என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    பங்குனி உத்திர தினமான இன்று முருகனுக்கு உகந்த இந்த பாடலை பாடி வழிபாடு செய்தால் பிறவிப்பிணி தீர்க்கும்.
    பழனி என்ற பெயரை உச்சரிப்பதே மகத்தான புண்ணியம் தரும். அதனால் தான் குழந்தைகளுக்கு ‘பழனி’ என்று பெயரிட்டு அழைப்பது மரபாக உள்ளது. உடல் நோய், உள்ள நோய் என்று மட்டுமில்லாமல் பிறவிப்பிணி தீர்க்கும் ஞானதேசிகனாக தண்டாயுத பாணி ஞானதரிசனம் அளிக்கிறான். அவன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம்.

    படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான்
    முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு
    மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி
    நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!

    என்று பங்குனி உத்திர நாளில் பாடி, முருகனின் அருள் பெறலாம்.
    ஸ்ரீ லட்சுமி தாயார் கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் 10 முறை செபிக்கவும்.
    ஸ்ரீ லட்சுமி தாயார் கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் 10 முறை செபிக்கவும். வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி லட்சுமி பூஜை செய்து 108 முறை செபித்து வர விரைவில் வேலை கிடைக்கும்.

    "ஸ்ரீ தேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா
    விஷ்ணுபத்னீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ
    ஹரிப்ரியா தேவதேவீ மஹாலட்சுமீச சுந்தரி"
    தேய்பிறை அஷ்டமியன்று ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை இந்த மூல மந்திரத்தை சொல்லி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபாடு செய்யலாம்.
    ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
    ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
    ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
    ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வே ஷணாய
    ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

    சனியின் பிடியில் இருக்கும் கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், மேஷம், கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரங்களில் மூலமந்திரத்தை 330 முறை ஜபிக்க வேண்டும்; அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி, அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். 33 என்பது குபேரனுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழங்கியது ஆகும்.

    ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.
    இந்த ஸ்லோகத்தை திருவாதிரை நட்சத்திரத்தன்றும் பாராயணம் செய்து வந்தால் நடராஜப்பெருமான் திருவருளால் சகல வளங்களும் கிடைக்கும்.
    இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:
    ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்
    விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
    விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:
    ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

    - சிதம்பர பஞ்சாக்ஷர மந்த்ரம்

    பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்த்ரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார்.

    சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும். 
    மாங்கல்ய பாக்கியம் நிலைக்க அபிராமி அந்தாதியில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை சொல்லுவதால், அம்பிகையின் அருளால் அவர்கள் நீடித்த சௌபாக்கியத்துடன் இருப்பார்கள்.
    திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். சில பெண்களுக்கு ஜாதக ரீதியாக மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க அபிராமி அந்தாதியில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை சொல்லுவதால், அம்பிகையின் அருளால் அவர்கள் நீடித்த சௌபாக்கியத்துடன் இருப்பார்கள்.

    துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
    பனையும் கொடுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
    கனையும் கரும்பும் சிலையும் மென் பாசாங்குசமும் வகையில்
    அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே

    அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள வராஹி காயத்ரி மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை, எப்போதும் ஜெபியுங்கள் அன்னை சடுதியில் மாற்றம் தருவாள்.
    வராஹி மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்

    வராஹி காயத்ரி

    ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
    ஹல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ வராஹி ப்ரசோதயாத்

    என்னும் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை, எப்போதும் ஜெபியுங்கள். அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்.
    நீண்ட ஆயுளைத் தரும் என்கிற வகையில் ஹோமத்தினை அடிக்கடி செய்யலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடலை பார்க்கலாம்.
    அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
    அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
    தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
    சிறப்பான ஓமமது தீர்க்கமாக
    வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
    மகத்தான பிரமமய மாவாய்பாரு
    இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
    என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே  

    பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.

    இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

    பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை தினமும் அல்லது கிருத்திகை தினங்களில் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும்.
    மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
    தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும்
    விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
    நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.

    - பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம்

    பொதுப்பொருள்: தரையிலும், மரத்தின் மீதும், மலை மீதும், நெருப்பினுள்ளேயும், நீர்நிலைகளிலும், வண்டி வாகனங்களில் செல்லும் போதும், வானத்திலும், குகையினுள்ளும் எந்த இடத்திலும் எனை நாடி வந்து சஷ்டிநாதன் கை வேல் காக்கட்டும்.

    பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை கிருத்திகை தினங்களில் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள பசுவுக்கான மந்திரத்தை உச்சரித்தபடி, பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால், குழந்தைப் பேறு கிடைக்குமாம்.
    உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தோஷம் உண்டு, பசுவைத் தவிர.

    ஒரு பசுவை நாள் முழுவதும் பார்த்தபடி, தொழுவத்தில் இருந்தாலே, பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும் என்கிறார்கள். தோல் நோய் குணமாகாதா என்ன?..

    ஒரு பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவனின், முன்னோர்களில் 7 தலைமுறையினர் முக்தியடைவார்களாம்.

    அதிகாலையில் எழுந்தவுடன் யாரிடமும் பேசாமல்,

    ‘சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
    பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே’

    என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால், குழந்தைப் பேறு கிடைக்குமாம்.

    பசு காயத்ரி மந்திரம்:

    ‘ஓம் பசுபதயேச வித்மஹே
    மகா தேவாய தீ மஹி
    தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்’
    தினமும் ராகு கேதுவின் நாமங்களைப் படிப்பவர்களுக்கு அவன் அனுகிரகத்தால் சகல வறுமை, தீராத நோய் மற்றும் தொல்லைகளில் இருந்து விடுபடுவர்.
    ஓம் நாகத்வஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹி
    தன்னோ ராகு: ப்ரசோதயாத்.

    ராகு துதி

    அரவெனும் ராகு ஐயனே போற்றி
    கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
    ஆக அருள் புரி அனைத்திலும் வெற்றி
    ராகுக்கனியே ரம்யா போற்றி.

    கேது காயத்ரி

    அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய
    தீமஹி
    தந்நோ கேது: ப்ரசோதயாத்

    கேது துதி

    கேதுத் தேவே கீர்த்தி தேவே
    பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
    வாதம் வம்பு வழக்குகளின்றி
    கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.

    ராகு கேதுவின் நாமங்களைப் படிப்பவர்களுக்கு அவன் அனுகிரகத்தால் சகல வறுமை, தீராத நோய் மற்றும் தொல்லைகளிலிருந்து விடுபடுவர். தனம், தான்யம், பசுக்கள் ஆகிய செல்வங்கள் மேன்மேலும் பெருகும். அளவற்ற ஐஸ்வர்யம், தான்யம், பசுக்கள் ஆகிய சம்பத்துகளும் உண்டாகும்.
    எதிரிகளின் தொல்லை, வறுமை நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பைரவர் மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.
    ஶ்ரீபைரவரை எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்

    "ஓம் கால காலாய வித்மஹே
    கால தீத்தாய தீமஹீ
    தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"

    என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடுவோம். அதன் பயனாக, எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.
    ராகு கேது தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் தினமும் இந்த ராகு பகவானுக்கு உகந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    ராகுவின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் ஆகும். ஆக, ஒன்றரை மணி நேரம் ராகு காலம் இருக்கும்.

    தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
    துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
    என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி
    நிம்மதி நிலவிட அருள்வாய் போற்றி
    ×