.

    அடமும் சண்டையும் போடும் குழந்தைகள்

    குழந்தைகளின் பேச்சை கேட்ட பின்பு, பெரியவர்கள் ஒருதலை பட்சமாக தீர்ப்பளிக்க கூடாது. இதனால் வெறுப்பும் தோல்வி மனப்பான்மையும் வந்துவிடும். இது வேண்டும் என அடம் பிடித்து சண்டை போட்டாலோ வேறு காரணங்களுக்காக சண்டை போட்டாலோ பெற்றோர் இரண்டு முடிவுகளைச் சொல்லி அதில் ஒன்றை குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் சமாதானம் அடைவார்கள்.

    அதே சமயம் தன்னை கவனிக்கவில்லை தனக்கு சாதகமாக எதுவும் செய்யவில்லை போன்ற எண்ணங்கள் எழாமல் தடுக்க முடியும். ஒருவரை அடிப்பது, அடித்து காயப்படுத்துவது குற்றம் என்று குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். மனதிலும் உடலிலும் காயங்கள் ஏற்படாதவாறு நடந்துகொள்ள குழந்தைகளை பழக்க வேண்டும். பெரியோர், சிறியோர் என அனைவரிடமும் அன்பும் அக்கறையும் காட்ட குழந்தைக்கு கற்றுத் தர வேண்டும். உணவு ஊட்டுவது போல குளிப்பாட்டுவது போல அன்றாடம் நீதி கதைகளை சொல்லி தருவது நல்லது.

    அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் தற்போதைக்கு இந்த விஷயம் கிடைக்காது. ஏனெனில் இந்தக் காரணத்தால் என எடுத்து சொல்லுங்கள். அடம் பிடித்தார்கள் என்றால் உன்னிடம் இவ்வளவு பொம்மைகள் உள்ளன. மற்ற குழந்தைகளிடம் இவ்வளவு கிடையாது. இது உனக்கு கிடைத்த நல்ல விஷயம் என நேர்மறை கருத்துகளை சொல்லி புரிய வைக்கலாம். குழந்தைகள் திருப்தி அடைவர். சண்டையை எப்போது தீவிரமாக்காமல் இருக்க பெற்றோர் தலையிடுவது முக்கியம்.

    புரிதலை குழந்தைக்கு ஏற்படுத்திவிட்டால் பிரச்னைக்கு இடமில்லை. அடம் பிடிப்பதை வாங்கி தர வாய்ப்பு, வசதி வரும். அப்போது வாங்கி தருகிறேன் என எடுத்து சொல்லலாம். பக்கத்து வீட்டு குழந்தையுடன் தன் குழந்தை சண்டை போடுவதை சில பெற்றோர் தீவிரமாக்கி விடுகின்றனர். சமூக நட்பை குழந்தையிலே வளர்த்தால்தான் பெரியவர் ஆனதும் சமூகத்துடன் வாழ குழந்தைகளால் முடியும்.

    தீ காயங்களிலிருந்து குழந்தையைப் பாதுகாப்பது எப்படி? சிகிச்சை அளிக்கும் முறை என்ன? என்ன முதலுதவி? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி எடுப்பது? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
    குழந்தைகளைக் காயங்களிலிருந்து, குறிப்பாகத் தீ காயங்களிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.  குறிப்பாக தீ காயம் என்பது அச்சமூட்டக்கூடிய ஒன்று.

    தீ காயம் என்றால் பட்டாசு வெடிப்பதாலோ அல்லது கையில் தீ படுவதாலோ ஏற்படும் காயம் என்று அலட்சியமாக நினைத்து விட வேண்டாம். குழந்தைகளைப் பொருத்தவரை வெப்பமான எதைக் கையில் எடுத்துச் சுட்டுக்கொண்டாலும் அது தீ காயம்தான். சூடான உணவு, தண்ணீர், பாத்திரம் ஆகியவற்றைத் தொடுவதால் ஏற்படுவதோ, பட்டாசு வெடிக்கும்போது கையில் சுட்டுவிடுவதோ அல்லது வேறு ஏதேனும் தீ விபத்துகளோ குழந்தைக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடும்.

    தீ காயங்களைப் பொருத்தவரை, காயம் ஏற்பட்டு அடுத்த சில நொடிகளில் தண்ணீரில் நனைக்க வேண்டும். தேங்கியிருக்கும் நீராக இல்லாமல், ஓடும் நீராக இருப்பது நல்லது. உடையைக் கழட்டுவதில் நேரத்தைச் செலவிடாமல் சுமார் 10 நிமிடம் வரையிலாவது, காயம் பட்ட குழந்தைக்கு இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு கையை உலர வைத்து, அதன் தீவிரத்தைப் பார்க்க வேண்டும். பார்க்கும்போதே சில நாட்களில் ஆறிவிடுமா என்பதைக் கண்டறிந்து விடலாம். அதன் பிறகு மருத்துவரை ஆலோசிப்பதும் வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதும் செய்யலாம். எந்த காரணத்துக்காகவும் தண்ணீருக்குப் பதிலாக வேறு ஏதேனும் களிம்பைப் பயன்படுத்தக்கூடாது. அது காயத்தை ஆறவிடாமல் தடுத்து, அந்த இடத்தை மேலும் பாதிக்கும்.

    பெரிய காயம் என்றால், தண்ணீரில், நனைத்தபடியே பிணியூர்திக்கு அழைத்துவிட வேண்டும். அல்லது உதவிக்கு யாரையாவது வாகனத்தைத் தயார் செய்யச் சொல்ல வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லும் வரை, அது சில நிமிடங்களாக இருந்தாலும், தண்ணீர் முதலுதவி அவசியம்.

    பெரும்பாலான காயங்களுக்குத் தண்ணீரில் நனைப்பதே போதுமானது. காயத்தைச் சுற்றிலும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தால், அதை உடைக்க வேண்டாம். அந்த கொப்புளங்கள் காயத்தை விரைவில் குணப்படுத்த உதவும்.

    தண்ணீரில் குளித்த பிறகு, காயம் ஏற்பட்ட இடத்தை தூய்மையான துணி அல்லது நெகிழி காகிதத்தைக் கொண்டு மூட வேண்டும். இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கலாம்.

    வலி குறையவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று, அதற்கேற்ற வலி நிவாரணிகளைக் கொடுக்கலாம்.

    தயிர் குளிர்ச்சி தானே? வெண்ணெய் குளிர்ச்சி தானே என அவற்றையெல்லாம் பயன்படுத்தலாமா எனக் கேட்காதீர்கள். தண்ணீரைத் தவிர எதையும் பயன்படுத்தக்கூடாது. சிலருக்கு யாரோ கொடுத்த அறிவுரை போல, பற்பசை பயன்படுத்தும் பழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது பார்த்திருப்பீர்கள். அதுவும் மிகத் தவறான விஷயம். மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தீ காயத்துக்கு முதலுதவி என்றால் அது தண்ணீர் மட்டும்தான்.
    வெயில் காலத்தில் குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும். மாலை நேரத்தில் நல்ல காற்றோட்டமாக உள்ள இடத்தில் குழந்தையை சிறிது நேரம் வைத்துக்கொள்ளலாம்.
    குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையாக இருப்பதால் வெயில் காலத்தில் வியர்க்குரு மற்றும் சரும நோய்கள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை தினமும் காலை, மாலை என இரு வேளையும் குளிக்க வையுங்கள்.

    அதிகமாக தண்ணீர், மோர், பழச்சாறு ஆகியவற்றைக் குடிக்கக் கொடுங்கள். விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு உடனடியாக குளிர்ந்த நீர் கொடுக்கக் கூடாது. முதலில் சாதாரண தண்ணீரைக் கொடுங்கள். அரை மணி நேரம் கழித்து, வேண்டும் என்றால் குளிர்ந்த நீர் கொடுங்கள்.

    அதேபோல் பருத்தி உடைகளை குழந்தைகளுக்கு அணிவியுங்கள். உடலை ஒட்டிய இறுக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது. வியர்க்குரு அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    பிறந்து சில நாட்களான பச்சிளம் குழந்தைகளை வெயில் காலத்தில் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகள் நன்றாகச் சிறுநீர் கழிக்க வேண்டும். பருத்தித் துணிகளை அணிவிக்க வேண்டும்.

    வெயில் காலத்தில் குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும். மாலை நேரத்தில் நல்ல காற்றோட்டமாக உள்ள இடத்தில் குழந்தையை சிறிது நேரம் வைத்துக்கொள்ளலாம்.

    முகம், கழுத்து, கழுத்தின் பின்பகுதி, கை போன்ற இடங்களில் தோலின் நிறம் மாறும். வெயில் காலத்தில் படர்தாமரை, பூஞ்சைத் தொற்றுகள் போன்றவையும் ஏற்படலாம். முகம், கை பகுதிகளில் வெள்ளை, சிவப்பு நிறங்களில் ஒவ்வாமை திட்டுகள் உண்டாகக்கூடும். எலுமிச்சை, ஆரஞ்சு, சந்தனம், மஞ்சள் மற்றும் கிளிசரின் அடங்கிய சோப்பு, கிரீம், லோஷன் ஆகியவை வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை. அதனால் அவற்றை வெயில் காலத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தலைக்குப் பூசும் சாயமும் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது.

    பொடுகு தொல்லையை தவிர்க்க மாலை நேரத்தில் தலைக்கு குளிப்பது நல்லது. இப்படி குளிப்பதால் இரவு நேரத்தில் தலைமுடியின் வேர்க்கால்கள் இருக்கும் பகுதி சுத்தமாக இருக்கும். அதிகமாக வியர்ப்பதாலும் பொடுகுத் தொல்லை ஏற்படலாம்.

    வியர்வையை உடலில் நீண்ட நேரம் ஊறவிடாமல் உடனுக்குடன் குளிப்பதுதான் இதைத் தவிர்க்கச் சிறந்த வழி. சராசரியாக 60 கிலோ எடை கொண்ட ஒருவர் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லும்போது தலைக்குத் தொப்பி அணிந்து, கைகளை முழுமையாக மறைக்கும் கை உறைகளை அணிந்து கொண்டு செல்லலாம். குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்.
    கவனமாக செயல்பட்டு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது என்பதே உங்கள் பிள்ளையின் கல்வி பயணத்திற்கு நீங்கள் அமைத்து தரும் வெற்றிப்பாதையாகும்.
    பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவது பெற்றோர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்று. அதற்கான முதல்படி அவர்களுக்கு ஏற்ற சரியான பள்ளியை தேர்வு செய்வது ஆகும். இன்றைய சூழலில், கல்வி நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் கவனமாக செயல்பட்டு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது என்பதே உங்கள் பிள்ளையின் கல்வி பயணத்திற்கு நீங்கள் அமைத்து தரும் வெற்றிப்பாதையாகும்.

    அந்த வகையில் ஒவ்வொரு பெற்றோரும் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை சமச்சீர், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி, சிஐஇ என பல்வேறு பாடத்திட்ட முறைகள் உள்ளன. இதில் உங்கள் பிள்ளையின் எதிர்கால கனவிற்கு ஏற்ற பாடத்திட்டம் கொண்ட பள்ளியை தேர்வு செய்யுங்கள். போட்டித் தேர்வுகள், வெளிநாட்டில் மேற்படிப்பை தொடர நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் என பலதரப்பட்ட தேர்வுகளை திறனுடன் எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் விதமாக அந்த பாடத்திட்டம் அமைந்திருப்பது அவசியம்.

    பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தினமும் பயணம் செய்வது என்பது உங்கள் குழந்தைக்கு உடல் சோர்வுடன் மனச்சோர்வையும் ஏற்படுத்தி விடும். ஆகையால் முடிந்தவரை வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியை தேர்வு செய்வது நல்லது.

    பள்ளியில் சேர்க்கை நடைபெறுவதற்கு முன்னதாக அந்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ள பள்ளியை தேர்வு பட்டியலில் வைக்காதீர்கள். 20 முதல் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகிதம் உள்ள பள்ளியில் தான் ஆசிரியரின் கவனம் மாணவர்கள் மீது முழுமையாக கிடைக்கும். போட்டி அதிகம் இருக்கும் வகுப்பு என்று அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பள்ளியில் சேர்த்தால் குழந்தை கூட்டத்தில் ஒருவராக மாறி வளர்ச்சியை எட்டிப்பிடிப்பதில் சிக்கல் உருவாகலாம்.

    காற்றோட்டமாக அமைதியான சூழலே கல்வி கற்பதற்கு ஏற்றது. எனவே வகுப்பறை கணினி அறை, ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை நேரடியாக சென்று பாருங்கள். கழிவறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் கவனித்து பள்ளியை தேர்வு செய்யுங்கள்.

    கல்வி என்பது ஏட்டு கல்வியை மட்டும் குறிப்பது அல்ல. அதனால் அந்த பள்ளியில் விளையாட்டு மற்றும் மாணவர்களின் பிற திறன்களை வளர்க்க என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று கவனியுங்கள். மாணவர்களுக்கு எத்தகைய வாய்ப்புகளை தருகிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பள்ளியை தேர்வு செய்யுங்கள்.
    குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம்.
    குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.

    5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.

    `கண்ணாடி குவளையை கையில் தூக்காதே.. அது கீழே விழுந்தால் உடைந்துவிடும்..' என்று குழந்தைகளிடம் சொன்னால், சில குழந்தைகள் `அதெல்லாம் எனக்கு தெரியும். உங்க வேலையை நீங்கள் பாருங்கள்' என்று சொல்லும். பெற்றோர் ஒன்று சொன்னால், சில குழந்தைகள் பதிலுக்கு ஒன்பது சொல்லும். இது பெற்றோருக்கு பிடிக்காதபோது அந்த குழந்தைக்கு `வாயாடி' பட்டம் சூட்டிவிடுவார்கள். பெரும்பாலும் சிறுமிகள்தான் இந்த பட்டத்தை சுமக்கிறார்கள்.

    `கண்ணாடி குவளையை தூக்காதே' என்று தாயார் சொல்லும்போது, அந்த குழந்தையின் மனதில் `நீங்கள் மட்டும் தூக்குகிறீர்கள். உங்களால் சரியாக செய்ய முடிந்த காரியத்தை என்னால் சரியாக செய்ய முடியாது என்று நீங்கள் நினைப்பது ஏன்?' என்ற கேள்வி எழும். தனது திறன் அங்கே குறைத்து மதிப்பிடப்படுவதாக அந்த குழந்தை நினைத்து ஆத்திரப்படுவதால்தான் அந்த கேள்வி எழுகிறது.

    `அந்த கண்ணாடி குவளையை உன்னாலும் தூக்க முடியும். மெதுவாக, கவனமாக அதை பிடித்து தூக்கவேண்டும். ஆனால் இப்போது அதை தூக்கவேண்டாம். அங்கேயே இருக்கட்டும். அதை தூக்கவேண்டிய அவசியம் ஏற்படும்போது உன்னை அழைக்கிறேன்' என்று கூறினால், குழந்தை பெரும்பாலும் அமைதியாகிவிடும். பதிலுக்கு பதில் பேசாது.

    தாங்கள் விரும்பும்படிதான் பெண் குழந்தைகளின் இயல்பு இருக்கவேண்டும் என்று கருதும் தாய்மார்கள், அந்த குழந்தைகள் பதிலுக்கு பதில் பேசிவிட்டாலே வாயாடி என்று பட்டம் கொடுத்துவிடுகிறார்கள். அந்த வார்த்தையின் வலி, பிரயோகிப்பவர்களுக்கு தெரிவதில்லை. தாங்கிக்கொள்ளும் குழந்தைக்குதான் தெரியும்.

    குழந்தைகளின் கருத்துக்களை சரியாக கேட்காமலும், அவர்கள் சொல்வதை சரிவர புரிந்துகொள்ளாமலும் `பொய் சொல்கிறார்கள்' என்ற முடிவுக்கு பலரும் வந்துவிடுகிறார்கள். ஆகவே விளையாட்டுத்தனமாக பொய் சொல்லத் தொடங்கும் காலகட்டத்திலே குழந்தைகளை முறைப்படுத்தி உண்மையை பேச பழக்கவேண்டும்.
    மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம்.
    பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். அதைக் கருத்தில் கொண்டு இளம் பெற்றோர்களுக்கு, மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ...

    மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் செல்லத்திற்கான பிரஷை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலான் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும். அதேவேளையில் சிலிக்கான் போன்ற மெட்டலினாலான பிரஷைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. வாயின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள பற்களையும் சுத்தம் செய்வது இன்றியமையாதது. எனவே, அதற்கேற்றவாறு நீளமான பிரஷ் பயன்படுத்தலாம்.

    உங்கள் குழந்தைக்கான பேஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.

    எண்ணிக்கையில் குறைந்த, சிறிய பற்கள் என்பதால் பேஸ்ட் சிறிதளவு போதும். ஆரம்பத்தில் குழந்தைகள் அடம் பிடிக்கும். பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பேஸ்ட்டை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.
    ×